பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்

பாரதியாரின் சீடரும் அவரால் பூணூல் அணிவிக்கப் பட்டு காயத்ரி மந்திர உபதேசம் செய்யப் பட்டவருமான கனகலிங்கம் (இவர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்), பாரதியாரின் மரணத்துக்குப் பின்னர் கிறுத்துவராக மதம் மாறினார் என்று ஒரு ஆதாரமற்ற பொய் உலவி வருகிறது என்பதை Ananda Ganesh தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதே விஷயத்தை ஜெயமோகனும் முன்பு எழுதியிருக்கிறார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“முக்கியமான நூல் கனகலிங்கம் எழுதிய எனது குருநாதர். தலித் சாதியில் பிறந்த அவருக்கு பாரதி பூணூல் போட்டுவிட்டார். அது ஒரு சாதாரணச் சடங்கு அல்ல. ஆண்பிள்ளைகள் இல்லாத பாரதி அவரைத் தனக்கு இறுதிச்சடங்கு செய்யும் புதல்வனாகவே நினைத்திருந்தார். ஆனால் கனகலிங்கத்துக்கு பாரதி மறைவுச் செய்தி பாரதியின் குடும்பத்தாலும் நண்பர்களாலும் தெரிவிக்கப்படவேஇல்லை. மூன்றாம் நாள்தான் செய்தி கிடைத்து கனகலிங்கம் பாரதி எரிந்த சுடுகாட்டுக்குச் சென்று கதறி அழுதார். மனக்கசப்படைந்த கனகலிங்கம் சிலவருடங்களில் கிறித்தவராக மதம் மாறினார்” (ஜெயமோகன்)

உண்மை என்ன?

பாரதி அறிஞரும் ஆய்வாளருமான ஹரி கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை விளக்கியிருக்கிறார். இனி, ஹரிகியின் சொற்களில் –

1) அவருக்கு பிராமணராக வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது. அவர் வேதங்கள் கற்க விழையவில்லை – என்கிறது பதிவு. ரா கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ புத்தகத்தை இதை எழுதியவர் தொட்டுக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. தான் காயத்ரி மந்திரத்தை எப்போதும் சொல்லிக்கொண்டு வருவதாக கனகலிங்கம் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருப்பது பொய் என்றால், என்ன காரணத்துக்காக அது பொய் என்பதை விளக்கவும்.

2) கனகலிங்கத்துக்கு வேதங்களைக் கற்கும் விழைவு இல்லையென்றால், பூணூல் போட்டிருக்கும் அனைவரும் வேதவிற்பன்னர்கள்தாமா? இவர் எத்தனை வேதங்களைக் கற்றிருக்கிறார்?

3) பாரதியாரின் மரணத்துக்குப் பின்னர் கனகலிங்கம் ஜி கிறுத்துவராக மதம் மாறினார் – என்கிறது பதிவு. ரா கனகலிங்கம் மேற்படிப் புத்தகத்தை எழுதியது 1947ல். இந்தப் புத்தகத்துக்குப் பல பதிப்புகள் வந்துவிட்டதால் வருடத்தை அடையாளம் காணமுடியாமல் இருந்தாலும், எஸ் வையாபுரிப்பிள்ளை இதற்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் 25.9.1947 என்று தேதி குறித்திருக்கிறார். ‘அன்புத் திறவுகோல்’ என்ற தலைப்பில் பி ஸ்ரீ எழுதிய முன்னுரையில் 5.10.1947 என்று தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. பாரதி இறந்தது 1921ல். அதாவது பாரதி இறந்து 26 வருடங்கள் கழித்து ரா கனகலிங்கம் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்பது நிரூபணமாகிறது. (ரா அ பத்மநாபன், தன் சித்திர பாரதியிலும் இந்தப் புத்தகம் 1947ல் வெளிவந்தது என்று குறித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்திலும் ‘நான் ஒரு கிறித்தவனாக மாறிவிட்டேன்’ என்றோ அல்லது அப்படியொரு தகவலை ஊகிக்கும் வகையிலோ கனகலிங்கம் ஒரே ஒரு வரியும் எழுதவில்லை. எழுதியிருக்கிறார் என்றால் எடுத்துக்காட்டவும். மாறாக, தனக்கு உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

இந்தப் புத்தகதில் (அதாவது பாரதி இறந்து 26 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த இந்தப் புத்தகத்தில்) இல்லாமல் வேறு எதிலேனும் இப்படியொரு தகவல் இடம்பெற்றிருந்தால், அதற்கான ஆதாரத்தைக் காட்டவும்.

பாரதி இறந்து 26 வருடங்கள் மதம் மாறாத கனகலிங்கம் எப்போது மாறினார், அதன் பிறகு எத்தனையாண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்ற விவரங்களையும் சொல்லவும்.

ரா அ பத்மநாபன் பூணூல் அணிந்திருக்கும் கனகலிங்கத்தின் படத்தை 1957ம் வருடம் சித்திரபாரதியின் முதல் பதிப்பில் வெளியிட்டிருப்பதை இணைத்திருக்கிறேன். பாரதி இறந்து 36 வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பூணூலை அவர் அணிந்தபடிதான் இருந்திருக்கிறார். ஆதாரமில்லாமல் பேசுவது நம் வழக்கமில்லை.

4) அடுத்து, மரணச்செய்தி குறித்த விவகாரம். இது அடுத்த பொய். அதே புத்தகத்தின் 14ம் அத்தியாயத்தில் ‘குருநாதரின் மறைவு’ என்ற தலைப்பில் இந்தச் சம்பவத்தைக் குறித்து மூன்று பக்கங்களுக்கு எழுதியிருக்கிறார். பாரதி மறைந்த அன்று கனகலிங்கம் சென்னை பிராட்வேயில் இருந்த டேனிஷ் மிஷன் வாசகசாலைக்குச் சென்றிருக்கிறார். சுதேசமித்திரன் பத்திரிகையைப் பலர் படித்துக்கொண்டிருந்தனர். தன்முறை வருவதற்காக மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரையில் காத்திருந்திருக்கிறார். இரண்டுமணி நேரம் கழித்து பத்திரிகை இவர் கைக்கு வந்தது. பத்திரிகையை எடுத்தால், முதல் பக்கத்தில் பாரதியின் மறைவுச் செய்தியைப் பார்த்து அதிர்ந்தார். இவர் பத்திரிகையைப் பார்க்கும்போதே மணி மாலை ஏழு. அதற்குப் பிறகு கிளம்பி, பிராட்வேயிலிருந்து திருவல்லிக்கேணி தெளிசிங்கப் பெருமாள் கோவில் தெருவுக்கு வந்து, அதன் பிறகுதானே கிருஷ்ணாம்பேட்டைக்குப் போகமுடியும்? ஏழுமணிக்குள்ளாகவே பாரதியின் தகனம் நடந்தாயிற்று. மூன்றுநாள் கழித்துதான் செய்தி கிடைத்ததாக கனகலிங்கம் எங்கே சொல்லியிருக்கிறார்? அதன்பிறகு மனம்வெறுத்து கிறித்தவராக மாறினாராமா? நல்ல கதை. புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டும்.

5 Replies to “பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்”

 1. 1. இந்த மறுப்பின் முக்கியத்துவம் கனகலிங்கம் கிறிஸ்துவராக மாறினாரா இல்லையா என்பதுதான். ஜெயமோகன் அப்படி எங்கே பார்த்தார் என்று அவர் தரவுகளைத் தரத்தான் வேண்டும். ஜெயமோகன் தன் நினைவிலிருந்து எழுதும்போது சில சமயம் தகவல் பிழைகள் நேரத்தான் செய்கின்றன.

  2 ஹரிகிருஷ்ணனின் மறுப்பு // அவருக்கு பிராமணராக வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது. அவர் வேதங்கள் கற்க விழையவில்லை – என்கிறது பதிவு // என்று ஆரம்பிக்கிறது. இப்படி ஜெயமோகன் பதிவில் இல்லையே?

  3. பாரதி கனகலிங்கத்தை தன் மகனாகக் கருதினார், ஆனால் அவருக்கு பாரதி இறந்த தகவல் பாரதி குடும்பத்தினரால் தெரிவிக்கப்படவில்லை என்கிறது பதிவு. மறுப்பும் இதை ஊர்ஜிதம் செய்கிறது, கனகலிங்கத்துக்கு தகவல் கிடைக்கவில்லை, சுதேசமித்திரன் படித்துத்தான் தெரிந்து கொண்டார் என்கிறார் ஹரிகிருஷ்ணன். பாரதி இறந்து, அந்த செய்தி சுதேசமித்திரனுக்குப் போய், ஏதோ ஒரு உதவி ஆசிரியர் செய்தியை எழுதி, அது அச்சடிக்கப்பட்டு அதை கனகலிங்கம் அன்று மாலை இரண்டு மணி நேரம் காத்திருந்து படித்திருக்கிறார். சுதேசமித்திரன் அப்போது தினசரியா, இல்லை வாரம் இரண்டு மூன்று முறை வருமா, காலையில் வருமா இல்லை மாலையிலா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் குறைந்தபட்சம் பல மணி நேரமாவது ஆகி இருக்க வேண்டும். தகவல் தெரிய மூன்று நாளாயிற்றா இல்லை குறைவா என்பது நினைவிலிருந்து எழுதும்போது தவற வாய்ப்பிருக்கிறது அல்லவா?

 2. Jayamohan is losing credibility is an understatement. He has lost it a long time ago!

 3. //Jayamohan is losing credibility is an understatement. He has lost it a long time ago!//

  I don’t think a writer like him expresses his views on a controversial issue in order to get ‘credibility’. Further, your word credibility is vague. Credibility from whom? If he takes a side in a controversial matter, he will lose the trust and credibility of the party affected by it negatively, because it is human nature to expect support. When it is denied, we say, he is an idiot. Sour grapes ! Whereas, the party benefited by it will lionise him.

  Jeyamohan is experienced in controversies. He has received both bouquets and brickbats. He is a veteran writer. Therefore, I am sure, he does not bother about credibility. A true writer expresses his views come what may. But we do bother about his views: hence, this tamilhindu’s efforts to bring to our knowledge the Bharatiar scholar’s rebuttal to him!

 4. BSV
  “”I don’t think a writer like him expresses his views on a controversial issue in order to get ‘credibility”” Obviously you are an expert in reading his mind.
  Credibility is from US, the insiders, who cherish our dharmic religion and its culture and values. From all your responses in the past, you do not fall into that category.
  Now do not bother’with long monologues as response!Seen it all , ad nauseam .

 5. To read an author’s mind or search for the impulses behind his particular work is commonly done , more so, by those who are interested in authors or literature. When people are offended by a work, they instinctly rush to search for the impulses behind it. What or who provoked him to write that piece that offended us? We ask and then we judge, ‘he lost all credibility’ 🙂 . When it comes to a literary work, there is no question of ‘credibility’. Indeed, it is nonsense to connect ‘credibility’ with literary authors.

  Jeyamohan knows ”our dharmic religion and its culture and values” far better than you. I’ve read his writings on Hinduism with which an expert in the subject may not agree, or, may not accept him as an erudite scholar, but definitely he knows that we don’t know or more than we know. I have not seen any of your writing on the dharma. Why don’t you write an article on that here, Sir? Or give links to your writings, either in English or Tamil. I shall be grateful to you.

  Jeyamohan will write and continue to do so. It is a writer’s lot to receive brickbats from sneering simpletons.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *