தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 4 : கிறிஸ்தவ மதப்பிரசார சூழ்ச்சிகள்

தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

1982- ம் ஆண்டு தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கலவரங்கள் வெடித்தன. அன்றைய தமிழக முதலமைச்சர் எம். ஜி.ஆர். இந்த கலவரங்களை ஆராய ஒய்வு பெற்ற நீதியரசரும், திராவிட கோட்ப்பாட்டில் பற்று உள்ளவருமான திரு.வேணு கோபால் என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தார். இரு தரப்பிலும் 161 சாட்சிகள் விசாரித்த விசாரணை கமிஷன், 323 சாட்சி பொருட்களையும் ஆராய்ந்தது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் சார்ந்த 16 வழக்கறிஞர்கள் இதில் பங்கு பெற்றனர். இந்த விசாரணை கமிஷன் தனது அறிக்கையில் மிக தெளிவாக, இக் கலவரங்களின் வேர் , ஆதிக்க வெறி கொண்ட மத மாற்றத்தையும், அதற்காக மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரத்தையுமே காரணமாகக் சுட்டிக் காட்டியது. இவ்விசாரணையை நடத்திய நீதியரசர்கள் கிறிஸ்தவர்கள் இந்த மாவட்டத்தின் பெயரையே கன்னியாகுமரி என்பதிலிருந்து ‘கன்னி மேரி” என மா‌ற்ற முயன்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்..  இது  கிறிஸ்துவர்களின்  திட்டத்தின் ஒரு பகுதியாகும்.     

                எடுத்துக்காட்டாக, மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர் கொல்லங்கோடு என்ற கடலோர கிராமத்தில் ஓர் உள்ளூர் கிறிஸ்தவ அமைப்பால் தலை வெட்டிய கிருஷ்ணர் உருவப்படம். ஜீஸஸ் ஆர்ட்ஸ் உருவாக்கிய வாழ்த்து அட்டையை ஹிந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் புருஷோத்தமரின் தலையில் ஏசு என்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது.     1981 மண்டைக்காடு கலவரங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு உள்ளுர் கிறிஸ்தவ அமைப்பு ஹிந்து ஆன்மீக அவதாரமான அய்யா வைகுண்டர் (17 ம் நூற்றாண்டு ) குறித்து அவதூறான ஓரு புத்தகம் வெளியிட்டது. இந்த நூலில், பைபிள் இல் மத்தேயு 13.25 ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கும் மனித குல விரோதியுடன் அய்யா வைகுண்டர் ஓப்பிடப்பட்டார்.. அவர் மீது அவதூறுகள் வாரி இறக்கப்பட்டது.. இந்த நூல் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் எ‌ன்று‌ மாவட்ட நிர்வாகம் கூறியது. ஆனால் அரசின் அதிகாரத்தில்  கிறிஸ்தவ ஆதிக்கத்தின் காரணமாகவும், அவர்களின் தூண்டல் மூலமாக எல்லாம் மறைக்கப்பட்டன. அமெரிக்காவின் evanjalical சக்திகள் கன்னியாகுமரி கலவரங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை என்று சொல்ல ஆரம்பித்தது. அமெரிக்கா அரசு இதில் தலையிட வேண்டும் என்று பிராச்சாரங்கள் செய்யப்பட்டது. . வாஷிங்டன் மூலமாக தில்லியை நிர்பந்தித்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க வேண்டும் என்று கடிதமும் எழுதப்பட்டது.   இதன் மூலம் மத விவகாரங்களில் இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடு என்று சர்வதேசத்தை நம்ப வைக்க அமெரிக்காவை உள்ளே இழுத்து விடும் கிறிஸ்தவ மிஷனரிகளின் நரித்தந்திரம் வெளிப்படுகிறது.  

Journal of the Institute of Asian Studies
World Tamil Spiritual Awareness Movement
Dravidian Soulology Movement (தெய்வநாயகம், மகள் தேவகலா)
National Institute of Leadership Training
Mylapore Institue of Indigenous Studies

என்ற பெயர்களை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது, இது எதோ தலைசிறந்த இயக்கம்போல் தோன்றும், இவர்கள் செய்வது அனைத்தும் ஹிந்து மதத்தை இகழ்வது,  மேற்படி தகவல்களை தவறாமல் தங்கள் கருத்துக்களையும் வெளியிட பத்திரிக்கைகளும் நடத்துகிறார்கள், வெளிநாட்டு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இயக்கங்கள் மேலே குறிப்பிட்ட அமைப்புகள்.  இவர்கள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நியூயோர்க்கில் மாநாடு நடத்துவார்கள் அதில் ‘வைணவம், சைவம், திராவிட வழிபாடுகள் அனைத்தும் பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்து வந்தவை என்று ஆணித்தரமாக கத்துவார்கள், திருக்குறள் பைபிளை படித்து திருவள்ளுவர் எழுதியது, முருகப்பெருமான்கூட பைபிள் கதையிலிருந்து வந்தவர், சமணம், பௌத்தம் எல்லாம் பழைய ஏற்பாட்டின் தாக்கமே, சமஸ்க்ரிதம் தோமா கொண்டுவந்த மொழி, கிருஷ்ணர் கதைகூட கிறிஸ்துவிற்கு பிறகு உருவானது. இவர்கள் இதற்காக எடுத்துரைக்கும் ஆதாரங்களை பார்த்தால், சிறு குழந்தைகூட காரி துப்பிவிடும்.

               அமெரிக்காவில் மரிலாண்ட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் தமிழ் கிறிஸ்துவ பெண்ணான ராணி டேவிட் என்பவரால்  (Rani David) நடத்தப்படும் பரதநாட்டிய பள்ளி, பரதநாட்டியத்தை ஹிந்து மதத்திலிருந்து வேரோடு பிடிங்கி எறிவேன் என்ற சபதத்தோடு, கிறிஸ்தவ முத்திரைகளை பரதநாட்டியத்தில் சேர்த்து அதை கிறிஸ்தவ நடனமாக மாற்றிவிட்டார், அதை இப்போது உலகெங்கிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார், இதன் தொடர்ச்சியாக சென்னை கலாக்ஷேத்திராவில் இயக்குனராக இருக்கும் கிறிஸ்தவ பெண்மணி அங்குள்ள ஒவ்வொரு இடத்திலிருந்து ஹிந்து தெய்வ சிலைகளை அகற்றிவிட்டு, நாட்டியம் கற்ற மாணவிகளுக்கு வழங்கும் சான்றிதழில் காலம்காலமாக இருந்த நடராஜர் படத்தை நீக்கிவிட்டார், இப்போது நாட்டியம் கிறிஸ்தவ முத்திரையுடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

                  திருச்சியில் இருக்கும் கலைக்காவேரி கல்லூரியில் பரதநாட்டியத்தை கிறிஸ்தவத்துடன் இணைத்துவிட்டார்கள், மற்றும் பல கிராமிய கலைகள் கிறிஸ்தவத்திலிருந்து வந்தது என்று கற்பிக்கப்படுகிறது.  பாளையம்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் Dept of Folklore என்ற துறையில் எப்படி நாட்டுப்புற பாடல்கள் கிறிஸ்தவத்துடன் ஒத்துப்போகிறது என்ற ஆராய்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்து அதை புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கே செய்யப்படும் ஒவ்வொரு கிராமீய கலைகள் ஆராய்ச்சியிலும் கிறிஸ்தவம் இருக்கவேண்டும், அப்போதுதான் சான்றிதழ் வழங்கப்படும்.

                2001இல் தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடு சபை நடத்திய ஒரு மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் (இவர்தான் தோமா இந்தியா வந்தார், திருவள்ளுவரை சீடனாக்கினார் மற்றும் மஹாபாரதம் பைபிள் பழைய ஏற்பாட்டின் தாக்கமே என்று சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து Ph.D பட்டம் வாங்கியவர்) மற்றும் அவரது மகள் தேவகலா கலந்துகொண்டு ‘அனைத்து சமுதாய பிரச்சினைகளுக்கும் காரணம் பிராமணர்களும் ஹிந்து மதமும்தான் என்று பேசினார். ‘சர்வதேச இனவாதம்- இந்திய சாதியத்தின் குழந்தை’ என்ற நூலையும் அந்த மாநாட்டில் வெளியிட்டனர். 2004இல் தேவகலா தமிழகத்தில் மதம்மாற்ற பாதிரிகளுக்கு கையேடாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர் ‘இந்தியா தோமா வழி ஒரு திராவிட கிறிஸ்தவ நாடே…’, இதை படித்துதான் இன்று பல முகநூல் கிறிஸ்தவ போராளிகள் கம்புசுத்துகிறார்கள்.

              இந்த தெய்வநாயகம் பிள்ளை அமெரிக்காவில் பல இடங்களில் மாநாடு நடத்துவார் இதற்கு ஹிலாரி கிளின்டன் வந்து வாழ்த்துரை கூறினார், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆலோசகர் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவத்தை பரப்ப என்ன பொய் செய்தியை வேண்டுமானாலும் வெளியிடுவார், இவருடன் தெய்வநாயகம் கூட்டணி வைத்துக்கொண்டு, இவரை காஞ்சிபுரத்திலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று அங்கே இருக்கும் சிற்பங்கள், தூண்கள் அனைத்தையும் காட்டி அதில் கிறிஸ்தவத்தின் தாக்கம் இருப்பதாக கட்டுரை வெளியிட்டனர்.  ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி சொன்னதும் ஏன் எல்லோரும் குதித்தார்கள் என்று இப்போது புரியும்

                இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகங்களும் தற்போது  நாம் பெரிதுபடுத்துவதில்லை, அதன் பூதாகார விளைவு இன்னும் சில வருடங்களில் வெளிப்படும், எப்படியென்றால்; மனோன்மணியம் சுந்தரனார் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றினார் அவர் ‘திராவிடம்’ என்ற சொல்லை அதில் வைத்தார் அதற்க்கு காரணம் அவருக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன்பு மிஷநரி கால்டுவெல் மற்றும் ஜி.யு.போப் கொண்டுவந்த திராவிட கொள்கை. சுந்தரனாருக்கு சில காலம் முன்பே சொல்லப்பட்டுவிட்டதால் அது அவருக்கு வரலாறாக தெரிந்திருக்கிறது, அதனால் அதை எடுத்துக்கொண்டார். இதேபோல் 1905 க்கு  பிறகு  ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட தமிழகத்தில் பலரும் அவர்களுக்கு கடந்தகால பொய்கதைகளை வரலாறாக எடுத்துக்கொண்டார்கள்,  அதனால் இப்போது வெளியிடப்படும் பல பொய் கதைகள் இன்னும் 70 ஆண்டுகளில் வரலாறாக மாற்றப்பட்டு அடுத்த தலைமுறை அறிவு ஜீவிகள் இதை தமது வழிகாட்டி நூலாக எடுத்துக்கொள்வார்கள்.

                    நாம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெருமையாக பேசப்படும் ஒரு விஷயம் தமிழ், சமஸ்கிரதம் போன்ற மொழிகள் பல வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பாடமாக உள்ளது என்று. நம் மீது பாசத்தில் இது நடத்தப்படுகிறது என்று நினைத்து விடாதீர்கள், தமிழும் சமஸ்க்ரிதமும் எப்படி பைபிள் பழைய ஏற்பாட்டுடன் தொடர்புள்ளது என்பதை  நிறுவவேண்டும், அதற்குண்டான போலி சான்றுகளை திரட்டி வழங்குபவர்கள் எலும்புத்துண்டுக்கு அலையும் தமிழக பாதிரிகள், அமெரிக்காவில் Yale, Harvard, California போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ், சமஸ்க்ரித துறையில் பணியாற்றுபவர்கள் கிறிஸ்தவ வெறியர்கள் மற்றும் இவர்கள் தமிழகத்திலுள்ள மேலே முதலில் நான் சொன்ன இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் கிறிஸ்தவ தேவைக்கேற்ப ஒரு திராவிட அகராதியை உருவாக்கியுள்ளனர், அப்போது அண்ணாவால் (1949) உருவான திராவிட முன்னேற்ற கழகம் கட்சியினை அவர்கள் பெருமளவில் ஆதரித்தனர்.  அந்த அகராதிதான் (Dictionary) பெருமளவில் ராமசாமி நாயக்கர் மற்றும் அண்ணாதுரை போன்றவர்கள் பிரிவினையை  பேச எடுத்துக்கொண்ட நூல்.

                  அமெரிக்கா அப்போது நமக்கு நட்பு நாடு கிடையாது, ஜவாஹர்லால் நேரு சோவியத் ரஷியாவுடன் நட்பில் இருந்தது அமெரிக்காவை உறுத்தியது, தென்னகத்தில் திமுக உதயமானதும் பிரிவினைவாத அரசியலை அது கக்க துவங்கியது, இதனால் மனம் குளிர்ந்த அமெரிக்கா இலங்கை வழியாக திராவிடவாதிகளுக்கு தமிழ்நாட்டு மிஷனரிகள் மூலம் பணம் சப்ளை பண்ண ஆரம்பித்தது. இதையெல்லாம் தாண்டி 1962  சீன போருக்கு பின் ஒரு மிகப்பெரிய தேச ஒற்றுமை உருவானது, இது அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.எ வை உறுத்தியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக  1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்த எல்லா உதவிகளையும் செய்தது. அண்ணாத்துரைக்கு இதற்கு கைமாறாக அமெரிக்கா உள்துறை அமைச்சகம் 1968இல் ஒரு அழைப்பிதழ் அனுப்பியது, அவரை அமெரிக்கா வரவழைத்து Yale University-Chubb Fellow Membership கொடுத்தது. இதை பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் அண்ணாதுரை.  இப்போது புரிகிறதா,தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணம் வருவதை தடுக்கவேண்டியதின் முக்கியத்துவம்.

        அந்நிய நாட்டின் பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றி அதன் மூலம் சமூகத்தில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த கிறிஸ்துவ மிஷனரிகள் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.  மக்களே குற்றம் சாட்டும் அவலநிலை தற்பொழுது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.  இதன் தொடர்ச்சியாக சில கிறிஸ்தவர்கள் ஹிந்து மக்கள் வாழும் பகுதிக்கு சென்று மத போதனை செய்ய பொழுது., அவர்களுக்கு ஹிந்து ஒருவர் வகுப்பெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

           கிருத்துவர்களைப் பொறுத்த வரையில், எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு, பெரிய கலாட்டா செய்து விடுவர்கள்.   பொய் சொல்வதிலும், கள்ள ஆவணங்களை உற்பத்தி செய்வதிலும், மோசடிகளை செய்வதிலும், சரித்திர புரட்டல்களூக்கும் அவர்களூக்கு இணை அவர்கள் தான். ஆட்பலம், பணபலம், அரசியல்-செல்வாக்கு, ஆதரவு என்று எல்லாம் இருப்பதால், எதனையும் செய்யும் வேகமும் காணப்படுகிறது. தேவையென்றால், அனைத்துலக ரீதியிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி சாதித்துக் கொள்கின்றனர். அத்தகைய அதிரடி வேலைகளுக்கு, பிரச்சார சாமர்த்தியங்களுக்கு, இந்துக்கள் ஈடாக மாட்டார்கள். இப்பொழுது, சமூக வளைதளங்களில் மட்டும் ஏதோ, சில பதிவுகளை செய்து அடங்கி விடுகிறார்கள். ஆனால், கிருத்துவர்களோ தமது விசமத்தனமான, சரித்திர மோசடிகளை பலவழிகளில் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வகையில், இப்பொழுது “சகாயமாதாவின் திருஉருவம்” என்று ஒன்று முளைத்துள்ளது.

              சுவிசேஷ மாஃபியா  கூட்டங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை நினைத்து சிரிப்பதும், மகிழ்ச்சியடைவதும் நிறுத்த முடியாது. தமிழகத்தில் உள்ள சுவிசேஷ மிஷனரி மாஃபியா வெறுக்கத்தக்க விதத்தில்  பிஜேபி-ஆர்எஸ்எஸ் மற்றும் தமிழ்நாட்டில் மோடி-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு  பெருமளவு நிதியுதவி செய்கிறது என்பது வெளிப்படையான ரகசியம்.  சுவிசேஷ மிஷனரிகள் தி.மு.க -வின் நெருங்கிய கூட்டாளிகள்.   தமிழ்நாட்டில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நோக்கத்தில் திராவிட இயக்க   கட்சியால் அரசியல் உதவி பெறுகிறார்கள்.  வெளிப்படையாக  தி.மு.க. கூட்டங்களில் கலந்து கொள்வதும்,  இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை வைப்தும்  வாடிக்கையாகவிட்டது.   இந்த  மோசடி தனத்திற்கு சூத்திரதாரி எஸ்றா சற்குணம்.

             தமிழ்நாட்டில் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்பை பரப்புவதில் நன்கு அறியப்பட்ட ஒரு அடிப்படைவாத நற்செய்தியாளர் மற்றும் சர்ச் பிளான்டர் எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர்.  ஏப்ரல் 14, 2016 அன்று NILT இன் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரு  வீடியோவில் , இந்து மதம் என்று எந்த மதமும் இல்லை என்றும் “அவர்களின் (இந்துக்களின்) முகத்தில் குத்துங்கள், அவர்கள் இரத்தம் சிந்தட்டும். பின்னர் அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்கவும் (கிறிஸ்தவ மதமாற்றத்தைக் குறிக்கிறது) என அந்த வீடியோவில்  கானப்படுகிறது.    தமிழ்நாட்டில் ஒரு சிறிய வாடிகன் பேரரசை நடத்தும் மோசடி பாதிரியார் பால் தினகரன், அவரது சட்டவிரோத மதமாற்றத் தொழிலில் இருந்து 1000 கோடி மதிப்புள்ள  சொத்துக்களை வைத்திருக்கிறார்.  மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். அவர் சமீபத்தில் வருமான வரி மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால்  காருண்யா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.  இந்த  சோதனையின்  மூலம்,  பெருமளவு  தங்கம் மற்றும் 1000 கோடி ரூபாய் சந்தேகத்திற்குரிய வழிகளில் சம்பாதித்தது  பற்றி வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் இது சம்பந்தமாக  அதிகாரிகளிடம் முறையான தகவல்களை அளிக்கவில்லை.      தமிழ்நாட்டில்   10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நற்செய்தியாளர்கள் இப்போது மாநிலத்தில் சுதந்திரமாக இயங்குகிறார்கள்.       

                சென்னை வேளச்சேரியில், அட்வென்ட் கிறிஸ்துவ சபை [Advent Christian Conference of India, 163, A.A.M.Compound, Gandhi Salai, Velachery, Chennai-600 042] செயல்பட்டு வருகிறது. இது ஒரு அமெரிக்க சர்ச் நிறுவனத்தின் இந்திய பிரிவு ஆகும்.  இந்தியாவில் ‘குரூசேட்’ (மிஷனரி மதத்தை பரப்பும் போர்) செயல்படுத்த வேண்டும் என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சபை.    இதன் தலைவர் மற்றும் பிஷப் ஆக டேவிட், செயலாளராக சாமுவேல், பொருளாளராக ஸ்டீவன்சன் ஆகியோர் உள்ளனர்.   தன்னுடைய இணைதளத்தில்  இந்திய மேப்பை துண்டுப்பட்ட வகையில் பதிய விட்டுள்ளது.   ஆக, எத்தனையோ சர்ச்சுகள் இந்தியாவில் தங்களது திட்டங்களுடன் செயல்படுவது போல, இந்த “அட்வென்ட் கான்பரன்ஸ் ஆப் இந்தியா” சர்ச்சும் விளையாடுகிறது என்பது திண்ணம். தமிழகம் முழுவதும் அட்வென்ட் சர்ச் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமாக ஏராளமான பள்ளிகள் மற்றும் சர்ச்கள் உள்ளன. சென்னை மாவட்ட பிஷப் ஆக இருப்பவர் டேவிட். அவருடைய கட்டுப்பாட்டில் 107 சர்ச்கள், 50 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதைத்தவிர திருப்போரூர் பகுதியில் இயங்கி வரும் அட்வென்ட் பள்ளிகளுக்குத் தாளாளராகவும் இருந்து வருகிறார் டேவிட். 

     அட்வென்ட் சர்ச்சும், இந்தியர்களும்: இந்திய ஏழைகள், கிராமங்களில் தனியாக இருக்கும் நிலையில், அவர்களைக் குறி வைத்து மதம் மாற்றும் வேலைகளை செய்து வருகிறது.  இந்து அமைப்புகளால், இவர்களின் பிரச்சாரத்திற்கு எதிராக ஈடு கொடுக்க முடியவில்லை. ஏனெனில், அவர்களிடம் பணம் இல்லை, . திட்டமும் இல்லை.சேவை செய்வதும் குறைவே. டேவிட் பீகாருக்கும் சென்று ஊழியம் செய்வது, மதம் மாற்றும் வேலைகளை செய்வது, பற்றிய முழு விவரங்களை  அவர்களது இணைதளங்கள், புகைப் படங்களுடன் விளக்குகின்றன. பேஸ்புக்கில் அவர் ஓய்வுபெற்ற நிகழ்ச்சி மற்றும் புகைப் படங்களும் காணப் படுகின்றன. அவர்கள், எதையும் மறைக்காமல் போட்டிருக்கிறார்கள். இது ஒரு சிறிய சர்ச் என்பதால், கண்டுகொள்ள படவில்லை போலிருக்கிறது. இன்று, மேற்படி நிறுவனங்களில் கோடிகளில் மோசடி எனும்  செய்திகள் மூலம் விவகாரங்கள் வெளி வந்துள்ளன.      

          மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக  மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர் கூறுகின்றனர்.  உதாரணத்துக்கு 2000-ம் வருடம்  இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.  இன்று இன்னும் அதிக அளவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.  இவர்களின் மத மாற்ற செயல்கள்  வெளியே தெரிவதைவிட மிக கடுமையான முறையில் மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.   இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதாகவும்,  இதற்கு கிறிஸ்துவ நாடுகளிலிருந்து பெருமளவில்  நிதி உதவி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. 

             உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், “இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்” என்கிறார்        . இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

          மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம். நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுகிறது என்ற உண்மை  தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதி வழங்கும் நாடுகளின் நோக்கமாகும்.  

              சிஏஜி  உள்துறை அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில் உள்ள  தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது . இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன. இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது.      தமிழகம் மற்றும் பிரிக்கப்படாத ஆந்திராவில் மதமாற்றங்கள் பரவலாக உள்ளன, இரண்டு மாநிலங்களில் உள்ள என்.ஜி.ஓ. கள்  வெளிநாட்டு நிதி  உதவியை அதிக அளவில் பெறுகின்றன.   2002-03 முதல் 2011-12 வரை தமிழகம் ரூ .14,738 கோடியையும், ஆந்திராவுக்கு ரூ. 10,622 கோடியையும் பெற்றது.  இந்திய உலகக் விஷன் தமிழ்நாடு (ரூ 233 கோடி பெற்றது.      இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.   

              மார்க்கெட்டிங்! மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன. அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் ‘ஆசீர்வதித்ததும்’ எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது. 

                 கிறிஸ்துவர்களின் மத மாற்றம் பற்றி  முன்னாள் இன்போசிஸ் இயக்குநர் டிவி மோகன்தாஸ் பாய் எழுதியதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, “என் குடும்பத்தின் உறுப்பினர்களை மாற்றுவதற்கு சுவிசேஷ குழுக்களின் தனிப்பட்ட அனுபவம் எனக்கு உள்ளது. மதம் மாறிய இரண்டு வீட்டுப் பணிப்பெண்கள், தங்கள் குழந்தைகள் படித்த பள்ளியில் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், பணம் செலுத்த இயலாமை காரணமாகவும், அவர்கள் மதம் மாறினால் அதைத் தள்ளுபடி செய்வதாகக்  பள்ளி நிர்வாகத்தினர் கூறினார்கள் (அதை அவர்கள் கட்டாயப்படுத்தினர்). நிச்சயமாக, இந்த குழந்தைகளுடன் சுவிசேஷத்தில் பள்ளி வெறித்தனமாக இருந்தது. அவர்களிடம் கேட்டபோது, ​​தவிர்க்க முடியாமல் அவர்கள் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கிய தும் மற்றும் அவர்கள் மருத்துவ கட்டணத்தை செலுத்திய நற்செய்தி குழுக்களைப் பற்றி பேசினார்கள் .    

                 கொலராடோவைச் சேர்ந்த  கம்பேஷன் இன்டர்நேஷனலிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக கூறி சென்னையைச் சேர்ந்த என்ஜிஓ, கருணா பால் விகாஸ் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. சர்வதேச நன்கொடையாளர் தடைக்கு பிறகு மார்ச் 2017 இல் அதன் இந்திய செயல்பாடுகளை நிறுத்தியது,     நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், மதமாற்ற குற்றச்சாட்டுகளின் பேரில், 2016 மே மாதத்தில் அதன் அனுமதியின்றி இந்திய அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வதற்கு இரக்க சர்வதேசத்தை தடை செய்தது  மத்திய உள்துறை அமைச்சகம், கருணா பால் விகாஸுக்கு காம்பேசன் இன்டர்நேஷனல் கொடுத்த பணம், சட்டத்தை மீறியது என்றும்,   மெதடிஸ்ட் சர்ச், பாப்டிஸ்ட் சர்ச், சால்வேஷன் ஆர்மி, கிறிஸ்டியன் மிஷனரி சொசைட்டி மற்றும் இந்திய பெந்தேகோஸ்தே சர்ச் ஆகியவற்றிற்கு விசுவாசமாக இருப்பதால்,  மேற்படி நிதியனது மேற்கண்ட  என்ஜிஓக்களுக்கு மதமாற்றும் நடவடிக்கைகளுக்கு திருப்பி விடப்படுவதாக கூறியது. .  ஐடி துறையின் அறிக்கையின்படி, சிபிவி 10% வெளிநாட்டு பங்களிப்பை மட்டுமே பயன்படுத்தியது, மீதமுள்ள 90% தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 என்ஜிஓக்களுக்கு மாற்றப்பட்டது. சில என்ஜிஓக்கள் எஃப்சிஆர்ஏ பதிவு செய்யப்படவில்லை.      

          அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் பங்களிப்பைப் பெறுகின்றன.   வெளிநாட்டிலிருந்து வரும் இந்த பங்களிப்புகள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) ஆல் நிர்வகிக்கப்படுகிறது, இதற்கு பெறுநர்கள் உள்துறை அமைச்சகத்திடம் (HM) முன் அனுமதி பெற வேண்டும். பெறுநர்கள் மத, சமூக, கல்வி, கலாச்சார அல்லது கல்வி அமைப்புகளாக இருக்கலாம். NGO FCRA வருடாந்திர அறிக்கையை வழங்க கணக்குகளை ஒருங்கிணைக்கும் HM க்கு ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். எச்எம் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களின் விரிவான சோதனை செய்கிறது. கடைசியாக கிடைத்த அறிக்கை 2011-12ஆம் ஆண்டிற்கானது. இங்கே சில முக்கிய தரவு:  – தோராயமாக உள்ளன. 42,000 பதிவு செய்யப்பட்ட என்ஜிஓக்கள்.     –  சுமார் 15% நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் அமைப்புகளில் 80% க்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள், முரண்பாடாக  இருக்கின்றது.  ஏன் என்றால் இந்திய  நாட்டில் 80% மக்கள் இந்துக்கள்.   -148 நிறுவனங்கள் ரூ. 10 கோடிகளுக்கு மேல் பெற்றன (2005-06 இல் 99).   1993-94 முதல் 2011-12 வரை அரசு சாரா நிறுவனங்கள் 1,16,073 கோடி ரூபாய் பெற்றுள்ளன.   முதல் ஐந்து தானம் செய்பவர்கள் கம்பேஸன் சர்வதேச அமெரிக்கா  (ரூ 183 CRS),  இயேசு கிறிஸ்து பிந்தைய தின புனிதர்கள் திருச்சபை அமெரிக்கா (ரூபாய் 131 CRS), KNH , ஜெர்மனி (ரூ 52 CRS), அவசர Kinderdorf சர்வதேச, ஆஸ்திரியா (ரூ 43 CRS),  பொது மாநாட்டில் ஏழாவது டே அட்வென்ட், அமெரிக்கா (ரூ. 41 கோடி )         

         2011-2012 க்கான முக்கிய அம்சங்கள் பின்வருமாறு   31 மார்ச் 2012 வரை மொத்தம் 43,527 சங்கங்கள் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011-12 காலத்தில், 2001 சங்கங்களுக்கு பதிவு வழங்கப்பட்டது மற்றும் 304 சங்கங்களுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெற முன் அனுமதி வழங்கப்பட்டது.  22,702 சங்கங்கள் மொத்த பங்களிப்பாக ரூ .11,546.29 கோடி வெளிநாட்டு பங்களிப்பாக அறிவித்தன. [அறிக்கையின் கீழ் அல்லது அறிக்கையிடாதது பொதுவானது.]  அதிகபட்சமாக வெளிநாட்டு நன்கொடைகள் ரூ .2,285.75 கோடியாக டெல்லியில் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (ரூ .1,704.76 கோடி) மற்றும் ஆந்திரா (ரூ .1,258.52 கோடி).  மாவட்டங்களில், சென்னை அதிக வெளிநாட்டு நன்கொடைகள் (ரூ. 889.99 கோடி), மும்பை (ரூ. 825.40 கோடி) மற்றும் பெங்களூரு (ரூ. 812.48 கோடி) ஆகியன பதிவாகியுள்ளன.  . நன்கொடை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (ரூ. 3,838.23 கோடி), அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (ரூ .1,219.02 கோடி), ஜெர்மனி (ரூ. 1,096.01 கோடி).    . வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பட்டியலில் அமெரிக்காவின் காம்பேசன் இன்டர்நேஷனல் முதலிடத்தில் உள்ளது (ரூ. 183.83 கோடி), அதைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் தேவாலயம், அமெரிக்க (ரூ. 130.77 கோடி), மற்றும் கிண்டர் நாட் ஹில்ஃப் (KNH), ஜெர்மனி (ரூ. 51.76 கோடி)     

மேலும்  தொடரும்

2 Replies to “தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – 4 : கிறிஸ்தவ மதப்பிரசார சூழ்ச்சிகள்”

 1. திருச்சி காவலர் கொல்லபட்ட வழக்கில் சிறுவர்கள் கைது செய்யபட்டிருப்பது அதிர்ச்சி, முதலில் இதெல்லாம் காவல்துறையின் வியூகம், விசாரணையினை இப்படி திருப்பிவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்காணித்து தூக்குவார்கள் என்றுதான் சில ஊகங்கள் இருந்தன‌.

  ஆனால் டிஜிபி சைலேந்திரபாபுவே சிறுவர்கள்தான் கொலையாளிகள் என வழக்கு முடிந்துவிட்டதை போல் அறிவித்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சி.

  முன்பெல்லாம் இம்மாதிரி கொலைகள் வட இந்தியாவில்தான் நடக்கும், அங்குதான் சிறார்கள் கடும் குற்றங்களை புரிந்து கொண்டிருந்தார்கள்.

  ஆச்சரியமாக இப்பொழுது அவர்கள் மாறுகின்றார்கள், உத்திரபிரதேசம் பீகார் ஓடிசா மத்திய பிரதேச மாணவர்களெல்லாம் கடுமையாக படித்து அரசு வேலைகளை நாடு முழுக்க கைபற்றுகின்றார்கள்.

  படிக்காதவர்கள் நாடெல்லாம் ஓடி ஓடி உழைக்கின்றார்கள், தமிழகத்தில் கூட இனி வடமாநில தொழிலாளர் இல்லாமல் வேலைகள் இல்லை எனும் அளவு அவர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது.

  ஆனால் 50 வருடத்துக்கு முன்பு கல்வி, நாகரீகம் என பல துறைகளில் கோலோச்சிய தமிழகம் இப்பொழுது முன்னாள் வட இந்திய ஆப்கன் கோலத்துக்கு மாறிவிட்டது, காட்டுமிராண்டிதனமும் இன்னும் பலவும் அதிகரித்துவிட்டன‌.

  முன்பெல்லாம் தமிழக சிறுவர்கள் இளைஞர்களை பார்த்தாலே ஒரு பக்தியான‌ முகமும் நல்ல உழைக்கும் தன்மையும் தெரியும், உலகெல்லாம் தமிழர்கள் முத்திரையிடவும் வளரவும் அவர்களின் ஒழுக்கமும் கடும் உழைப்பும் பக்தியுமே அடிதளமாயின‌.

  தமிழன் எங்கு சென்றாலும் உழைப்பான், விசுவாசமாயிருப்பான் எனும் அந்த அடையாளமேதான் அவனை உலகெல்லாம் பரவ செய்தன‌.

  இன்று எல்லாம் தலைகீழாயிற்று !!

  இதற்கு ஒரே ஒரு காரணம்தான் சொல்லமுடியும் தமிழக சிறுவர்கள் பழைய காலம் போல பக்தியில் வளர்வதில்லை, தான் தோன்றிதனமாக வளர்க்கபடுகின்றார்கள்.

  பக்தியோ, உழைப்பின் அருமையோ அவர்களுக்கு தெரியவில்லை, நல்லவரின் வழிகாட்டலையும் ஏற்றுகொள்ள அவர்கள் முன்வருவதில்லை.

  நுகரும் கலாச்சாரமும் பணபுழக்கமும் பெருகிவிட்ட இக்காலத்தில் அவர்களிடம் சிறிய வயதிலே ஒரு பேராசை குடிகொள்கிறது , ஆனால் ஆசைக்கேற்ற உழைப்போ படிப்போ கொட்ட அவர்கள் தயாரில்லை.

  எல்லாம் அனுபவிக்க ஆசை ஆனால் வேலையே செய்யகூடாது எனும் கொள்கையில் ஆசை மயக்கத்தில் தகாத காரியங்களில் இறங்குகின்றார்கள்.

  இவர்கள் தறிகெட்டு செல்ல சினிமா, டாஸ்மாக், டிவி, அரசியல் இன்னும் பலவும் உதவுகின்றன, கையில் இருக்கும் போனும் அது கொடுக்கும் மாயையும் அவர்களை சிந்திக்கவிடுவதில்லை.

  தவறி செல்லும் இவர்களை கையில் எடுத்து தங்களுக்கு வேண்டியன செய்ய சமூக விரோத கும்பல்கள் அவர்களை இன்னும் பாழாக்குகின்றன‌.

  இதற்கு இரண்டாம் காரணம் பெற்றோரின் அஜாக்கிரதை இரண்டாம் மூன்றாம் காரணம் கல்வி முறை மூன்றாம் காரணம் மாறிவிட்ட வாழ்க்கை சூழல் என எவ்வளவு சொன்னாலும் வட மாநிலம் திருந்தவும் தமிழகம் நாசமாகவும் ஒரே காரணம் பக்தி இல்லாமையே !!

  தெய்வ பக்தி இல்லா குழந்தைகள் நல்வழி செல்வதே இல்லை, சென்றாலும் நிலைப்பதிலை.

  அக்காலத்தில் வீடுகளில் வழிபாடு இருந்தது, பள்ளிகளில் காலை மதகல்வி இருந்தது, ஒழுக்கம் இருந்தது குழந்தைகள் முறையாக வளர்க்கபட்டனர்.

  இன்று எல்லாமே பணம் பணம் கொண்டாட்டம் என மாறிவிட்ட உலகில் தெய்வமோ பக்தியோ வழிபாடோ யாருக்கும் நினைவுக்கு வருவதில்லை.

  ஆன்மீகம் கமிழ்ந்தவரை தமிழகம் சரியாக இருந்தது, அந்த ஆன்மீக கொடி இறங்கி அதில் சினிமாவும் அரசியலும் டிவியும் டாஸ்மாக்கும் இன்னும் பலவும் ஆட்சி செய்ய ஆரம்பித்தபின் இம்மாநிலம் நாசமாயிற்று.

  அதே நேரம் வடக்கே பக்தி பெருகிற்று, ராமன் உள்ளிட்ட உதாரண அவதாரங்களுக்கு பிரமாண்ட ஆலயங்கள் எழுகின்றன, அவர்கள் பக்தி பெருக பெருக அவர்கள் சிந்தனை தெளிகின்றது.

  அந்த சிந்தனையில் தெளிவாகின்றார்கள், அந்த தெளிவு அறிவினை கொடுக்கின்றது அது கல்வி உழைப்பு என அவர்களை நல்வழிபடுத்துகின்றது.

  5 சர்வதேச விமான நிலையங்களோடு உத்திர பிரதேசம் வேகமாக வளர்கின்றது, நாடெங்கும் உழைத்து பீகாரிகள் கொட்டும் பணத்தில் அம்மாநில நிலமை மேம்படுவதாக சொல்கின்றது ஆய்வு.

  இதற்கெல்லாம் காரணம் அவர்கள் தங்கள் மதத்தில் சரியாக இருக்க தொடங்கிவிட்டார்கள், இந்து மதத்தினை சரியாக ஏற்ற ஒரு இனம் தெளியும், சிந்திக்கும், வாழும்.

  இதை வட இந்தியா சரியாக செய்ய தொடங்கிவிட்டது.

  தமிழகம் இந்து பூமியாக இருந்தவரை அது வளமாக நாகரீகமாக அறிவாக இருந்தது, ஆனால் அரைகாசு பெறாதவனையெல்லாம் அறிவாளி என்றும் அவன் சொல்வதுதான் வழி என்றும் இந்துமதத்தை குலைக்க தொடங்கி இன்று குடிகார மாநிலமாக ஒரு மழைக்கு தாங்கா மாநிலமாக சோம்பேறிகள் மாநிலமாக ஆயிற்று.

  இப்பொழுது காவலர்களையே வெட்டி கொல்லும் காட்டுமிராண்டி மாநிலமாயிற்று, இது ஆப்கானிஸ்தான் ஆப்ரிக்கா அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றது.

  எத்தனை கொலையும் செய்யலாம் எந்த மோசடியும் செய்து சம்பாதிக்கலாம், காசு மட்டும் சேர்ந்துவிட்டால் திராவிட கட்சியில் எம்பி ஆகலாம் எம்.எல்.ஏ ஆகலாம் அதன் பின் ஒரு பயல் தொடமுடியாது எனும் ஒரு விபரீத சிந்தனை இங்கு வந்து அதற்கு பலர் வழியும் காட்டிவிட்டதுதான் சிக்கலின் இன்னொரு கோணம்.

  நல்லவனை அடையாளம் கண்டு ஒரு நல்லவன் உருவாவது கடினம், ஆனால் ஒரு கெட்டவனுக்கு விளம்பரமும் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் பெரும்பான்மை சமூகமே அவன் வழியில் நாசமாவது சுலபம்.

  மானிட பலகீனம் இது.

  அவ்வகையில் யார் யாரோ மோசமான வழிகாட்ட அதன் பின் இதுதான் சரியான வழி என மக்கள் திரள இன்று எல்லாம் நாசமாகி தமிழகம் மக்கள் வாழ தகுதியில்லா மாநிலமாக சென்று கொண்டிருக்கின்றது.

  இது இன்னும் மோசமாகும், நிலமை இன்னும் நாசமாகும்.

  இதனிலிருந்து சமூகம் மேல் எழ ஒரே வழி இந்து தர்மத்தை மீட்டெடுத்து அதன் வழி மக்களை தெளியவைத்து பழைய ஆன்மீக தமிழகமாக இதை மாற்றுவதே அன்றி வேறொன்றுமல்ல‌.

  பாரம்பரிய கலாச்சாரமும் தமிழனின் பெரும் நாகரீகமும் அம்மதத்தில்தான் இருக்கின்றது, தமிழன் சுத்தமான இந்துவாக இருந்தவரை புகழின் உச்சியில் இருந்தான், அதற்கு ஆபத்து வந்தபின்பே அவன் குப்புற விழுந்தான்.

  அவன் இந்துவாக இருந்தவரை இங்கே பெரும் ஊழல் இல்லை, குடி இல்லை, மோசடி இல்லை, கோவில் நிலம் முதல் விவசாய குளம் வரை சரியாக இருந்தது, எந்த வெள்ளமும் தானே வடிந்தது.

  ஆனால் என்று தமிழன் தன்னை இந்து இல்லை என சொன்னானோ அல்லது நல்ல இந்துவாக தன்னை மறந்து ‘மதசார்பற்ற நடுநிலை” என சொன்னானோ அன்று தொடங்கிற்று அந்த நாகரீகமிக்க சமூகத்தின் வீழ்ச்சி.

  இந்துமதம் எதையெல்லாம் தடுத்து மக்களை காத்ததோ அதெல்லாம் ஒவ்வொன்றாக வளர்ந்து இந்த சமூகமே நாசமாயிற்று.

  இங்கு கலாச்சார வேர்களை மீட்டெடுத்து அதற்கு இந்து தர்ம நீர்பாய்ச்சித்தான் இனி நாகரீகமான சமூகத்தை மறுபடி தளைக்க வைக்க வேண்டும்.

  அந்த பரம்பொருள் அதற்கு உரிய வழியும் தெளிவும் தமிழ் மக்களுக்கு கொடுக்கட்டும்.

  முதலில் இந்த மாற்றம் வீடுகளில் வரட்டும், அங்கு முதலில் பக்தி செழிக்கட்டும் பின் குழந்தைகளின் இரண்டாம் வீடான பள்ளி, கல்லூரிகளில் வரட்டும்.

  இந்த இரு இடங்களிலும் பக்தியும் வழிபாடும் இறை உணர்வும் வளர தொடங்கினால் இந்து ஆலயங்கள் தானே துலங்கும்,

  அவை துலங்க துலங்க தமிழகம் தெளியும்.

  சில வருடங்களிலே தமிழகம் தன் பழைய பொற்காலத்தை மீட்டெடுக்கும்.

  ஓம் நமச்சிவாய !!

  நன்றி !!

 2. நல்ல இந்து (இதில் பிராமின் அடங்குவர்) குடும்பங்களில் பிறந்த தமிழ் நடிகை நடிகையர் கிறித்தவ ராக மாறி வருவது வெளி நாட்டு பணம் அவர்களிடம் மதம் பரப்பவில் கொட்டப்படுவதே காரணம். இந்தியாவை வருங்காலத்தில் கிறித்துவமும் இஸ்லாமும் பங்கு போட்டு அவர்களுக்குள் ஒருவரை அழிப்பதுடன் இந்துக்களையும் கோயில்களையும் பூண்டோடு அழிக்கப்போகிறார்கள் என்பதை மிக தெளிவாக புரியும் படி விளக்கியுள்ளார்.வாழ்க இந்து காவலர் மோடிஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *