ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள இந்த நூல் பல விதங்களில் முக்கியமானது. மூன்று பகுதிகளாக இந்த நூல் அமைந்துள்ளது. பிரபத்தி நெறியை “அனைவரும் கேட்குமாறு” ராமானுஜர் கூறவில்லை, தேர்ந்தெடுத்த சில வைஷ்ணவர்களுக்கு மட்டுமே கூறினார் என்ற ரீதியில் சில சம்பிரதாயவாதிகள் விவரிப்பதை ஆசிரியர் கடுமையாக மறுக்கிறார். தமது தரப்பிற்கு அடுக்கடுக்காக ஆதாரங்களைத் தருகிறார். “வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தைத் தாமே மேல்விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே”.. ஆசார்யன் என்ற சொல் இராமானுசன் ஒருவனையே குறிக்கும், இராமானுசனைக் கைகாட்டும் பணியைச் செய்பவர்களே மற்ற அனைத்து ஆசாரியர்களும்…

View More ஸ்ரீராமாநுஜரும் சமத்துவமும்: புத்தக அறிமுகம்

சமத்துவ மூர்த்தி ஸ்ரீராமானுஜர்

ஹைதராபாதில் ஸ்ரீ சின்ன ஜீயர் அவர்களின் அருட்தலைமையில் அமைந்து பிரதமர் மோதி அவர்கள் திறந்து வைத்த ஸ்ரீராமானுஜர் சிலைக்கு சமத்துவ மூர்த்தி (Statue of Equality) என்ற திருப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே மிகப்பொருத்தமானது என்று இந்த உரையில் அருமையாக விளக்குகிறார் வேத சாஸ்திர அறிஞரும் ஆசாரியருமான டாக்டர் ரங்கன்ஜி அவர்கள். ஆன்மீக சமத்துவம் என்று கூறிவிட்டாலே அதனால் சமூக, பொருளாதார சமத்துவம் வந்துவிடுமா என்று இந்து விரோத “முற்போக்கு” ஆசாமிகளின் கேள்வியையும் எடுத்துக் கொண்டு அதற்கும் அறிவார்ந்த வகையில் விடையளித்திருக்கிறார்….

View More சமத்துவ மூர்த்தி ஸ்ரீராமானுஜர்

இராமநுச கதி 

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்… பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்… அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ, ‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்…

View More இராமநுச கதி