காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்

B.R.மகாதேவன் பல சமயங்களில் எழுதியுள்ள 22 புத்தக விமர்சங்களின் தொகுப்பு இந்த நூல்.

காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல், பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை, வடகிழக்கு பிரிவினைவாதம், ஆர்.எஸ்.எஸ், இலங்கைப் பிரசினை என தமிழக, இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலுக்கு ஜடாயு முன்னுரை எழுதியிருக்கிறார்.

முன்னுரையிலிருந்து:

“இது ஒரு வழக்கமான புத்தக விமர்சன நூல் அல்ல. தேர்வு செய்யப்பட்டுள்ள புத்தகங்களின் வீச்சும், ஆழமும் பரந்துபட்டது. இதில் அலசப்படும் புத்தகங்களில் பாதிக்கு மேற்பட்டவை மொழிபெயர்ப்பு நூல்கள். சிந்தனைத் தேடலும், வாசிப்பில் ஈடுபாடும் கொண்ட தமிழ் வாசகனை முன்னிட்டே இதில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன என்றாலும், இந்த நூலின் கரிசனம் என்பது வெறுமனே “புத்தகம்” மற்றும் “வாசிப்பு” மட்டுமே சார்ந்தல்ல. இந்த தேசம், இதன் மரபார்ந்த விழுமியங்கள், இதன் ஆதார சுருதியான இந்துப் பண்பாடு, இவற்றின் மகத்துவம், இவை எதிர்கொள்ளும் அபாயங்கள் அச்சுறுத்தல்கள். இது அனைத்தையும் குறித்த எண்ணங்களும் தேடல்களுமே இந்தக் கட்டுரைகள் எழுதப்படுவதற்கு உந்துவிசையாக இருந்திருக்கின்றன. இந்தச் சிந்தனைக் கீற்றுகளே தமிழ் வாசகப்பரப்பிற்கு இத்தகைய தொகுப்பு அளிக்கும் பெருங்கொடையாக இருக்கும்”.

காஷ்மீர் முதல் ஈழம் வரை: 22 நூல் விமரிசனங்கள்
ஆசிரியர்: B.R.மகாதேவன்
வெளியீடு: LKM பதிப்பகம்
விலை: ரூ. 350

இணையம் மூலமாக இங்கே வாங்கலாம். தொலைபேசி வழி ஆர்டர் செய்ய: +91 92444 11119 (Dial for Books)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *