தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்

முந்தைய பகுதிகளை படிக்க

தமிழகம் ஓர் ஆன்மீக பூமி , இந்த மண்ணில் ஆழ்வார்களும், நாயன்மார்களும்  ஆவதரித்தார்கள்.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் தோன்றிய மண் இது.   ஆனால்  நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இந்த பூமியில் கிறிஸ்துவ,  இஸ்லாமிய மதங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வளர தொடங்கியது.   600 ஆண்டுகள் இந்த மண்ணை ஆட்சி செய்த இஸ்லாமியர்களும், 100 ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவர்களும்  இந்த மண்ணின் தன்மையை நன்கு அறிந்து கொண்டு , தங்கள் மதத்தை பரப்ப, இந்து சன்னியாசிகள்  போல் நாடகமாடியுள்ளார்கள்.  தமிழகத்தில் கிறிஸ்துவத்தை பரப்ப  ஆரியர் திராவிடர் என்ற இன வாதத்தை துவக்கியவர்கள்.   தமிழர்கள் கிறிஸ்தவத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாறவேண்டும் என  ஜி.யு. போப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் எழுதியது.  இல்லையென்றால் தி.மு.க.வில் இணைவதன் மூலம் ‘திராவிட சமயத்துக்கோ’ மதம் மாறவேண்டும் என்பதாக  ஜூலை 2010-ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பிஷப் எஸ்ரா சற்குணம் ‘தமிழ் மெய்யியல்’ என்ற அமர்வில் பேசியது. நூற்றாண்டுகள் கடந்தும் சிந்தனையில் ஒத்திசைவாக இரண்டு ஆளுமைகளும் இயங்கியதன் உள்நோக்கத்தை அறிய ‘கயாஸ் தியரி’யை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

            தற்போது  தமிழகத்தில் குமரி , தூத்துக்குடி, நீலகிரி, திருநெல்வேலி  ஆகிய நான்கு மாவட்டங்களிலும்  கிறிஸ்துவர்கள்  எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கிறது.  தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்டங்களில்  கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் எவ்வாறு உருவானது  என்பதை பார்த்தால்,  தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்து நன்கு விளங்கும்.  ஒரு புறம் மத மாற்றம் , மத மாற்றத்தின் மூலம்  தமிழகத்தின் பாரம்பரிய  கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படுவது, சிறுபான்மையிரை பயன்படுத்தி  வாக்கு வங்கி அரசியல் நடத்துவது,  சில இடங்களில்  பயங்கரவாதத்திற்கு துணை போவது போன்ற காரியங்களில்  கிறிஸ்துவர்கள் ஈடுபடுகிறார்கள்.   முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும்  சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு.  வன்முறையின் மூலம் தனது மத கோட்பாடுகளை செயல்படுத்த முனைவது  முஸ்லீம்கள்.   உதவி என்ற பெயரில்  முளை சலவை செய்து கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு வழி வகை செய்வது கிறிஸ்துவம்.  இரண்டு மதங்களும்  ஏழ்மையை பயன்படுத்தி தங்களது மதங்களை வளர்க்க முயலுகிறார்கள்.

               1827 ஆம் ஆண்டு இங்கிலாந்து,  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், போடன் இருக்கை ( Boden Chair)
ஒன்றை உருவாக்கி அதில் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளை நிர்வகிக்க, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்திய மொழிகளிலும், கலாச்சாரத்திலும் பயிற்சி அளிக்க வேண்டி,  சமஸ்கிருத்தை ஒரு பாடத்திட்டமாக ஆரம்பித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டது.  பின்னாளில் University college of London ( 1852) , எடின் பரோ( 1867), கேம்பிரிட்ஜ் (1867) ஆகிய இடங்களில் சமஸ்கிருத இருக்கைகள் உருவாக்கப்பட்டன..) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சம்ஸ்க்ருத படிப்புக்கான போடன் இருக்கையை பேராசிரியர் கர்னல் ஜோசப் போடன் ஏன் உருவாக்கினார்.?   இது குறித்து போடன் இருக்கையின் சமஸ்கிருத பேராசிரியர், சர் மோனியர் வில்லியம்ஸ் ( sir Monier williams ) தனதுபுகழ் பெற்ற ஆங்கில-சம்ஸகிருத அகராதியின் முன்னுரையில் கூறுவதாவது,  “கர்னல் போடன் (ஆகஸ்ட் 15, 1811 ) தனது உயிலில், இந்த சமஸ்கிருத இருக்கைக்கு தாராளமாக நன்கொடையை தந்ததின் நோக்கம் , சமஸ்கிருத இலக்கியங்களை மொழி பெயர்ப்பது, அது, தன் நாட்டவர் இந்திய மக்களை அவர்களின்( இந்தியர்களின் ) தேவ பாஷை யின் (புனித மொழியின்) மூலமாகவே   கிறிஸ்தவத்திற்கு மாற்ற உதவும் என்றும் வெளிப்படையாக குறிப்பிட்டார்” என்கிறார்   (Monier williams sanskrit – English dictionary, 1891)

               ஆக்ஸ்போர்டின் ஒரு முக்கிய சமஸ்கிருத பேராசிரியரான மாக்ஸ்முல்லர்தான் ஆரிய இனவாதத்தைப் பரப்பியவர்களுள் முதன்மையானவர். இந்த சமஸ்கிருத பேராசிரியர் தன் பல வருட கடின உழைப்பின் மூலம் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தன் வாழ்வின் மிகப்பெரிய இச்சாதனைக் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘ எனது இம் மொழிபெயர்ப்பு இந்தியாவின் விதியையும் பலகோடி இந்திய ஆத்மாக்களின் வளர்ச்சியையும், பெருமளவுக்கு நிர்ணயிக்கப் போகின்றது. வேதங்களே இம்மக்களின் சமயத்தின் வேர். அவ்வேர் எத்தகையது என்பதனைக் காட்டுவதன் மூலம் அதிலிருந்து மூவாயிரம் வருடங்கள் வெளிவந்திருக்கும் அனைத்தையும் வேரறுக்க முடியும் என நிச்சயமாக நம்புகிறேன். என்றார்.

                இதன் மூலம் சமஸ்கிருத ஆராய்ச்சி என்று ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் மொழியியல் ஆராய்ச்சிகளுடன் இணைந்து, இந்திய மொழிகளில் ஊடுருவி இந்திய சமூகத்தை பிரித்து மதமாற்றம் ஒன்றையே இலக்காக கொண்டு செயல்படுவது  வெட்ட வெளிச்சமானது.    ஏற்கனவே கோவை தமிழ் செம்மொழி மாநாடு என்று திமுக ஆட்சியில் நடந்த மாநாட்டில் பேராயர் எஸ். ரா. சர்குணம், மற்றும் சில பேராயர்கள் கலந்து கொண்டு இனவாதம் பேசியும்,  தமிழர்களை கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமுக்கோ இல்லையென்றால் திமுக வில் இணைவதின் மூலம் ‘ திராவிட சமயத்துக்கோ’ மதம் மாறும்படி அன்று வேண்டுகோள் விடுத்ததும் அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் தாய் சமயமான இந்து சமயத்தை அழித்து தெய்வத்தமிழையும், தமிழகத்தையும் முழுமையான கிறிஸ்தவமயமாக்க தமிழ் மொழி என்னும் ஆயுதத்தை மிஷனரி கை கூலிகள் கையில் எடுத்து இருப்பதும்,  பாதிரியார் கால்டுவெலின் காலந்தொட்டே திராவிட இயக்கங்கள் மூலம் செயல்படுத்தபடுவதும், இந்து சமய அழிவுக்கு பிராமண துவேஷத்தை விதைப்பதும் தொடர் கதையாகிவிட்டது.. இதற்கு இங்கே சில போலி தமிழ் தேசிய போர்வையில் இயங்கும் கிறிஸ்தவ- வெறியர்கள் ஆதரவாகவும் செயல்படுகிறார்கள்.

               ஆரியர் ஆரியரற்ற இனக்கூட்டங்களை அடையாளம் காணவும், இந்தியாவில் என்றென்றும் வடக்கு தெற்கு பிரிவினை ஏற்படுத்தி அதனை இன ரீதியில் அணுகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறை இந்தியாவில் இவ்வாறுதான் வேரூன்றியது. வெறுப்பின் விதைகள் இளம் மனங்களில் விதைக்கபட்டாயிற்று. 
தென்னகத்தில் ஆங்கில  திருச்சபையைச் சார்ந்த ஆயர் இரா.கால்தூவல் தென்னிந்திய மக்கள் ஆரியரல்லாத திராவிடர் எனும் ஒரு தனி இனத்தைச் சார்ந்தவர்கள் எனும் பிரச்சாரத்தை தன் ஆய்வு மூலம் துவக்கினார். ஆரியர்களிலிருந்து இனத்தால் மாறுபட்ட, பண்பாட்டால் உயர்ந்ததொர் தனி இனத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் எனும் பிரச்சாரம் தென்னகத்தில் நன்றாகவே எடுபட்டது. விரைவில் இந்த தனிமைப்படுத்தல் அரசியல் இயக்கமாகவும் வெளிப்பட்டது. இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிரானதோர் கருவியாக இந்த ‘திராவிட ‘ அரசியல் ‘விழிப்புணர்வு ‘ பிரிட்டிஷ் அரசால் நன்றாகவே பயன்படுத்தப் பட்டது.

மதமாற்றம் என்பது  உலகளாவிய  பிரச்சனை. கிறிஸ்துவ மதத்தை என்ன செய்தாவது உலகெங்கிலும் பரப்புவதில் சர்ச்சுகள் தீவிரமாக இருந்து வருகின்றன.  உலகின் பிற பகுதிகளில் அவற்றின் தந்திரம் பலித்து, பல  நாடுகளையே  அந்நாட்டின் பூர்வீக மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி, அங்கிருந்த ஆதி கலை கலாசாரங்களை அழித்துவிட்ட நிலையில், இந்து மற்றும் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும்  இந்தியா, திபெத், நேபாளம்  போன்ற நாடுகளில் தீவிர மதமாற்ற முயற்சிகளை நிகழ்த்தி வருகின்றன.  வடகிழக்கு மாநிலங்களை போலவே  தென்னகத்திலும்  கிறிஸ்துவ மத மாற்றம் என்பது  தமிழ் கலாச்சாரத்தின் சிதைவுக்கு வழி வகுத்தது.

பாரத தேசத்தைப் பொறுத்தவரை போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயப் படையெடுப்புகளின் மூலம் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்தது. ஆகவே கிறிஸ்துவத்தை  வந்தேறி மதம் என்று அழைக்கப்படுவதில் எவ்வித தவறும் கிடையாது.  இப்போது நம் கிறிஸ்தவத்தின் வேடங்களை மட்டுமே எவ்வாறு தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பாதிக்கிறது என்பதும்,  தமிழகத்தில்  மத நல்லிணக்கத்திற்கு எவ்வாறு ஊறு விளைவிக்கிறது என்பதை பார்போம். போர்ச்சுகீசியப் படையெடுப்பின் போதுதான் கோவாவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன; பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். மதம் மாற மறுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.  போர்ச்சுகீசியர் கோவாவில் மட்டுமல்லாமல், கேரளம் மற்றும் தமிழகத்திலும் நுழைந்து தங்கள் கிறிஸ்துவ மதத்தை ஓரளவு ஸ்தாபித்தனர். அவர்கள் அவிழ்த்து விட்டதுதான் ‘புனித தாமஸ்’ என்கிற கற்பனைக் கதா பாத்திரமும் அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும்.

கோவாவில் செய்தது போலவே, வட தமிழகத்தின் (சென்னை) கடலோரத்தில் அற்புதமாக அமைந்திருந்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலையும் அழித்து அந்த இடத்தில் புனித தாமஸ் (Santhome Church) தேவாலயத்தை அமைத்தனர்.  மேலும் தற்போது ‘புனித தோமையர் மலை’ (St. Thomas Mount) என்று அழைக்கப்படும் பிருங்கி மலையில் (பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை – இதுவே பின்னர் பறங்கி மலையாக மருவியது) உள்ள கோவில்களையும் அழித்து, அங்கும் ஒரு தேவாலயத்தை அமைத்தனர். ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.  எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான். மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.           

         மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் கிறிஸ்துவர்களால்  அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை “புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்” என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆசிரியரும், தன்னுடைய “புனித தாமஸ் கட்டுக்கதை” என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார்.  ஈஸ்வர் சரண் தாஸ் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற கட்டுரையை அவசியம் அனைவரும்  படிக்க வேண்டும்.

தெய்வநாயகத்தின் விஷவித்து  –    தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86 ல் எழுதி வெளியிட்டு புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென ஸ்தாபிக்க முயற்சி செய்தார்.  ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” –( அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991].  தெய்வநாயகத்தின்  முதன்மையான நோக்கமே ,  தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பது,  தமிழ் சமயம் என்பதும்   இந்து மதம்  என்பதும் வேறு வேறானவை என நம்ப வைப்பது.   ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதம்  என்றும் அதிலிருந்து வெளியானதே சைவமும் வைணவமும் என்று  நிலைநிறுத்துவது .  ஆதாமுக்கு கடவுள் கற்றுக் கொடுத்த முதல் மொழியே தமிழ் என்றும், ஆதாம் முதல் மெய்க்கண்டார் வரை வந்துள்ள ஆன்மீகச் சிந்தனையாளர்களின் கருத்துக்களின் தொகுப்பே ‘தமிழர் சமயம்’ என்றும் தமிழர்களை நம்ப வைப்பது.  தெய்வநாயகத்தின் கருத்தில் துளியும் ஆதாரமற்ற, தமிழருக்கு, தமிழ் நாட்டிற்கும்  எதிரான கோட்பாடுகளை உண்மையெனச் சாதிப்பதே அவரது முதன்மையான குறிக்கோளாகும்..         

                 தமிழகத்திற்கு வந்த சில கிறிஸ்துவ பாதிரியார்கள்  மதம் மாற்றும் முயற்சியில்  ஈடுபட்டார்கள் .  அப்படி மத மாற்ற நிகழ்ச்சிக்கு  வித்திட்ட முதலாமவர்  17-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து வந்த ராபர்ட் தே நொபிலி  (1577 – 1656 ) என்கிற கிறிஸ்துவப் பாதிரியார்.  இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டு தன்னை “ரோமாபுரி பிராம்மணர்” என்றும் சொல்லிக்கொண்டார்.   காவி உடை அணிந்து உடம்பில் ஒரு பூணூலையும் அணிந்து கொண்டு, ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக் கொண்டார்.   பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன வேதங்களில் ஒன்று என்று சாதித்தார். காவி, பூணூல் அணிந்து குடில் ஒன்றில் ஆசிரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார்.


               ஜி யு போப் என்கிற போப்பையர் (1820-1907), கன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் (1680-1746) போன்றவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் நூல்களை மொழி பெயர்த்ததும், வேறு சில தமிழ் நூல்களை எழுதியதும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றினால் அல்ல.  சீகன் பால்கு ஐயர் (ஜெர்மானியர்), இரேனியஸ் (ஜெர்மானியர்) மற்றும் எல்லிஸ் துரை (Francis Whyte Ellis) ஆகியோரும் தமிழ்த் தொண்டு புரியும் நோக்கில் மொழித் தொண்டின் போர்வையில் கிறிஸ்துவ மத மாற்றம் எனும்  சமயப் பணி ஆற்றியவர்களே.  இவர்களைப் போலவே கால்டுவெல் என்கிற பாதிரியாரும் முழுப் பொய்யும், புளுகும், புனைசுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக் கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப் புகுத்தி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி மதமாற்றம் செய்ய அதிக நாட்டம் காட்டினார்.  இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் “திராவிட இனவெறி” என்கிற நச்சு மரத்துக்கு வித்திட்டவர் இந்த பிஷப் கால்டுவெல்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

                பாரத விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் பிரிவினை வாதப் போக்கினை தூண்டும் விதத்தில் கிருஸ்தவ திருச்சபைகள் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பயன்படுத்தின. 1950களின் இறுதியிலும், 1960களிலும் கிருஸ்தவ ஆயர்கள் வெளிப்படையாகவே ‘திராவிட இயக்கம் இந்து மதத்தை அழிக்க கிருஸ்தவ சர்ச்சால் வைக்கப்பட்டுள்ள ‘டைம்பாம்  என பேசினர்கள்.   எனினும் இன்று தமிழ் நாட்டில் ஒரு வலிமையான பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்குவதில் மிஷினரிகள் தோல்வியே அடைந்துள்ளனர் என்ற போதிலும் நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களில் மிஸோ,ரியாங், ஜமாத்தியா, வங்காளிகள் என பல சமூகங்களிடையே மோதல்களுக்கு இனரீதியிலான பூச்சு கொடுப்பதில் மிஷினரிகள் ஆற்றியுள்ள பங்கு அபாரமானது    

            மோசடி பேர்வழிகளை கொண்ட சர்ச்சுகளும்,    மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.  இவற்றில், முஸ்லீம் ஆட்சியாளர்களின் முடிவுக்கு பின்னர்  இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation)  தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது.   அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்;  தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.  இது  மத மாற்றத்தின் மோசடித் தனமாக செயல்பாடாகும்.   இந்த பசப்பு செயல்கள் மூலம்  கிறிஸ்துவர்கள் நடத்திய மத மாற்ற நாடகமாகும்.   மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன. இன்றைக்கும்  இந்துக்கள்  ஆன்மீக பயணம் மேற்கொள்ளும்  போது,  நாகூர் தர்காவிற்கும்,  வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் செல்லும் பழகத்தை கானலாம். 

                 இந்துக்களின் பழக்க வழக்கங்களை கடைபிடித்து இந்துக்களை சீன்டுவதிலும்  கிறிஸ்துவர்கள்  தங்களின் கைவண்ணத்தை காட்ட துவங்கிளார்கள்.   முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுலது போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர்.  ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.     

               வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.  பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர்.  இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர்.   உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம்  14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)   

                இந்துக்களைக் குழுப்பும் சதி வேலை தெய்வநாயகம் போன்ற போலி ஆராய்ச்சியாளர்கள்  இந்து மக்களின் குறிப்பாக தமிழர்களின் மனதைக் குழப்புகின்ற நோக்கில் பல புத்தகங்களை  அச்சடித்து வெயிட்டார்கள்.   அவர் சமீபத்தில் வெளியிட்ட  ‘திருநீறா சிலுவையா’ என்ற  புத்தகத்தில், “திருநீறு என்பது சாம்பல் புதன்கிழமை என்கிற ஆதி கிறிஸ்துவ விரதத்திலிருந்து வந்தது. இடம்-வலமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கம், ஆதி கிறிஸ்துவ சைவத்திலிருந்து, வைணவம் பிரிந்தபோது, மேல்-கீழாகத் திருமண் இட்டுக் கொள்ளும் பழக்கமாக மாறியது. சிவன் தன் இடது பாகத்தை சக்தியிடம் கொடுத்த பிறகு, அந்த சக்தியைப் “பெண்ணாக” வழிபட்டால் அவள் “பார்வதி” என்றும், “ஆணாக” வழிபட்டால் அவர் “விஷ்ணு” என்றும் போற்றப் படுகிறார்கள். திருஞான சம்பந்தரின் “திருநீற்றுப் பதிகம்” கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையே இயம்புகிறது. தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் என அனைத்து சைவ இலக்கியங்களும் ரிக்கு, யஜூர், சாமம் என்ற வேதங்களைப் பற்றிச் சொல்லாமல் கிறிஸ்துவ வேதமாகிய பைபிளின் தத்துவங்களையே சொல்கின்றன” என்றெல்லாம் அபத்தக் களஞ்சியங்களை அள்ளி வீசியிருக்கிறார்.  மேலும், “புனித தோமையர்” (St.Thomas) தமிழகத்தில் நிறுவிய ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதமாம்.  

      ‘இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களே ஆதி கிறிஸ்துவத்தைத் திரித்து சைவம், வைணவம் என்கிற கோட்பாடுகளை உண்டாக்கினராம். எனவே சைவம் வைணவம் ஆகியவை ஆதி கிறிஸ்துவத்தின் உப பிரிவுகளாகவே கொள்ளப்படவேண்டும்.  “பிதா-மகன்-பரிசுத்த ஆவி” என்கிற புனித மூவர் “சிவன்-முருகன்-சக்தி” என்றும் “பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்” என்றும் அழைக்கப் படுகின்றனர்” என்றெல்லாம் இந்துக்களின் மனமும் உணர்வும் புண்படும்படியாக பல அருவருக்கத்தக்க பிதற்றல்கள் ஏராளமாக எழுதப் பட்டுள்ளன.   இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது.  விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.     பணம், தாய்மதத்தைப் பற்றித் திரித்துக் கூறுதல், அரசியல் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், இல்லாத நேயத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுதல் என்று இவ்வாறு பலவகை புனைவுகளாலும் வேடங்களாலும் சற்றும் மனசாட்சியின்றி அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யத் துடிக்கிறார்கள் கிறிஸ்தவ மத வியாபாரிகள்.   இதற்கு உறுதுணையாக இருப்பது அந்நிய நாட்டு கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும்  என்.ஜி.ஓ.க்கள்.

                தமிழகத்தின் தென்பகுதியில்  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிக அளவில் வசிக்கிறார்கள்.  குறிப்பாக குமரி, திருநெல்வேலி போன்ற  மாவட்டங்களை குறிப்பிடலாம்.   திருவாங்கூர் மகாராஜா அறிவித்த ஒரு அபத்தமான அறிவிப்பின் காரணமாகவும்,  உயிருக்கு பயந்தும்  தான் 1830 ல் நாடார்கள் கிறிஸ்தவ மதம் மாறினார்கள் என்ற உண்மை தெரிந்தால் வேறு பகுதியில் வசிக்கும் இந்து நாடார்களுக்கு தெரிந்து விட்டால் தாங்கள் சந்ததிகளுக்கு அவமானம் ஏற்படும் என கருதி இந்த உண்மைகளை வெள்ளையர்களுடன் சேர்ந்து மறைத்தார்கள். நாம் தாழ்த்தப்பட்ட மக்கள் நம்மை காப்பாற்றியது வெள்ளையர்கள் தான் என  பொய் பிரசாரம் செய்தார்கள் . இல்லாத இயேசுவை இருப்பதாக நிருபிக்க முயற்சி செய்கிறார்கள். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதில் உள்ள கருத்தை சற்றே கானலாம்.   

                ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.  கிறித்தவ மிஷனரிகள் என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245-ம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.     

           அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.    1534-ல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும்  மத மாற்றத்தையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர்.  இந்த உண்மையை எந்த கிறிஸ்துவனும்  எடுத்துக் கூறுவதில்லை.          

              கால்டுவெல் எழுதிய அந்த புத்தகம் வந்த காலகட்டத்தில்இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியார் செய்த  பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பிஒட்டுமொத்த நாடார்களையும் “சாணார்கள்”, “இழிந்த சாதியினர்” எனவும்அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் தடுத்தனர்.  இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அவ்வமயம் ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக்கொண்ட மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார்.    அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள்” அல்ல என்றும்அதற்கு மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர்கள்சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடார்கள் வென்றனர்.  இது கிறிஸ்துவர்களின் மத மாற்றத்திற்கு செய்த செப்படி வித்தையாகும்.    

          2009 ம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஒரு பிரச்சார புத்தெழுச்சி கிடைத்தது. தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், ‘நாம் தமிழர்’ என்னும் தீவிர தமிழ் தேசிய இயக்கத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் நடத்தினார். அவருடைய இணையதளத்தில் மாவோயிஸ்ட்களுக்கும், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து திராவிட – கிறிஸ்தவ புனைவுகளை பரப்பும் தெய்வ நாயகமும் சீமானுடன் இணைந்து செயல் பட்டார். இதன் மூலம் தீவிரப்படுத்தப்படும் தமிழ் அடையாளம் தீவிர கிறிஸ்தவமயமாக்கவும் படுகிறது.  தெய்வநாயகம் வழக்கம் போல புதிய பெயருடன் மற்றோர் அமைப்பை உருவாக்கினார். ” அனைத்து சுய மரியாதை தமிழர்களின் கூட்டமைப்பு “. இந்த அமைப்பு சீமானின் நாம் தமிழர் அமைப்புடன் இணைந்து செயல் பட்டது. அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபடும் உரிமைக்காக போராடுவதாக பொய்யாக பிரச்சாரம் செய்த படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மீது படையெடுத்தனர். ஆனால் இவர்கள் உண்மை நோக்கம் கோவில் கருவறைக்குள் நுழைவது மட்டுமே.. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை வைத்து தெய்வநாயகம் நடத்திய நிகழ்ச்சிகள் ஒரு கலவரத்தை தூண்டுவதை போல் அமைந்திருந்தன..

           2010, மே 29 ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் தெய்வ நாயகத்தின் அமைப்பால் கிறிஸ்தவ போதகர்களுக்கு என ஒரு பயிலரங்கம் நடத்தப்பட்டது. அதில் “இந்தியா தோமா வழி வந்த திராவிட நாடே” என்பதை எப்படி ஹிந்துக்களுக்கு கொண்டு செல்வது என்பதற்க்கான ஒரு நாள் பயிற்சி முகாமாக நடந்தது. அதில் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடு என்ற புத்தகத்தை எழுதிய யேசுவடியான், கிறிஸ்தவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தோமா புனைவைப் பயன்படுத்தி ஹிந்துக்களை மதம் மாற்றுவது குறித்து பல உத்திகள் இங்கு விவாதிக்கப்பட்டது. அதில்

            *ஹிந்துக்களுக்கு அவர்கள் மதம் குறித்து இருக்கும் பல அறியாமைகளை பயன்படுத்தி, குழப்பி, அதற்கு பதிலாக புதிய பைபிள் விளக்கங்கள் குடுப்பது ஒரு உத்தி..  *ஹிந்துக்களிடம் ஏசு மட்டுமே ஒரிஜினல் ருபாய் நோட்டு என்றும் ஹிந்து கடவுள்கள் எல்லாம் அந்த ஒரிஜினலின் நோட்டின் ஜெராக்ஸ் பிரதிகள் மட்டுமே என்றும்…  *ஹிந்து கடவுளுக்கு எவ்வித உள்ளார்ந்த மதிப்பும் கிடையாது என்று கூறுவதும் ஆகும்..  இதற்கிடையில் தெய்வ நாயகம் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.. கருணாநிதி தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டாராம். எனென்றால் ஜூலை 2010 ல் நடத்தப்பட இருந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் பல முக்கிய பொறுப்புகளில் அவர் பிராமிணர்களை நியமித்து விட்டாராம். 

              கோவை செம்மொழி மாநாட்டிலும் வழக்கம் போல ஹிந்து விரோத, திராவிட பிரிவினைவாத, கிறிஸ்தவ குரல்கள் ஒலிக்கதான் செய்தது. அங்கே இந்தியத் தன்மையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ் அடையாளத்தை வலியுறுத்தும் குரல்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி பெரும் பணச்செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.    ஒரு அமர்வில் தமிழ் மெய்யியல் என்று பேசப்பட்ட விஷயம்:  ஆன்மா, கர்மா போன்ற கோட்பாடுகள் திராவிடர்களை அடிமைப்படுத்த ஆரியர்களால் நுழைக்கப்பட்டன. திராவிடர்களின் தர்ம கோட்பாடுகள் ஆரியர்களால் திரிக்கப்பட்டு வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்த பயன்பட்டது. அவர்கள் இவ்வாறாக ஆளும் இனமாக ஆகி, திராவிடர்களை அடக்கி ஆண்டனர்.இந்த தீய கோட்பாடுகளை பெரியார் எதிர்தார் 


          ‘தமிழும் சமயமும்’ என்ற அமர்வுக்கு தலைமையேற்றவர் பிஷப். எஸ்றா சர்க்குணம். இவர் எவாஞ்சலிக்கல் சர்ச் ஆப் இந்தியா (Evanjalical church of india ) என்ற அமைப்பின் நிறுவன தலைவர். இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா சென்று வாக்குமூலங்கள், சாட்சியங்கள் அளித்தவர். இந்த அமர்வில் சமஸ்கிருதம் கீழமை படுத்தப்பட்டது. சற்குணம், தெய்வநாயகத்தின் புனவுரையான தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கிறிஸ்தவ தாக்கமுடையது எனக் கூறினார். திராவிட இயக்கமே கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது என்றார். தனது உரையை முடிக்கும் போது அவர் தமிழர்களை கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமுக்கோ இல்லையென்றால் திமுக வில் இணைவதின் மூலம் ‘ திராவிட சமயத்துக்கு’ மதம் மாறும்படி கூறினார்.. ( Session on tamil philosophy 24.07.2010: world classical Tamil conference) paper by Bishop. Ezra Sargunam (WCTC10 2010)) இப்படி எவ்வித ஆதாரமும் இல்லாத போலி-அறிவியல் கிறிஸ்தவ இனவாத தமிழர் அடையாளம் ஒன்று திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டு அதனை பரப்புவதற்கு அப்போது மத்திய அரசு உதவியும் கிடைத்தது.  

குறிப்பு

கிறிஸ்துவம் பற்றிய கட்டுரையின் வாயிலாக  தொண்டு நிறுவனங்கள் நடத்திய மத மாற்றம்,   இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எவ்வாறு எதிராக செயல்பட்டார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்

2 Replies to “தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 3: கிறிஸ்தவ மதமாற்றம்”

 1. ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது

  யாரை எதிர்த்து நடத்தினார், ?

  பிராமணனை எதிர்த்து

  அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்?

  பிரிட்டிஷ்காரன்

  சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா?

  சட்டம் இயற்ற சொல்ல வேண்டும்

  சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது?

  வெள்ளையனிடம் இருந்தது

  பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்?

  அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை

  சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய்

  சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன்,

  ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை?

  ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது

  சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள்

  ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை

  இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள்

  ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை

  , அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்?

  பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது

  காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது

  ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான்,

  எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான்,

  இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு என சொல்லிகொண்டிருந்தால் அவர்கள் முரசொலி மட்டும் தொடர்ந்து படிக்கட்டும்

 2. சங்க தமிழ் இலக்கியங்களுக்கு தொகுப்பினை “திராவிட களஞ்சியம்” என திமுக அரசு தலைப்பிட்டிருப்பது பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது

  சங்க தமிழர் வாழ்வு என்பது இந்துக்கள் வாழ்வு, அந்த வாழ்வு ஒரு காலமும் கடவுள் இல்லை என்றோ தமிழனுக்கும் வடநாட்டவருக்கும் தொடர்பு இல்லை என்றோ சொன்னதே இல்லை

  சங்க பாடல்கள் முழுக்க இமயமலையும் கங்கையும் சிவனும் திருமாலும் இன்னும் எல்லா சக்திவடிவங்களும் சொல்லபடுகின்றன, அவர்கள் கொண்டாடிய அம்மன் விழா, இந்திர விழா, காமன் விழா, பாவை நோன்பு என எல்லாமும் சொல்லபடுகின்றன‌

  அவை இந்து தமிழ் இலக்கியம் என இந்த பாரத பண்பாட்டின் ஒரு அங்கமாகத்தான் வரும்

  அந்த சங்க நூல்களுக்கு வரலாற்றிலே இல்லா கற்பனை பெயரான “திராவிட” என பெயர் சூட்டுவது மாபெரும் வரலாற்று திரிபாகும்

  திமுக அரசு அரசியலில் பொய் சொல்லட்டும், அறிக்கையில் மாபெரும் பொய் சொல்லட்டும் ஆனால் வரலாற்றில் திரிபினை ஏற்படுத்தி பொய் சொல்வதை ஏற்க முடியாது

  இந்த மாபெரும் தமிழக வரலாற்று அவமானத்துக்கு, புறநானூற்று காலம் முதல் கம்பன் காலம் வரையிலான இந்து தமிழர் வாழ்வியலை அப்படியே மறைத்து “திராவிட களஞ்சியம்” என கிளம்பியிருக்கும் இந்த திரிபுக்கு தமிழறிந்தோர், சங்க இலக்கியம் அறிந்தோர், இந்து தர்மம் அறிந்தோர் கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்கள்

  இதெல்லாம் செய்ய கூடாத காரியங்கள்

  அவர்கள் கையில் தற்காலிக அதிகாரம் இருப்பதால் ஆடட்டும் ஆனால் இந்த அதிகாரம் ஒன்றும் சிலப்பதிகாரம் அல்ல காலம் காலமாக நிலைத்திருக்க‌

  ஒருநாள் இவர்களின் அராஜக கொடி சரியும் அன்று எல்லாமும் சீர்செய்யபடும்

  தமிழக அரசியலில் இதை எதிர்கட்சியான அதிமுக கண்டுகொள்ளவில்லை, பாஜக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை

  முதன் முதலாக இதை சீறி எதிர்ப்பவர் அங்கிள் சைமன், காமெடி அரசியல்வாதி என்றாலும் சில இடங்களில் சரியான விஷயங்களை அவர்தான் சொல்கின்றார், அவரின் இந்த எதிர்ப்பு மிக சரியான ஒன்று

  இந்த திமுக அரசை நோக்கி கருணாநிதியின் வரிகளில் முடிக்கலாம்

  “செவ்வாழை தோட்டத்தில் குதிதாடும் கூட்டமே, எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மறவாதீர்கள். எல்லா கொடுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள், உங்களுகான காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *