சில தினங்களுக்கு ( 12.11.2021)முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் எழுதிய ” சன்ரைஸ் ஓவர் அயோத்தியா – எங்கள் காலத்தில் தேசியம் ( Sunrise over Ayodhya – Nationhood in our times ) என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில், ஹிந்துத்வாவின் அரசியல் பாதிப்பும், ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே தான் என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் . திருவாளர் சல்மான குர்ஷீத் ஹிந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரான கருத்தை வாழ்நாள் முழுவதும் பேசி வருபவர் இந்துத்துவாவை பற்றிய கருத்து இந்திய பண்பாட்டிற்கு மாறாகவே இருக்கும். அயோத்தி தீர்ப்புக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை என்பதால் தனது ஆதங்கத்தை புத்தகத்தின் மூலம் தெரிவித்துள்ள ஒரு நபர். இந்துத்துவாவை எதனுடன் ஒப்பீடு செய்துள்ளார் என்பதே, அவரின் அநாகரிக, முஸ்லீம் வெறித் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
” எந்தப் பகுத்தறிவு உட்பட்டு சிந்தனை செய்தாலும் , அயோத்தி சாகா முழுவதும் ஒரு நம்பிக்கை மற்றொன்றின் வழிமுறைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தது. ஆனால் முந்தைய நம்பிக்கையே விளக்கப் போட்டியை எதிர் கொண்டது. முனிவர்கள் மற்றும் துறவிகளுக்குத் தெரிந்த சனாதன தர்மமும், பாரம்பரிய இந்து மதமும் ஒதுக்கித் தள்ளப்பட்டன. இந்துவத்துவாவின் வலுவான பதிப்பு அனைத்து தரங்களின் படியும், சமீபத்திய ஆண்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் போகோ ஹராம் போன்ற குழுக்களின் ஜிஹாதிஸ்ட் இஸ்லாம் போன்ற அரசியல் பதிப்பு,” ( , “Whatever rationalization might have been offered, the Ayodhya saga was throughout about one faith trumping the methods of another. But the former faith itself was experiencing a contest of interpretation. Sanatan dharma and classical Hinduism known to sages and saints was being pushed aside by a robust version of Hindutva, by all standards a political version similar to the jihadist Islam of groups like ISIS and Boko Haram of recent years”. என குறிப்பிட்டுள்ளார். இது இந்துக்கள் மீதும், சனாதன தர்மத்தின் மீதும் தொடுக்கப்பட்ட மட்டரகமான தாக்குதலாகும். எந்த நோக்கத்தில் இந்த கருத்தை திருவாளர் சல்மான் குர்ஷீத் எழுதினார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், வரும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருவாளர் குலாம் நபி ஆசாத் அதே மேடையில், இந்துத்துவா மீதான அரசியல் சித்தாந்தம் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையை விட வித்தியாசமாக இருக்கலாம். இந்து மதத்தின் கலவையான கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட அரசியல் சித்தாந்தமாக இந்துத்துவாவை நாங்கள் ( காங்கிரஸ்காரர்கள்) ஏற்காமல் இருக்கலாம். ஆனால் இந்துத்துவாவை ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜிகாதிஸ்ட் இஸ்லாமுடன் ஒப்பிடுவது உண்மையில் தவறானது மற்றும் மிகைப்படுத்தல்” என கூறியுள்ளார். இதற்கு சரியான விளக்கம் சல்மான குர்ஷீத்திடமிருந்து வெளி வருமா என்பது தெரியவில்லை.
சல்மானுக்கு ஆதரவாக நம்மூர் நாட்டுக்கோட்டை அரசியல்வாதி ப.சிதம்பரம், அயோத்தி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டது, காலப்போக்கில் தான் இந்துக்கள் தீர்ப்பில் வெற்றி பெறவில்லை என்பதை வலியுறுத்துக்கிறது. இரு தரப்பும் அதை ஏற்றுக் கொண்டதால் அது சரியான தீர்ப்பாக மாறியது. வேறு வழியில்லை ( Due to passage of time both sides accepted it (Ayodhya Verdict ) . Because both sides have accepted it. It became a right judgement , not other way around . It’s not right judgement which both sides have accepted ) என புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இது ப.சிதம்பரத்தின் வக்கிர புத்தியையும், அயோத்தி தீர்ப்புக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தனது மகன் செய்த ஊழலுக்கு வக்காலத்து வாங்கி உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய இந்த பிரகஸ்பதி, ஏன் அயோத்தி வழக்கில் வாதாட முன் வரவில்லை என்பதை தற்போது மக்கள் முன் விளக்கம் கொடுத்தால் ப..சிதம்பரத்தின் நேர்மையை பாராட்டலாம். ஆனால் முன் வரமாட்டார்.
இந்த புத்தகம் வெளியிட்டப்பட்ட காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். உ.பியில் சட்ட மன்ற தேர்தல் 2022-ல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது என்ற குற்றச்சாட்டை மறுக்க எவரும் முன் வரவில்லை. ஏன் என்றால் 2019-ல் இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, சன்னி வக்ஃப் வாரியத்தின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபலும், காங்கிரஸ் லுட்யன்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் தவான் மற்றும் துஷ்யந்த் தவே போன்ற வழக்கறிஞர்களும் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு, ராம ஜென்மபூமி உரிமை சர்ச்சையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2010 தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த சிவில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உச்ச நீதிமன்ற விசாரணையை சிபல் எதிர்த்தார். லோக்சபா தேர்தல் மே 2019க்குள் நடைபெற உள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணையை ஜூலை 2019 வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சிபல் விரும்பினார். எனவே காங்கிரஸ் கட்சியினர் மீன்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே அயோத்தி பிரச்சினையை முன் வைத்து செய்கின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் சல்மான் குர்ஷீத்தின் புத்தகம்.
சல்மான் குர்ஷீத்தின் வக்கிர புத்தி எவ்வாறு வெளியாகியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். ” அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்த மகிழ்ச்சிக்கு மத்தியில் நகரின் மற்றொரு இடத்தில் கட்டப்படவுள்ள மசூதிக்கு சமமான முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படவில்லை. என முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டி விடும் வகையிலும், மதக் கலவரத்தை உருவாக்கும் விதத்திலும் புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் அதே பகுதியில், சந்தேகத்திற்கு இடமின்றி முடிக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பிரதமர் காத்திருப்பார் என மோடியை மையப்படுத்தி எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் மசூதிக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் என முஸ்லீம்களின் உணர்வை தூண்டும் விதமாகவும் , அரசின் மீது வன்மம் ஏற்படுத்தும் விதமாகவும் எழுதியுள்ளார்.
முஸ்லீம் பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் சல்மான் குர்ஷீத் எழுதியுள்ளார். ” கோயில் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் மசூதி உ.பி. சன்னி வக்பு வாரியத்திற்கு மட்டுமே சொந்தமானது என தெரிகிறது. ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில், அயோத்தி வழக்கில் சன்னி வக்பு வாரியம் மட்டுமே தொடக்கத்திலிருந்து வழக் கு தொடுத்தது என்பது நன்றாக தெரிந்தும், குர்ஷீத் சொந்தமானது என தெரிகிறது என எழுதியிருப்பதே மோதல் ஏற்படுத்த முயலுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்துக்களிடையே மோதல் உருவாக்கும் விதமாக, ” இராமர் தனது கோயிலைக் கொண்டிருப்பார். ஆனால் பாதுகாவலரான விஷ்ணு நிலப்பரப்பு முழுவதும் பரவியிருக்கும் வடுக்களை குணப்படுத்துவாரா? கோவில் மணிகளின் ஓசையும் புனித முழுக்கங்களும் அமைதியாக வளரும் போது அழுக்குக்கு வணக்கம் மற்றும் அரசியலமைப்பின் மீதான அர்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் குரலில் இந்தியா பேசும் ” என இறுதியாக எழுதியிருப்பது குர்ஷீத்தின் முழுமையான வக்கிர புத்தியை காட்டியுள்ளது.
இந்த வார்த்தைகள் ( இந்துத்துவா மற்றும் இந்து மதம் ) இந்திய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் இந்திய கலாச்சார நெறி முறைகளை வலியுறுத்தும் ஒரு உரையில் பயன்படுத்தப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ( .these words (Hindutva and Hinduism) are used in a speech to emphasise the way of life of the Indian people and the Indian cultural ethos,” the bench said. ) திருவாளர் சல்மான் குர்ஷித் இந்து என்பதன் பொருள் புரிந்து புத்தகம் எழுதினாரா என்பது தெரியவில்லை. மேலே உள்ள வாசகம் உச்ச நீதிமன்றத்தின் மூலம் வெளியான தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு புறம்பாக சல்மான் குர்ஷீத் எழுதியுள்ளார்.
சல்மான குர்ஷீத் இந்துத்துவாவை , ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு எழுதியது என்பது பாரத நாட்டில் வாழும் கோடிக் கணக்கான இந்துக்களின் மனிதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளார். தயவு செய்து காங்கிரஸ் கட்சியினர் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்து மதமோ அல்லது இந்துத்துவாவோ அறத்தை மட்டுமே போதிக்கிறது. வன்முறையை எப்போதும் ஆதரித்தில்லை. ஆனால் சல்மான் குர்ஷீத் ஒப்பிட்டுள்ள இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சற்றே கவனிக்க வேண்டும். இரண்டும் வன்முறையை மட்டும் முன்எடுப்பதும், படுகொலை செய்வது கைவந்த கலையாக செயல்பட்டு வருகிறது.
போகோ ஹராம் – வடக்கு நைஜீரியாவில் இஸ்லாம் மதத்தை தூய்மைபடுத்துவதற்காக உருவானது போகோ ஹராம் என்ற அமைப்பு. 1992-ல் துவக்கிய இதன் தலைவர் முகமது யூசுப், குரானை தவிர மற்ற புத்தகங்களை படிப்பது குற்றம், தண்டிக்கப்பட வேண்டியது எனவும், பெண்கள் கல்வி கற்ற கூடாது என்பதற்கு ஆயிரக்கணக்கான மாணவிகளை மான பங்கம், பாலியல் வன்முறையை செய்த இயக்கமாகும். போகோ ஹராம் செய்த திருவிளையாடகள் பற்றி முழுவதும் தெரிந்தும் இந்து மதத்துடனும், இந்துத்துவாவுடன் குர்ஷீத் ஒப்பிட்டு எழுதியது வக்கிர புத்தி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
– போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் நோக்கமே ஷரியா ஆட்சியை நிலை நிறுத்தவும், மேற்கத்திய கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணிக்கவும், பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கமாகும். முகமது நபிகளின் போதனை மற்றும் ஜிஹாத் பிரச்சாரம் செய்யும் தகுதி சன்னி சமூகத்திற்கு தான் உண்டு. ஆகவே ஷியா பிரிவினருக்கு எதிராக உருவான அமைப்பு . பள்ளிக் குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவம், சில மாணவிகளைச் சிலருக்கு மனைவிகளாக விற்பனை செய்வதும் போகோ ஹராமின் செயல்பாடாகும். இவ்வாறு கடத்தப்பட்டு விற்பனை செய்யும் மாணவிகள் கிறிஸ்துவ மதத்தினர் என்பது முக்கியமான அம்சமாகும். இந்த ஈனத்தனமான செயலை செய்யும் பயங்கரவாத அமைப்புடன் இந்து மதத்தை ஒப்பிடும் சல்மான் குர்ஷீத்தின் செயல் வெட்ககேடானது.
,நைஜீரியாவில் போகோ ஹராம் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். உலகளாவிய பயங்கரவாத குறீயிட்டின் படி மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக போகோ ஹராம் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். 2014 ஏப்ரல் மாதம் 14ந் தேதி, போகோ ஹராம் பயங்கரவாதிகள் போர்னோ மாநிலத்தில் உள்ள சிபோக்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத சென்ற 16 முதல் 18 வயதுடைய 276 கிறிஸ்துவ மாணவிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்கள். அப்பகுதியில் உள்ள பல பள்ளிகள் மூடப்பட்டன. மேற்கத்திய கல்விக்கு எதிரான போராட்டம் என அறிவித்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் போகோ ஹராம் அமைப்பினர். இன்று வரை கடத்தபட்ட மாணவிகளின் கதி என்ன என்று தெரியவில்லை. பல மாணவிகள் பாலியல் துண்புறத்தலுக்கு ஆளானார்கள் கடத்தப்பட்டவர்களின் சரியான புள்ளிவிவரங்கள் வருவது கடினம். என்றாலும் 2015-ம் வருடம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் , 2014 முதல் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டார்க்ள. இவர்களில் பலர் பாலியல் அடிமைத்தனத்தற்கு தள்ளப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். – ஈராக்கில் ஷியா ஆட்சியை அகற்றுவதே முதன்மையான குறிக்கோளாகவும், ஈராக்கில் கலிஃபா ஆட்சியை ஏற்படுத்துதல், ஈராக்கை தளமாக்கிக் கொண்டு, ஏனைய நாடுகளில் கலீஃபா ஆட்சியை நிறுவ பயங்கரவாத தாக்குதல் தொடுப்பது. இஸ்ரேலை முற்றிலும் அழிப்பது, உலகம் முழுவதும் முஸ்லீம்களின் கலீஃபா ஆட்சியை நிறுவது என்பதும் இவர்களின் நோக்கமாகும். இதற்காக இவர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களும், தாக்குதல் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் எப்போதாவது சல்மான் குர்ஷீத் நினைத்து பார்த்திருப்பாரா?
2013-ல் ஈராக்கின் பல நகரங்களில் ஷியா பிரிவினர் மீது நடத்திய ஒரு வார தாக்குதலில் 449 பேர்கள் பலியானார்கள், 732 பேர்கள் படுகாயமடைந்தார்கள். ஜூன் 12, 2014 அன்று, திக்ரித்தில் உள்ள ஸ்பீச்சர் முகாம் மீதான தாக்குதலில் ISIL குறைந்தது 1,566 ஷியா ஈராக்கிய விமானப்படை கேடட்களைக் கொன்றது. தாக்குதலின் போது முகாமில் 4,000 முதல் 11,000 வரையிலான ஆயுதமற்ற கேடட்கள் இருந்தனர். இது வரலாற்றில் இரண்டாவது கொடூரமான தாக்குதல் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய மிக மோசமான தாக்குதல் ஆகும் 2016-ல் பாக்தாத் நகரில் கர்ராடா மாவட்த்திலும், ஷாஅப் புறநகர் பகுதியில் நடத்திய இரண்டு குண்டு வெடிப்பில் 325 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தார்கள் .
சிரியா ஈராக் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் தங்களின் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இஸ்னிலோன் ஹாபிலன் நகரத்தில் உள்ள மௌட் குழுவின் தீவிரவாதிகளை ஐ..எஸ்.ஐ.எஸ். தலைவர் சந்திக்கிறார் என்ற தகவலைப் பெற்ற பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படைகள் மராவியில் ஒரு நடவடிக்கையைத் தொடங்குகின்றன. பதிலுக்கு போராளிகள் அதன் மருத்துவ மையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர், பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை எரித்தனர் மற்றும் கைதிகளை விடுவித்தனர். இதில் அப்பாவி பொதுமக்கள் 593 பேர்கள் கொல்லப்பட்டார்கள். இதை போலவே எகிப்தில் 2017 நவம்பர் மாதம் பீர் அல்-அபேத் அருகே உள்ள அல்-ரவ்தாவில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, தாக்குதல் நடத்தியவர்கள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை வீசி வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 311 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பாரத தேசத்திலும் தங்களின் அமைப்பு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்க பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளத்திலிருந்து அரபு நாடுகளில் பணி நிமித்தம் காரணமாக பணியாற்றுகின்ற கேரள இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.யில் அதிக அளவில் சேருவதாகவும் உளவு துறையினர் தெரிவித்தார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றவும் முயலும் ஒரு அமைப்பை இந்து மதத்துடனும், இந்துத்துவவுடனும் ஒப்பிட்டு புத்தகம் எழுதிய சல்மாக குர்ஷீத் வக்கரபுத்தி படைத்தவர் மட்டுமல்ல, இந்திய ஒருமைபாட்டிற்கு துரோகியுமாவர்.
இப்படிப்பட்டவர் எழுதிய புத்தகத்தை தடை செய்ய வேண்டாமா என்ற சிந்தனை பலரிடம் ஏற்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Fellows like this person never open their dirty mouth for 1982 issue in Kanyakumari, 1990 issue in Kashmir and 2020 issue in West Bengal. But, fate is, these kind of fellows’ views are getting high importance.