முன்னுரை:
முதலாம் உலகப் போரில் தோல்வியினால் அழியும் நிலைக்குச் சென்றது துருக்கியின் ஒட்டோமான் காலீப். முஸ்லீம்கள் காலீஃப்பை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதினர். எனவே காலீஃபைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் ஷவுகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
கிலாஃபத் இயக்கத்திற்கு மகாத்மா காந்தியின் ஆதரவு இருந்தது. இந்தியாவில் அதன் எதிரொலியாக மலபாரில் மாப்ளா கலவரங்கள் 1921இல் நடந்தன. ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
தேச விடுதலைக்காகத் தம்மை அர்பணித்துக்கொண்ட சாவர்கர் சகோதரர்களில் இரண்டாமவர் வீர சாவர்கர் எனப்பட்ட வினாயக் தாமோதர் சாவர்கர். 1911 முதல் 1921 வரை அந்தமான் சிறையிலும் பின்னர் 1924 வரை, இரத்தினகிரி சிறையிலும் இருந்தார். 1924இல், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதி மொழிக்குப் பின் விடுவிக்கப்பட்டார். அவர் இரத்தினகிரி மாவட்டத்தை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அங்கு பிளேக் பரவியதன் காரணமாக அவர் கேட்டுக்கொண்டபடி, தடை தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டிருந்தது. அவர் இரத்திரனகிரி திரும்ப வேண்டிய காலம் வந்தபோது, மும்பை வழியே வந்தார்.
சாவர்கர் மும்பையில் இருந்த போது, மகாத்மா காந்தியின் நண்பரும் கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஷவுகத் அலி அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு லோகமான்யா, மராட்டா என்ற இரு பத்திரிகைகளில் 1925 பிப்ரவரி 25 அன்று செய்தியாக வெளிவந்தது. காரசாரமான இந்த உரையாடல் அந்நாட்களில் நாட்டின் நிலையையும் மதத்தலைவர்களின் மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்த 2021ம் வருடம் தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இதை இந்திய முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர். சில அரசியல் தலைவர்களும் தாலிபான்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். இது வரலாற்றில் முதல் முறையல்ல. காந்தி சென்ற நூற்றாண்டில் அப்பாவித்தனமாகச் செய்த தவறை நினைவு கூற உதவுகிறது இந்த உரையாடல்.
உரையாடல் நடந்தபடியே வருமாறு (சான்றுகள் கட்டுரை இறுதியில்)
****
அலி: நான் உங்களுக்கு முன்னர் அனுப்பிய தகவல் கிடைத்ததா?
சாவர்கர்: கிடைத்தது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குத் தடையாக நீங்கள் நினைக்கும் ஹிந்து சங்கடன் (ஒற்றுமை) இயக்கத்தைத் தள்ளி வைக்கிறேன்.
அலி: ஓ! மிக நல்ல செய்தி! ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நாம் கடுமையாக உழைக்கின்றோம். உங்களுடைய இந்த ஹிந்து ஒற்றுமை இயக்கம் அதற்கு இடையூறாக இருக்கிறது. ஹிந்துக்கள் ஒன்று பட்டால் நாங்களும் ஒன்றுபடுவோம் என்று முஸ்லிம் சமுதாயத்தினர் என்னைப் போன்ற தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே, சுயராஜ்ஜியத்திற்காகவும், ஆதரவற்ற இந்நாட்டின் நலனுக்காகவும் ஹிந்துக்கள் தங்கள் மத வேற்றுமையை மறந்து இந்தியர்களாகப் பாடுபடவேண்டும். இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்த உங்களைப் போன்ற தியாகிகள் தேவையில்லாமல் இந்த மதப் பிரச்சினைக்குள் சிக்க வேண்டாம். இந்த விஷயத்திலிருந்து நீங்கள் ஒதுங்கி இருக்க முடிவு செய்தது எனக்கு மிக்க நிம்மதி தருகிறது.
சாவர்கர்: நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை மௌலானா சாகேப். ஆனால், நான் இந்த ஒற்றுமை இயக்கத்தைக் கைவிடும் அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. உங்களுடைய ஒரு உறுதிமொழிக்காகக் காத்திருக்கிறேன்.
அலி: அது என்ன?
சாவர்கர்: நீங்கள் எப்போது கிலாஃபத் இயக்கத்தையும் அல்-உலமா இயக்கத்தையும் கைவிடப் போகிறீர்கள்? அது தெரிந்தால், நான் உடனடியாக என் அறிவிப்பை வெளியிட்டுவிடுவேன்.
அலி (கோபத்துடன்): அது எப்படி சாத்தியம்? எது நடக்கும் என்று நிதானமாக யோசியுங்கள். ஒரு அன்னிய சக்தி நம்மை ஆண்டு கொண்டு நம் இரு சமூகங்களையும் அழிக்கத் தீவிரமாக உள்ளது. இந்நிலமையில், ஒற்றுமையாக இருக்க வழி தேடாமல், நீங்கள்பாட்டிற்கு உங்கள் ஒற்றுமை இயக்கத்தை நடத்தினால், அன்னிய சதிகளை எப்படி முறியடிப்பது? வரலாறு முழுதும் ஹிந்துக்களாகிய உங்களை முஸ்லிம்கள் வென்ற கதையே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் எங்களுக்குச் சமம் என்ற தவறான கருத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். ஹிந்துக்கள் சுதந்திரத்தை விழைந்தால், முஸ்லிம்களுடன் இணைந்தே தீர வேண்டும்.
சாவர்கர்: இப்படிப் பேசி ஒன்றும் பயனில்லை. நான் அரசியல் பற்றிப் பேசத் தடை உள்ளது. அதனால் நான் அரசியல் விவாதங்களில் ஈடுபடப்போவதில்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் உங்கள் சகாக்களும் பொது வாழ்விற்கு வரும் முன், நானும் என் நண்பர்களும் அரசியலிலும் புரட்சிகளிலும் ஆழம் கண்டவர்கள். இரண்டாவது, உங்கள் வரலாற்றைப் பொறுத்தவரை அரேபியாவில் ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கலாம்; ஹிந்துஸ்தானத்தில் அல்ல. ஒவ்வொரு முறையும் நாங்கள் தோற்றபோது, திரும்ப வட்டியுடன் கொடுத்துள்ளோம். அட்டோக் முதல் இராமேஸ்வரம் வரை, முகலாயர்களை வென்று இந்தியாவில் கோலோச்சியவர்கள் மராட்டியர்கள். எனவே இந்த வெற்று விவாதங்களை விடுவோம். கிலாஃபத், உலமா இயக்கங்களை எப்போது கைவிடுவீர்கள் என்று நான் கேட்ட எளிய கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
அலி: நாங்கள் கிலாஃபத் இயக்கத்தை ரகஸியமாக நடத்தவில்லை என்பதைப் பார்க்கவேண்டும். ஹிந்துக்கள் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் அதைத் தலைமை வகித்து நடத்துபவரே (காந்தி) ஒரு ஹிந்துதான்.
சாவர்கர்: இருக்கலாம். ஒரு ஹிந்து தலைமை ஏற்று நடத்துவதால், கிலாஃபத் ஒரு அபாயகரமான இயக்கமாக இல்லை என்றால், மற்றொரு ஹிந்து தலைமையில் நடக்கும் ஹிந்து ஒற்றுமை இயக்கம் எப்படி அபாயகரமாக இருக்கும்? ஹிந்து தலைமையில் நடப்பதால், ஹிந்துக்கள் கிலாஃபத் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்கிறீர்கள். அதே சமயம், முஸ்லிம் தலைமையில் இல்லாததால்தான் எங்கள் இயக்கம் நம்பிக்கைக்குரியது அல்ல என்கிறீர்கள். மத நல்லிணக்கத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மீதுள்ள தங்கள் அவநம்பிக்கையை விடுத்து கிலாஃபத்தை ஆதரிக்க வேண்டுமென்றால், ஏன் நான்கைந்து முஸ்லிம்கள் கூட அதே மத நல்லிணக்கத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஹிந்து ஒற்றுமை இயக்கத்தை ஆதரிக்கக் கூடாது என்று கேட்கிறேன். முஸ்லிம்களின் குறிக்கோளுக்காக தோளோடு தோள் நின்று ஆதரவு அளிக்கும் ஹிந்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முஸ்லிம்களும் ஹிந்து ஒற்றுமை இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். கிலாஃபத் இயக்கம் ரகஸியமானதல்ல என்று நீங்கள் சொல்லும்போது, ஹிந்து சங்கடனின் எங்கே ரகஸியம் உள்ளது? இதுவும் ரகஸிய இயக்கமல்ல. ரகஸியமாக நடக்கும் ஆகா கான் மிஷன் அல்லது ஹஸன் நிஜாமி மிஷன் போன்றவற்றை கவனிக்காமல், ஏன் ஹிந்துக்களுக்கு அறிவுரை கூறுகின்றீர்கள்? மலபார், குல்பர்கா, கோஹட்டில் நடந்தவை…
அலி (இடை மறித்து): கோஹட்டில் என்ன நடந்தது? ஹிந்துக்கள் ஏதும் புகார் கூறவில்லை. காந்தியைக் கேளுங்கள்.
சாவர்கர்: இதில் காந்தியை இழுக்க வேண்டாம். உண்மைக்கு தொடர்பில்லாத பல அறிக்கைகளை விடுத்துள்ளார். மலபார் கலவரத்தில் ஒரே ஒரு ஹிந்து தான் மதம் மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அதற்கு மாறான உண்மை நம் கண் முன்னே இருக்கிறது. அவர் கூற்றுகளை எல்லாம் நான் பொருட்படுத்துவதேயில்லை. நாம் சுற்றிச்சுற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து இதை மட்டும் சொல்லுங்கள் – நாட்டு நலனிற்காகவும் ஒற்றுமைக்காகவும் கிலாஃபத் போன்ற பிரிவினைவாத இயக்கங்களையும், கட்டாய மத மாற்றத்தையும் கைவிடுவீர்களா? அப்படியென்றால், அடுத்த நொடி நான் என் இயக்கத்தைக் கலைத்துவிட்டு என் நண்பர்களையும் ஒத்துழைக்குமாறு உறுதி அளிப்பேன்.
அலி: ஆனால் ஹிந்துக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வது எங்கள் கடமை. இன்று காலை ஒரு இளைஞன் என்னிடம் அவன் கனவில் கடவுள் வந்து அவனை, முஸ்லிமாக மதம் மாறி, தன்னை காத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டதாகக் கூறினான். நான் அவனை உடனடியாக அருகிலுள்ள மசூதிக்குச் சென்று மதம் மாறச் சொன்னேன். இதில் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. மக்கள் அவர்களாகவே மெய்ஞானம் பெற்று உண்மையான மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
சாவர்கர்: உங்கள் கருத்துடன் இப்போதைக்கு ஒத்துப் போகிறேன். இதே போல், நாளை ஒரு முஸ்லிம் இளைஞன் என்னிடம் வந்து அவன் கனவைக் கூறி, ஹிந்துவாக மாற வழி காட்டுமாறு கேட்டால், நான் ஏன் அவனை ஷுத்தி செய்து, அவனை ஹிந்துவாக மாற்றக் கூடாது? ஷுத்தியும் கட்டாயப்படுத்தி அல்ல; சுய விருப்பத்தின் பேரில் தான் செய்யப்படுகிறது.
அலி (கோபத்துடன்): நல்லது. நீங்கள் ஷுத்தி செய்து கொள்ளுங்கள்; நாங்கள் தப்லீக் (மத மாற்றம்) செய்து கொள்கிறோம். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம். நாங்கள் ஒன்று பட்டவர்கள். எங்களிடையே உங்கள் சமூகம் போல ஜாதி, தீண்டாமை, பிரதேச வேற்றுமைகள் கிடையாது.
சாவர்கர்: பிரதேச வேற்றுமைகள் கிடையாதா? துர்ரானி, முகலாய முஸ்லிம்கள், தென்னாட்டு, வட நாட்டு முஸ்லிம்கள், ஷேக், சையது முஸ்லிம்கள் போன்ற பிரிவினைகளை வைத்துத்தான் மராட்டியர்கள் முகலாய அரசை வீழ்த்தினர். சைவ-வைணவ வேற்றுமைகளினால் கலவரம் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அதைப் போல நூறு மடங்கு வன்முறை ஷியா-சுன்னி கலவரங்களில் நடக்கின்றன. காபூலில் சமீபத்தில் சுன்னிகள் ஒர் அஹமதியாவை கல்லால் அடித்தே கொன்றனர். பஹாவிகளோ பிற முஸ்லிம்கள் எல்லோரும் கொல்லப்பட வேண்டியவர்கள் அல்லது நரகத்தில் உழலப்போகின்றவர்கள் என்றே நினைக்கின்றனர். தீண்டாமை பற்றிப் பேசப்போனால், எனக்குத் தெரிந்த பல பங்கி (Bhangi – தோட்டி சாதியினர்) முஸ்லிம்கள் பிற முஸ்லிம்கள் வைத்துள்ள தண்ணீரைத் தொட உரிமையில்லை. அவர்களோடு ஒரே மசூதியில் தொழ உரிமையில்லை. திருவாங்கூரில் கிறிஸ்துவர்களிடையே, தீண்டத்தகாத கிறிஸ்தவர்களுக்கும் பிறருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. வீட்டுக்கு வீடு வாசற்படி.மௌலானா சாகேப்! எனக்கு ஓரளவிற்கு இஸ்லாம் இறையியல், வரலாறு, இலக்கியம் எல்லாம் தெரியும். அதனால் என்னால் இவற்றைப் பற்றி உறுதியாகக் கூற முடியும். நீங்கள் ஒன்றுபட்ட ஏழு கோடி முஸ்லிம்கள் என்றால், எப்படி ஹிந்து மராட்டியர்களால் உங்களை வீழ்த்த முடிந்தது? பிரிட்டிஷார் எப்படி இந்தியாவை ஆளா முடிகிறது?
அலி: நாட்டின் நிலையை நான் விளக்க முயலும்போது உங்கள் மராட்டிய ஆணவம் குறுக்கே வருகிறது. இந்த நாடு ஒன்று என்றோ உங்களுடையது என்றோ மராட்டியர்களான நீங்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்திருந்தால், தேச ஒற்றுமைக்காக, உங்கள் பிரிவினைவாத, மதவாத இயக்கங்களை நான் கூறியபடி, பிற மாநிலங்கள் கலைத்தது போல, நீங்களும் கலைக்க ஒப்புக் கொண்டிருப்பீர்கள்.
சாவர்கர்: நீங்கள் தேவையில்லாமல் மராட்டியர்கள் மீது பழி சுமத்துகிறீர்கள். சிவாஜி மராட்டியர்களுக்கு மட்டுமல்ல, பாரத தேசத்திற்கு உரியவர். கடந்த இரு தசாப்தங்களாக, நாங்கள் ஏற்றிய போராட்டக்கொடி முழு நாட்டிற்குமானது. ரானடே, கோகலே அல்லது திலகர் மராட்டியத்திற்காக மட்டும்தான் போராடினார்களா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் உருவான அரசியல், புரட்சி இயக்கங்கள் இந்த மண்ணில் உருவானவை. வங்காளம் பிரிக்கப்பட்ட போது. தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் போல, மராட்டியர்கள் அதை எதிர்த்துப் போராடவில்லையா? ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து நாங்கள் போராடினோம், வருந்தினோம். இவை நாட்டிற்கு நாங்கள் அளித்த சலுகைகள் அல்ல; நாட்டில் எந்தப்பகுதியில் இருந்தாலும் வாடும் எம் சகோதரர்களுக்குத் தோள் கொடுக்கும் புனிதக்கடமை. இவற்றை ஒப்புக்கொள்ளாமல் எங்கள் மீது பழி சுமத்துவது அநியாயம்.
இரண்டாவதாக, நீங்கள் உங்களை சமூகத்தின் தலைவர்கள் என்றும், உங்களைக் கேட்காமல் உங்கள் சமூகம் எதுவும் செய்யாது என்றும் சொன்னீர்கள். அப்படி என்றால், உங்கள் கட்டளைப்படிதான் மலபார், கோஹட், டெல்லி, குல்பர்கா போன்ற இடங்களில் கலவரம் நடந்ததா, கோவில்கள் மாசுபடுத்தப்பட்டனவா, எங்கள் பெண்கள் கற்பழிக்கப்பட்டனரா? இல்லையென்றால், உங்கள் சமூகத்தின் பிரதிநிதிகள் என்றோ, உங்கள் சொல்லுக்கு உங்கள் சமூகம் கட்டுப்படும் என்றோ எப்படி கூறிக்கொள்ள முடியும்?
அலி: நாங்கள் கைது செய்யப்பட்டோம். நாங்கள் இல்லாததால், முஸ்லிம் சமூகம் ஏமாற்றமடைந்து திசை தெரியாமல் பொறுமையின்றி நடந்து கொண்டுவிட்டனர்.
சாவர்கர்: ஆனால், கோஹட், டெல்லி, குல்பர்காவில் கலவரங்கள் நடந்த போது சிறையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்களே? ஹிந்துக்கள் மீது கொடும் வன்முறைகள் நடக்கும் போது, உங்கள் அறிவுரைகளைக் கேட்டு கலவரக்காரர்கள், வன்முறையைக் கைவிடுவார்கள் என்று எப்படி நம்புவது? நாளை அல்லது நானோ நீங்களோ இறந்த பின், இந்த இரு சமூகங்களுக்குடையே உறவு எப்படிப்பட்டதாக இருக்கும்? இங்கள் இயக்கம் உங்களுக்கோ வேறு எவருக்கோ எதிரானதல்ல. தற்காப்பிற்கும், பிற்காலத்தில் ஏதேனும் வன்முறை நடந்தால் அவற்றை எதிர் கொள்ளவும் தான். ஹிந்து ஒற்றுமை இயக்கம் வன்முறை, முரட்டுத்தனத்தில் இறங்காமல், தங்கள் உரிமைகள், உடமைகள், உயிர்களைப் பாதிக்காமல் சத்தியத்திற்கும், தற்காப்பிற்காகவும் மட்டும் இருந்தால் யாருக்கு என்ன பிரச்சினை? ஆகா கான், ஹஸன் நிஜாமி அல்லது கிலாஃபத் இயக்கங்கள் வன்முறையின் மூலம் கட்டாய மதமாற்றம் செய்யும் போது, உருது பத்திரிகைகள் ஹிந்துக்களை மொத்தமாக 5-10 வருடங்களுக்குள் மதம் மாற்ற அழைப்பு விடுக்கும் போது, நாட்டு நலன் என்ற கானல் நீருக்காக, ஹிந்துக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் இயக்கங்களைக் கைவிட வேண்டும் என்று நீங்கள் கேட்பது அப்பட்டமான போலித்தனம்.
அலி: உங்கள் நடவடிக்கைகளினால், நீங்கள் முஸ்லிம்களை எதிர்தரப்புக்குத் தள்ளுகின்றீர்கள் என்று உணர்கிறீர்களா? காலம் காலமாக முஸ்லிம்கள் ஹிந்துக்களை மதம் மாற்றி வந்துள்ளனர். இது ஒன்றும் இன்று புதிதாக முளைத்ததல்ல. நீங்கள் செய்யும் ஷுத்திதான் புதிதானது; அது தான் அமைதியான சமூகத்தில் வேற்றுமையை விதைக்கிறது. இது அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்பு இல்லையா?
சாவர்கர்: அப்போது தவறு யாரிடம் மௌலானா சாகேப்? சகிப்புத்தன்மையும் அமைதியையும் போதிக்கும் ஹிந்து மதம், யாரையும் கட்டாயமாக மதம் மாற்றாமல், தனக்கிழைக்கப்பட்ட கொடுமைகளை மன்னித்து, மறந்து இருக்கையில், இன்று தன்னைக் காத்துக் கொள்ள ஷுத்தி என்ற சடங்கைக் கையில் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு யாரை பழி கூறுவீர்கள்? பாதிக்கப்பட்டவர்களையா, துன்பப்படுத்துபவர்களையா? நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது. இரண்டாவதாக, கிறிஸ்தவ, பார்ஸி, யூதர் முதலான சமூகங்களும் சங்கடன்களையும் யூனியன்களையும் வைத்துள்ளனர். அது முஸ்லிம் ஆன்மாவை உறுத்தவில்லையா? அப்படியென்றால், சுயநலம் விரும்பும் முஸ்லிம் தலைவர்களின் அரசியல் மத குறிக்கோள்களுக்கு ஹிந்து சங்கங்கள் இடையூறாக உள்ளன என்று தானே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது? அதனால் தான், நான் பல முறை உங்களிடம், உங்கள் இயக்கங்களை எப்போது கைவிடப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு பதில் சொல்லவில்லை.
அலி (கோபமாக): நாங்கள் கைவிட மாட்டோம். ஹிந்துக்களுக்கு எதிராக அதில் ஒன்றுமில்லை.
சாவர்கர்: நல்லது. அப்படியென்றால், நாங்களும் எங்கள் இயக்கத்தை விடுவதாக இல்லை. எங்கள் இயக்கம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; அது மட்டுமல்ல, அது கிறிஸ்துவ, யூத, பார்ஸி அல்லது பிற சமூகங்களுக்கும் எதிரானதல்ல. நாங்கள் ஒரு சமூகமாக எங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள உரிமை உள்ளது என்று எங்கள் இயக்கம் நம்புகிறது. எனவே, முரட்டுத்தனமாக வேட்டையாட நினைக்காதீர்கள். எங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. நம் எல்லோருக்கும் சொந்தமான இந்நாட்டில் அமைதியாக பிறருடன் இணங்கி வாழவே நாங்கள் விரும்புகிறோம். தங்கள் மதமே ஒரே வழி என்று இஸ்லாமும் கிறிஸ்துவமும் மதமாற்றத்தில் தீவிரமாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக பின்பற்றப்படும் ஹிந்து மதத்திற்கும், பிறர் கழுத்தில் கத்தி வைக்காமல் மதம் மாற்றும் அந்த உரிமை உண்டு. பிறர் வன்முறையிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள நாங்கள் சங்கங்கள் அமைத்துக் கொள்கிறோம். தற்காப்பு ஒவ்வொரு சமூகத்தின் உரிமை. மதங்களைப் பற்றிக் கவலைப்படாமல், உலகளாவிய மனித நேயத்திற்காக, எங்கள் இயக்கம், ஒரே இறைவன், ஒரே கோவில், ஒரே மொழி, ஒரே வழிபாடு – நம் தாய்நாட்டிற்கானது என்ற அடிப்படையில் எல்லோருடனும் கைகோர்த்துச் செல்லும்.
******
முடிவுரை:
இந்த உரையாடல் போன போக்கு என்னவென்று வரலாறு சொல்லும். கிலாஃபத் இயக்கத்திற்கு காந்தி அளித்த ஆதரவு, பாகிஸ்தானின் பிறப்பிற்கும், பின்னர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் வித்திட்டது. சாவர்கருக்கு அதே அளவிற்கு ஆதரவு கிடைத்திருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருந்திருக்குமோ இல்லையோ, இஸ்லாமிய பயங்கரவாதம் கட்டுக்குள் இருந்திருக்கலாம்.
அல் உலமா என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்பு. இஸ்லாமின் காவலர்களாகத் தங்களைக் கருதும் இவ்வமைப்பின் பொறுப்புகள் – இஸ்லாமிய சட்டங்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை மொழிபெயர்த்தல், பரப்புதல் ஆகியனவே.
சான்றுகள்:
உரையாடலின் மூல வடிவம்: V.D. சாவர்கர், சாவர்கர் சமக்ரா, புது டெல்லி, பிரபாத் பிரகாகஷன், 2000, தொகுதி 7, பக்: 316-24;
ஆங்கில மொழிபெயர்ப்பு: விக்ரம் சம்பத், Savarkar (Part 2) A Contested Legacy 1924-1966, Penguin Viking, 2021, பக்: 19-23. இந்நூலை அமேஸானில் வாங்க – Savarkar (Part 2): A Contested Legacy, 1924-1966
Excellent one sir. Possible put short videos sir.
அந்த சாவர்க்கர் மேல் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் அவரின் நாட்டு பற்றும் முதலில் அவர் செய்த தீவிர போராட்டமும் மறுக்க கூடியது அல்ல.
நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது
அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு வந்த இழுக்காக கருதிய அவர்கள் அன்றே குறி வைத்தனர், இன்னும் ஏராள இந்திய வரலாறுகளை வெளிகொணர்ந்தார் சாவர்க்கார்
1857 சிப்பாய் புரட்சி வெறும் கலவரம் என உலகெல்லாம் பிரிட்டிசார் பூசி மெழுகியபொழுது, அது இந்திய சுதந்திரபோர் என 1907 புத்தகம் எழுதி உலகினை திரும்பி பார்க்க வைத்தவர் சாவர்க்கர் . தன் படை வீரர்கள் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம் சாவர்கருடையது என உத்தரவே பின்னாளில் போட்டார் நேதாஜி
லண்டனில் பாரிஸ்டர் படிக்க சென்றாலும் மனிதர் சும்மா இருக்கவில்லை, இந்திய சங்கத்தை உருவாக்கினார். ஆயுதங்களை உருவாக்கி பயிற்சியளித்தார் அதில் பெண்களும் இருந்தனர்
நிச்சயமாக சொல்லலாம் நேதாஜிக்கு இவ்விஷயத்தில் சாவர்க்கரே முன்னோடி. அவரின் வீரர்கள் இந்தியாவில் ஆளும் கொடூர கலெக்டர்கள் லண்டன் வரும்போது அங்கே தீர்த்துகட்டினர், சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடறியினை உலுக்கினார் சாவர்க்கர்
முதலில் தடுமாறிய ஸ்காட்லான்டு யார்டு பெரும் போராட்டத்திற்கு பின் அவரை கைதுசெய்தது, விசாரணைக்கு கப்பலில் இந்தியா வந்தபொழுது கப்பல் ஓட்டை வழியாக தப்பி சாகசமாக பிரான்ஸை அடைந்தார் சாவர்க்கர்
பிரிட்டனில் இருந்தே பிரிட்டிஷாரை சொல்ல கடும் துணிச்சல் வேண்டும் அது அவருக்கு இருந்தது
பின் பிரான்ஸ் பிரிட்டன் அரசுகள் பேசி வழக்கு நடந்து அவருக்கு 50 ஆண்டு சிறை என முடிவானது. நிச்சயம் அவரை சுட்டுகொல்லும் முடிவில்தான் பிரிட்டன் இருந்தது, ஆனால் பிரான்ஸ் விவகாரம் வந்தபின் அதற்கு பல விவகாரங்கள் வந்ததால் தப்பினார் சாவர்க்கர்
இந்திய சுதந்திர போராட்டத்தில் 1911ல் 50 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்ட ஒரே தலைவர் அவர்தான்
கொடூர அந்தமான் சிறையில் அவரை வைத்தார்கள். செக்கிழுத்தார், மரம் வெட்டினார் இன்னும் 6 மாதம் இருட்டறையில் அடைத்தல், தனிச்சிறை என அவரை உடனே கொல்லமுடியாவிட்டாலும் சித்திரவதை செய்து கொல்ல முடிவு செய்தார்கள்
கல்பாணி எனும் படத்தில் வந்த சித்திரவதைகளை அவரும் அனுபவித்தார் . அப்பொழுதும் எழுத பேனாவும் பேப்பரும் கேட்டாலும் கிடைக்கவில்லை. இந்த வலிகள் பின்னாளில் மறக்கும், கூடாது இது மறக்கவே கூடாது என சுவற்றில் கல்லால் எழுதிவைத்தார் சாவர்க்கர். புகழ்பெற்ற கவிதைகள் அங்குதான் அவரால் எழுதபட்டன
இதுவரை மிக சரியாக சென்ற அவரின் வரலாறு இதற்கு பின் கொஞ்சம் மாறுகின்றது, மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்ததால் 1921ல் அவருக்கு ரத்னகிரி சிறைக்கு மாற்றம் கிடைக்கின்றது
1924ல் நன்னநடத்தை என விடுதலையும் செய்யபட்டார்
ஏன் விடுதலை செய்யபட்டார் என்றால், அதுதான் வெள்ளையன் தந்திரம். சாவர்க்கர் பற்றி அவனுக்கு தெரியும், காந்தி பற்றியும் தெரியும் இருவரையும் களத்தில் விட்டால் அவனுக்கு வேலை குறைவு
வெள்ளையனின் தந்திரம் அட்டகாசமாக பலித்தது, 1925ல் சாவர்க்கர் இந்து மகாசபையினை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் முதல் இன்றைய பாஜக வரை அதுதான் தாய் இயக்கம்
காந்திக்கும் சாவர்க்கருக்கும் முட்டி கொண்டது. இருவரும் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும் வழி வேறாய் இருந்தது, காந்திய அஹிம்சை பலருக்கு பிடிக்கவில்லை அதில் சாவர்க்கரும் ஒருவர்
இதன் பின் இந்துத்வா பேச தொடங்கினார் சாவர்க்கர், ஆனால் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தயங்கவில்லை. எல்லா சாதி இந்துக்களும் வணங்க பதித பவன் எனும் ஆலயத்தையும் ஏற்படுத்தினார்
உண்மையில் அன்று சாவர்க்கருக்கு ஆதரவு கூடிற்று, எங்கிருந்தோ வந்தார் ஜின்னா, பாகிஸ்தான் வேண்டுமென்றார். இந்தியா ரத்தத்தில் மிதக்கும் நாள் நெருங்கிற்று. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை. ஹிட்லர் அடித்த அடியில் பொறி கங்ங்கி இருந்தது, வேறு வழியே இல்லையா என சர்ச்சில் போன்றவர்கள் கேட்டபொழுது இனியும் இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது சாத்தியமில்லை என லண்டன் பாரளுமன்றம் சொன்ன பின்பே சுதந்திரம் வந்தது
ஆனால் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் மிக நுட்பமாக பழிவாங்க பாகிஸ்தானை பிரித்துகொடுத்தான் வெள்ளையன், காந்தியின் உண்ணாவிரதம் எல்லாம் ஜின்னாவிடம்ம் எடுபடவில்லை. டம்மி ஆக்கியிருக்க வேண்டிய ஜின்னாவினை காந்தி வெல்லவிட்டது தவறு
இதன் பின் காங்கிரசுக்கும், சாவர்கருக்கும் பெரும் அபிப்ராய பேதம் வந்தது. சர்ச்சைகள் வெடித்தன . காந்தி கொலைக்கு பின் சாவர்க்கர் தேசவிரோதி ஆக்கபட்டார்
உண்மையில் காந்தியினை கொல்ல சாவர்க்கருக்கு எந்த அவசியமுமில்லை , கொல்லவேண்டும் என்றால் 1947க்கு முன்பே கொன்றிருக்கலாம். அதன் பின் காந்தி இருந்தாலோ இறந்தாலோ ஆகபோவது ஒன்றுமில்லை எனும்பொழுது ஏன் கொல்லபட வேண்டும்?
வரலாற்றின் சில பக்கங்கள் புரியவில்லை. இத்தேசம் பிரிந்து போக ஒப்புதல் அளித்த தலைவர்களில் பட்டேலும் ஒருவர்
காந்தியாவது உண்ணாவிரதம் இருந்து எதிர்த்தார், பட்டேல் சனியன் தொலைந்தது என சொல்லிகொண்டிருந்தார்
ஆனால் காந்திதான் கொல்லபட்டார், பட்டேலுக்கு ஆபத்தே இல்லை, ஏன் என்றால் புரியவில்லை.
மிகவருத்தமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அவரை இந்நாட்டின் எதிரிபோலவே நடத்திற்று, வெள்ளையன் பறித்த அவரின் வீட்டை கூட அது திரும்ப கொடுக்கவில்லை
எந்த சலுகையும் அவருக்கு இல்லை, வெள்ளையன் கொடுத்த சில சலுகைகளை கூட கொடுக்கமறுத்தது காங்கிரஸ்
நிச்சயம் இதெல்லாம் மகா தவறான விஷயங்கள். துளியும் சுயநலமின்றி நாட்டிற்காய் உழைத்து , சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு பதவிக்கும் ஆசைபடாமல், கட்சி நடத்தாமல் , அமைதியாய் நாட்டுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்த அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது
ஏன் பகைத்தார்கள்?
காஷ்மீர் விஷயத்தில் ஏற்பட போகும் அபாயத்தை அம்மனிதன் முன்பே சொன்னார். பின்னாளில் காங்கிரஸ் அரசு அதில் சிக்கி சீரழிய முன்பே சொன்னேன் அல்லவா? என அவர் சொன்னபொழுது அவர்களுக்கு சகிக்க முடியவில்லை
ஆச்சரியமாக சீனாவின் நயவஞ்சகம் பற்றியும் எச்சரித்தார் சாவர்கர், ஆனால் அவர் மறைந்த பின்பே சீனபடை எடுப்பு நடந்தது
நாட்டிற்காக போராடிய அம்மனிதன் ஒதுக்கபட்டு மூலையில் எறியபட்டதும், பெரும் தியாகம் ஏதும் செய்யாத ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவரானதும் நிச்சயம் இந்நாட்டின் கருப்பு பக்கங்கள்
அதோடு விட்டார்களா? ஒரு கட்டத்தில் மனம்வெறுத்து அம்மனிதன் சாக தீர்மானித்தார். உண்ணாவிரதம் தொடங்கினார், என்னால் செயல்பட முடியா நிலையில் சமூகத்திற்கு பாரமாய் இரேன் என சொல்லி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அரசு தடுக்கவில்லை அவர் செத்தும் போனார்
அந்த சாவர்க்கரை இந்த பெரியார் என்பவரோடு ஒப்பிடுவது கொஞ்சமும் பொருந்தாது
பெரியார் கம்யூனிசம் பேச முயற்சித்தார் அன்றே வெள்ளை அரசு முறைத்தது அவ்வளவுதான் கருப்பு சட்டை போட்டு கம்யூனிசமும் பேசாமல் வெள்ளையனை எதிர்க்காமல் எதனையோ செய்துகொண்டிருந்தார்
சாவர்க்கர் சுதந்திர போராளி, சில பல தியாகங்களை சித்திரவதைகளை தேசத்துக்காக அனுபவித்தவர்
ஆனால் பெரியார் நாட்டை பற்றி கொஞ்சமும் சிந்திக்கவில்லை, திராவிட நாடு கேட்டது முதல் 1947ல் வெள்ளையன் சென்றபொழுது கண்ணீர் விட்டு அழுது துக்கதினம் கொண்டாடினார் பெரியார்
வெள்ளையன் இங்கே வைத்திருந்த தன் விசுவாசமான கூட்டத்தில் பெரியாரே தளபதியாய் இருந்தார். வெள்ளையன் வைத்திருந்த செருப்புகளில் ஒன்று அந்த கூட்டம்
சாவர்க்கரின் நாட்டுபற்றுடனும் அந்தமான் சிறைகாலத்துக்கு முன்பாக அவர் போராடிய போராட்டத்திற்கு அருகில் கூட பெரியாரால் வரமுடியாது
சாவர்க்கரை சிலர் விமர்சிக்கலாம் ஆனால் நாட்டுக்கும் இந்திய தேசியத்துக்கும் ஒரு புல்லையும் புடுங்காத பிரிவினைவாத அழிச்சாட்டிய கூட்டமான திக திமுக கோஷ்டி விமர்சிப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை
அந்த மனிதர் நிச்சயம் நாட்டுபற்றாளர், தேசாபிமானி. இந்த தேசவிடுதலைக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற வெறியில் வாழ்வினை அர்பணித்தவர் அந்த சாவர்க்கர்.
மிக சிறிவயதிலே அப்படி தொடங்கியவர். இந்நாடு சுதந்திரம் பெறவேண்டுமென்றால் அப்போது இருந்த 30 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மொழியால் அவர்களை இணைக்க முடியாது, ஆட்சி என்றாலும் 600 சமஸ்தானம் இருந்தது. இம்மக்களை இணைக்க மதம் ஒரு வழி என கண்டார் திலகர்
அப்படி மத கொண்டாட்டத்தில் தேசவிடுதலையினை கலந்து அவர் தொடங்கியதுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம், சிவாஜி ஊர்வலம் எல்லாம்.
இதனை எல்லாம் பார்த்து வளர்ந்த சாவர்கருக்கு அதே கொள்கை வந்தது. வானரசேனை என்றொரு அமைப்பினை தன் 11 வயதிலே தொடங்கினார்.
நமது ஊர் வாஞ்சிநாதன் ஸ்டைலில் மகராஷ்டிராவில் வெள்ளையர் கொல்லபட, சில இந்தியர்கள் கொல்லபட்டதெல்லாம் சாவர்க்கர் மனதை வலிக்க செய்தன
நல்ல அறிவாளி, படிப்பு அவருக்கு இயல்பாய் வந்தது. எந்த இந்திய தலைவருக்கும் இல்லா ஒரு வித்தியாசமான குணம் அவருக்கு இருந்தது, அது இந்தியாவினை வரலாற்று பாணியில் நோக்குவது
அலெக்ஸாண்டரை உலகம் மாவீரன் என சொன்ன காலத்தில் அவன் இந்திய எல்லையில் பெற்ற தோல்வியினை நிறுவி சொன்னவர் சாவர்க்கர். இதெல்லாம் ஐரோப்பியரின் கவுரவத்திற்கு வந்த இழுக்காக கருதிய அவர்கள் அன்றே குறி வைத்தனர், இன்னும் ஏராள இந்திய வரலாறுகளை வெளிகொணர்ந்தார் சாவர்க்கார்
1857 சிப்பாய் புரட்சி வெறும் கலவரம் என உலகெல்லாம் பிரிட்டிசார் பூசி மெழுகியபொழுது, அது இந்திய சுதந்திரபோர் என 1907 புத்தகம் எழுதி உலகினை திரும்பி பார்க்க வைத்தவர் சாவர்க்கர் . தன் படை வீரர்கள் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம் சாவர்கருடையது என உத்தரவே பின்னாளில் போட்டார் நேதாஜி
லண்டனில் பாரிஸ்டர் படிக்க சென்றாலும் மனிதர் சும்மா இருக்கவில்லை, இந்திய சங்கத்தை உருவாக்கினார். ஆயுதங்களை உருவாக்கி பயிற்சியளித்தார் அதில் பெண்களும் இருந்தனர்
நிச்சயமாக சொல்லலாம் நேதாஜிக்கு இவ்விஷயத்தில் சாவர்க்கரே முன்னோடி. அவரின் வீரர்கள் இந்தியாவில் ஆளும் கொடூர கலெக்டர்கள் லண்டன் வரும்போது அங்கே தீர்த்துகட்டினர், சிங்கத்தின் குகையில் நுழைந்து அதன் பிடறியினை உலுக்கினார் சாவர்க்கர்
முதலில் தடுமாறிய ஸ்காட்லான்டு யார்டு பெரும் போராட்டத்திற்கு பின் அவரை கைதுசெய்தது, விசாரணைக்கு கப்பலில் இந்தியா வந்தபொழுது கப்பல் ஓட்டை வழியாக தப்பி சாகசமாக பிரான்ஸை அடைந்தார் சாவர்க்கர்
பின் பிரான்ஸ் பிரிட்டன் அரசுகள் பேசி வழக்கு நடந்து அவருக்கு 50 ஆண்டு சிறை என முடிவானது. நிச்சயம் அவரை சுட்டுகொல்லும் முடிவில்தான் பிரிட்டன் இருந்தது, ஆனால் பிரான்ஸ் விவகாரம் வந்தபின் அதற்கு பல விவகாரங்கள் வந்ததால் தப்பினார் சாவர்க்கர்
இந்திய சுதந்திர போராட்டத்தில் 1911ல் 50 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்ட ஒரே தலைவர் அவர்தான்
கொடூர அந்தமான் சிறையில் அவரை வைத்தார்கள். செக்கிழுத்தார், மரம் வெட்டினார் இன்னும் 6 மாதம் இருட்டறையில் அடைத்தல், தனிச்சிறை என அவரை உடனே கொல்லமுடியாவிட்டாலும் சித்திரவதை செய்து கொல்ல முடிவு செய்தார்கள்
கல்பாணி எனும் படத்தில் வந்த சித்திரவதைகளை அவரும் அனுபவித்தார் . அப்பொழுதும் எழுத பேனாவும் பேப்பரும் கேட்டாலும் கிடைக்கவில்லை. இந்த வலிகள் பின்னாளில் மறக்கும், கூடாது இது மறக்கவே கூடாது என சுவற்றில் கல்லால் எழுதிவைத்தார் சாவர்க்கர். புகழ்பெற்ற கவிதைகள் அங்குதான் அவரால் எழுதபட்டன
இதுவரை மிக சரியாக சென்ற அவரின் வரலாறு இதற்கு பின் கொஞ்சம் மாறுகின்றது, மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்ததால் 1911ல் அவருக்கு ரத்னகிரி சிறைக்கு மாற்றம் கிடைக்கின்றது , ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரியாது, பதுங்கி பாயும் தந்திரமாக இருக்கலாம்
1924ல் நன்னநடத்தை என விடுதலையும் செய்யபட்டார்
ஏன் விடுதலை செய்யபட்டார் என்றால், அதுதான் வெள்ளையன் தந்திரம். சாவர்க்கர் பற்றி அவனுக்கு தெரியும், காந்தி பற்றியும் தெரியும் இருவரையும் களத்தில் விட்டால் அவனுக்கு வேலை குறைவு
வெள்ளையனின் தந்திரம் அட்டகாசமாக பலித்தது, 1925ல் சாவர்க்கர் இந்து மகாசபையினை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் முதல் இன்றைய பாஜக வரை அதுதான் தாய் இயக்கம்
காந்திக்கும் சாவர்க்கருக்கும் முட்டி கொண்டது. இருவரும் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டாலும் வழி வேறாய் இருந்தது, காந்திய அஹிம்சை பலருக்கு பிடிக்கவில்லை அதில் சாவர்க்கரும் ஒருவர்
இதன் பின் இந்துத்வா பேச தொடங்கினார் சாவர்க்கர், ஆனால் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களை செய்யவும் அவர் தயங்கவில்லை. எல்லா சாதி இந்துக்களும் வணங்க பதித பவன் எனும் ஆலயத்தையும் ஏற்படுத்தினார்
உண்மையில் அன்று சாவர்க்கருக்கு ஆதரவு கூடிற்று, எங்கிருந்தோ வந்தார் ஜின்னா, பாகிஸ்தான் வேண்டுமென்றார். இந்தியா ரத்தத்தில் மிதக்கும் நாள் நெருங்கிற்று. உண்மையில் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை. ஹிட்லர் அடித்த அடியில் பொறி கங்ங்கி இருந்தது, வேறு வழியே இல்லையா என சர்ச்சில் போன்றவர்கள் கேட்டபொழுது இனியும் இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது சாத்தியமில்லை என லண்டன் பாரளுமன்றம் சொன்ன பின்பே சுதந்திரம் வந்தது
ஆனால் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் மிக நுட்பமாக பழிவாங்க பாகிஸ்தானை பிரித்துகொடுத்தான் வெள்ளையன், காந்தியின் உண்ணாவிரதம் எல்லாம் ஜின்னாவிடம்ம் எடுபடவில்லை. டம்மி ஆக்கியிருக்க வேண்டிய ஜின்னாவினை காந்தி வெல்லவிட்டது தவறு
இதன் பின் காங்கிரசுக்கும், சாவர்கருக்கும் பெரும் அபிப்ராய பேதம் வந்தது. சர்ச்சைகள் வெடித்தன . காந்தி கொலைக்கு பின் சாவர்க்கர் தேசவிரோதி ஆக்கபட்டார்
உண்மையில் காந்தியினை கொல்ல சாவர்க்கருக்கு எந்த அவசியமுமில்லை , கொல்லவேண்டும் என்றால் 1947க்கு முன்பே கொன்றிருக்கலாம். அதன் பின் காந்தி இருந்தாலோ இறந்தாலோ ஆகபோவது ஒன்றுமில்லை எனும்பொழுது ஏன் கொல்லபட வேண்டும்?
வரலாற்றின் சில பக்கங்கள் புரியவில்லை. இத்தேசம் பிரிந்து போக ஒப்புதல் அளித்த தலைவர்களில் பட்டேலும் ஒருவர்
காந்தியாவது உண்ணாவிரதம் இருந்து எதிர்த்தார், பட்டேல் சனியன் தொலைந்தது என சொல்லிகொண்டிருந்தார்
ஆனால் காந்திதான் கொல்லபட்டார், பட்டேலுக்கு ஆபத்தே இல்லை, ஏன் என்றால் புரியவில்லை.
மிகவருத்தமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அவரை இந்நாட்டின் எதிரிபோலவே நடத்திற்று, வெள்ளையன் பறித்த அவரின் வீட்டை கூட அது திரும்ப கொடுக்கவில்லை
எந்த சலுகையும் அவருக்கு இல்லை, வெள்ளையன் கொடுத்த சில சலுகைகளை கூட கொடுக்கமறுத்தது காங்கிரஸ்
நிச்சயம் இதெல்லாம் மகா தவறான விஷயங்கள். துளியும் சுயநலமின்றி நாட்டிற்காய் உழைத்து , சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு பதவிக்கும் ஆசைபடாமல், கட்சி நடத்தாமல் , அமைதியாய் நாட்டுக்கு ஆலோசனை சொல்லிகொண்டிருந்த அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது

ஏன் பகைத்தார்கள்?
காஷ்மீர் விஷயத்தில் ஏற்பட போகும் அபாயத்தை அம்மனிதன் முன்பே சொன்னார். பின்னாளில் காங்கிரஸ் அரசு அதில் சிக்கி சீரழிய முன்பே சொன்னேன் அல்லவா? என அவர் சொன்னபொழுது அவர்களுக்கு சகிக்க முடியவில்லை
ஆச்சரியமாக சீனாவின் நயவஞ்சகம் பற்றியும் எச்சரித்தார் சாவர்கர், ஆனால் அவர் மறைந்த பின்பே சீனபடை எடுப்பு நடந்தது
நாட்டிற்காக போராடிய அம்மனிதன் ஒதுக்கபட்டு மூலையில் எறியபட்டதும், பெரும் தியாகம் ஏதும் செய்யாத ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவரானதும் நிச்சயம் இந்நாட்டின் கருப்பு பக்கங்கள்
அதோடு விட்டார்களா? ஒரு கட்டத்தில் மனம்வெறுத்து அம்மனிதன் சாக தீர்மானித்தார். உண்ணாவிரதம் தொடங்கினார், என்னால் செயல்பட முடியா நிலையில் சமூகத்திற்கு பாரமாய் இரேன் என சொல்லி அவர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அரசு தடுக்கவில்லை அவர் செத்தும் போனார்
ஆம் இதே பெப்ரவரி 26, 1961
அவர் உடலுக்கு அரசு மரியாதை இல்லை. ஆளும் கட்சியில் ஒரு அமைச்சரோ, எம்.எல்.ஏ கூட வரவில்லை மாறாக அனாதையாக அந்த சுதந்திர போராளியின் தகனம் நடந்தது
அந்தமானில் அவர் தங்கி இருந்த சிறை அருகே அவருக்கு சிலை வெகுநாள் கழித்தே வைக்கபட்டது, அதுவும் பத்தோடு பதினொன்றாக வைக்கபட்டு அவர் இருந்த சிறையும் இன்று இல்லாமல் ஆகிவிட்டது
அந்த அளவு அவரின் அடையாளத்தை மறைக்க விரும்பியிருக்கின்றார்கள் ஏன் என தெரியவில்லை
நெடுநாளைக்கு பின்பே அந்தமான் விமான நிலையம் சாவர்க்கர் நினைவு விமான நிலையமாயிற்று
பாராளுமன்றத்தில் அவர் படமே மிக சர்ச்சைக்கு பின்பே திறக்கபட்டது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று மோடி அரசே செவிமடுக்கவில்லை
இவ்வளவிற்கும் இன்று பாஜக ஆட்சிக்கு வர அன்றே அடிகோலியவர் அவர்தான், ஆனாலும் பாஜக அரசு அஞ்சுகின்றது என்றால் எந்த அளவு சாவர்க்கரை பற்றி இங்கு பெரும் கொடும் பிம்பம் உருவாக்கபட்டிருக்கின்றது என்பது ஒன்றும் புரிந்துகொள்ள சிரமம் அல்ல
இந்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை, வாழ்வை எல்லாம் பணயம் வைத்து போராடிய ஒருவரை. அந்தமான் சிறையின் கொடூர வடுக்களின் நேரடி சாட்சியாய் வாழ்ந்த ஒருவரை, மதவாதி என ஒதுக்குவதோ ஏதோ ஹிட்லர் போல பார்ப்பதோ சரியானதல்ல
இந்து மகாசபை என்ற ஒன்றை தொடங்கினாரே அன்றி எங்கும் எதிலும் அடுத்த மதத்தை அவர் வெறுத்தார் என எங்கும் இல்லை. மதத்தின் காரணமாக இந்நாடு பிளக்கபடுவதைத்தான் எதிர்த்தார்
நாட்டுபற்றோடு நோக்கினால் அந்த மனிதன் ஒன்றும் மாபெரும் சர்ச்சைகுரியவன் அல்ல , மாறாக எதற்கோ பயந்து அப்படி சித்தரிக்கபட்டு அந்த சித்தரிப்பு கலைந்து போக கூடாது என பாதுகாத்தும் வரபட்டிருப்பது புரிகின்றது
இனியாவது இத்தேசம் அந்த சுதந்திர போராட்ட தியாகிக்கு செய்ய வேண்டிய மரியாதையினை செய்யட்டும்.
சர்ச்சைகளை கடந்து அந்த சுதந்திர போராளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
சாவர்க்கர் ஒரு தனி சரித்திரம்
———————————————————————
மஹாராஷ்டிரா சித் பவன் பிராமண குடும்பத்தில் 25.08.1883 ல் திரு தாமோதர், ராதாபாய் சாவர்க்கர் தம்பதிக்கு மகனாய் பிறந்தவர் சாவர்க்கர்.
பெரிய பக்திமான் எல்லாம் இல்லை .
இந்துக்களின் அதீத மதச்சடங்குகளை எதிர்த்தவர். பசுக்களை நன்கு பராமரியுங்கள் ஆனால் வணங்காதீர்கள் என்று சொல்லியவர் .
ஆராய்ந்துபார்த்தால் இவர் ஒரு அபூர்வமான கலவை
.அடிப்படையில் எதிஸ்ட. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்
ஆனால் கடவுளை வணங்குபர்களை வெகுவாக மதித்தார் . இந்துக்களை நேசித்தார் .மதரீதியாக யாராவது இந்துக்களை அவமதித்தால் துன்பப்படுத்தினால் கொதித்தெழுந்து அவர்களை அடக்குவார்.
12 வயதில் கிராமத்தில் முஸ்லிம்கள் சிலர் இந்துக்களை துன்புறுத்தியதை கேட்டு நண்பர்களுடன் சேர்ந்து சென்று முஸ்லிம்களின் மசூதியை உடைத்து தீ வைத்து பேயாட்டம் ஆடினார்.
அதன்பின் அந்த கிராமமே குஜராத்தாகியது… அதாவது அதன் பின் மத சண்டையோ சச்சரவுகளே வரவே இல்லை ..
தன்னுடைய சகோதர்களுடன் சேர்ந்து அபினவவ் பாரத் சொசைட்டி என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.அந்த இயக்கம் வாழ்கை முழுவதும் அவருடன் அவர் லண்டன் சென்றபோதும் தொடர்ந்தது.
1910 , 10 ஜூலை லண்டனில் பாரிஸ்டருக்கு படித்துக்கொண்டிருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டார்.
எதற்காக தெரியுமா?
1906 ல் பம்பாயில் வைத்து அவர் பேசிய பேச்சு ஓன்று பிரிடிஷ் அரசாங்கத்துக்கு எதிரானதாம் .
inflamatery யாம் .அது நான்குவருடத்துக்குப்பின் அரசாங்க கவனத்திற்கு வந்ததாம்..
சுதந்திரம் வாங்கித்தந்த
சுதந்திரத்தின் முதுகெலும்புகளான நேரு காந்தி எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத் துக்கு எதிராக பேசவே இல்லையா?
அப்படி பேசி இருந்தால் அவர்களை ஏன் கைது செய்யவில்லை பிரிட்டிஷ் அரசு?
போகட்டும் அவர்கள் சாவர்க்கரை கைது செய்த சட்டம் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துகொண்டு தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்கானது …
ஆனால் சாவர்க்கர் தப்பி ஓடவில்லையே . அவர் மாணவரல்லவா? இதை அவர் எடுத்துசொல்ல, காதிலே வாங்கவில்லை பிரிட்டிஷ் போலீஸ்
மோரியா என்ற வணிக கப்பலில் அவரை ஏற்றி இந்தியா அனுப்பினர் காவலுடன்
அந்த கப்பல் Marseilles on July 7, 1910 வந்தபோது சாவார்க்கரை தப்புவிக்க அவரது நண்பர்கள் கடற்கரையில் காத்திருக்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்க அவர்கள் வர அரைமணிநேரம் தாமதமாகியது .
கப்பலின் புகை போக்கி வழியே தப்பியவர் பிரெஞ்சு கடற்கை சாலையில் ஓடினார் .துரத்திய பிரிட்டிஷ் போலீஸ் அவரை பிடித்துவிட்டனர்
சர்வதேச சட்டப்படி அவரை அப்படி கைது செய்தது தவறு என்று சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் நுழை நரிகளான பிரிட்டிஷ் வழக்கம்போல பொய் சொல்லி தப்பியது
அது சரி இந்தியா முழுவதும் சுதந்திர போராட்டங்கள் நடந்திருக்க
காந்தி என்ற ” மாபெரும் வீரரின் ” தலைமையில் மக்கள் கொதித்திருக்க, அவர்கள் யாரையும் இப்படி கைதுசெய்யாமல் சாதாரண மாணவரான சாவார்க்கரை ஏன் சர்வதேச பிணக்குகளுடன் கைது செய்யவேண்டும் ?
அதுவும் நான்கு வருடங்களுக்கு பிறகு …?
காரணம் …
லண்டனில் சும்மா இருக்கவில்லை பாரிஸ்டர் சாவர்க்கர்
ஐரோப்பா ஐரிஷ் ரசியா ஏன் அமெரிக்க தலைவர்கள் பத்திரிகையாளர்களை தளபதிகளை தொடர்பு கொண்டு பிரிடீஷார் செய்யும் கொடுமைகளை எடுத்துரைத்தார் .
அவரது செய்திகளை எடுத்துக்கொண்டு அவரது பிரதிநிதிகள் உலகெங்கும் பயணம் செய்து முடிந்தவர்களையெல்லாம் சந்தித்து இந்திய விடுதலைக்கு பாடுபட்டனர் .
இவரது உணர்ச்சிகரமான நூல்கள்
இயக்கம்
வெளிநாட்டு தொடர்புகள்
அதன் எதிர் விளைவுகள் வெள்ளை அரசாங்கத்தை அதிரவைத்தது .
வெடிமருந்து தொழில் நுட்பம் அறிந்திருந்த இவர் நாடெங்கும் ஆலைகள் நிறுவி இளைஞர்கள் புறப்பட்டால் சூரியன் மறையாத பேரரசில் சூரியன் மறைந்துவிடுமென்று பதறியது வெள்ளை அரசு
சாவர்க்கர் அகிலஉலக நிலையில் இந்தியாவின் பிரதிநிதியாகி உலகையே இந்தியாவை நோக்கி திரும்ப வைத்திருந்தார்.
காந்தியின் புழுங்களுக்கு இது ஒரு முக்கிய காரணம் .
ஒரே வார்த்தை காந்தியிடம் சொல்லி குய்ட் இந்தியா போராட்டத்தை நிறுத்திய அரசாங்கத்தால் இந்த தனி மனிதரை கட்டுப்படுத்த முடியவில்லை…
அதனால்தான் அத்தனை சிரமம் எடுத்து இவரை இந்தியா கொண்டுவந்து பேருக்கு விசாரணை நடத்தி இவருக்கு பேசவே வாய்ப்பு கொடுக்காமல் …
28 வயதில் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து 50 வருடம் சிறைக்கு அனுப்பினர்.
இந்தியாவில் வைத்தால் ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்து வெகு தூரத்தில் உள்ள அந்தமானுக்கு அனுப்பினார்.
நியாபப் டி சுதந்திரம் வாங்கி கொடுத்த அதற்க்காக ஊன் உடலை கொடுத்த காந்தி நேருவை அல்லவா அங்கே அனுப்பி இருக்கவேண்டும் ?
இல்லை .
ஏன் என்று எல்லாருக்கும் தெரியும்