ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?
• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.
ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?
• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.
ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?
• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.
இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?
வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.
பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.
அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.
மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
உக்ரைன் ரஷ்யா போர் ,,,,,,,,
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன , மகா பீட்டர் எனும் ரஷ்ய மன்னனின் காலத்தில் ரஷ்யா பலமானபொழுது அது நடந்தது, ரஷ்யமொழி பேசும் மக்கள் ஏராளம் உக்ரைனில் உண்டு
இந்தியாவில் பஞ்சாப் போல உக்ரைன் வளமான பகுதி, உண்மையில் ரஷ்யபுரட்சிக்கான அடிதளம் அங்குதான் தொடங்கிற்று, ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்குதான் யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான், செல்லும் இடமெல்லாம் மன்னர்கள் இருப்பதும் அவர்களிடம் அதிகாரம் இருப்பதையும் உணர்ந்த யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று அதுதான் கம்யூனிசம்
அப்படிபட்ட உக்ரைன் 1919ல் சோவியத்தில் இணைந்தது சோவியத்தின் கூட்டு பண்ணையும் இதர கூட்டுறவு சங்கங்களும் அங்குதான் பரிசீலிக்கபட்டன, ரஷ்யாவின் மிக முக்கிய உணவு உற்பத்தி மையமாகவும் அணு ஆய்வு கூடமாகவும் அதுதான் விளங்கிற்று
செர்னோபில் பின் சோவியத் நொறுங்கிவிட உக்ரைன் 1990ல் பிரிந்தது , அது பெரும் குழப்பத்தை கொடுத்தது ரஷ்யா ஏக சிக்கலில் விழுந்தது ஐரோப்பாவுக்கே போட்ட உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது
உக்ரைன் மிகபெரியவீழ்ச்சியினை ரஷ்யா போல சந்தித்தது, செர்னோபில் வெடிப்பு தாக்கிய சோகமே தீரா நிலையில் சோவியத் உடைந்தது பெரிய அடியானது, அந்த குழப்பமான காலகட்டத்தில்தான் உக்ரைனில் இருந்த சோவியத் கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது
உக்ரைன் பெண்கள் உலகெல்லாம் செய்ய கூடாத தொழில்களை செய்யுமளவு பொருளாதாரம் மோசமானது
கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு மாற தெரியாமல் ரஷ்யா குழம்பி நின்ற காலங்களில் உக்ரைனும் குழம்பி நின்றது, பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பா நாடுகள் வறுமையானவை அவை உக்ரைனையும் பாதித்தது
இந்நிலையில்தான் மேற்கு நாடுகளுடனும் சீனாவுடனும் அதன் உறவு மெல்ல துளிரிவிட்டது, பல பிடுங்கிய பாம்பு, கால் உடைபட்ட சிங்கம் என ரஷ்யாவும் வீழ்ந்து கிடந்தது அதுவரை சிக்கல் இல்லை
புட்டீனின் எழுச்சி உக்ரைன் சிக்கலுக்கு முதல்படி, புட்டீன் முதலில் ரஷ்யாவில் அமெரிக்கா உருவாக்கி வைத்த “சமூக நீதி ஆர்வலர்கள்” “ஜனநாயக காவலர்கள்” சமூக போராளிகள்” என எல்லோரையும் முதலில் தூக்கி நாட்டை அமைதியாக்கினார்
ஒரு முன்னாள் உளவாளியாக அவருக்கு அமெரிக்காவின் ஆட்டமெல்லாம் அத்துபடி என்பதால் எளிதாக நாட்டை தன் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்து சீர்படுத்தினார், ரஷ்யாவின் மிகபெரிய பலமான எண்ணெயினை சரியான முறையில் காசாக்கினார்
ரஷ்ய எண்ணெய் பாய பாய அமெரிக்க கம்பெனிகள் அடிவாங்கின, இதுதான் இன்றைய போருக்கு முதல்படி
அமெரிக்காவின் முதல் திட்டம் ரஷ்யாவின் அண்டை நாடுகளான தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தானில் எரிவாயு நிரம்ப உண்டு, அதை ஆப்கன் ஊடாக பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு குழாய் பதித்து கொண்டுவந்து அள்ளி செல்ல வேண்டும்
அதைத்தான் ஆப்கானிஸ்தானில் செய்ய கால்பதித்தது அமெரிக்கா, பின்லேடனெல்லாம் ஒரு பூச்சாண்டி அவ்வளவுதான்
ஆனால் செய்யமுடியா அளவு ஆப்கானிய தாலிபன் அட்டகாசம் இருந்தது அதையும் தாண்டி புட்டீன் முன்னாள் சோவியத் நாடுகளை எச்சரித்து கட்டுபடுத்தினார்., அமெரிக்கா ரஷ்யாவினை கோபபார்வை பார்த்த முதல் இடம் இதுதான்
இந்த மோதலின் அடுத்த இடம் சிரியா, அங்கே அமெரிக்கா கால்பதித்து அங்கிருந்து ஈராக் எண்ணை இன்னும் பல நாடுகளின் எண்ணையினை குழாய் மூலமாக துருக்கி ஊடாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்ல வந்தது
சதாம், லிபியா போல சிரிய அதிபரும் குறிவைக்கபட அங்கு ஆபத்பாந்தவனாக வந்தார் புட்டீன், ரஷ்ய ராணுவம் தலையிட்டதில் அமெரிக்காவின் கனவு தகர்ந்து அந்த எண்ணெய் பிசினஸும் கைவிடபட்டது
போதாகுறைக்கு இன்னும் எண்ணெய் உற்பத்தி நாடான லிபியா, வெனிசுலாவிலெலாம் அமெரிக்கா உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு போட்டியாக ரஷ்ய வாடகை ராணுவம் சென்றது
ரஷ்ய வாடகை ராணுவத்தின் முதலாளி யாரென்றால் சாட்சாத் புட்டீனேதான்
இனி புட்டீனை சரிக்காமல் தங்கள் வியாபாரம் இல்லை என்பதை உணர்ந்த அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அதிபரிடம் கண்ணை கசக்கின, டிரம்பரோ சீனாவினை மட்டும் கையில் கல்லோடு சுற்றி சுற்றி வந்ததால் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை அமெரிக்க கனடா எண்ணெயினை எடுங்கள் என சொல்ல்விட்டு அவர்போக்கில் இருந்தார்
பிடன் ரஷ்யாவினை குறிவைத்தார், காரணம் 2014ல் ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவினை பிடித்தபொழுது துணை அதிபராக இருந்தவர் பிடன், கிரிமியா ரஷ்யாவோடு இணைய பிடனின் சொதப்பலிலும் பங்கு உண்டு
அந்த வெறியிலும் எண்ணெய் சந்தையினை ரஷ்யாவிடம் இருந்து தட்டி பறிப்பதிலும் ஆரம்பத்தில் இருந்தே குறியாய் இருந்தார் பிடன்
அவர் வந்தவுடனே அரேபியாவில் இருந்து வெளியேறினார், ஈரானை பெரிதும் கண்டுகொள்ளவில்லை மாறாக தளர்வுகளை கொடுக்க விரும்பினார்
இது ஏன் என எல்லோரும் கேட்டதற்கான காரணத்துக்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை என்றாலும் இன்று ரஷ்யா எண்ணெய் முடக்கபட்டால் அரேபிய எண்ணெயும் எரிவாயுவும் தாராளமாக புழங்க வேண்டும் என்ற பதில் கிடைத்திருப்பதை உலகம் உணர்கின்றது
அந்த பிடன் ரஷ்யாவினை முடக்கவும் ஒரு பொருளாதார தடை இடவும் காரணம் தேடினார், காரணம் கிடைக்கா பட்சத்தில் அதை உருவாக்க முயன்றார்
தனியாக ரஷ்யாவினை எதிர்க்காமல் நேட்டோவினை இழுத்தார், நேட்டோ என்பது ஒரு காலத்தில் சோவியத் யூனியன் ஐரோப்பிய நாடு எதையாவது தாக்கினால் மொத்த ஐரோப்பாவும் சோவியத்தை தாக்க வேண்டும் என் உருவான ஒப்பந்தம், இன்றும் அது வலுவாக உண்டு
ரஷ்யா பலம்பெறும்பொழுதெல்லாம் உக்ரைன் அதன் வளத்துக்காக தாக்கபடும் என்பது தியரி, ஆண்டாண்டு காலமாய் அதுதான் நடந்தது
புட்டீன் பலமானவுடன் அதுதான் உக்ரைன் பகுதியான கிரிமியாவில் நடந்தது, கிரிமியாவினை தன்னோடு ரஷ்யா 2014ல் இணைத்தது உலகில் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை ஆனால் கிரிமியா இன்றும் உக்ரைன் பகுதி என்றுதான் ஐநா சொல்கின்றது
இப்பொழுது ரஷ்யாவினை முடக்க காரணம் தேடிய அமெரிக்கா மெல்ல மெல்ல ரஷ்யாவின் அண்டை நாடுகளில் கால் வைத்து ஏவுகனைகள் ரேடார்கள் என பொருத்தியது போலந்த் ரொமேனியா என இது நடந்தது
அவை எல்லாம் நேட்டோ நாடுகள் என்பதால் ரஷ்யா எச்சரிக்கையோடு நிறுத்தியது
அப்படியே உக்ரைனிலும் அமெரிக்காவும் நேட்டோவும் கால் வைக்கும் பொழுது சிக்கல் வெடித்தது
ரஷ்யா இங்கே குறுக்கே வந்து 1990ல் சோவியத் உடைந்த பின் 1997ல் மின்ஸ்க் நகர் ஒப்பந்தபடி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ சேர்க்காது என முன்பு அமெரிக்காவும் ரஷ்யாவும் செயத ஒப்பந்தத்தை காட்டினார்
ஆனால் அது பழைய காலமென்றும் இப்பொழுது முடிவெடுக்கும் உரிமை உக்ரைனுக்கும் உண்டு என வாதிட்டது அமெரிக்கா
உக்ரைன் தனிநாடாக இருந்தால்தானே ஒப்பந்தம் செய்யவருவீர்கள் என்றார் புட்டீன்
விஷயம் வலுத்து இழுத்தது, சுமார் 8 மாதமாகவே இரு பக்கமும் தயாரானார்கள், ரஷ்யா உலகிலே சக்திவாய்ந்த குண்டு முதல் அதிநவீன ஹைப்பர்சோனி ஏவுகனை, எஸ் 550 தடுப்பு என வானின் செயற்கை கோளையே அடிக்கும் சாதனம் செய்தது எல்லாம் போருக்கான அறிகுறிகளாயின
அதே நேரம் அமெரிக்கா எப்படியெல்லாம் பொருளாதார தடையினை வீசலாம் என திட்டமிட்டது
நேற்று உலகம் எதிர்பார்த்தபடி யுத்தம் வெடித்தது , ரஷ்யா உக்ரைன் முழுக்க கைபற்றி கொண்டிருக்கின்றது
அமெரிக்காவோ தன் வலையில் ரஷ்யா விழுந்ததை அடுத்து பொருளாதார தடைகளை அறிவிக்க தொடங்கியுள்ளது
இதனால் இனி அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்றால் பலத்த லாபங்கள்
முதலாவது ரஷ்ய எண்ணெய் சந்தை கைபற்றபடும் இரண்டாவது ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு உக்ரைனை காட்டி ஆயுதம் விற்கலாம்
மூன்றாவது கடும் தடை மூலம் ரஷ்யாவினை 1990ன் வறுமை நிலைக்கு கொண்டு செல்வது
இப்படி பலத்த அனுகூலத்தினை எதிர்பார்த்து அமெரிக்கா காய்நகர்த்துகின்றது, அதே நேரம் எல்லா தடையும் போட்டாயிற்று இனி என்ன அடித்து பார்த்துவிடுவோம் என ரஷ்யா இன்னும் பல நாடுகளை தன்னோடு இணைக்கலாம் அல்லது வடகொரியா போன்ற நாடுகளை இணைக்கலாம்
நிச்சயம் யுத்தத்தின் முழு சவாலும் அதன் விளையும் ரஷ்யாவினைத்தான் தாக்கும், ரஷ்யா இதை உலகபோராக மாற்றுமா இல்லை உக்ரைனோடு நிறுத்திவிட்டு பொருளாதார தடைகளை சமாளிக்குமா என்பது இனிதான் தெரியும்
போர் என சொல்லிவிடலாம், செய்தி நிறுவணங்கள் அதில் காசு பார்க்கலாம் ஆனால் போரின் கொடுமை கொஞ்சமல்ல
இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர்
ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன
ஒரு பக்கம் ரத்த ஆறு ஓடுகின்றது, ரத்த கறையோடு தப்பி மேற்கே ஓடுகின்றனர் உக்ரைனியர்கள்
ஆம் இருவரும் கிறிஸ்தவர்கள்
ஒரு கிறிஸ்தவ நாடு இன்னொரு கிறிஸ்தவநாடான ரஷ்யாவினை சீண்டுகின்றது, அந்த கிறிஸ்தவ ரஷ்யா கிறிஸ்தவ உக்ரைனை நொறுக்குகின்றது
அந்த கிறிஸ்தவ உக்ரைன் மக்களுக்கு கதவுகளை அடைக்கின்றன இதர கிறிஸ்தவ நாடுகள்
இதுதான் அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் கிறிஸ்தவ தேசத்தின் முகம், இப்படிபட்ட இனம் ஆண்டுதான் இந்தியாவில் முன்னேற்றம் வந்தது இந்தியரை முன்னேற்றவே வெள்ளையன் வந்தான் என்பதெல்லாம் எப்படியான கட்டுகதை என்பதை உணரவேண்டியவன் உணரட்டும்
இயேசுநாதர் ரத்த வெள்ளத்தில்தான் செத்தார்
அதற்காக அவர் வாழ்ந்த பாலஸ்தீனம் முதல் அவரை வழிபட்ட ஐரோப்பா முதல் அவர் பெயரால் அடக்கபட் செவ்விந்தியர் இன்கா மக்கள் வரை ஒவ்வொரு தேசமும் ரத்த்தம் வேண்டுமா என்ன? பாலஸ்தீனம் முதல் இன்று உக்ரைன் வரை ரத்தம் சிந்த வேண்டுமா என்ன?
இயேசு ரத்தம் சிந்தினார், சிந்தினார் என சொல்லி சொல்லி அவர்கள் கால்வைக்கும் இடமெல்லாம் ரத்தம் சிந்த வைபப்தெல்லாம் நினைத்து பார்க்கமுடியா கொடூரம் அல்லது விசித்திரம்
ஐரோப்பா இந்த 50 ஆண்டுகளில் அமைதியாக இருக்கலாம் அதற்கு காரணம் 1945ல் அவர்கள் கண்ட பெரும் யத்ததம், உண்மையில் இது அவர்களின் களைப்பு மிகுந்து ஓய்வான காலம்
மற்றபடி எப்பொழுதும் தீராபோர்களில்தான் காலம் தள்ளினார்கள், உண்மையான கிறிஸ்தவமோ அன்போ சகோதரத்துவமோ அவர்களிடமில்லை
தாங்கள் வாழ எந்த கொடிய எல்லைக்கும் செல்லும் தர்மம் அவர்களுடையது அதையும் கிறிஸ்துவத்தால் மாற்றமுடியவில்லை, கிறிஸ்து பெயரைசொல்லி கொண்டே யாரையாவது அழித்து தங்கள் வாழ்வினை வளபடுத்துவது அவர்களுக்கு குற்றமே இல்லை என மனநிலை செல்லும் அளவு மறத்துவிட்டது
உக்ரைன் ரஷ்யா மோதல் சொல்லும் வரலாறும் அரசியலும் வியாபாரமும் ஏராளம் அப்படியே மதமாற்ற கும்பலிடம் இருந்து தேசாபிமானிகளும் இந்துமக்களும் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் அதில்தான் அடங்கி இருக்கின்றது
சிவாஜியின் அன்னை ஜீஜாபாய் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ரெவிங்கிடனிடம் சொன்ன வார்த்தைகள் , சத்தியமான வார்த்தைகள்
“பணம் ஒன்றுதானே உங்களுக்கு இலக்கு, அந்த பணத்தை தேடி எங்கெல்லாமோ சென்று சென்ற இடத்திலெலலம் குழப்பம் விளைவித்து அதில் குளிர்காய்வதுதானே உங்கள் கொள்கை?
எங்கிருந்தோ பணம் தேடி வருபவன் அதுவும் பெரும் கடல்தாண்டி வருபவன் எவ்வளவு வறுமையுற்றவனாக பேராசைக்காரனாக இருப்பான?, அவன் வியாபாரத்தில் எவ்வளவு பொய்யும் மோசடியும் கலந்திருக்கும்?
அப்படிபட்டவன் போதிக்கும் தர்மம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும் என சிந்தியாத எம்மக்களைத்தான் நாம் முதலில் திருத்தவேண்டும், திருத்துவோம்.”
ஐக்கிய நாடுகள் சபை நீதித்துறையின் முக்கிய அங்கமான சர்வதேச நீதிமன்றதில் மீண்டும் ஒரு இந்தியர் அமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த 71 ஆண்டுகளாக சர்வ தேச நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டனை இரண்டாவது முறையாக 193 வாக்குகளில் 183 வாக்குகளைப் பெற்று பின்னுக்கு தள்ளி இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதமே தேர்தல் முடிவுற்றது. இப்போது முறையாக பதவி ஏற்றுள்ளார்.
இது அத்தனை லேசாக கடந்து செல்லும் விஷயம் அல்ல. இதற்காக நம் நாட்டின் பிரதமரும் வெளியுறவு துறை அமைச்சரும் எவ்வளவு உழைத்திருப்பார்கள். சர்வ தேச நீதிபதி தேர்தல் என்பது அத்தனை சாதாரண விஷயமா?
ஒரு சாதாரண வார்டு மெம்பர் தேர்தலுக்கே இங்கே படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.193 நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு, இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்கி தனக்கு சாதகமாக வாக்களிக்க வைப்பது என்ன எளிதான காரியமா?
அதுவும் போட்டி வேட்பாளர் லேசுபட்டவர் அல்ல.71 ஆண்டுகள் தொடர்ந்து பதவியை தக்க வைத்து கொண்டிருந்த வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள பிரிட்டன் வேட்பாளர்.
கிட்டத்தட்ட ஆறுமாத கால உழைப்பு. இன்று வெற்றிகனியை எட்ட வைத்துள்ளது. ஆனால் அந்த வெற்றியையும் எவ்வளவு அமைதியாக கடந்து செல்கிறது நம் பாரத அரசு.
ஆனால் அத்தனை குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி அப்பாவி எளிய வேட்பாளர்களை ஏமாற்றி, மிரட்டி,ஓட்டுக்கு காசு கொடுத்து வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கூட்டம் போடும் கூச்சலுக்கு அளவே இல்லை.
குறை குடம் கூத்தாடுகிறது. நிறை குடம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. இதுதான் வித்தியாசம்.ஆனால் இந்த வெற்றியை சத்தமாக அறிவிக்க கூட இங்குள்ள ஊடகங்களுக்கும் மனமில்லை.சமத்துவம், மனிதாபிமானம் என்று டூல் கிட்டுகளை வைத்து எதை எதையோ புலம்பி கொண்டிருக்கிறது.
நாமும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெற்ற ஓட்டுக்களை எண்ணி எண்ணி பரவசப்பட்டு கொண்டிருக்கிறோம்.இதை இங்கே சொல்ல பாஜக வில் ஒரு ஆள் கூட இல்லை.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் நமது பிரதமர் மோடி எவ்வளவு மரியாதையான, மரியாதைக்குரிய மற்றும் சிறந்த உறவுகளையும் உருவாக்கியுள்ளார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.சந்தேகமே இல்லை ஆனால் அதை சிலர் உணரக்கூட இல்லை என்பதுதான் பெரிய வேதனை….
1971 இந்தியா-பாகிஸ்தான் போரில்
உலகநாடுகள் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பக்கம் நின்றபோது நமக்கு உண்மையான நண்பனாய் இருந்து பல போர் கப்பல்களையும் ஆயுதங்களையும் இந்தியாவிற்கு வழங்கி போரில் வெற்றிபெற காரணமாய் இருந்தது ரஷ்யா. அப்பொழுது இந்திய வெற்றியில் உருவாக்கப்பட்ட நாடுதான் பங்களாதேஷ். அதே போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்ற நாடுதான் உக்ரைன். அந்த நன்றிக் கடனுக்காக தான் இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வில்லை.எனவே
ஒவ்வொரு இந்தியனும் ஆதரிப்போம் “ரஷ்யா” வை
ஜெய்ஹிந்த்…
உண்மையில் பாஜக செய்திருப்பது பெரும் அதிசயம் இது நம்பமுடியா அதிசயம்
சினிமா, சாதி, பிரிவினைவாதம், தமிழ்வெறி, தமிழன்வெறி, மத நல்லிணக்கம் என இந்துவெறுப்பு இதை தாண்டி தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது செய்யவே முடியாது என இருந்த அவலநிலையினை துடைத்தொழித்திருக்கின்றது பாஜக
அங்கு சாதி அரசியல் இல்லை, சினிமா முகங்களை முன்னிறுத்தவில்லை, தமிழன் தமிழ் என நெஞ்சிலும் வயிற்றிலும் அடிக்கும் கலாச்சாரமில்லை, மதமற்றவர் என நடிக்கும் நாடகமில்லை, பிரிவினைவாதமோ இதர கலாட்டாக்களுமில்லை
ஆம் தமிழகம் என்றுமே தேசியத்திலும் இந்துத்துவத்திலும் நம்பிக்கை கொண்ட மாநிலம், அதனால்தான் திராவிட நாடு ஈழநாடு கோஷமெல்லாம் எடுபடாது, கோவில்களும் பண்டிகைகளும் நிரம்பி நிரம்பி வழியும்
இங்கே சினிமா அரசியல் கொஞ்சம் சாதி அரசியல் எனும் விஷம் இருந்தது அது இரண்டும் இப்பொழுது காலாவதியாகிவிட்டன
இப்பொழுது பண அரசியல் மட்டும் விளையாடுகின்றது அதுவும் முறிக்கபட்டால் இங்கு திராவிட நாடக கம்பெனி இழுத்து மூடபடும்
சினிமாவும் ஜாதியும் இனி தமிழகத்தில் எடுபடாது, பிரிவினைவாதமும் இதர தேசவிரோத சதிகளும் எடுபடாது என உரக்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றது தமிழகம், அதை சொல்ல வைத்திருப்பது சத்தியமாக பிஜேபி
நல்ல தேசாபிமானிகளுக்கு இதைவிட உற்சாகமும் ஆறுதலும் விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?
இந்திய தேசம் விசித்திரமான சட்டங்களால் நிரம்பியது, அதில் ஒன்றுதான் இந்த உள்ளாட்சிதேர்தல்
இந்தியாவில் முதன் முதலில் உருவான வெள்ளையன் கால தேர்தல் அமைப்பு அது, அக்காலத்தில் எம்.எல்.ஏ, எம்.பி இன்னபிற தேர்தல் இல்லையென்பதால் இதன் அமைப்பே வித்தியாசமானது
அக்காலத்தில் எல்லோருக்கும் வாக்கு கிடையாது, சொத்து உள்ளோர் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்த நிலசுவாந்தார், வணிகர், தொழிலதிபர் என வரிகட்டுவோர்தான் வாக்களிக்க முடியும்
இதில் தமாஷ் என்னவென்றால் இந்த சமூக நீதி போராளிகள் யாரும் ஏன் ஈரோட்டு ராம்சாமி கூட எல்லா மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமைவேண்டும் என வெள்ளையனிடம் கோராதது
அவ்வளவுதான் அவர்கள் காத்த சமூக நீதி
இந்த தேர்தல்படி தெர்ந்தெடுக்கபடும் உறுப்பினர்கள் கூடி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் இது அக்கால சட்டமாயிற்று பின் சுதந்திர இந்தியாவில் இதுவே தொடர்ந்து 1980களில் ராஜிவ் பஞ்சாயத்து அமைப்புக்களை புதுப்பித்தபொழுது அப்படியே நடைமுறைக்கு வந்தது
இப்பொழுது அந்த மாற்றபடாத முறைகளே பெரும் காமெடியாயிற்று
கவனியுங்கள் வார்டு கவுண்சிலர் என திமுக அதிமுக கட்சியினர் வரிந்து கட்டுவார்கள்., எங்களுக்கு வாக்களியுங்கள் என மக்களை நெருங்கி கொண்டாடி மகிழ்வார்கள் இப்பொழுதெல்லாம் நகையும் பட்டும் இன்னபிற தளவாடங்களும் கொடுத்தெல்லாம் வாக்கு கேட்கின்றார்களாம்
தேர்தல் நேரம் இன்னும் கலவரமாகும் வாக்கு மையம் ஆப்கானிஸ்தானின் பொது இடம் போல மிக பெரிய அச்சுறுத்தலாக பார்க்கபடும், சிரியா லிபியா ஏமன் போன்ற நாடுகளில் மட்டும் காணபடும் காட்சிகளை தமிழக மக்களும் காணும் துரதிருஷ்டம் ஏற்படும்
ஆனால் தேர்தல் முடிந்தபின் எல்லா கட்சியினரும் ஒன்றாக அமர்வார்கள் திமுக அதிமுக கவுன்சிலர், மெம்பரெல்லாம் சேர்ந்து தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்
இதில் மக்கள் எவ்வளவு முட்டாளாக்கபடுகின்றார்கள்?
கட்சிகள் அடித்து கொள்வது சரியென்றால் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை தவறு, தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வழி இருந்தால் இந்த குழப்பங்களுக்கு அவசியமே இல்லை
இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டம் உண்டு ஆனால் பஞ்சாயத்து தேர்தல்களில் வென்றபின் கட்சிமாறி ஆதரிக்க அச்சட்டம் தடை செய்யவில்லை அதை இன்னொரு சட்டம் உரிமை என தடுக்கின்றது
ஆம் மிக குழப்பமான காமெடியான தேர்தல் உள்ளாட்சி தேர்தல்
மக்களின் வரிபணத்தில் அவர்களை ஏமாற்றி குழப்ப ஒரு தேர்தல் நடத்த இச்சட்டம் துணை செய்கின்றது, அந்த குழப்பத்தில் கட்சிகள் தேர்தலுக்கு முன் கூடி அடித்து கொள்ளவும் தேர்தலுக்கு பின் கூடி குலவி மக்களை பார்த்து சிரிக்கவும் இது துணை போகின்றது
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் வேறு தேர்தலே இல்லாமல் அடிமை இந்தியாவில் வெள்ளையன் உருவாக்கிய சட்டங்கள் அடிப்படையில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடத்துவது நிச்சயம் சரியில்லாதது பலனில்லாதது
ஆம்,இந்தியாவின் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் அதன் பலவீனமான காலவதியான சட்டங்கள் அது பல இடங்களில் தெரிந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் சரியாக தெரிகின்றது,
மிக சரியான சட்டங்களை இயற்றி இந்த தேர்தல்களை முறைபடுத்தவேண்டியது அல்லது ஒரே தேர்தலில் எல்லா நிர்வாகங்களையும் ஏற்படுத்துவது மாதிரியான சட்ட திருத்தம் அவசியம்
அதை உடனே இந்திய அரசு செய்தால்தான் வருங்கால இந்தியாவுக்கு நல்லது மிக நல்லது,
அதுவரை மக்களை முட்டாளாக்கும் இம்மாதிரி காமெடி தேர்தல்கள் தொடர்த்தான் செய்யும் அது நாட்டுக்கும் இந்திய சமூகத்துக்கும் நல்ல நிர்வாகத்தை கொடுக்க வழிசெய்யாது
உக்ரைனில் இந்தியாவுக்கு நெருக்கடியினை உருவாக்கும் காரியங்கள் தொடங்கிவிட்டன, மோடி அரசு அதை மிக அழகாக கையாள்கின்றது
இந்தியா இந்த இடத்தில் வாய்திறந்தே தீரவேண்டும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு, இதை உணர்ந்த இந்தியா முந்திகொண்டது அதாவது நேற்று இரவே இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புட்டீனை அழைத்து போரை தவிர்க்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்
அதனை தொடர்ந்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் இந்தியாவின் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு ரஷ்யாவினை பகிரங்கமாக கண்டிக்க பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கின்றார்
இந்தியாவோ நாங்கள் புட்டீனிடமே கண்டனத்தை சொல்லிவிட்டோம் என அழகாக விஷயத்தை கையாள்கின்றது
ஆனால் அமெரிக்கா குவாட் அமைப்பின் சார்பாக கண்டிக்க அழைப்பு விடுக்கின்றார் இந்தியா தரமான வார்த்தைகளால் பதிலளித்து கொண்டிருக்கின்றது
இது இந்திய ஊடகங்களில் வரவில்லை, அதுவும் தமிழக ஊடகங்களில் வரவே வராது அவைகளுக்கு தமிழக நகராட்சியின் 10ம் வார்டு தேர்தல் முடிவுகளும் அந்த மகா சக்திவாய்ந்த கவுன்சிலர் செய்யபோகும் சாதனைகளும் மகா அவசியம் அப்படியே அஜித்குமாரின் வலிமை பட விமர்சனமும் வசூலும் மகா அவசியம்
இதனால் இதை தமிழக ஊடகம் வெளியிடா நிலையில் அமெரிக்க ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டன இது வெள்ளைமாளிகையில் எதிரொலித்தது
இப்பொழுதெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி தமிழக கொரோனா காலத்தில் பீலா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் போல அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்கின்றார் அவரிடம் இக்கேள்வி எழுப்பட்டது அல்லது எழுப்ப வைக்கபட்டது
இந்த ஊடக அரசியல் உலகெல்லாம் உண்டு தமிழக மீடியாக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தெர்ந்தெடுக்கபட்ட கேள்விகளை கேட்பது போல அமெரிக்காவிலும் கேட்பார்கள் அல்லது கேட்க வைக்கபடுவார்கள்
அப்படி கேட்ட கேள்விகளில் ஒன்று “மிஸ்டர் பிரசிடென்ட் இந்தியா முழுமையாக அமெரிக்காவோடு இருப்பதாக நம்புகின்றீர்களா?” என்பது
இது மகா சிக்கலான கேள்வி , இதற்குத்தான் இந்தியாவினை இழுத்து போடுகின்றார் பிடன் “ஆம் இதுபற்றித்தான் இந்தியாவோடு பேசிகொண்டிருகின்றோம்” என்பது
அதாவது இந்தியா இனி பகிரங்கமாக வாய்திறக்க வேண்டும் என்கின்றார் பிடன் , குவாட் அமைப்பின் எல்லா நாடுகளும் ரஷ்யாவினை கண்டித்த நிலையில் இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு
இதை ரசிக்கும் சீனா, “கமான் இந்தியா கமான், பிளீஸ் கமான்” என நடிகர் செந்தில் பாணியில் சொல்லிகொண்டிருக்கின்றது, அவர்களை பொறுத்தவரை இந்தியாவுக்கு பெரும் சிக்கல் வரவேண்டும்
இது இந்தியாவுக்கு சிக்கலான நேரம், என்னதான் மோடி பெரும் ராஜதந்திரியாக இருந்தாலும் சுப்பிரமணிய ஜெய்சங்கர் மாபெரும் சாணக்கியனாக இருந்தாலும் இருபக்கமும் சமாளிக்க இந்தியாவில் பிறந்து வழிகாட்டிய ஒருவரால்தான் முடியும்
அவர்தான் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி, இம்மாதிரி நேரங்களில் அவரின் வழிகாட்டல்தான் சரி
ஒருவேளை அவர் இருந்திருந்தால் எப்படி எழுதுவார் தெரியுமா?
“உலகில் உக்கிரைன் மட்டுமல்ல எந்த நாடு தாக்கபட்டாலும் நாங்கள் வருந்துவோம் கண்டிப்போம். அதே நேரம் தாக்கும் நாட்டுக்கான நியாயமான காரியங்களையும் நாம் கவனத்தில் எடுப்போம் அதற்கு எதிரான கண்டனங்களையும் வரவேற்போம்
ஒரு காலத்தில் ஆரிய பார்ப்பானிய கும்பலால் தமிழக அடிமட்ட சமூகம் பெற்ற வலியினை நேரில் கண்ட எனக்கு, அந்த ஆதிக்கத்தயெல்லாம் முறியடித்த எனக்கு உக்ரைன் மக்களின் துயரை போக்கமுடியவில்லையே எனும் கையறு நிலை இதயமெல்லாம் ஈட்டி பாய்ச்சுகின்றது
உக்ரைன் மக்களும் எல்லா வாய்ப்பும் வளமும் பெற்றுவாழவேண்டும் என்பதுதான் எம் விருப்பம் அதே நேரம் அமெரிக்காவின் நியாயங்களையும் நாம் ஏற்கின்றோம், ரஷ்யாவின் வாதங்களையும் ஏற்கின்றோம்
இந்த இருவாதத்தில் எது பிடிவாதம் என கேட்டால் இரண்டுமே வலுவான வாதமேதவிர பிடிவாதம் அல்ல, எமக்கு ரஷ்யா ஒரு நண்பன் அமெரிக்கா இன்னொரு நண்பன்
எமக்கும் ரஷ்யாவுக்குமான நட்பு கர்ணனுக்கும் துரியோதானுக்கும் போன்றது அமெரிக்காவுக்கும் எமக்குமான நட்பு அதியமானுக்கும் அவ்வையாருக்குமான நட்பு
அய்யகோ இந்த சிக்கலிலா நான் விழவேண்டும், இரு கண்ணில் ஒரு கண்ணை இழந்துவிடு என்றால் நான் என் செய்வேன்?
மூவேந்தர் சண்டையிட்ட பொழுது சோழன் பக்கம் செல்வதா பாண்டிய பக்கம் செல்வதா என்ற குழப்பத்தில் நாட்டை துறந்து சன்னியாசம் ஏற்றானே முடிதுறந்த பாண்டிய அடிவழுதி அவன் போலத்தான் இருக்கின்றது என் நிலை
தன்னிடம் தஞ்சமடைந்த புறாவுக்கு தன் சதையினை அறுத்து கொடுத்தானே அந்த சோழ மன்னன் அவனை போல உக்ரைன் எனும் புறாவுக்கு என் சதையினை அறுக்க நானே வாளெடுத்து தயாராக இருக்கின்றேன்
இந்த இரு நண்பர்களும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதே எம் விருப்பம் இல்லையேல் ஆளுக்கு பாதியாக எம்மை வெட்டி எடுத்துகொள்ளுங்கள் அதையும் நானே என்னைவெட்டி சரிக்கு சமமாக தருகின்றேன் பெற்று கொள்ளுங்கள் என உருகி கேட்பதை விட எமக்கு வழி தெரியவில்லை
நாம் புறநானூற்று பாடலிலே பாரி மன்னனுக்கு எதிரான படையெடுப்பை தடுக்க அவ்வை பாடுபட்டாளே., அதியமானுக்கு எதிரான மூவேந்தர்களின் போரை தடுக்க அவள் பாடுபட்டாளே அந்த மனநிலையில்தான் இந்த சிக்கலை அணுகுகின்றோம் எமக்கு எல்லோரும் வாழவேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் தன்மான தமிழனின் தத்துவபடி எம் சொல்லை கேளீர் கேளீர் கேளீர் என கெஞ்சுகின்றோம்
உக்ரைனியின் உரலிலிட்ட அரிசி போன்ற சிக்கல் தீரட்டும், ரஷ்யர்களின் ரசவாத தாக்குதல் நிற்கட்டும், அமெரிக்காவின் அணுகுமுறை தொடரட்டும், உலகிற்கு பாரத பங்களிப்பு வலுக்கட்டும்
இந்த போரை கண்டித்து ரஷ்ய தூதரகம் முன்னால் காலையிலும் , போரை தூண்டிய அமெரிக்க தூதரகம் முன்னால் மதியத்திலும் முன்பே நலல்முடிவு எடுக்க தவறிய உக்ரைனை கண்டித்து அவர்கள் தூதரகம் முன் இரவிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்”
இதில் ஏதாவது ஒரு வார்த்தையில் இந்தியா ரஷ்யாவிடமோ அமெரிக்காவிடமோ உக்ரைனிடமோ சிக்குமா?
இதை கேட்டபின் மூன்று நாடுகளும் தலையினை பிய்த்து கொண்டு ஓடிவிடாதா என்ன?