1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”
View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்Author: ஸ்ரீதர் திருச்செந்துறை
கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்
மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் வினியோகக் குளறுபடியை அரசின் மீது சுமத்துகையில் ஒரு முக்கிய உண்மையையும் மறைக்கப் படிகிறது… மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டும், பல அரசு மருத்துவமனைகள் கூட அவர்கள் இடத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி வசதிகளுக்கான அரசின் திட்டத்தை முறியடித்தன… தற்போதைய கோவிட் சுனாமி பழையது அல்ல, மாறாக முற்றிலும் எதிர்பாராத வேகத்தில் தாக்குகிறது. வரலாறு காணாத இந்த சுனாமியை எதிர்கொள்ள எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. உண்மைகளை மறைக்காமல், விவாதங்களை திசை திருப்பாமல், பிற மீது பழி போடாமல், ஒட்டு மொத்தமாக எல்லோரும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தருணம் இது…
View More கோவிட்: தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும்