“இந்த வேதத்தில – ருத்ரம் இருக்கு, அதுல நமச்சிவாய எல்லாம் இருக்கு, ஆனா சிவலிங்கம் என்று வெளிப்படையாக இருக்கா சார்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். தமிழ்ச் சூழலில் இப்படித் தான் பழைய வரலாறு, சமயம், இலக்கியம் பற்றி தடாலடியாக ஏதோ புதுசாக கண்டுபிடிப்பது போல யாராவது ஏதாவது எடுத்து விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. சங்ககாலத்தில வேட்டி உண்டா? கீரிப்பிள்ளை உண்டா? தயிர்சாதம் உண்டா? என்று ஆரம்பித்து சிவன் உண்டா? அவருக்கு உடுக்கை உண்டா பாம்பு உண்டா? என்று போகும். என்னவோ காலையில் எழுந்து காபி குடித்து கழிப்பறை செல்வதிலிருந்து எல்லாமே சங்க இலக்கியத்தில் இருக்கா என்று ஒரு விசாரணை நடத்திவிட்டுத் தான் செய்வார்கள் போல 🙂 அதுவும் “சைவர்” என்றால் கேட்கவே வேண்டாம், வாழ்க்கை முழுவதும் எது சைவம், எது சைவமல்ல என்று கண்டுபிடிப்பதிலேயே அவரது சக்தி முழுவதும் போய்விடுகிறது. இதில் எப்போது அவர் சிவனை ஆராதிப்பார், சிவ மகிமைகளை தியானிப்பார், சிவ பூஜை தான் செய்வார் என்பது புரியவில்லை.
மேற்கண்ட கேள்வியைக் கேட்டவர் ஒரு “சைவர்” என்பது சொல்லாமலே விளங்கும். அதை அவர் கேட்கும் தொனியில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை விட, தனது முன்முடிவுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு தான் துருத்திக் கொண்டிருக்கிறது.
போகட்டும். அனைவருக்கும் பயன்தரும் என்பதால், பதில் இங்கே.
கிருஷ்ண யஜுர்வேதம், தைத்திரியாரண்யகம் கடைசி பாகத்தில் உள்ளது மஹாநாராயண உபநிஷத். புகழ்பெற்ற தைத்திரிய உபநிஷத்தின் ஶீக்ஷாவல்லீ, ஆனந்தவல்லீ, ப்ருகுவல்லீ என்ற மூன்று பாகங்களுக்கு அடுத்து நான்வதாக உள்ள இது நாராயணவல்லீ என்றும் அழைக்கப் படுகிறது. ஸ்ரீ சங்கரர் முதல் மூன்று பாகங்களுக்கு மட்டுமே பாஷ்யம் எழுதியுள்ளார் ஆயினும், இந்த நான்காம் பாகத்தையும், அதிலுள்ள மந்திரங்களையும் பிரம்ம்ஸூத்ர பாஷ்யத்தில் எடுத்தாண்டுள்ளார் என்பதால் இதன் தொன்மை விளங்கும். வேத பாஷ்யம் எழுதியுள்ள சாயணர், பட்டபாஸ்கரர் ஆகியோர் பல மந்திரங்களின் தொகுப்பாக உள்ள இப்பகுதிக்கும் உரை எழுதியுள்ளனர்.
இந்த மகத்தான உபநிஷத்தில் 16வது அனுவாகத்தில் ஶிவோபாஸன மந்த்ரா: என்ற பெயரில் கீழ்க்கண்ட மந்திரங்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து 17 முதல் 21 வரை ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈஶானம் எனும் சிவபெருமானின் ஐந்து முகங்களுக்கான மகாமந்திரங்களும், 23 முதல் 25ல் ருத்ர நமஸ்கார மந்திரங்களும் உள்ளன. இந்த மந்திரங்கள் தான் எல்லா சிவபூஜைகளிலும் – வைதிக/ஸ்மார்த்த முறையிலும் சரி, சிவாகம பூஜை முறையிலும் சரி, கர்நாடக வைதிக வீரசைவர்களின் பூஜை முறையிலும் சரி, வடநாட்டிலும் சரி தென்னாட்டிலும் சரி, நேபாளம் முதல் இலங்கை வரை, கட்ச் முதல் காமரூபம் வரை – மையமாக ஓதப்பெறுகின்றன. ஏதேனும் சிவபூஜையைக் கூர்ந்து கவனித்து கண்ணால் பார்த்து, காதால் கேட்டிருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
நித⁴னபதயே நம꞉ । நித⁴னபதாந்திகாய நம꞉ ।
ஊர்த்⁴வாய நம꞉ । ஊர்த்⁴வலிங்கா³ய நம꞉ ।
ஹிரண்யாய நம꞉ । ஹிரண்யலிங்கா³ய நம꞉ ।
ஸுவர்ணாய நம꞉ । ஸுவர்ணலிங்கா³ய நம꞉ ।
தி³வ்யாய நம꞉ । தி³வ்யலிங்கா³ய நம꞉ ।
ப⁴வாய நம꞉। ப⁴வலிங்கா³ய நம꞉ ।
ஶர்வாய நம꞉ । ஶர்வலிங்கா³ய நம꞉ ।
ஶிவாய நம꞉ । ஶிவலிங்கா³ய நம꞉ ।
ஜ்வலாய நம꞉ । ஜ்வலலிங்கா³ய நம꞉ ।
ஆத்மாய நம꞉ । ஆத்மலிங்கா³ய நம꞉ ।
பரமாய நம꞉ । பரமலிங்கா³ய நம꞉ ।
ஏதத்ஸோமஸ்ய ஸூர்யஸ்ய ஸர்வலிங்க³ꣳ ஸ்தா²பயதி பாணிமந்த்ரம்ʼ பவித்ரம் ॥ 16 ॥
பொருள்:
அழிவின் தலைவருக்கு (மகா பிரளத்தின் சாட்சியானவருக்கு) நமஸ்காரம். அழிவுக்கும் அழிவானவருக்கு (காலகாலருக்கு) நமஸ்காரம்.
மேலானவருக்கு (ஊர்த்வ) நமஸ்காரம். ஊர்த்வலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
பொன்போன்று நலம்தருபவர்க்கு (ஹிரண்ய) நமஸ்காரம். ஹிரண்யலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
நல்வண்ணமுடையவருக்கு (ஸுவர்ண) நமஸ்காரம். ஸுவர்ணலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
தெய்வீக இன்பமானவருக்கு (திவ்ய) நமஸ்காரம்). தெய்வங்கள் பூஜிக்கும் திவ்யலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
உலகின் உற்பத்தி வடிவினர்க்கு (பவ) நமஸ்காரம். உலகிலுள்ளோர் பூஜிக்கும் பவலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
பிரளயத்தில் உலகை அழிப்பவருக்கு (ஶர்வ) நமஸ்காரம். இன்பமளிக்கும் ஶர்வலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
பரம மங்கள வடிவினருக்கு (ஶிவ) நமஸ்காரம். ஶிவலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
ஒளி வடிவினருக்கு (ஜ்வல) நமஸ்காரம். ஜ்வலலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
உயிருக்கு உயிரானவருக்கு (ஆத்ம) நமஸ்காரம். உயிர்களில் மறைந்துறையும் ஆத்மலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
ஒப்புயர்வற்றவருக்கு (பரம) நமஸ்காரம். பரமலிங்கமானவருக்கு நமஸ்காரம்.
எல்லோராலும் பூஜிக்கப்படுவதும், சோம சூரிய வடிவானதுமாகிய லிங்கத்தை இம்மந்திரங்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பரம பவித்திரமானதும் அனைவரும் கைக்கொள்ளத்தக்கதுமான மந்திரம் இது.
‘பாணிமந்த்ரம் – மந்திரத்தின் முலம் கைகளால் பிரதிஷ்டை செய்வதால் இப்பெயர் என்று சாயணர் தமது உரையில் கூறுகிறார். எனவே சிவலிங்கத்தை வேதகாலம் தொட்டு வேதமந்திரங்கள் கொண்டே பிரதிஷ்டை செய்தனர் என்பது புலனாகும். ஆகமங்களில் பிற்காலத்தில் கூறப்பட்டுள்ள மிக விரிவான மந்திரங்களும் விதிகளும் எல்லாம் இவ்வேத மந்திரங்களிலிருந்து கிளைத்தவையே. அதுபற்றியே திருஞான சம்பந்தர்
“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே”
என்று கூறுகிறார்.
அடுத்துள்ள சிவ மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் பின்பு எழுதுகிறேன்.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!
.
.
.
பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.
1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.
1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.
1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.
1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.
1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.
2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.
2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.
தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.
தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.
உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.
தேசமே தெய்வம் !!!
.
.
.
.
ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தை நிறுவியவரின் பெயர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ஆவார்.இவர் எம்.பி.பி.எஸ்.முடித்தவர்.இந்துக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து,ஒன்றுபட்ட இந்து சமுதாயத்தை உருவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இந்த இயக்கத்தை உருவாக்கிட இவருக்கு மூன்று ஆண்டுகளாக சிந்தனை செய்தார்.பல தேசபக்தர்களிடம் கலந்துரையாடியபின்னரே ஆர்.எஸ்.எஸ்.ஸை உருவாக்கினார்.இன்று 1947க்கு முன்பாக,ஆங்கிலேயன் இந்தியாவை ஆள்கிறான்;இவனை நாம் எப்படியாவது வெளியேற்றிவிடலாம்.ஆனால்,2000 மைல்கள் சதுர பரப்பளவும்,ஏராளமான வீரர்களும்,மன்னர்களும் வாழ்ந்த இந்த இந்து நாட்டினை எப்படி வெறும் 200 ஆங்கிலேய வியாபாரிகளால் கைப்பற்ற முடிந்தது? என்ற சிந்தனையே இவரது மனதில் உதித்தது.இந்த சிந்தனையோடு பலரை ,பலமுறை கலந்து ஆலோசித்தபின்னரே, இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துதர்மத்தின் பெருமைகளை அறிய வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இந்துதேசம் காலம் காலமாக நிம்மதியாகவும்,வலிமையாகவும் இருக்கும்;அதற்கு ஒரு நிரந்தரமான அமைப்பு தேவை என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஆர்.எஸ்.எஸ். வெளியில் இருந்து பார்த்தால்,ஆர்.எஸ்.எஸ்.ஒரு தீவிரவாத இயக்கமாகத்தான் தெரியும்.ஏன் எனில்,பத்திரிகைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கம்யூனிஸ்டுகள்.அவர்களை கொள்கையோடு எதிர்கொள்வது ஆர்.எஸ்.எஸ்.மட்டுமே.காங்கிரஸீக்கு எங்கே ஆர்.எஸ்.எஸ்.ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்ற பயத்தினால் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பார்த்து பயம்.அதனால்தான் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர் என பொய்ப் பிரச்சாரம் செய்தது.ஆனால்,நீதிமன்றத்தீர்ப்போ காந்தியை சுட்டுக்கொன்ற சதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு சிறிது கூட இல்லை என கூறிவிட்டது.