கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

கமலஹாசனை பல பிராமணர்கள் தங்களில் ஒருவர் என்று நினைத்துக் கொண்டு அவருக்கு வாக்களித்து வருகிறார்கள். அவர் ஏன் பிராமணர்களில் ஒருவர் கிடையாது இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களுக்கு எதிரி என்பதை முந்தைய பகுதி விளக்கியது. இப்பொழுது அவர் எம் எல் ஏ பதவிக்கோ முதல்வர் பதவிக்கோ தகுதியுடைய நல்லவர்தானா என்பதையும் பார்த்து விடலாம்.

இதில் நல்லவர் என்பது அவரது தனித மனித ஒழுக்கத்தை மட்டுமே பேசுவது அல்ல. அவர் எம் எல் ஏ பதவிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கும் போட்டியிடும் ஒரு வேட்ப்பாளர். ஆகவே அவற்றுக்கான தகுதி அவருக்கு கிஞ்சித்தாவது உள்ளதா என்பதைக் காணலாம்.

(1) கமலஹாசன் நல்லவரா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் “இல்லை” “கிடையாது” என்பது மட்டுமே. ஏன் அவர் நல்லவர் கிடையாது? அவரிடம் ஒரு நல்ல மனிதருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் முக்கியமான நேர்மை இருப்பதில்லை. பொய்களையும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதையும் கீழ்மைகளையும் ஊழல்களையும் ஆதரிக்கும் ஒரு மனிதராகவே இருக்கிறார். ஊழல்வாதிகளையும் கொலைகாரர்களையும் இனாழிப்புவாதிகளையுமே தன் வழிகாட்டிகளாகச் சொல்லி வருகிறார்.

அவர் எத்தனை மனைவி துணைவிகள் வைத்துக் கொள்கிறார் என்பது அவருக்கும் அவர் இணைகளுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட நமக்கு உரிமையில்லைதான். இருந்தாலும், இதில் அவரது தனிப்பட்ட ஒழுக்கக் கேடுகளைப் பற்றி நாம் பேசக் கூடாது என்றாலும் கூட ஒரு முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் நபரின் தனிநபர் ஒழுக்கமும் அவசியம் அலசப் பட வேண்டிய ஒன்றே. கருணாநிதி போன்று பல மனைவி துணைவிகளை வைத்துக் கொண்டவர்கள் அவர்கள் குடும்பங்களுக்காக மாபெரும் ஊழல்கள் செய்ததை நாம் மறந்து விட முடியாது. ஆகவே பொது வாழ்விற்கு வருபவரது தனிமனித வாழ்க்கையும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? பொது வாழ்வுக்கு வந்தபின்னர் அரசியல்வாதியின் தனிப்பட்ட வாழ்க்கையும் எடை போட்டே பார்க்கப் படும். ஆக அந்த விதத்திலும் அவர் தன் மனைவி துணைவிகள் எவருக்கும் விசுவாசமாக நேர்மையாக ஒழுக்கமாக இருந்தவரும் கிடையாது. தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியை நம்மால் தவிர்க்க முடிவதில்லைதான். இருந்தாலும் அதையும் தாண்டி அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்.

(2) அவர் ஒரு ஊழல்வாதி. இன்னும் ஆட்சிக்கே வரவில்லையே அவரை எப்படி ஊழல்வாதி என்கிறீர்களா? அவர் ஊழல் செய்யாவிட்டாலும் அவர் யாரை ஆதரித்து வருகிறார்? ஊழல்வாதிகளை ஆதரிக்கும் ஒருவருக்கு நோக்கம் என்னவாக இருக்க முடியும்? அவர் கேரள மாநிலத்தை ஆளும் கம்னியுஸ்டு கட்சிதான் இந்தியாவிலேயே உன்னதமான உத்தமமான கட்சி என்றும் அதை ஆளும் பிணரயி விஜயன் தான் இந்தியாவிலேயே ஆகச் சிறந்த முதல்வர் என்றும் அவர்களுக்கு ஆரம்பம் முதலே புகழ் பாடி வருகிறார். அவர்களும் கமலஹாசனை அழைத்து பாராட்டுகிறார்கள். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் கேரளத்தில் இந்திய தேசத்துக்கே துரோகம் விளைவிக்கும் விதத்தில் முதல்வர் பிணரயி விஜயன் இருந்தார் என்றும் அங்கு பரபரப்பாக விசாரிக்கப் பட்டு வரும் தங்கக் கடத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவரது ஆதரவிலேயே அதைச் செய்திருக்கிறார்கள் என்ற விஷயங்கள் வெளி வருகின்றன, ஆனால் அந்த விஜயனின் புகழ் பாடும் கமலஹாசனோ இது வரை ஒரு வார்த்தை கூட அங்கு நடந்த தங்கக் கடத்தல் குறித்தோ பல்வேறு கம்னியுச மந்திரிகள் சம்பந்தப் பட்ட ஊழல்கள் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை, இன்னும் அவர்களை ஆதரித்தே வருகிரார். ஆக ஊழல் பெருச்சாளிகளின் ஆதரவாளரும் ஊழல்வாதிதானே? ஊழலை எதிர்க்கப் போகிறேன் என்று சொல்பவர் முதலில் தன் நண்பர்களின் ஊழல்களையல்லவா கண்டித்திருக்க வேண்டும்? இது நாள் வரை அதை ஆதரித்து வரும் அடிப்படை நேர்மையற்ற மனிதர்தானே கமலஹாசன்? பிணரயி விஜயன் ஆட்சியில் நாறி வரும் தங்கக் கடத்தல் ஊழல்கள் மற்றும் கொலைகள் குறித்து கண்டிக்கும் அடிப்படை நேர்மை கமலஹாசனுக்கு உண்டா?

சரி. கேரளாவில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது ஆகவே அவர் கருத்துக் கூறத் தேவையில்லை என்று அவர் சொல்லக் கூடும். கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். பெரும் செலவு செய்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரும் அவர் கூட இருப்பவர்களும் 5 நட்சத்திர விடுதிகளில் மட்டுமே தங்குகிறார்கள். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார். என்னிடம் கணக்குக் கேட்க்கக் கூடாது அது தான் சம்பாதித்த பணம் என்கிறார். சரி. அப்படியானால் கணக்கை சொல்ல வேண்டியதுதானே ? ஏன் மிரட்டல் ஆணவப் பேச்சு எல்லாம்? பொது வெளியில் வந்தால் நீ செய்யும் செலவுக்கு நாலு பேர்கள் கணக்குக் கேட்க்கத்தான் செய்வார்கள். உத்தமனாக இருந்தால் அதை அளிப்பதில் என்ன தயக்கம்? இதுவா நேர்மை? தன் கட்சிக்கு எங்கிருந்து நிதி வருகிறது? யார் தருகிறார்கள்? என்பதை இவரால் பொதுவெளியில் மக்கள் முன் அறிவிக்க முடியுமா? மற்ற அரசியல்வாதிகள்தான் ஊழல்வாதிகள் சரி இவர்தான் உத்தமபுத்திரனாச்சே? தன் கணக்குகளை அறிவிக்கலாமே? ஹெலிக்காப்டர், தனி விமான, 5 நட்சத்திர ஹோட்டல் செலவுகளுக்கு எல்லாம் எது நிதி ஆதாரம் என்பதைச் சொல்வாரா? அவரது கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் கோடி கோடியாக கள்ளப் பணம் கைப் பற்றப் பட்டு வருகிறது. அவர்களையெல்லாம் கட்சியில் இருந்து நீக்குவாரா? கிறிஸ்துவ அமைப்புகள் சர்ச்சுகள் மூலமாக அவருக்கு நிதி வருவதாக பல வதந்திகள் உள்ளன. அவற்றையெல்லாம் பொய் என்று அவர் தாராளமாக நிரூபிக்கலாமே? அதை விடுத்து விட்டு கேள்வி கேட்ப்பவர்களை ஏன் மிரட்ட வேண்டும்? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் ஏன் பயம் வர வேண்டும்? சொல்வாரா? செய்வாரா?

(3) தனி மனித வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி அடிப்படை நேர்மையற்ற மனிதர் கமலஹாசன். சரி அடிப்படை நேர்மைதான் இல்லை ஒரு எம் எல் ஏ பதவிக்கும் அதற்கும் மேலாக அவர் ஆசைப் படும் முதல்வர் பதவிக்கும் தகுதிகளில், ஆளுமைத் திறன்களில், அறிவுத் திறன்களில் ஏதாவது ஒன்றாவது கமலஹாசனுக்கு உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஒரு கட்சியைத் துவக்கி போட்டியிட்டு இப்பொழுது முதல்வர் பதவிக்கும் ஆசைப் படுகிறார் கமலஹாசன். பொய் சொல்லியே பிழைப்பு நடத்தும் சீமானுக்குக் கூட தமிழ் தேசியம் என்றொரு வெற்றுக் கொள்கையாவது இருக்கிறது. பா ஜ கவுக்கு தேச ஒற்றுமை, தேசத்தின் நலன், பாதுகாப்பு, ஒரே இந்தியா போன்ற கொள்கைகள் உள்ளன. திராவிடக் கட்சிகளுக்கும் கூட நாம் உடன் படாவிட்டாலும் கூட பேருக்கு ஏதோ சில உருப்படாத கொள்கைகள் உள்ளன. ஆனால் கமலஹாசன் கட்சியின் கொள்கைகள்தான் என்ன? தமிழகத்துக்கான அவரது பாதைகள் என்ன? இது குறித்து எங்காவது ஏதாவது பேசியுள்ளாரா? கேட்டால் நான் ஊழலை ஒழிப்பேன். அதுதான் என் கட்சியின் நோக்கம் என்கிறார். ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்த வேண்டியது அடிப்படை தகுதி அது கொள்கையல்ல. கொள்கை என்பது வேறு. சரி ஊழல் இல்லாத ஆட்சியைத்தான் பிரதமர் மோடி அளித்து வருகிறாரே? அவரையே ஆதரித்து விட்டுப் போகலாமே? ஊழலற்ற ஆட்சியை அளிக்கும் நரேந்திர மோடியை கமலஹாசன் ஏன் எதிர்க்க வேண்டும்? இருவரும் லட்சியங்களும் ஊழலற்ற ஆட்சிதானே? ஒருபுறம் ஊழல் அற்ற ஆட்சி அளிப்பேன் என்று சொல்லி விட்டு மறுபுறம் அப்படி இந்தியா அளவில் அளித்து வரும் நரேந்திர மோடியை எதிர்ப்பது எந்தவிதமான நேர்மை? ஊழலற்ற ஆட்சியை அளிப்பேன் என்று சொல்பவர் எப்படி ஊழலில் ஊறித் திளைக்கும் கேரள பிணரயி விஜயனை ஆதரிக்கிறார்? இது என்னவிதமான ஊழலை ஒழித்தல்? சரி ஊழலை ஒழிக்கக் கிளம்பியவர் தன்னளவில் தன் கட்சிக்கு எப்படி பணம் வருகிறது எங்கிருந்து விமானங்கள் எல்லாம் அமைத்துக் கொள்ள முடிகிறது என்பதைச் சொல்வாரா? அங்கிருந்துதானே ஊழலை ஒழிப்பது ஆரம்பிக்கப் பட வேண்டும். கேட்டால் எரிச்சலும் கோபமும் ஏன் அடைகிறார்?

சரி ஊழலை ஒழிக்கக் கிளம்பியவரின் கட்சியின் முக்கிய நபரின் நிறுவனத்தில் பல கோடிகள் வருமான ஏய்ப்பு நடந்துள்ளதே? அவரை குறைந்த பட்சம் கட்சியிலிருந்தாவது இதுவரை நீக்கியுள்ளாரா? இப்படி தன்னிடமே ஊழலை வைத்துக் கொண்டு எங்கிருந்து ஊழலை ஒழிக்கப் போகிறார்? இவர் கட்சியின் பிற கொள்கைகள்தான் என்ன? தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவேன் என்கிறார்? அது தமிழகத்துக்கு வரும் தொழில்களை ஒழித்து விடாதா? என்னதான் இவரது கொள்கைகள்? ஒரு அடிப்படையே இல்லாமல் தன் சினிமா பிராபல்யத்தை மட்டுமே நம்பி கட்சி துவக்குவது கோமாளித்தனம் அல்லது மக்களை மடையர்கள் என்று எண்ணும் செயல் அல்லவா? சரி ஊழலை ஒழிக்கக் கிளம்பியவர் ஏன் ஊழல்களிலேயே ஊறித் திளைக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஏன் காத்துக் கிடந்தார்? ஊழலை ஒழிக்கப் போபவர் எப்படி ஊழல்களின் ஊற்றுக்கண்ணான காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முடியும்? கல்வி வியாபாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இவர் என்ன விதமான ஊழலை ஒழிக்கப் போகிறார்? ஆக எந்தவொரு நிலையான கொள்கைகளும் லட்சியங்களும் இல்லாத கோமாளித்தனமாக கட்சியை நடத்தி வரும் ஒரு நடிகர் மட்டுமே இவர் என்பது உறுதியாகிறது.

(4) ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் ஆக வேண்டும் என்றால் கூட அடிப்படைத் தகுதி தான் நினைப்பதை தனது திட்டங்களைக் கோர்வையாகப் பேசக் கூடிய திறன் வேண்டும். அதுவும் இவர் எம் எல் ஏவுக்கும் முதல்வர் பதவிக்கும் ஆசைப் படுகிறார். அப்படியானால் தான் நினைப்பதை தன் திட்டங்களை தன் கொள்கைகளை மக்களின் பிரச்சினைகளை அதற்கான தீர்வுகளைத் தெளிவாக குழப்பம் இல்லாமல் கோர்வையாகப் பேசவும் வெளிப்படுத்தவும் வேண்டிய அடிப்படைத் தகுதி வேண்டும். அந்தத் தகுதி இவருக்கு உள்ளதா? வாயையைத் திறந்தாலே உளறிக் கொட்டுகிறார். ஒரு நாலு வார்த்தைகளை தப்பு இல்லாமல் குழப்பம் இல்லாமல் முரண்பாடுகள் இல்லாமல் பேசத் தெரியவில்லை. நாலு வரி கூட குழப்பம் இல்லாமல் எழுத முடிவதில்லை. கேட்டால் அது அறிவு ஜீவித்தனம் சாதாரண மனிதர்களுக்கு எல்லாம் புரியாது அது அதையும் தாண்டி புனிதமானது என்கிறார்கள். சாதாரண பாமர மனிதர்கள்தானே ஓட்டுப் போட வேண்டும்? அவர்களுக்குத்தானே புரிய வேண்டும்? நாளைக்கு தமிழர்களின் தலையெழுத்து பாவம் எல்லாம் சேர்ந்து இவர் முதல்வர் ஆக நேரிட்டு விட்டால் இவர் தான் நினைக்கும் திட்டங்களை எப்படி தன் கீழ் உள்ள ஐ ஏ எஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பேசிப் புரிய வைப்பார்? ஒரு நான்கு வார்த்தை பேசுவதற்கு முன்பாக கழுதை மாதிரி ஆயிரம் கனைப்புகளும்,முக்கல் முணகல்களும்,ஆங் ஆங் என்ற இழுவைகளும் இவர் பேசி முடிக்கும் முன்னால் அதிகாரிகள் தூங்கிப் போய் விட மாட்டார்களா? இவர் தொகுதியில் உள்ள தொழில் முனைவர்களுக்கோ விவசாயிகளுக்கோ நெசவாளர்களுக்கோ நாளைக்கு ஒரு பிரச்சினை அதை மத்திய நிதி அமைச்சரிடம் சென்று விளக்கித் தீர்வு காண வேண்டும் என்றால் இவரால் அதைச் செய்ய முடியுமா? முக்காமல் முணங்காமல் திக்காமல் திணறாமல் தள்ளாமல் தடுக்காமல் நாலு வார்த்தை பேசத்தான் இவரால் இயலுமா? பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவுத் திறன் தான் இவரிடம் உள்ளதா?

சினிமாவில் கேமிராவின் பின்னால் பார்த்துப் பார்த்து வசனம் பேசுவது பெரிய விஷயமில்லை. எண்ணத்தில் தெளிவு இருந்தால்தான் வார்த்தையில் தெளிவு வரும் பேச்சில் செயலில் தெளிவு இருக்கும். அடிப்படையில் எண்ணங்களே கோளாறு என்னும் பொழுது எப்படி வார்த்தைகள் வெளியே வரும்? எழுதுவது எல்லாமே அபத்தக் களஞ்சியங்கள். இரண்டு வார்த்தைகள் கூட புரியும்படி எளிமையாக எழுதவும் தெரிவதில்லை. இவர் நான்காம் வகுப்பு கூட படிக்காத படிப்பறிவில்லாதவர்தான். ஆனால் அப்படிப் படித்திராத காமராஜர் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களினால் தெளிவான பேச்சுத் திறமையும் செயல் திறனும் கொண்டிருந்தார்கள். அப்படி எந்தவொரு அடிப்படையாகத் தேவைப் படும் கம்னியுக்கேஷன் திறனும் இவருக்கு இருப்பதில்லை. எழுதி வைத்துக் கூட படிக்கும் துப்பு இல்லாத ஒரு படிப்பறிவில்லாத தற்குறிதான் கமலஹாசன்.

(5) சரி பேசவும் எழுதவும் தான் நினைப்பதைச் சொல்லும் திறன்கள்தான் இல்லை. தொலைந்து போகட்டும். ஒரு மாநிலத்தை ஆள வருபவருக்கு அந்த மாநிலத்தின் வரலாறு, பூகோளம், சமூக அறிவு முக்கியமாக அடிப்படைப் பொருளாதார அறிவு கட்டாயமாக வேண்டும். எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அந்த அறிவுகளை தங்கள் அனுபவங்கள் மூலமாகப் படிப்படியாகப் பெற்று வளர்ந்தவர்கள். பல்வேறு பதவிகளை வகித்தவர்கள். அடிப்படை அனுபவம் உடையவர்கள். நேற்று வரை சினிமாவில் நடித்து விட்டு இன்று முதல்வராக அவர்கள் அவதாரம் எடுத்து விடவில்லை. சினிமாவில் மார்க்கெட் போன பின்னர் அரசியலில் பொழுதைக் கழிக்கலாம் என்று ரிட்டையர்மெண்ட் ஹாபியாக அவர்கள் அரசியலுக்குள் நுழையவில்லை. ஏன் ஜெயலலிதாவும், எம் ஜி ஆரும் கூட பல்வேறு பிற பதவிகளில் நிர்வாக அனுபவங்களைப் பெற்ற பின்னரே முதல்வர் பதவிக்கு வந்தார்கள். அவர்களுக்கு தாங்கள் நினைப்பதைத் தெளிவாகச் சொல்லும் மக்களிடம் பேசும் திறன் இருந்தது. அப்படி எந்தவொரு அனுபவமும் இல்லாதவர் சினிமாவில் போணியாகவில்லை என்றவுடன் பொழுது போக்கிற்காக அரசியலுக்கு வந்தவர் இவர்.

(6) அடிப்படை ஆளுமைத்தன்மை இல்லாதவர் இவர். இவர் அடிப்படையில் ஒரு பெரும் கோழை. துணிவற்ற மனிதர். ஒரு எம் எல் ஏ வேண்டாம் வார்ட் கவுன்சிலருக்குக் கூட அருகதையற்ற ஆளுமையற்ற மனிதர் கமலஹாசன். ஒரு அரசியல்வாதிக்கு அடிப்படைத் தேவை தலைமைப் பண்பு. ஆளுமைத் திறன். அது இல்லாதவர்கள் அரசியலில் குப்பை கொட்டக் கூட அருகதையற்றவர்கள். இவரை யாராவது ஒரு பேட்டை ரவுடி மிரட்டினால் கூட நான் ஆட்சி செய்ய மாட்டேன் என்று நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்று சொல்லக் கூடிய கோழை மனிதர் இவர். இவரது விஸ்வரூபம் சினிமா வெளியிடக் கூடாது என்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் இவரை மிரட்டிய பொழுது அவர்களுடன் என்ன பேரம் இவர் நடத்தினார்?, எவ்வளவு காசு கொடுத்து படத்தை வெளியிட்டார் என்ற உண்மையை பொதுவில் மக்களிடம் சொல்லும் தைரியம் இவருக்கு உண்டா? அப்பொழுது அவர்கள் மிரட்டிய பொழுதும் கூடுதலாக முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்த பொழுதும் இவர் நடந்து கொண்ட கேவலமான விதம் என்ன? ஒன்று துணிந்து நின்றிருக்க வேண்டும் அல்லது வெளியே உளறாமலாவது இருந்திருக்க வேண்டும். மாறாக நாட்டை விட்டே ஓடப் போகிறேன் என்று சொன்ன துணிவற்ற தொடைநடுங்கி கோழைதானே இவர்? நாளைக்கு இவர் முதல்வராக வந்த பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலோ அல்லது ஸ்டெர்லைட் போன்ற பெரும் போராட்டங்களை சமூக விரோதிகள் தேச விரோதிகள் நடத்தினாலோ இவர் அவற்றை எவ்வாறு எதிர் கொள்வார்? என்னை மிரட்டுகிறார்கள் நான் நாட்டை விட்டே ஓடி விடுவேன் என்பாரா? சூரத்தனங்கள் எல்லாம் இவருக்கு சினிமாவில் மட்டுமே காட்டத் தெரியும். நிஜ வாழ்க்கையில் எந்தவொரு எதிர்ப்புகளையும் எதிர் கொள்ளத் தெரியாத பயந்து நடுங்கும் கோழை என்றுதானே இவர் நிரூபித்திருக்கிறார்? இவருக்கும் எம் எல் ஏ ஆகும் அடிப்படைத் தகுதி கூடக் கிடையாது. ஆளுமை சுத்தமாகக் கிடையாது.

(7) ஆக பேச்சுத் திறனும் கிடையாது, எழுத்துத் திறனும் கிடையாது, எந்தவிதமான அடிப்படை அறிவும் கிடையாது, எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் துணிவும் கிடையாது, அடிப்படை நேர்மையும் கிடையாது. பின் இவருக்கு வேறு என்னதான் தகுதிகள் உள்ளன? நடிகர் என்ற ஒரே ஒரு தகுதியைத் தவிர? நாட்டை ஆள நடிகர் தகுதி மட்டும் போதுமானதா? இவர் ஒரு பெரும் அறிவு ஜீவி என்றும் ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியங்களிலும் பெரும் புலமையுடையவர் என்று இவரது அடிப்பொடிகளினால் பரப்பப் பட்டு இவருக்குப் போலியாக ஒரு அறிவு ஜீவி பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் அப்படியான எந்தவொரு அறிவும் இவருக்குக் கிடையாது என்பதை ரிபப்ளிக் டி வி அர்நாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி ஒன்றில் வெட்ட வெளிச்சமானது. அதில் மத்திய மந்திரி ஸ்மிருதி ஈரானியின் ஆங்கிலத் திறமைக்கும் பேச்சாற்றலுக்கும் அறிவுத் திறனுக்கும் முன்னால் இவர் மென்று முழுங்கினார் பதில் சொல்லத் தெரியாமல் முடியாமல் கூனிக் குறுகித் தட்டுத் தடுமாறினார் அசட்டுத் தனமாகச் சிரித்து உளறினார். ஒரு பதிலைக் கூட உருப்படியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கான அறிவோ பேச்சுத் திறனோ ஆங்கிலப் புலமையோ இவரிடம் அன்று காணக் கிடைக்கவில்லை. ஸ்மிருதி ஈரானி இவரைத் துவைத்துக் காயப் போட்டு விட்டு கமலஹாசன் எந்தவொரு திறமையும் இல்லாத ஒரு நிர்மூடன் என்பதை வெட்ட வெளிச்சமாகப் பொதுவில் சில கேள்விகளிலேயே புரிய வைத்து விட்டார். அன்று கழண்டதுதான் இவரது அறிவு ஜீவி முகமூடி. போலியாக தன்னை ஒரு பெரிய அறிவாளியாகக் காண்பித்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வந்த ஏமாற்றுக்காரர் இவர். ஆக இத்தனை நாட்கள் இவர் மீது கற்பிதமாக ஏற்றிச் சொல்லப் பட்டு கட்டமைத்து வந்ததெல்லாம் பொய்யாயன் போலியான பிம்பம் என்பது அன்று வெளிப்பட்டது. போலியான இவரது பிம்பம் நொறுங்கிச் சிதறியது.

(8) இவருக்கு பொதுவில் ஒரு சவால் வைக்கலாம். ஏதாவது ஒரு விஷயம் குறித்து அது இந்திய தமிழகப் பொருளாதாரமாக இருக்கலாம், தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினையாக இருக்கலாம், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையாக இருக்கலாம், நதி நீர் இணைப்பு பிரச்சினையாக இருக்கலாம் சுகாதாரம் குறித்த பிரச்சினையாக இருக்கலாம், நிதிப் பிரச்சினையாக இருக்கலாம், தொழில் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம், விவசாயப் பிரச்சினையாக இருக்கலாம், தமிழக கலாசாரம் குறித்ததாக இருக்கலாம் ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அதிகம் வேண்டாம் ஒரு ஐந்து நிமிடம் ஐந்தே ஐந்து நிமிடம் இவரால் கோர்வையாக அறிவுபூர்வமாக திடமாக ஒரு நான்கு வார்த்தைகள் பேச முடியுமா? அதற்கான அறிவுத் திறன், அனுபவ அறிவு ஏதாவது ஒரு ஊசிமுனை அளவுக்காவது இவருக்கு உண்டா? தமிழகம் குறித்த பூகோள அறிவு இவருக்கு உண்டா? எங்கே என்ன மலை இருக்கிறது எங்கே எந்த நதி ஓடுகிறது எங்கு எது விளைகிறது தமிழகத்தின் அடிப்படை வருமானம் செலவுகள் என்னன்ன என்று எது பற்றியாவது குறைந்த பட்ச அடிப்படை அறிவாவது உண்டா? இவருக்கு அது கிஞ்சித்தும் கிடையாது. சந்தேகம் இருந்தால் இவரை பிரசாரத்தின் பொழுது யாராவது நிறுத்தி ஒரு கேள்வியை திடீரென்று கேட்டுப் பாருங்கள் இவரது வண்டவாளம் தெரியவரும். பெப்பெபே என்று உளறித் தள்ளுவார். ஸ்மிருதி ஈரானியுடனான இவரது விவாதம் தமிழர்களுக்குத் தெரியாது என்பதினால் இன்னும் தன்னை ஒரு பெரிய அறிவு ஜீவியாக காண்பித்துப் போலியாக வலம் வருகிறார். தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது. இவர் ஒரு போலியான கட்டமைக்கப் பட்ட அரை வேட்க்காட்டு வெற்று வேட்டு மட்டுமே இவர். மேற்படி விஷயங்களில் ஏதாவது ஒன்று குறித்து என்றாவது இவர் பேசி யாராவது எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆக பொது அறிவும் இல்லாத போலி மனிதர்தான் கமலஹாசன்.

(9) ஒரு நேர்மையான திறமையான அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய எந்தவொரு அடிப்படைத் தகுதிகளும் இல்லாத இவரா தமிழகத்தை ஆள ஆசைப் படுகிறார்? ஏற்கனவே ஏமாற்றுகாரர்களின் அடுக்கு மொழிகளை நம்பி தமிழர்கள் ஏமாந்தது போதாதா? இன்னும் ஒரு ஏமாற்றுக்கார நடிகரிடம் தமிழர்கள் ஏமாற வேண்டுமா? குறிப்பாக நடுத்தர வர்க்க படித்த ஆனால் அதிகம் உலக அறிவு பொது அறிவு அரசியல் தெளிவு இல்லாத வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். தயவு செய்து கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு ரோல்மாடலைக் காண்பிக்க வேண்டும் என்றால் ஒரு வானதி ஸ்ரீநிவாசனை, ஒரு நிர்மலா ஸ்ரீநிவாசனை, ஒரு அண்ணாமலை ஐ பி எஸ்சை, ஒரு ரத்தன் டாட்டாவை, ஒரு இஸ்ரோ சிவனை, ஒரு அசிம் ப்ரேம்ஜியைக் காண்பிப்பீர்களா அல்லது சகலவிதங்களிலும் தோல்வி அடைந்த திறமையற்ற தகுதியற்ற தனிமனித ஒழுக்கமற்ற கமலஹாசனை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா? உங்கள் குழந்தைகளுக்கே உதாரணமாகக் காட்ட விரும்பாத ஒரு நபரைப் போய் நீங்கள் உங்கள் எம் எல் ஏவாக உங்கள் முதல்வராகத் தேர்ந்தெடுக்கத் துணிந்தது எங்கனம்?

கமலஹாசனை ஆதரிக்கும் முன்னால் தயவு செய்து மேலே எழுப்பியுள்ள அனைத்துக் கேள்விகளையும் நீங்களே ஒரு முறைக் கேட்டுப் பாருங்கள் அல்லது அவரிடமே நேரில் சென்று பேசிப் பாருங்கள். அறிவும் ஆளுமையும் நேர்மையும் இல்லாத ஒரு மனிதரிடம் அவர் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தேர்ந்தெடுப்பீர்களா? சிந்தியுங்கள் தமிழர்களே. உங்கள் ஓட்டை வீணடித்து விடாதீர்கள். கமலஹாசன் தொடர்ந்து சினிமாவில் நடிக்கட்டும் அல்லது வழக்கம் போல பிறமொழிப் படங்களைக் காப்பி அடித்து சினிமா எடுத்துத் தொலைக்கட்டும் அல்லது ஓய்வு எடுக்கட்டும். அவர் தமிழகத்தை ஆள எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் உடையவர் அல்லர். அவருக்குத் தெரிந்ததை மட்டும் அவர் வழக்கம் போல காப்பி அடித்துச் செய்து விட்டுப் போகட்டும். ரிட்டையர்டான பிறகு பொழுது போக்கிற்காக வருவதற்கு தமிழகம் ஒன்றும் மாலை நேர சீட்டாட்டக் கிளப் அல்ல.

ஆகவே தமிழர்களுக்கு கமலஹாசன் நம்மவரும் அல்லர் நல்லவரும் அல்லர். இந்த உண்மையை உணர்ந்து சிந்தித்துச் செயல் படுவீர்.

(முற்றும்)

தேர்தல் 2021 பதிவுகள்:

3 Replies to “கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2”

  1. Very well written. Not only brahmins but also the other hindus need to analyse the credibility of Kamal Hasan in terms of the questions asked and answered.. A false picture was painted of this useless fellow based on the characters he played in the movies. Our people should be shown to think and decide from a sane perspective

  2. தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளையும் கருணாநிதி குடும்பம் பங்கு போட்டுக்கொண்டு திரை உலகத்தின் வயிற்றில் அடித்தது. நடிகர்களுக்கும் அச்சுறுத்தல். இந்த புண்ணியவான் கருணாநிதியை அண்டிப் பிழைத்தார். அஜித் தவிர எவருக்கும் வயிற்றில் அடித்தால் முனகக் கூட வாயில்லை. நம்மவர் எவரேனும் ஏமாந்தால் சுந்தரி நீயும் பாடலை பாருங்கள். சம்பிரதாய பிராமணப் பாத்திரம் பூணூல் அணிந்து இருக்காது. தன் ஒப்பனைத் திறன் மேல் ஆணவம் கொண்டவர் செய்த கோலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *