ஹைதராபாதில் ஸ்ரீ சின்ன ஜீயர் அவர்களின் அருட்தலைமையில் அமைந்து பிரதமர் மோதி அவர்கள் திறந்து வைத்த ஸ்ரீராமானுஜர் சிலைக்கு சமத்துவ மூர்த்தி (Statue of Equality) என்ற திருப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே மிகப்பொருத்தமானது என்று இந்த உரையில் அருமையாக விளக்குகிறார் வேத சாஸ்திர அறிஞரும் ஆசாரியருமான டாக்டர் ரங்கன்ஜி அவர்கள்.
இந்தப் பெயர் குறித்து நானும் ஒரு விமர்சனம் வைத்திருந்தேன். இப்போது என் கருத்தை மாற்றிக் கொண்டு, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
ஸ்ரீராமானுஜ சித்தாந்தத்தில் சமத்துவம், மோட்சம் இரண்டிற்கும் உள்ள இணைவு, பாரதம் முழுவதும் உள்ள பக்தி மார்க்க சான்றோர்களின் மீது அது செலுத்திய தாக்கம் ஆகிய விஷயங்களை ரங்கன்ஜி எடுத்துரைக்கிறார். பெரியபுராணத்தின் நாயன்மார் சரிதங்கள், மஹா பக்த விஜயத்தில் உள்ள மராட்டிய, வடநாட்டு அடியார் சரிதங்கள் ஆகியவற்றையும் இணைத்து பேசியது சிறப்பு. சரி, ஆன்மீக சமத்துவம் என்று கூறிவிட்டாலே அதனால் சமூக, பொருளாதார சமத்துவம் வந்துவிடுமா என்று இந்து விரோத “முற்போக்கு” ஆசாமிகளின் கேள்வியையும் எடுத்துக் கொண்டு அதற்கும் அறிவார்ந்த வகையில் விடையளித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் …
‘எங்களுக்கு மத அடிப்படையில் பள்ளி சீருடை க்கு தனியே விலக்கு தேவை…”
அடுத்து …
“எங்களுக்கு மத அடிப்படையில் நாட்டின் சட்டத்தில் இருந்து விலக்கு தேவை…”
கடைசியில் …
“எங்கள் பகுதிக்கு மத அடிப்படையில் நாட்டிலிருந்தே தனியே விலக்கு தேவை…”
இப்படி துண்டாடப்பட்டது தான்… பாக்கிஸ்தான், அக்ரமிக்கப்பட்ட காஷ்மிர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்….
அது 1970ம் ஆண்டு அண்ணா மறைந்து கருணாநிதி ஆட்சிக்கு வந்து உழவனை வாழவைக்க வந்திருக்கின்றேன் என பேசிகொண்டிருந்தார்
கருணாநிதியின் அரசியல் போராட்டமே விவசாயிகளிடம்தான் தொடங்கியது, காமராஜர் காலத்தில் உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் என பெரும் போராட்டம் நடத்தியவர் கருணாநிதி , அதிலும் நங்கவரம் விவசாயிகள் பக்கம் நின்று அவர் ஆடி தீர்த்ததெல்லாம் தனி வகை
“நாடுபாதி நங்காவரம் பாதி” என விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் அரசியல் செய்ததெல்லாம் வரலாறு, அவர் அரசியல் அப்படித்தான் தொடங்கியது
ஆனால் கருணாநிதிக்கு விஷேஷித்த குணம் உண்டு, அது என்னவென்றால் எதிர்கட்சியாக இருந்தபொழுது கேட்கும் நியாயத்தை எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார், அவரின் பகுத்தறிவு அது
பெரும் ஞாபகசக்தி மிக்கவர் என சொல்லபடும் கருணாநிதிக்கு “ஆட்சியில் மட்டும் மறதி” ஒரு சாபம், அப்படி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை மறந்து மின் கட்டணத்தை உயர்த்தினார்
விவசாயிகள் போராட வந்தனர், எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு கட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்கு முறைகளைக் கையாண்டது அரசு
காவல்துறை கருணாநிதி கட்டுபாட்டில்தான் இருந்தது
கோயம்புத்தூர் பக்கம் பெருமா நல்லூரில் துப்பாக்கி சூட்டுக்கு ஆயிக்கவுண்டர், மாரப்ப கவுண்டர், ராமசாமி என்னும் இளம் விவசாயிகள் மூவர் பலியனார்கள்.
விஷயம் பெரிதானதும் மதுகடைகளை திறந்து வருமானத்தை சரி செய்து மேலும் மின்கட்டணம் உயராமல் பார்த்துகொண்டார் கருணாநிதி, தமிழகத்து சோதனை காலம் இங்குதான் தொடங்கிற்று
அடுத்த சிக்கலாக வங்கிகள் விவசாயிகள் நிலங்களை திமுக ஆட்சியில் கையகபடுத்த தொடங்கிற்று, அமைதியாக பார்த்துகொண்டிருந்தார் கருணாநிதி
விளைவு 1972-ம் ஆண்டு விவசாய ஜப்தி நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கனூரில் 5 விவசாயிகள் பலியானார்கள்.
தமிழ்நாடு கொந்தளித்தது, விவசாயிகள் மாட்டுவண்டிகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர், ஆனால் கருணாநிதி அரசு இரக்கமின்றி சுட்டடது
மதுரை மாவட்டம், வேடசந்தூர், திருநெல்வேலி மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த விவசாயப் போராட்டங்களில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீஸ் அடக்கு முறைக்கு பலியானார்கள்.
மாட்டுவண்டி போராட்டத்தில் பங்கேற்று போராடிய விவசாயிகள் 30 ஆயிரம் பேரை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளில் மூன்று மாதங்கள் அடைத்துவைத்து போராட்டத்தை முடக்க முயன்றது அரசு
அப்படி விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்தது, கடும் எதிர்ப்பு
கருணாநிதி திருச்சிக்கு செல்ல வேண்டும், ஆனால் கடும் எதிர்ப்பு
அப்பொழுது குடமுருட்டி ஆற்று பாலத்தில் திடீர் குண்டு கண்டறியபட்டது, ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கபட்டது
அப்பொழுது தமீழீழ இயக்கங்களுமில்லை, காஷ்மீரிய ,பஞ்சாபிய அசாமிய இயக்கமுமில்லை, நக்சலைட், மாவோயிஸ்ட் என எதுவுமில்லை
அட அல்கய்தா, ஐஎஸ் , சீமான் தும்பிகள் என எதுவுமே இல்லை
அன்றைய குண்டு கண்டுபிடிப்பு கடும் அதிர்ச்சியினை கொடுத்தது, அய்யய்யோ பாதுகாப்பு கெட்டது சட்டம் ஒழுங்கு கெட்டது என காவல்துறையினை ஏவிவிட்டது மாநில அரசு
காவல்துறை கருணாநிதி வசமே இருந்தது
பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் ஒடுக்கபட்டது
சரி குண்டுவைத்தது யார் என கடைசி வரை கருணாநிதி அரசு ஒருவரையும் பிடிக்கவில்லை, என்ன காரணம் என தெரியபடுத்தவுமில்லை
குண்டு தானாக வந்தது அவ்வளவுதான்.
இந்தியாவின் மினி பாராளுமன்ற தேர்தல் என அழைக்கபடும் உத்திரபிரதேச மாகாண தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு இன்று தொடங்குகின்றது
அந்த உத்திரபிரதேசத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவார்களோ அவர்கள்தான் பாரதம் முழுக்க ஆதிக்கம் செலுத்தமுடியும் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து குபதர் காலம் முதல் இன்றைய மக்களாட்சி காலம் வரை உள்ள நம்பிக்கை, அது உண்மையும் கூட
அந்த உத்திரபிரதேசம், காசி எனும் புண்ணிய ஸ்தலம் கொண்ட அந்த மாகாணத்தில் இப்பொழுது பாஜக ஆட்சி நடக்கின்றது, இம்முறையும் அந்த கட்சி ஆட்சியினை மிக எளிதாக தக்கவைக்கும் என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன
யோகி ஆதித்யநாத் எனும் சன்னியாசிக்கு மறுபடியும் வாய்ப்பளிக்கும்படி வாக்குபதிவு தொடங்கியிருக்கின்றது
தேர்தல் முழு அமைதியாக நடக்க தேசம் பிரார்த்திக்கின்றது
தமிழக பாஜகவின் தலமை நிலையமான சென்னை கமலாலயத்தில் நேற்று பெட்ரோல் குண்டு வீசபட்டது எனும் செய்தி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது
இது 1990களின் நிலையினை காட்டுகின்றது
புலிதீவிரவாதபிடியில் இருந்து தமிழகம் 1990க்கு பின் மீண்டபொழுது மதவாத தீவிரவாதம் தலை தூக்கிற்று. அது சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் 11 பேர் கொலை இன்னும் பல வகை குண்டுவெடிப்புகள் என தொடர்ந்தது
கமலாலயமும் தாக்கபட்டது
ஜெயலலிதா அரசு கடும் நடவடிக்கை எடுத்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் அடுத்த திமுக அரசில் மிக கொடுந்துயரமும் சதியுமான கோவை பயங்கரம் அரங்கேறிற்று
அதை அடுத்து நிலமை கட்டுபாட்டுக்குள் வந்த நிலையில் மறுபடியும் மிக பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி
இது தமிழக சட்ட ஒழுங்குக்கு சவால் விடுகின்றது
ஏற்கனவே சில ஆயிரம் ரவுடிகள் கைது, வன்முறையில் இறங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என முதல்வரும் காவல்துறை அதிகாரியும் எச்சரித்த நிலையில் நடந்திருக்கும் சம்பவம் பெரும் கேள்விகளை எழுப்புகின்றது
இனி விவகாரம் ஆளுநர் கைக்கு செல்லலாம்
ஆம், நீட் தேர்வு விலக்கு என ஆளுநரை கண்டித்து அடுதடுத்து தீர்மானம் இயற்றும் சட்டமன்றத்தையும் அதன் முதல்வரிடமும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் கேள்வி கேட்கும் நேரம் வந்தாயிற்று
ஆளுநர் இனி இப்படி கேட்கலாம்
“தமிழகத்துக்கு நீட் தேர்வில்தான் விலக்கு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தீர்கள் நாமும் அப்படித்தான் நம்பி கொண்டிருந்தோம்
ஆனால் இப்பொழுதுதான் மாநில அமைதியில் இருந்தும் சட்ட ஒழுங்கில் இருந்தும் தமிழகத்துக்கு நீங்கள் விலக்கு கேட்கின்றீர்கள் என்பது தெரிகின்றது
இந்த விவகாரத்திலும் எம்மால் விலக்கு அளிக்க முடியாது”
நீட் தேர்வுக்கு முந்தைய கல்வி சீர்திருத்தம் புதிய கல்வி கொள்கை
அது அறிவிக்கபட்டவுடன் திராவிட தரப்பு ஆடி தீர்த்தது, இது சமூக நீதிக்கு எதிரானது ஐந்தாம் வகுப்புக்கு பொதுதேர்வா அய்யகோ குலகலவி திட்டம் என்றெல்லாம் ஒப்பாரி வைத்தது
உண்மையில் அந்த கல்விதிட்டம் மோடியோ அமித்ஷாவோ கொடுத்தது அல்ல, அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் அவர்கள் பல கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் கூடி கொடுத்த திட்டம் அது
அதற்கு திமுகதரப்பும் அதன் கூலிபடை தரப்பும் கொதித்தது கொஞ்சமல்ல
ஆனால் இப்பொழுது புதிய கல்வி கொள்கை வந்தாயிற்று, மிக எளிதாக மாணவர்கள் கற்றுகொண்டிருக்கின்றார்கள், மெக்காலே தொடங்கி மன்மோகன்சிங் கால வரையிலான பழைய கல்வி திட்டம் மாற்றபட்டு தேசம் உலகளாவிய மேல்நாட்டு கல்விமுறைக்கு மாறியிருக்கின்றது
வெளிநாட்டு குழந்தைகளை போல அதிக சுமையின்றி அதிக அழுத்தமின்றி இயல்பாக படித்து கொண்டிருக்கின்றனர் இந்திய குழந்தைகள்
ஏன் திமுக தரப்பு புதிய கல்வி கொள்கையினை எதிர்த்தார்கள் என்றால் ஒரு எளிய உதாரணம் சொன்னாலே புரிந்துவிடும்
புதிய கல்விகொள்கை தேச அளவில் ஒரு பிணைப்பினை ஏற்படுத்துகின்றது, உதாரணமாக பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாநிலம் நட்பு மாநிலமாக அறிவிக்கபடும் அந்த இரு மாநிலங்களின் குழந்தைகளும் நட்பு மாநில கலாச்சாரத்தை அறிவார்கள்
ஒரு வகுப்பில் தமிழகமும் ஜம்முகாஷ்மீரும் நட்பு மாநிலமாக அறிவிக்கபட்டு காஷ்மீர குழந்தைகள் தமிழகம் பற்றி அதன் கலாச்சாரம் வாழ்வியல் உடைகள் உணவு பற்றி அறியும் அப்படியே தமிழக குழந்தைகள் காஷ்மீர் பற்றி அறிவார்கள்
அடுத்தடுத்த வகுப்பில் இது பஞ்சாப், உத்திரபிரதேசம் என மாறி மாறி வரும்
ஆக பள்ளிபடிப்பு முடிக்கும்பொழுது இந்தியாவின் இதர மாநிலம் பற்றி எல்லா இந்திய குழந்தைகளுக்கும் அடிப்படை புரிதலும் பற்றும் பிடிப்பும் ஏற்படும் இது தேசபற்றுக்கு வழிசெய்யும்
இதுகாலமும் தமிழகத்தில் ஈரோட்டு ராம்சாமி வைக்கம் வீரர், அண்ணா புரட்சியாளர் என படிக்கவைத்து ஆனந்தபட்ட தமிழக திராவிட கோஷ்டிக்கு இது எப்படி பிடிக்கும்?
எனினும் இப்பொழுது மாநில கல்வி அதே திராவிட பிடியில் இருந்தாலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைபடி இயங்கும் பள்ளிகள் உண்டு என்றாலும் மத்திய பாடதிட்டம் மிக சிறந்த கல்வி முறையாக நாட்டுபற்றும் தேச ஒருங்கிணைப்பும் நவீனகால வழிமுறைகளும் சிந்தனைதிறன் மிக்க கல்வியாக உள்ளது
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் மத்திய அரசின் உதவிபெறும் மத்திய பாடதிட்டபள்ளிகள் அதிகரிக்கபட வேண்டும் அதை மத்திய அரசு செய்யவேண்டும்
புதிய கல்வி கொள்கை எதிர்ப்பில் பெரும் தோல்வி அடைந்த திமுக தரப்பு இப்பொழுது நீட் தேர்வு விவகாரத்திலும் அதையே பெற முழு முயற்சியுடன் விளையாடிகொண்டிருகின்றது