‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

ஓசூரில்  ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. இக்கருத்தரங்கிற்கு  வேத, சாஸ்திர, யோக, ராமாயண அறிஞரும், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அவர்களின் திருக்குமாரருமான டாக்டர் ஸ்ரீ ரங்கன்ஜி  தலைமையேற்றார்.

காலையில் நாமசங்கீர்த்தனம் மற்றும் வேதகோஷத்திற்குப் பிறகு, ரங்கன்ஜி கருத்தரங்க நிகழ்வைத் தொடஙகி வைத்தார்.  மைத்ரி அமைதி மையத்தின் கௌதமன் பார்வையாளர்களை வரவேற்று பேச்சாளர்களையும் அறிமுகம் செய்தார்.

முதலாவதாக,  சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயு உரை நிகழ்த்தினார்.  எட்டுத்தொகை, பத்துப்பாடு, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான நூல்களிலிருந்து  இலக்கிய மேற்கோள்களையும்,  ஆதாரங்களையும் அளித்து சுவாரஸ்யமான உதாரணங்களுடன் அவர் பேசினார்.  கடைசியில் தான் கொண்டு வந்திருந்த சில புத்தகங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.


அடுத்ததாக, நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசன் உரையாற்றினார். தனது வாழ்க்கை அனுபவங்கள்,  பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெருமக்கள்,  டாக்டர் அம்பேத்கரின் இந்திய தேசியவாதக் கருத்துக்கள் ஆகியவற்றை முன்வைத்து ஆணித்தரமாகவும் செறிவாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தது.


மேற்கூறிய இரு உரைகளிலும்  பொய்மையான ஆரிய திராவிட இனவாதக் கருத்துக்களான கண்டனங்களும், திராவிட இயக்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்களும் இருந்தன.

அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக,  கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது  குறித்து ரங்கன்ஜி  பேசினார். கருப்பசாமி, வனப்பேய்ச்சி அம்மன், சொரிமுத்தையனார், கள்ளழகர் ஆகிய தெய்வங்களைக் குறித்து விளக்கங்கள் அளித்து, இறுதியில் தனது கிராமத்து திரௌபதி அம்மன் கோயில் வில்லுப்பாட்டிலிருந்து சில வரிகளை அவர் பாடியதும் சிறப்பாக இருந்தது.


இறுதியாக,  பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார்.  பாரதியாரின் ‘வேதப் பாட்டுக்கள்’, வேதக் குறியீடுகளை அகத்தில் உணர்ந்து அவற்றை பாரதியார் வெளிப்படுத்தியுள்ள விதம், அவற்றிலுள்ள தத்துவ உட்பொருள் ஆகியவை குறித்த மிகவும் ஆழமான உரையாக அது இருந்தது.


உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன.

இறுதியில் மங்களம் பாடி ராம நாம ஜபத்துடன்  கருத்தரங்கு நிறைவடைந்தது.  வந்திருந்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

கருத்தரங்க உரைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த Youtube Playlist வழியாகவும் கேட்கலாம்.

6 Replies to “‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்”

  1. ஆடியோ பதிவு இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும். வாடஸ்அப்பில் போட தெளிவாக இல்லை.நல்ல தெளிவான ஆடியோ பதிவாக இருந்தால் சிடீயில் போட்டு எனது ஊா் கோவிலில் ஒலிபரப்புவேன்.ஜெயந்தா பாலகிருஷ்ணன் சொற்பொழிவுகள் மக்களை வெகுவாக கவா்ந்துள்ளது.நிறைய பதிவு செய்து ஒலிபரப்பி வருகின்றேன்.

  2. தலைப்பே மிக அருமை ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ . ஜடாயு மற்றும் ம.வெங்கடேசன் உரை ஆணித்தரமாக இருந்தது. வட மொழி புலமை , தமிழ் புலமை, வேத புலமை என்று பல விஷயங்கள் தெரிந்தவர் டாக்டர் ரங்கன் ஜி அவர்கள். அவருடைய பேச்சு மிக அருமை .. வார்த்தைகள் இல்லை பாராட்ட ….பாரதியை நாத்திகர் என்று உருவாக படுத்தி உள்ள திராவிட கட்சிகளுக்கு இது ஒரு செருப்படி …திரௌபதி அம்மன் கோயில் வில்லுப்பாட்டு அருமை 🙂 …நன்றி

  3. Thanks for the post. Apologies upfront.One of the video titles make me wince a bit though, Vedi CULT. Cult gives a wrong impression to one’s mind and I feel should be avoided when discussing our Dharmic way of life.

  4. Dear Dr Rama Krishnan,

    // One of the video titles make me wince a bit though, Vedi CULT //

    The title is given as ‘Vedic culture’ properly. Looks like you just saw part of the title in your browser / app. Please go into the video and see the full title 🙂

  5. To Thiru Jatayu Sir,
    Heard your inspiring speech. Interested to know as to where “சங்கத் தமிழர் வாழ்வியலும் சடங்குகளும் “ஷண்முகம் பிள்ளை book is available. Is it available on the internet to read?

    Rajagopalan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *