அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!

சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு அயோத்தி வழக்கு. இந்த வழக்கு 2019, நவம்பர் 9ஆம் தேதி முற்றுப்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் கோயில் நில உரிமைப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. தவிர, நாட்டில் அடாவடி மூலம் பீதியைக் கிளப்பி அரசியல் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையையும் கட்டுக்குள் வைத்திருந்த நேரடி நடவடிக்கைப் பேர்வழிகளின் அத்துமீறல்களுக்கும் இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

1950இல் கோபால் சிம்ல விஷாரத் தொடர்ந்த நில உரிமை வழக்கு 69 ஆண்டுகளை பலநிலைகளில் கடந்து இன்று ஹிந்துக்களுக்கு சாதகமான முடிவை அளித்திருக்கிறது. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் அமைப்பின் நிறுவனர் மஹந்த பரமஹம்ஸ ராமசந்திர தாஸின் தொடர் போராட்டங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மறைந்த தலைவர் அசோக் சிங்கால், பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோரின் தியாகங்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கிறது.

உண்மையில் இத்தீர்ப்பு 2010 செப். 30லேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் இறுதிக்கட்டத்தை அப்போது ஓரளவு எட்டியது. ஆனால், அன்றைய ஆளும் அரசின் தூண்டுதல், தவறான வழிகாட்டல் காரணமாகவே அப்போதைய நீதிபதிகள் தடுமாறினர். வழக்கில் தொடர்புடையை 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியோர் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுமாறு ‘பஞ்சாயத்து’ செய்து தனது தீர்க்கமான கடமையிலிருந்து வழுவியது நீதிமன்றம். அதன் விளைவாக அயோத்தி வழக்கு மேலும் சிக்கலானது. யாருக்கும் திருப்தி அளிக்காத அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. பலதரப்பினரும் அந்த வழக்கில் இணைய மனு செய்தனர். இறுதியில் பல தடைகளைக் கடந்து, இஸ்லாமியத் தரப்புக்கு சாதகமான காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தாமதத் தந்திரங்களைப் புறம் தள்ளி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி அசோக்பூஷண், நீதிபதி அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த குரலில், நாட்டின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தீர்ப்பளித்திருக்கிறது. முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ ராமனுக்கே அந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

அடிப்படையில் இந்த வழக்கு நில உரிமை தொடர்பானது. அயோத்தியில் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடப்படும் ராமஜன்மபூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் தொடர்புடைய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே கேள்வி. அங்கு ஏற்கனவே ஹிந்துக்கள் கொண்டிருந்த வழிபாட்டு உரிமையும் வழக்கில் விசாரிக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையும் அளித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் 1992 டிசம்பர் 6இல் இடிக்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் ‘தற்போதைய நிலையே தொடரும்’ (Status Quo) என்ற நீதிமன்றத் தீர்ப்பும் முக்கியமான காரணியாக இருந்தது. அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டதன் நியாயம் இப்போது உணரப்பட்டிருக்கும்.

ஆயினும் உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதைக் இந்தத் தீர்ப்பில் கண்டித்திருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அதுவும் சரியானதே. அதேசமயம், வருங்காலத்தில் அயோத்தி விஷயத்தில் வேறு எந்த வகையிலும் த்டைகள் வந்துவிடக் கூடாது என்பதில் நீதிபதிகள் ஐவருமே மிகவும் கவனமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நால்வர்: 1. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் (ராம் லல்லா தரப்பு), 2. கோயில் தங்களுக்கே பரம்பரையாகச் சொந்தம் என்று கூறும் நிர்மோஹி அகாரா, 3. பாபர் மசூதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்னி வக்ஃப் வாரியம், 4. அங்கு மசூதியைக் கட்டியதாகக் கூறப்படும் மீர்பாகி வழிவந்தவர்கள் தரப்பில் ஷியா வக்ஃப் வாரியம்.

இவர்களில், ஷியா தரப்பினரின் மனுவையும், நிர்மோஹி அகாரா தரப்பையும் நிராகரித்த நீதிபதிகள், சன்னி வக்ஃப் வாரியத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை. ஹிந்துக்களின் பலநூறு ஆண்டுகாலப் போராட்டம், ராமன் அங்கு பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை, அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் கீழே உள்ளது என்ற தொல்லியல் ஆய்வறிக்கை, வெறும் கட்டுமானத்தை முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது என்ற வாதம் ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில், ஹிந்துக்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று அறிவித்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம்.

1949இல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் ராம் லல்லா சிலைகள் வைக்கப்பட்டதையும் நீதிபதிகள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். 1992 டிசம்பர் 6 நிகழ்வையும் கண்டித்துள்ளனர். அதாவது சட்டத்தின் கண்களில் மட்டுமே இவ்வழக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம்களுக்கு 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர்கள் சிலகாலம் அங்கு தொழுகை நடத்திய அனுபவ பாத்தியதைக்காக, டிசம்பர் 6 நிகழ்வுக்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு அரசே 5 ஏக்கர் நிலத்தை வேறொரு இடத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிபதிகளின் பாரபட்சமின்மையை வெளிப்படுத்துவதற்கான சான்று. சொல்லப்போனால், முஸ்லிம்களுக்கு சரயு நதிக்கரைக்கு மறுபுறம் பிரமாண்டமான மசூதியைக் கட்டித் தருவதாக ஏற்கனவே ஹிந்துக்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையேதான் நீதித் துறை உத்தரவின்மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அயோத்தி நில உரிமை வழக்கில் ஹிந்துக்களின் தரப்பை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக முன்வைத்து திறம்பட வாதாடிய இரு வழக்கறிஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள். முதலாமவர் தமிழகத்தைச் சார்ந்த 92 வயதான முதுபெரும் வழக்கறிஞர் கேசவன் பராசரன். இதற்காக தனக்கு கட்டணமும் கூட அவர் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த வழக்கே தான் இறுதியாக வாதாடும் வழக்கு என்றும் அவர் அறிவித்திருந்தார். அதேபோல, ராம்லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் வாதங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மிகவும் கவனத்துடன் குறிக்கப்பட்டன. நில உரிமை, தொல்லியல் ஆதாரங்கள், சமய நம்பிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இவ்வழக்கில் பிணைந்திருந்தன. இவ்வழக்கில் தொழில்நேர்த்தியுடன் போராடிய இவ்விருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவை அரசு விரும்பினால் சேர்க்கலாம். அதாவது ராமர் கோயில் கட்ட ஹிந்துக்கள் தரப்பிலேயே இடையூறாக இருந்த ஒரு வாதியும் தீர்ப்பால் இப்போது அகற்றப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, தொல்லியல் துறையின் ஆதாரங்கள் இவ்வழக்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாபர் மசூதி (இப்போது இல்லை) காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும், அந்த இடத்தின் கீழே உள்ள கட்டுமானம் கோயிலாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 1857 வரை அங்கு ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபட்டதன் ஆதாரங்களும் ஏற்கப்பட்டுள்ளன. பூமிக்கு கீழுள்ள கட்டடம் கோயிலா என்ற சர்ச்சைக்குள் நீதிமன்றம் இறங்கவில்லை. பின்னாளில் கோயில் கட்டுமானப் பணிகளின்போது அதுவும் தெளிவாகும்.

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் நியாயமான முறையில், மிகச் சரியான பலனைப் பெற்றுள்ளது. இனி ராமருக்கு ஆலயம் அமையத் தடையில்லை. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், உ.பி. அரசும் பார்த்துக்கொள்ளும். அதில் மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகள் தலையிட முடியாது.

இவை அனைத்தையும் விட, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தீர்ப்புக்காக நாடே ஒருநாள் முற்றிலும் முடக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டிருந்தது தான். உளவுத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்திருந்தது. தலைமை நீதிபதியே தீர்ப்புக்கு முதல்நாள் உ.பி. மாநில தலைமைச் செயலாளரையும் காவல் துறைத் தலைவரையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இது நமது அரசியல் அமைப்பில் இதுவரை காணாத நிலை. ஆயினும் நாட்டுநலனை உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் நீதித்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கின.

நாடுமுழுவதும் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ராணுவமும் விழிப்புடன் இருக்குமாறு பணிக்கப்பட்டது. அயோத்தித் தீர்ப்பை கொண்டாடவோ, கண்டிக்கவோ கூடாது என்று அரசுத் தரப்பிலும் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான அச்சமே காரணம் என்பதையும், அந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இத்தகைய அச்சமே தேசப் பிரிவினைக்கு 1947இல் வித்திட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாருக்காக என்பதை சிறு குழந்தையும் அறியும் என்பதால்தான், அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அச்சமூட்டும் கும்பல் மனோபாவத்தால் அரசையோ, மக்களையோ, நீதித் துறையையோ இனியும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் பாஜக அரசுகள் இருப்பது, நீதித்துறைக்கும் துணிவைத் தந்திருக்கிறது. மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை நீதித்துறையும் உனர்ந்திருக்கிறது. நீதி நிலைக்க வேண்டுமானால், தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமானால் அதை சாத்தியப்படுத்தும் வல்லமையுள்ள அரசு நிர்வாகமும், மக்களின் ஆதரவும் இருந்தாக வேண்டும்; தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அந்த வகையில், அனைத்தும் கூடி வந்த நல்ல தருணத்தில், பொருத்தமான, நியாயமான, சமரசத்துக்கும் வாய்ப்பளிக்கும் நல்ல தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

தர்மம் வென்றிருக்கிறது. தர்மத்தை நாம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்.

‘சத்தியமேவ ஜயதே’ என்ற நமது அரசின் முத்திரை வாக்கியமும் மெய்ப்பட்டிருக்கிறது.

ராம பக்தர்களது தியாக மயமான போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. வருங்கால பாரதத்தின் ஒளிமயமான பாதைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது.

நீதி வெல்க! ராமன் வெல்க! பாரதம் வெல்க!

அயோத்தி- இதுவரை…

1528இல் பாபரின் படைத்தளபதி மீர்பாகியால் அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமனின் ஆலயம் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது.

கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஆலயம் எழுப்ப நிகழ்ந்த தொடர் போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கான ஹிந்துக்கள் மடிந்தனர். ஹிந்துக்களின் கரம் ஓங்குகையில் அங்கு வழிபாடுகள் நடைபெற்றன.

1857இல் பாபர் மசூதி கட்டடத்துக்குள் நுழைய ஆங்கிலேய அரசு ஹிந்துக்களுக்கு தடை விதித்தது.

3947- சுதந்திரம் பெற்றவுடன், சோமநாதபுரம் போலவே அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போதைய அரசால் அது கண்டுகொள்ளப்படவில்லை. 1949இல் அந்த வளாகத்தில் ராம் லல்லா பிரசன்னமானார்.

1986 பிப்ரவரி 1-இல் அயோத்தியில் பூட்டியிருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கதவுகளை ஹிந்துக்களின் வழிபாட்டுக்குத் திறக்க பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

1989 நவம்பர் 9இல் இல் ராமர்கோயிலுக்கு ஹரிஜன சகோதரர் சைபால் அடிக்கல் நாட்டினார். அதற்காக நாடு முழுவதிலும் இருந்து புனித செங்கற்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன.

1990 செப். 25இல் லால் கிருஷ்ண அத்வானியின் ராமரத யாத்திரை துவங்கியது. அந்த ஆண்டு அக்டோபர் 30இல் அயோத்தியில் கரசேவகர்கள் நூற்றுக் கணக்கானோர் அன்றைய முலாயம் சிங் யாதவ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரையும் நடைபெற்றது.

1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் அடிமைச் சின்னம் அகற்றப்பட்டது.

2010 செப். 30ல் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பகிர்ந்துகொள்ளுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019 நவம்பர் 9-இல் அயோத்தி நிலம் முழுவதும் ராமனுக்கே, ஹிந்துக்களுக்கே சொந்தம் என்று இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ளது.

8 Replies to “அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது!”

  1. மிகத் தெளிவான கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி. ராம பக்தர்களும் பொதுவாக ஹிந்துக்களும் பெருமை கொள்ளும் நேரம் இது. நவம்பர் 9 மறக்க முடியாத நாளாகிவிட்டது. விஜய நகரப் பேரரசின் குமார கம்பன்னன் 1378ல் மதுரையை துலுக்க சுல்தானிடமிருந்து மீட்ட பிறகு, இந்த அயோத்தி விஷயத்தில்தான் ஹிந்துக்கள் தங்கள் கோயிலை/கோயில் நிலத்தை மீட்டெடுத்திருக்கின்றனர்.

    அலஹாபாத் உயர் நீதி மன்றம் தவறிய இடத்தைச் சுட்டிக்காட்டியமைக்கு மிகவும் நன்றி. ஆனாலும் அலஹாபாத் உயர் நீதி மன்றம் ஒரு பெரிய உபகாரம் செய்தது.
    1989 வாக்கில் முஸ்லிம்கள் ராமர் ஜன்ம பூமி விவியகாரத்தில் ஹிந்துக்களுடன் ஒரு சமரசத்திற்கு தயாராகி வந்தனர். ஆனால் சரித்திர அறிஞர்கள் Specialists/Experts என்று சொல்லிக்கொண்ட சில இடது சாரிகள் இதைத்தடுத்தனர். இவர்களைக் குறுக்கு விசாரணை செய்த அலஹாபாத் உயர் நீதி மன்றம், இவர்களுக்கு விஷயம் தெரியாது, இவர்கள் எதையும் நேரடியாக ஆராய்ச்சி செய்யவில்லை, எதையும் நேரடியாகக் காணவில்லை, இவர்கள் சொல்வதெல்லாம் சொந்தக் கருத்தே தவிர சரித்திர உண்மையல்ல என்பதை ஊர்ஜிதப் படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகும் ‘தி ஹிந்து’ போன்ற பத்திரிகைகள் இந்த இடதுசாரிகளுக்கே இடம் தந்து அவர்களின் கட்டுரைகளைப் பிரசுரித்தன. இந்த நிலையில் நாம் உண்மையை அறிய டாக்டர் மீனாக்ஷி ஜெயின், டாக்டர் கோன்ராட் எல்ஸ்ட் ஆகியோரது புத்தகங்களும் கட்டுரைகளுமே உதவின.
    சத்தியம் வெல்லும் என்று சொன்னாலும் அதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. எண்ணற்ற தியாகிகள்/ பக்தர்கள் இதில் பங்குகொண்டிருந்திருக்கிறார்கள். ரத யாத்திரை நடத்தி நாட்டையே விழித்தெழச்செய்த எல்.கே அத்வானியும் அவர் சகாக்களும் இன்று ஓரம்கட்டப்பட்டு விட்டனர். கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்த கரசேவகர்களை இன்று பலரும் மறந்துவிட்டனர். ஆனால் இவர்களும் இவர்களைப்போன்ற எண்ணற்றவர்களும் செய்த தியாகம்தான் இன்று இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஹிந்துக்களுக்குச் சாதகமாக வரக் காரணமாக இருந்திருக்கிறது..தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.

  2. I am not in favor of allotment of 5 acre land for Muslims. This is pure ISLAMIC appeasement. There is absolutely no legal basis for this appeasement. Why the judges are playing politics here? The question always has been about land ownership in Ayodhya and this was eventually given to Hindus. Why do you need to compensate Muslims and on what basis? If I have land ownership case that has been going for a long period of time and if I eventually lose that case, will the judge compensate me by allotting another, bigger piece of land???
    Hindus offering to build a mosque is entirely a private matter. But here the government has been forced hand over 5 acre land in Ayodhya by the judges.
    It is high time Muslims develop thick skin and accept the fact that their ancestors did horrible, atrocious stuff to the Hindus. The least they could have done was to voluntarily given up their claim to Ayodhya Ram temple site. It is always the Hindus who need to compensate the Islamists!

  3. //If I have land ownership case that has been going for a long period of time and if I eventually lose that case, will the judge compensate me by allotting another, bigger piece of land???//

    Yes, the government will. Whether you know it or not, the fact is that it happens. For e.g. a thousands of poor people encroach a slum in a poromboku land (all such lands are govt lands) and been living there for many decades, suddenly the govt want the land for some public construction – like construction metro line – the govt won’t say, you have been encroaching the land, go away!’ and drive them away by force. It does allot alternate land somewhere and resettle them. Such colonies are, in Delhi, called Resettlement colonies. At the same time, if the encroachers are not poor, but monied persons, govt will oust them or arrest them as criminals. Single person like you for govt purpose is a SINGLE person only who should be treated harshly whereas thousands of the poor require different welfare treatment.

    Apply the same rule here. The encroachers here are not a single Muslim or a group of Muslims – even if they are a group, the encroachment is seen as an act on behalf of all millions of Indian Muslims. Therefore, the govt or the court cannot be harsh with them, peremptorily saying, ”The land belongs to Hindus. Get out and get lost!”

    5-acre allotment of land to the Muslims sends the message to all Indians as well as to the world that the court or the govt has no ill-will or rancour against them; or ‘punishing’ them, as they do to you, as a single person. Rather, the govt or the court is willing to favour them too, in the same way it does to the Hindus with a favorable order.

    It is legally permitted also, to appease. It is not an ordinary dispute involving ordinary citizens. Law should be understood by you, only as law. It is not as you imagine here as a common man.

  4. I copy pasted this comment from another site, very relevant!
    The tragic fact [is] it continues through other methods today in the form of ” the Constitution of India and the Supreme Court of India.

    Let us consider some longterm implications for Bharat of the Ayodhya judgement.

    The Hindus got 2.77 acres to which they had proved their right.

    The Muslims were gifted 5 acres (the High Court had gifted them less than an acre?).

    Just as Nehru created Kashmir as a festering sore in Bharat, has the SC created these 5 acres as a sore that will fester in this Hindu temple city?

    Consider that Mecca will never allow a non-Sunni structure there (nor the Vatican State a non-Catholic one), yet the SC now enables Sunnis to build a (Wahabi-funded?) bhavya masjid that can draw thousands and thousands of koranically kaffir-hating momins to our Ayodhya. Do Hindus seriously expect momins to accept us the way the SC wants us to accept them?

    ”Secularism” was introduced in the Preamble to the Constitution in 1975. This was then translated as panthnirpekshata. This evolved into sarvadharma samabhava – and the SC now has said unequivocally that ”all religions are equal”.

    From indifference to equal respect to equal (in all respects). IOW, the aggressive abrahamisms are even more firmly entrenched in the Constitutional polity (https://krishenkak.wordpres….

    The SC itself sidelined Hindu organisations which fought so determinedly and has decided there be a new Trust for the Hindus. Whether the government includes or not those fighters remains to be seen – but dissension is already raising its head amongst Hindus, thanks to the SC.

    And, of course, the re-writing of bharatiya history – according to the SC, the original temple may have fallen into ruin – just because there was a mosque right over it does not mean it can be interpreted as Muslims having razed it to build their mosque right there.

    In the long run, it is the abrahamisms that will continue to be the civilisational conquerors over a ”secular” Bharat of the kind the Constitution of India is making it – and see how the cover of Radha Rajan’s “The Shrinking Hindu Nation” illustrates this.

    Given the reality of our ”secular” Constitution, Hindus have won a very very major battle; it remains to be seen who will win the war the abrahamisms are waging against us.

    Unknown Hindus finally broke this symbol of our civilisational oppression. The SC has enabled its re-creation. Behind the flame of our civilisational restoration still lurks the dark shadow of evil, nurtured and protected by our SC.

    A very very astute ”secular” judgement.

  5. BSV, yeah, right, yawn! your analogy is really out of whack, comparing slump dwellers occupying some land and getting compensation from Govt and to the deliberate destruction of a ancient,one of the most sacred Hindu temple, by the jihadi Islamists and getting some compensation. The judges clearly have stated that the mosque was NOT built on any vacant land. They were being politically correct and they did not want to name the Islamic culprits as the deliberate destroyers. And these judges go and compensate these Jihadis!!! Appeasement of the highest order! Please spare us your tears for the violent Jihadis, people have woken up. They do not buy bull crap from anyone anymore.

  6. The analogy was cited to bring home the point of numbers. Don’t take it exactly matching. It is a good luck that the govt led by Modi did not share your hatred for Muslims. He welcomed the judgement and hoped the matter is settled amicably. The less educated has practical wisdom and the much educated lack it. The PM has the welfare of the nation as a whole.

    The Muslims in general welcomed the judgement and the litigant Muslim body wants to appeal against it, only because they feel they have lost their face. So, no backlash from Muslims in general and the correct reactions of the ruling leaders were praised by the whole world.

    Long live Indian democracy and secularism.

  7. I am not in favor of allotment of 5 acre land for Muslims. This is pure ISLAMIC appeasement.
    I agree with Dr Rama Krishnan. Muslims do not deserve the allotment of 5 acres of land in Ayodhya. The judges pampered the Muslims. Ayodhya is where Lord Ram was born and ruled. It (Ayodhya) belongs only to us the Hindus. Muslims should not be allowed to build a mosque in our holy city. Muslims have a nation for them, Pakisthan. We Hindus do not have any nation for us.
    Sakuntala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *