புதிய பொற்காலத்தை நோக்கி – 19

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

இன்றைய உலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை அடிப்படையாக வைத்து இந்த நவீன சமுதாயத்தைக் காட்டுமிராண்டி சமூகம் என்று சொல்ல ஒரு நொடி ஆகாது. ஆணாதிக்க சமூகம் என்று சொல்லப்படும் நேற்றைய பாரம்பரிய சமூகத்தில் நிச்சயம் இந்தத் தவறுகள் இந்த அளவுக்கு இருந்திருக்கவே இல்லை. அந்தவகையில் அது பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பையே தந்திருக்கிறது..

இது ஒரு பக்கம் இருக்க சதி, விவாகரத்து, விதவைத் திருமணம், பால்ய விவாகம், பெண்களுக்குச் சொத்து, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றில் நிச்சயம் நவீன கால மாற்றங்களை ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால், இதிலுமே கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குறிப்பாக ஜாதி மறுப்புத் திருமணம் என்பது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டிய விஷயம். குடும்ப உறவுகள், குலத் தொழில் உறவுகள் எல்லாம் பலவீனமாகியிருக்கும் நிலையில்  திருமணம் என்பது தனிப்பட்ட ஆண், பெண்களின் தீர்மானத்துக்குட்பட்டது மட்டுமே என்பது முழுவதும் சரியல்ல. ஜாதி மறுப்புத் திருமணம் மட்டுமே ஜாதி ஏற்றத் தாழ்வு ஒழிவதற்கான ஒரே வழிமுறை அல்ல. அதோடு அதன் பின்னால் பல அரசியல் கட்சிகளின் ஜாதி அமைப்புகளின் தூண்டுதல் இருக்கும் நிலையில் இதை எச்சரிக்கையுடனே அணுகவேண்டும். எல்லாரும் இந்தியர், எல்லாரும் தமிழர் என்றால் கிறிஸ்தவரும்   முஸ்லீமும் திருமணம் செய்துகொண்டுதான் நிரூபிக்க வேண்டும் என்று எப்படி நாம் வலியுறுத்துவதில்லையோ அதுபோல் எல்லாரும் இந்து என்பதை ஜாதி தாண்டிய திருமணத்தின் மூலம் மட்டுமே நிலை நிறுத்த முடியும் என்று சொல்லக்கூடாது. ஜாதி நல்லிணக்கம், சமத்துவம் என்பது இரு ஜாதி ஆண் பெண் சகோதர சகோதரியாக இருப்பதன் மூலம் சாத்தியமே.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனது வாழ்க்கைத் துணையைத் தேடும் உரிமை இருப்பதுபோலவே ஒரு பெற்றோருக்குத் தமது குழந்தைகளுக்கு எது நல்லது என்று பார்த்துச் செய்யும் உரிமையும் உண்டு. குழந்தைகள் அந்த உணர்வை மதிக்காமல் விட்டுவிட்டுச் சென்றால் பெற்றோருக்கு அதற்கான பிராயச்சித்தத்தைக் குழந்தைகள் செய்யவேண்டும். விவாகரத்து செய்யும்போது மனைவிக்குக் கணவர் ஜீவனாம்சம் தருவதுபோல் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் குழந்தைகள் பெற்றோருக்கு இத்தனை நாட்கள் அவர்களை வளர்த்து வந்ததற்குக் காணிக்கை செலுத்தவேண்டும். பெற்றோரின் சொத்தில் எந்த உரிமையும் அவர்களை விட்டுச் செல்லும் குழந்தைகளுக்குக் கிடையாது. இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் இஸ்லாமியரல்லாதவருக்கு எப்படி எந்த சொத்தும் தரப்படாதோ அதுபோலவே இங்கும் செய்ய வேண்டும்.

பால்ய விவாகமானது மிகவும் நியாயமான விஷயமே. பருவ வயது அடைந்ததும் தவறான வழியில் செல்லாமல் தடுக்க அது மிகவும் அவசியம். மருத்துவ காரணங்களுக்காக உடலுறவு என்பது 18 வயது என்று சொல்லப்பட்டிருப்பதற்கு உண்மையில் எந்த மருத்துவ அடிப்படையும் கிடையாது. இயற்கை பருவ வயது அடைந்தவுடன் உடலுறவுக்கும் குழந்தைப் பேறுக்கும் உகந்ததாகவே படைத்திருக்கிறது.  பால்ய வயதில் திருமணம் செய்துகொண்டு பத்து குழந்தைகளை சுகப் பிரசவமாகப் பெற்றதுதான் நம் முந்தைய தலைமுறை. பிரசவ கால மரணங்கள் எதுவும் இள வயதில் தாயாவதால் நேர்ந்ததில்லை.

இன்று காலம் தாழ்த்தி திருமணம் செய்வதால் பல பிரசவங்கள் சிசேரியன் மூலமே நடந்து முடிகிறது. இது ஏற்படுத்தும் பின்விளைவுகள் ஆராயப்படுவதே இல்லை. தற்கொலை விகிதமானது சமீபகாலமாகவே அதிகரித்துவருகிறது. சிசேரியன் குழந்தைகள் எளிதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விடுகிறார்கள். இயல்பான பிரசவம் என்பது குழந்தைகளுக்கு உளவியல்ரீதியாக மிகப் பெரிய வலிமையைத் தருகின்றன. சிசேரியன் செய்து எளிதில் குழந்தையை வெளியில் எடுப்பதால் அந்தக் குழந்தைகளுக்குப் பிரச்னைகளை, தடைகளை மீறி வெல்லும் உத்வேகம் இல்லாமல் போய்விடுகிறது. பால்ய விவாகமும் இயல்பான பிரசவமும் ஆரோக்கியமான தலைமுறையையே கொண்டுவரும். இன்று ஏற்பட்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்களால் நிச்சயம் பிரசவ கால மரணங்களை வெகுவாகக் குறைத்துவிடமுடியும். குறைந்தும்விட்டிருக்கிறது. ஆக உண்மையில் இன்று பால்ய கால திருமணங்கள் முந்தைய காலத்தைவிட பாதுகாப்பானதாகவே இருக்கும். 

கடந்த காலத்தில் சொந்த ஜாதிக்குள் திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் பால்ய கால திருமணத்தைச் செய்தார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அன்றைக்கு ஒவ்வொரு தொழில் குலமும் (ஜாதியும் பெரிதும் தனித்தனியான வாழிடங்கள், வாழ்க்கை முறைகள் என்பதைக் கொண்டவையாகவே இருந்தன. இந்தக் காலத்தில்தான் கல்வி, வேலை ஆகியவை சார்ந்து அனைத்து ஜாதிகளும் இணைந்து வாழும் வாழ்க்கை முறை உருவாகியிருக்கிறது. எனவே கடந்த காலத்தில் பிற ஜாதி நபர்களுடன் பழகும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதாவது பிற ஜாதியினரைக் காதலிக்கும் வாய்ப்பு குறைவு. எனவே பால்ய விவாகம் மூலம் ஜாதிக் கலப்பைத் தடுக்க வேண்டிய அவசியம் குறைவாகவே இருந்திருக்கும். இன்றைய நிலையில்தான் அது கலப்புத் திருமணத்தைத் தடுக்க அவசியமாகிறது. எனவே, தமது ஜாதியைச் சேர்ந்தவரையே தன் குழந்தைகள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் பால்ய விவாகம் செய்துவைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அக மண முறையை நிலைநிறுத்துவதோடு பாலியல் வக்ரங்கள் தலை தூக்காமல் இருக்கவும் பால்ய விவாகங்கள் உதவுகின்றன. முறைப்பையன், முறைப் பெண் என்ற திருமண முறையானது குடும்ப உறவையும் குல உறவையும் நிலை நிறுத்த உதவுவதோடு பாலியல் அத்துமீறல்களுக்கான சாத்தியங்களையும் குறைத்துவிடுகிறது. 

12-13 வயதில் இருக்கும் குழந்தைகளுக்குத் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இருக்காது. அவர்களுடைய விருப்பத்தைக் கேட்காமல் திருமண பந்தத்தில் இணைப்பது தவறு என்று சொல்வதுண்டு. உண்மையில் நவீன காலகட்டத்தில் விவரம் தெரிந்த ஆணும் பெண்ணும் தாமே விரும்பித் தேர்ந்தெடுக்கும் திருமண உறவுகள்தான் கசந்து விவாகரத்தில் சென்று முடிகின்றன. பெற்றோராகப் பார்த்து வைத்த பால்ய கால திருமணங்கள் எதுவுமே விவாக முறிவில் போய்முடிந்திருக்கவில்லை.

மனதுக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள தனி நபராக ஒருவருக்கு உரிமை இருப்பதுபோலவே அவர் சார்ந்த சமூகத்துக்கு விசுவாசமானவராக இருக்கவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மனிதர் முழுக்கவும் தனி நபர் அல்ல. முழுக்கவும் சமூகக் குழுவைச் சார்ந்துஇருக்கவேண்டியவரும் அல்ல. இரண்டுக்கும் இடையில் சம நிலை இருக்கவேண்டும். சமூகக் குழுவுக்குக் கடமைப்பட்டவராக இருந்து அந்தக் குழுவுக்குள் மனதுக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது என்பதுதான் இதற்கான ஒரே தீர்வு. காதலிப்பது தவறல்ல. பெற்றோரை எதிர்த்துக் காதலிப்பதுதான் தவறு.

திருமணம் செய்துகொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே தமது திருமணத்தைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு என்று சொல்வதென்பது சாதி மறுப்பு மற்றும் பிற மதத்தினரைத் திருமணம் செய்ய வழிவகுக்கும் என்பதால்தான் முற்போக்காளர்கள் அதை உயர்த்திப் பிடிக்கிறார்கள். எனவே அதைத் தவிர்க்க விரும்பும் ஒருவர் பால்ய விவாகத்தை ஆதரிப்பதில் தவறே இல்லை.

அகமண முறையை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். அவர்கள் பால்ய விவாகத்தைச் செய்வதில்லை. ஆனால், அந்த மதங்களில் தனி நபர் விருப்பம், சுதந்தரம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. இது மிகவும் ஆச்சரியமான விஷயமே. மேற்குலகம் தான் தனி நபர் சுதந்தரம், உரிமை என்றெல்லாம் அதிகம் பேசிவருகிறது. ஆனால், அங்கு கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான திருமணம் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. இரண்டு சமூகங்களும் திருமண விஷயத்தில் அகமண முறையை மிகத்தெளிவாக, கறாராக நடைமுறைப்படுத்தியே வருகிறார்கள். அவர்களுடைய தனி நபர் சுதந்தரம், பாலியல் சுதந்தரம், காதல் சுதந்தரம் எல்லாமே சொந்த மதத்தினரைப் பார்த்து மட்டுமே வரும்படியாக ஆக்கிவிட்டிருக் கிறார்கள். இந்துக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்குமே இந்த விழிப்புணர்வு ஏற்படவேண்டும். ஒவ்வொரு ஜாதியினரும் தத்தமது ஜாதியின் மீது பற்றும் புரிதலும் கொண்டிருக்கவேண்டும். எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற  தெளிவு கொண்டிருக்கவேண்டும். இஸ்லாம் இந்தத் தெளிவை அடக்குமுறை, வன்முறை மூலம் சாத்தியப்படுத்திவருகிறது. எந்தவொரு இஸ்லாமியப் பெண்ணும் இஸ்லாமியரல்லாத ஒருவரை எளிதில் சந்தித்துப் பேசவும் பழகவும் முடியாது. அப்படியே பேசிப் பழகினாலும் காதல் என்பதாக அது வளர அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மட்டுமல்ல அந்த ஜமாத்தினர் விடமாட்டார்கள். அப்படியே ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவையோ, கிறிஸ்தவரையோ ஏன் சியா, சன்னி, அஹமதியா என உட்பிரிவில் வேறு ஏதேனும் ஒன்றையோ சார்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டால் அந்த ஆண் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவரா என்று பார்ப்பார்கள். சமூக அந்தஸ்து என்ன என்று பார்ப்பார்கள். இஸ்லாமுக்கு, தமது உட்பிரிவுக்கு மாறுவாரா என்று பார்ப்பார்கள். இந்த மூன்றில் எது சரியாக இல்லையென்றாலும் அந்தத் திருமணத்தை நடக்கவிடமாட்டார்கள். அவர்களுடைய அகமண முறையை மிகத் தெளிவாக அவர்கள் கட்டிக்காத்துவருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் பெரிய வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆனால், வேறு மதத்து ஆணை விரும்பும்  எண்ணம் எந்த கிறிஸ்தவப் பெண்ணின் மனதிலும் வராதபடி தந்திரமான வளர்ப்பின் மூலம் செய்துவிடுவார்கள். இங்கும் அந்த ஆண் கிறிஸ்தவத்துக்கு மாறத் தயாராக இருந்தால் மட்டுமே திருமணம் நடக்க முடியும். 95% இதுதான் நடைமுறை. விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால், அதை வைத்து விதியை வகுக்கக்கூடாது. இந்து ஜாதியினர் சுய ஜாதித் திருமணத்தை இஸ்லாமியர்கள் போன் வன்முறை மூலம் நிலைநிறுத்திக்கொள்வதைவிட கிறிஸ்தவர்கள் போல் தந்திரமாகச் செய்வதே நல்லது. பால்ய விவாகம் ஒன்றே அதற்கான வழி என்று இருந்துவிடாமல் ஜாதி உணர்வை நேர்மையான முறையில் ஊட்டவேண்டும். சுய ஜாதி வாழ்க்கைத் துணை; பிற ஜாதி நண்பர்கள்… இதுவே லட்சியமாக இருக்கவேண்டும்.   

ஜாதியை ஒழிப்பதே முற்போக்கு என்று பேசுபவர்கள்  திருமணம் செய்பவர்களில் ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் ஊக்கத்தொகை தரவேண்டும் என்று சொல்வதுண்டு. இது தந்திரமானது. ஜாதி ஒழிப்பு என்றால் பட்டியலினத்துக்குள்ளான ஜாதி வெறியையும் ஒழிப்பதாகவே இருக்கவேண்டும். அந்த ஜாதிகளுக்குள்ளான திருமணமும் ஊக்குவிக்கப்படவேண்டும். திருமணம் செய்துகொள்பவர்கள் இருவருமே பட்டியல் ஜாதியினராக இருந்தாலும் அதற்கும் ஊக்கத் தொகை தரவேண்டும். பறையர் ஜாதிப் பெண்ணை அருந்ததியர் பையன் திருமணம் செய்யவும் ஊக்குவிக்கவேண்டும். பட்டியல் ஜாதிகளில் வலிமையான இடத்தில் இருக்கும் பறையர் ஜாதித் தலைவர்கள் தமது தலைமையில் இப்படியான திருமணங்களை முன்னின்று நடத்தி ஜாதி மறுப்புத் திருமண திட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தம்மைவிட உயர்ந்த ஜாதியாகக் கருதுபவர்களின் பெண்ணைத் திருமணம் செய்வது ஜாதியை ஒழிக்கும் வழி என்று சொல்பவர்கள் அனைவருமே, தம்மைவிடத் தாழ்வாகக் கருதும் ஜாதியைச்சேர்ந்த பையனுக்கு தன் ஜாதியில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துவைத்துக் காட்டவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கும்வரை நாடகக் காதல் என்ற விமர்சனம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்து மதத்தில் இருக்கும் குறைகளை மட்டும் பேசுகிறீர்களே என்ற கேள்விக்கு சொந்த வீட்டில் இருக்கும் ஒட்டடையை அடிப்பதுதான் முதல் வேலை என்று சொல்பவர்கள், சொந்த ஜாதியினருக்குள் இருக்கும் ஜாதி வெறியை முதலில் எதிர்க்க வேண்டும். அப்படிச் செய்யாததுவரை மேல் ஜாதிக்காரர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நடப்பதே நல்லது. 

விவாகரத்தைப் பொறுத்தவரையில் திருமணம் எப்படி தனி நபர் சார்ந்த விஷயமாக இல்லையோ அதுபோலவே விவாகரத்தும் தனி நபர் சார்ந்தது அல்ல. விவாகரத்து செய்பவர்கள் தமது பெற்றோருடைய சம்மதத்துடனே அதைச் செய்யவேண்டும். குறிப்பாக குழந்தைகளிருந்தால் அவர்களின் சம்மதத்துடனே அதைச் செய்யவேண்டும்.  ஒரு குழந்தையின் தேவையை, அன்பை எந்த நிலையிலும் புறக்கணிக்க பெற்றோருக்கு உரிமை கிடையாது. 18 வயது வரை அதாவது அந்தக் குழந்தை சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் வயதுவரை விவாகரத்து செய்துகொள்ளக்கூடாது. குடும்ப வன்முறை போன்ற விஷயங்களில் கூட பாதிக்கப்படும் மனைவியோ கணவனோ தமது குழந்தையுடன் பாதுகாப்பாக இருந்துகொள்வது குறித்து சிந்திக்கவேண்டுமே தவிர விவாகரத்து தீர்வே அல்ல. இவையெல்லாவற்றுக்கும் மேலாக திருமணத்தின் போது அக்னி சாட்சியாகக் கொடுக்கும் வாக்குறுதியை மீறிவதென்பது  மிக மிகப் பெரிய தவறு… பாவம்.

இந்தியர் அனைவருக்கும் குற்றவியல் சட்டங்கள் பொதுவாக இருப்பதுபோல் திருமணம், சொத்து விவகாரம் போன்றவற்றில் ஒவ்வொரு மதத்துக்குமான பொதுவான சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.   இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றில்பொதுவான  ஒற்றை கடவுள், ஒற்றைப் புனித நூல் என்று இருப்பதால் அங்கெல்லாம் பொதுவான திருமணம் விதி, பொதுவான சொத்து விதி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதம் மையம் அழிந்த அமைப்பு. அதில் ஒற்றைக் கடவுள் இல்லை. ஒற்றைப் புனித நூல் இல்லை. பன்மைத்துவமே அதன் அடையாளம். எனவே இந்துக்கள் அனைவருக்கும் ஒரே பொதுவான திருமணம் விதி, சொத்து விதி என்பது சரியல்ல. ஒவ்வொரு ஜாதியும் தமக்கான பாரம்பரியம் படி இந்த விஷயங்களில் முடிவெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். இந்து என்ற ஒற்றை அரசியல் உணர்வானது வேறு வழிகளில்தான் கொண்டுவரப்படவேண்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *