பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்

1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தற்போது தனது நாற்பத்தி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி இரண்டு ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று பேரியக்கமாக மாறி உலகின் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியா தொன்மையும் சாதனைகளும் நிறையப் பெற்று உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது. அந்நியப் படையெடுப்புகள் மற்றும் காலனியாட்சி சிதைவுகள் நமக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. அதன் விளைவாக வளம் குன்றி, நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நேரு அரசின் பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய அணுகுமுறை மற்றும் நேரு-லியாகத் அலிகான் ஒப்பந்த நடைமுறையில் பிரதமரின் போக்கு ஆகியன காங்கிரஸ் கட்சி தேசிய உணர்வோடு மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவில்லை என்பதை உணர்த்தின.

அவற்றைச் சரி செய்ய முயன்று தோற்றுப் போன மத்திய அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தனது பதவியிலிருந்து விலகினார். அதனால் தேச நலனை மையமாக வைத்துச் செயல்படக்கூடிய ஒரு கட்சி நாட்டுக்கு அவசியம் எனத் தேசியவாதிகள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பாரதிய ஜனசங்கம் 1951 ஆம் ஆண்டு திரு முகர்ஜி அவர்களைத் தலைவராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் முந்தைய அவதாரமான ஜன சங்கமும் அன்று முதல் அதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு, மண்ணின் கலாசாரத்தைப் பேணிக் காத்தல், கடைநிலை மனிதனைக் கருத்தில் வைத்து முன்னேற்றும் செயல்பாடுகள், எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம், சுதேசி அல்லது சுய சார்பு அணுகு முறைகள், உலக அளவில் தேசத்தை உயரச் செய்வது ஆகியன அதன் முக்கிய அம்சங்கள்.

1952 ஆம் வருடம் பிரதமர் நேரு ஜம்மு– காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவுடன் போட்ட ஒப்பந்தம் அந்த மாநிலத்துக்கென தனியான சட்டம், கொடி மற்றும் பிரதமர் பதவி ஆகியவற்றைக் கொடுத்தது. மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு நுழைய அனுமதி வாங்கும் முறை கொண்டு வரப்பட்டது.

அதை எதிர்த்து 1953 ல் முகர்ஜி அவர்கள் அங்கு நுழைந்த போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் காவலில் வைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் முடியும் முன்னரே அங்கு மர்மமான முறையில் காலமானார். எனவே தேசத்தின் முழுமையான ஒருங்கிணைப்புக்காக தனது 52 வயதில் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், கோவா –டையூ – டாமன் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு அரசுகளின் கீழ் நீடித்து வந்தன. அவற்றுக்கான விடுதலைகளுக்காக ஜன சங்கம் தீவிரமாகப் போராடி, உயிர்ப்பலி கொடுத்து, வெற்றி கண்டது.

ஆரம்ப முதலே பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான நேருவின் தேவையற்ற சமாதானப் போக்கை ஜனசங்கம் எச்சரித்து வந்தது. சீனாவின் ஊடுருவல்களை எதிர்த்து 1959-60 ஆண்டுகளில் தீவிரமாக குரல் கொடுத்தது. 1965 ல் பாகிஸ்தான் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஒரு இடத்தைப் பிடித்த பின்னரும் நேரு அவர்களுடன் சமாதானமாகப் போக விரும்பினார். அதை எதிர்த்து ஜன சங்கம் நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கூட்டங்கள் நடத்தியது.

அதே சமயம் பாகிஸ்தானுடன் போர் வரும் சமயங்களில் மத்திய அரசுக்கு முழு ஆதரவைக் கட்சி அளித்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு திரு வாஜ்பாய் அவர்கள் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகுக்கு உணர்த்தினார்.

திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 முதல் தேசத்தின் பாதுகாப்புக்கு அதிகபட்சமான கவனம் கொடுத்து வருகிறது. பாதுகாப்புக் கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்பட்டும், நவீன மயமாக்கப்பட்டும் வருகின்றன. எல்லைகளில் அத்து மீறுவோருக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது. பாகிஸ்தான் கோட்டைத் தாண்டி 2016 ல் நடத்தப்பட்ட ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ மற்றும் 2019- ல் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் நடத்தப்பட்ட’ ஏர் ஸ்ட்ரைக்’ ஆகியன அண்டை நாட்டை அச்சத்தில் வைத்துள்ளன. அதே போல சீனாவும் அடங்கிக் கிடக்கிறது.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நேருவால் திணிக்கப்பட்டது. அதனால் அங்கு தீவிரவாதம் பெருகி, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் துரத்தியடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். பெண்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

2019 ஆம் வருடம் மோடி அரசு சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ இரண்டையும் நீக்கி தேச ஒருங்கிணைப்பை உறுதிப் படுத்தியது. அதனால் அங்கு தீவிரவாதம் குறைந்து வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. மேலும் இடது சாரி தீவிரவாதம் வேகமாக குறைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வந்த பிரிவினைவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டு, அவை தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

இந்தியா பாரம்பரியமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்ட தேசம். ஆனால் சுதந்திரம் பெற்றதும் நேருவின் அரசு நாட்டுக்குப் பொருத்தமில்லாத அந்நிய சித்தாந்தை அடிப்படைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தியது. அதனால் நாட்டின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் 1954 ஆம் வருடமே ஜன சங்கம் சுதேசிக் கொள்கை அவசியமென அறைகூவல் விடுத்தது. 1965 ஆம் வருடம் ஒருங்கிணைந்த மனித நேய தத்துவம் கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது நமது தேசத்தின் பாரம்பரிய சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒட்டிய கலாசாரத்துடன் இணைந்த சமூக –பொருளாதார கோட்பாடாகும். அதை ஜன சங்கத்தை உருவாக்கிய முக்கிய தலைவரும் சிந்தனையாளருமான திரு தீனதயாள் உபாத்யாய அவர்கள் முன் வைத்தார். அதன் அடிப்படை கடைசி மனிதனும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும் என்பதாகும்.

பாரதிய ஜனதா தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் தொடர்ந்து ஏழை மக்கள், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினர் என நலிவடைந்த பிரிவினருக்குச் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் அவர்கள் பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர்.

உதாரணமாக மோடி அரசு ஏழை மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கில் ஜன தன திட்டம் என்னும் ஒன்றை 2014ல் ஆரம்பித்தது. இதுவரை அந்த திட்டத்தின் கீழ் 45 கோடி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தமாக 1,64,000 கோடி ரூபாய் வைப்புகளாக உள்ளது. மொத்த கணக்குகளில் 56 விழுக்காடு பெண்கள் பராமரிப்பவை.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்பது கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மக்கள் மற்றும் பெண்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ” எழுந்து நில் இந்தியா” திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஒவ்வொரு கிளையும் குறைந்தது ஒரு பட்டியலினத்தவர் அல்லது மலை வாழ் மக்கள் மற்றும் ஒரு பெண்மணிக்கு புதிதாக தொழில் துவங்க கடன் கொடுக்க வேண்டும்.

இலக்குகளை வைத்து திட்டங்கள் தீட்டி அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முடியுமாறு செயல்படுவது மோடி அரசின் தனித்தன்மை. அதனால் இப்போது நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை. கடந்த இரு வருடங்களில் மட்டும் ஐந்து கோடியே ஐம்பது லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் எண்பது லட்சம் புதிய வீடுகள் கட்டவும், மேலும் மூன்று கோடியே எண்பது லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், வேகமாக மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு துறைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் சென்ற நிதியாண்டில் 9.2 விழுக்காடு வளர்ச்சி விகிதத்துடன் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது.

ஒரு நாடு நீடித்த தன்மையுடன் சிறந்து விளங்க வேண்டுமெனில் சுயசார்பு என்பது அவசியம். அந்த வகையில் ‘ இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் தொடங்கி, அண்மைக் காலமாக சுய சார்பு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தி மோடி அரசு கொள்கைகளை வகுத்து வருகிறது. அதனால் உள்நாட்டு தயாரிப்புகள் அதிகமாகி, சீனா போன்ற நாடுகளிடமிருந்து வரும் இறக்குமதிகள் குறைந்து வருகின்றன.

கொரோனா காலத்தில் குறுகிய காலத்திலேயே உள் நாட்டில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் அதிகமாக 183 கோடி பேருக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மறைமுக வரிகளைச் சீரமைக்க மோடி அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மார்ச் 2022 மாதம் 1,42,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணியும், வெளிநாட்டு முதலீடுகளும் அதிக அளவில் உள்ளன.

இந்திய தேசத்தின் அடிநாதமாக விளங்குவது தனித்துவம் வாய்ந்த நமது பண்பாடு. அதனடிப்படையில் நமது மண்ணுக்கே உரித்தான கலாசார முறைகளைப் பேணிக் காப்பதற்குப் பாரதிய ஜனதா அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்லாண்டு காலமாக நாட்டு மக்கள் காண விரும்பிய இராமபிரான் ஆலயம் அவருடைய பிறப்பிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

சுதந்திரம் பெற்றது முதல் காலமாகவே காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆட்சியில் வாக்கு வங்கி அரசியல் பிரதானமாக இருந்து வந்தது. அதற்கு மாற்றாக எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவருக்குமான வளர்ச்சி என்பது பாரதிய ஜனதா ஆட்சியின் அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது. அண்மைக் காலமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடமும் நட்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் நமது நாட்டு நலன்களை மட்டுமே வைத்து நமது செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன. அதனால் தான் தற்போது நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போர் விசயத்தில் மேற்கு நாடுகளின் அழுத்தங்களையெல்லாம் மீறி நமது செயல்பாடு அமைந்துள்ளது.

2014 முதல் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் கால கட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் நாடு நல்ல முன்னேற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி, தேச பக்தி மிக்க அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், கடுமையான உழைப்பு ஆகியன நாட்டை உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதனால் நாட்டில் மொத்தம் பதினெட்டு மாநிலங்கள் – யூனியன் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. தற்போது மாநிலங்களவையில் நூறு இடங்களைப் பெற்று, முப்பது வருடங்களுக்கு அப்புறம் அந்த இலக்கினை அடைந்த பெருமையைப் பெற்றுள்ளது.

நிறைய வலிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நமது தேசம் இன்று உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, புதிய இந்தியாவை வடிவமைத்துக் கொண்டிருப்பதில் ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதாவின் பங்கு மிக முக்கியமானது. அதனால் பல தரப்பட்ட மக்களின் ஆதரவையும் அதிகம் பெற்று எழுபது வருட காலத்தில் உலகின் மிகப் பெரும் ஜனநாயக கட்சியாக உருவெடுத்துள்ளது. .

( ஏப்ரல் 6 பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள்)

4 Replies to “பாரதிய ஜனதா என்னும் பேரியக்கம்”

 1. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
  இருந்ததும் இந்நாடே – அதன்
  முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
  முடிந்ததும் இந்நாடே – அவர்

  சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
  சிறந்ததும் இந்நாடே – இதை
  வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
  வாயுற வாழ்த்தேனோ? – இதை
  வந்தே மாதரம், வந்தே மாதரம்
  என்று வணங்கேனோ?

  இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
  ஈந்ததும் இந்நாடே – எங்கள்
  அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
  அறிந்ததும் இந்நாடே – அவர்

  கன்னிய ராகி நிலவினி லாடிக்
  களித்ததும் இந்நாடே – தங்கள்
  பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
  போந்ததும் இந்நாடே – இதை
  வந்தே மாதரம், வந்தே மாதரம்
  என்று வணங்கேனோ?

  மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
  வளர்த்ததும் இந்நாடே – அவர்
  தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
  தழுவிய திந்நாடே – மக்கள்

  துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
  சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
  அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
  ஆர்ந்ததும் இந்நாடே – இதை
  வந்தே மாதரம், வந்தே மாதரம்
  என்று வணங்கேனோ? ”

  பாரதியின் பாடலை மனமார பாடிவிட்டுத்தான் இந்த நாளை நோக்க வேண்டும், இந்த நாள் சாதாரண நாள் அல்ல, பாரத தலையெழுத்தே மாறிய பொன்னாள்

  சுதந்திர இந்தியாவின் உண்மையான சுதந்திரத்தை நோக்கி இந்தியர் சிந்தை செலுத்திய பொன்னாள், பாரதியின் வாக்கெல்லாம் கனவாக நாள்குறித்த நன்னாள்.

  இந்திய திருநாடு ஆப்கானியர் எனும் அந்நியருக்கு எதிரான போராட்டத்தை 1000ம் ஆண்டுகளில் அதாவது முகமது கோரியின் காலங்களில் தொடங்கிற்று, 13ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆப்கானியரிடம் இருந்து நாயக்க அரசுகள் விடுவித்தாலும் தொடர்ந்து பாமினி சுல்தான்கள் எழ இந்தியா முழுமையும் ஆப்கானியரிடமே இருந்தன‌

  வீரசிவாஜி தீரா போர்களை விடுதலை வேட்கையில் நடத்தி பெரும் நெருப்பினை பற்றவைத்தான், அவன் சாம்ராயம் மொகலாயரை ஒடுக்கி கொண்டிருந்தது, சீக்கியரும் இன்னும் பலரும் அந்த விடுதலையினை தொடர்ந்த வேளையில் சரியாக களமிறங்கிய பிரிட்டிஷார் இந்த நாட்டை பிடித்தனர்

  அடுத்த 150 ஆண்டுகாலம் பிரிட்டிசாரோடு இந்திய மக்கள் மல்லுகட்டிய வேளையில் மிக சாதுர்யமாக அதுவரை இந்துக்கள் விடுதலை என போராடியதை “சாதி மதங்களை கடந்த இந்தியவிடுதலை” என காந்தி மூலம் மாற்றியது காலம் அல்லது வெள்ளையன் சூழ்ச்சி

  இந்த மதநல்லிணக்க இந்தியாவாவது முழுமையாக கிடைத்ததா என்றால் இல்லை, சுதந்திரம் நெருங்கும் பொழுது இந்திய மன்னர்கள் நடத்திய பெரும் போரின் நோக்கத்தின்படி இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தாலும் இந்து நாடாக மலரவில்லை

  அப்பக்கம் ஆப்கானிஸ்தான் நீண்டு பாகிஸ்தான் என வந்துவிட்டாலும் அதன் இன்னொரு கால் கிழக்கு வங்கத்தில் வலுபட்டாலும் இந்தியா தொடர்ந்து “மத நல்லிணக்க” நாடாகவே நீடித்தது

  உண்மையான சுதந்திரத்தின் பொருளை மக்கள் அறியாவண்ணம் இங்கு “மத நல்லிணக்கம்” “மதசார்பற்ற” எனும் வார்த்தை பிரயோகங்கள் இங்கு பிரபலமாயின, பல கோடி இந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாய் விரட்டி அடிக்கபட்டு பல லட்சம் பேர் செத்து இந்துக்கள் என்றால் சாக பிறந்தவர்கள் எனும் அவல நிலை உருவானபொழுது இதற்கா இந்துக்கள் அவ்வளவு பெரும் போரை நடத்தினார்கள் எனும் கேள்வி எழுந்தது

  ஆனால் கேள்வி எல்லோர் மனதிலும் இருந்ததே தவிர கேட்கும் அளவு காலம் வரவில்லை, தேச பிரிவினையின் வலிகள், கொன்று குவிக்கபட்ட இந்துக்களின் ரத்த வெள்ளத்தையெல்லாம் காந்தியின் மரணம் எனும் ஒரு சம்பவம் மறைத்திருந்தது

  கூடவே கம்யூனிஸ கட்சிகளும் வலுத்திருந்தன , தொழிலாளர் நிரம்பிய இந்தியாவில் அவை தங்களை ரஷ்ய குடிமக்களாக கருதிகொண்டிருந்தன‌

  எனினும் மெல்ல மெல்ல அதிருப்தி குரல்கள் கேட்க தொடங்கின, பெரும்பான்மை இந்துக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி சிறுபான்மையினரை பெரிதாக தாங்கிபிடிக்கும் குழப்பமான நேருவின் கொள்கைகள் விமர்சனத்துக்குள்ளாயின‌

  அப்பொழுது நேரு காஷ்மீரை கோட்டைவிட்டது அல்லது வேண்டுமென்றே பாதிகாஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுகொடுப்பது போல் நடந்துகொண்டது பெரும் பிரச்சினையினை ஏற்படுத்தியது, நாடெங்கும் அதிருப்திகள் பெருகின ஆனால் நேருவினை எதிர்க்கும் அளவு வலுவான கட்சிகள் இல்லை

  நேருவும் பாகிஸ்தானின் லியாகத் அலிகானும் காஷ்மீர் சம்பந்தமாக 1950ல் ஒரு ஒப்பந்தம் செய்யபட்டபொழுது காங்கிரஸில் இருந்த நாட்டுபற்றாளர்களே கொதித்தனர், காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் காஷ்மீரை முழுக்க இணைத்த நிலையில் பாகிஸ்தானுடன் பேச அவசியமே இல்லை என கொந்தளித்தனர், ஆனால் சமய்சார்பற்ற நேரு யார் பேச்சையும் கேட்காமல் பாகிஸ்தானுடன் உடன்படிக்கை செய்தார்

  அது காஷ்மீர் மட்டுமல்ல 1947 கலவரங்களை தொடர்ந்து எழுந்த சிக்கல்களை முடிக்கும் முயற்சி என அவர் சொல்லிகொண்டார் ஆனால் முடிவுகளை அவர் மட்டுமே எடுத்தார்

  அப்பொழுது மானமும் சுதந்திர இந்திய உணர்வும் இந்து அபிமானமும் கொண்ட ஒரு அமைச்சர் நேருவினை பகிரங்கமாக எதிர்த்து தன் பதவியினை ராஜினாமா செய்தார், ஒற்றை மனிதன் ஆலமரமாக நிற்கும் நேருவினை என்ன செய்யமுடியும், மாபெரும் காங்கிரஸை அவன் என்ன செய்யமுடியும் என அம்மனிதனை பரிதாபமாக நோக்கியது இந்தியா, காங்கிரஸ் இந்தியா

  “நான் என்னால் முடியுமோ அதை செய்வேன்” என சொல்லி வெளியேறிய அம்மனிதன் “ஜனசங்கம்” என ஒன்றை தொடங்கினார், காங்கிரசுக்க்கு மாற்று என சுதந்திர இந்தியா செய்த முதல் முயற்சி அதுதான்

  அதை செய்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி , 1951ல் அதை செய்தார்

  அவரின் போராட்டம் பெரிது , சிறிய சங்கமாக அவர் அதை ஏற்படுத்தி இந்திய கலாச்சாரம், இந்திய மதம், ஒருங்கிணைந்த இந்தியா என பெரிதும் பாடுபட்டார்

  1950களின் நிலை பல பிரிவினை குரல்கள் கேட்ட காலங்கள், தென்னக திராவிடநாட்டு சிந்தனை அப்பொழுது வேகமாக பரவிற்று, அந்த பிரிவினை குரலை ஒடுக்க கூட நேரு நினைக்கவில்லை, காஷ்மீர் நிலமை மிக மோசமானது

  சியாமா பிரசாத்தின் ஜனசங்கம் காஷ்மீருக்காக போராடியது, 1950களிலே அங்கு இந்துக்கள் விரட்டியடிக்கபட தொடங்கினர், அதை தடுக்க போராடிய ஜனசங்கத்தின் சியாமா பிரசாத் அப்படியே சிறைபட்டு 1953ல் இறந்தும் போனார்

  ஆம், இந்து பெரும்பான்மை இந்திய நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிரான கொடுமையினை எதிர்த்தவர் சிறைபட்டு செத்த விசித்திரமெல்லாம் நடந்தது, நேருவின் காலம் அப்படி இருந்தது

  சியாமா பிரசாத்தை அடுத்து ஜனசங்க தலைவரானார் தீனதயாள் உபாத்யா, இவர் காலத்தில் 1953ல் ஜனசங்கம் தேர்தலில் போட்டியிட்டது அப்பொழுது அது பெற்ற இடம் வெறும் மூன்று

  அதன் பின் வேகமாக சங்கம் வளர்ந்தது, வாஜ்பாய் போன்றோர் இணைந்து சங்கத்தை வழிநடத்தினர், இந்துக்களுக்கான உரிமைகளை அது ஒன்றுதான் பேசிற்று

  1967ல் அந்த ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யா மர்மமாக வெட்டி கொல்லபட்டார், அது ஜனசங்கத்துக்கான எச்சரிக்கை என்றாலும் வன்முறை ஏதுமின்றி தன் தேச சேவையினை ஜனசங்கம் தொடர்ந்தது

  பசுவதை தடை, தேசமுழுக்க ஒரு இணைப்பு மொழி, ஒருங்கிணைந்த இந்தியா, இந்து அடையாளம் மீட்டெடுத்தல் என அது தன் குரலை உயர்த்தி பிடித்தது

  இந்நிலையில்தான் இந்திரா காலம் தொடங்கிற்று, இந்துக்கள் விவகாரத்தில் அந்த அம்மையார் இன்னொரு நேரு கூடுதலாக சீக்கியரையும் பகைத்தார்

  மிசா காலத்தில் ஜனசங்கம் கடுமையாக போராடியது, மிசா கால கொடுமைக்கு பின் தேசம் இந்திராவினை புறம்தள்ளி ஜனதாகட்சிக்கு வாய்ப்பு கொடுத்தது, மொரார்ஜி முதல்வரானார் வாஜ்பாய் வெளியுறவுதுறை அமைச்சரானார்

  ஆனால் ஜனதா காங்கிரசுக்கு மாற்று பேசிற்றே தவிர கொள்கை அளவில் அது இன்னொரு காங்கிரசாக இருந்ததால் அதுவும் மொரார்ஜி நேருவினை விட மோசமான பெருந்தன்மை கொண்டவராக இருந்ததால் ஜனதாதளம் பிசுபிசுத்தது

  இனி காங்கிரசுக்கு எதிராக வலுவான தேசிய கட்சி இல்லை எனும் நிலையில்தான் 1980ம் ஆண்டு, இதே ஏப்ரல் 6ம் தேதி ஜனசங்கம் மற்றும் ஜனதாவின் தேசாபிமானிகளும் இணைந்து புதுகட்சி கண்டனர்

  வாஜ்பாயினை தலைவராக ஏற்ற அக்கட்சி “பாரதீய ஜனதா” என இதே நாளில் தொடங்கிற்று

  அக்கட்சி தன் போராட்டத்தை தொடர்ந்தது, அதற்கு அன்று மக்களிடம் பெரும் வரவேற்புமில்லை ஆதரவுமில்லை,இந்திய இந்துக்களெல்லாம் தாங்கள் இதர மதங்களை மதித்து மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து தங்கள் மதமும் அடையாளமும் அழிந்தாலும் பரவாயில்லை என சகிப்புதன்மை கொண்டவ்ர்களாக வாழ பிறந்தவர்கள் என நம்பிகொண்டிருந்த காலமது

  இந்திரா சீக்கியருடன் பெரிதும் முரண்பட்ட நேரம், பாரதீய ஜனதா சீக்கியரின் பக்கமே நின்றது

  இன்று பாஜகவினை சீக்கியர்கள் புறம்தள்ளலாம், மோடி என கரித்து கொட்டலாம் ஆனால் 1980களில் சீக்கியர்களுக்கு பக்கபலமாக பாஜகதான் நின்றது

  பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. ‘இந்து – சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்’ என்று சீக்கியத் தலைவர் தாராசிங் வாய்விட்டு சொல்லும் அளவு பாஜக அங்கு ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பாடுபட்டது

  ஆனால் பொற்கோவில் சம்பவம் அதை தொடர்ந்த இந்திரா கொலையாலும் தேசத்துக்கு எழுந்த இக்கட்டான நிலையிலும் பாஜக தவித்தது எனினும் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் அது சீக்கியர் பக்கம் நின்று தேச அமைதிக்கு பாடுபட்டது

  சீக்கியரை ஆதரித்ததால் அடுத்த தேர்தலில் பாஜக பெற்ற இடம் வெறும் இரண்டு தொகுதிகள், ஆம் 1984ல் அக்கட்சி வென்ற இடம் , முதல் தேர்தலில் அது பெற்ற இடம் இரண்டு

  “ஆண்டிகள் மடம்” “பண்டாரங்கள் கூடாரம்” என அக்கட்சி தமிழக திராவிட கும்பலால் விமர்சிக்கபட்டது அப்பொழுதுதான்

  ஆனால் அப்பொழுதும் அக்கட்சி சோர்ந்துவிடவில்லை எங்கெல்லாம் இந்துக்கள் பாதிக்கபடுகின்றார்களோ, எங்கெல்லாம் தேச ஒற்றுமைக்கு ஊறுவிளையுமோ அங்கெல்லாம் அது ஓடி ஓடி செல்லும்

  வடகிழக்கு மாகாணம், பஞ்சாப் என் ஓடிய அக்கட்சி தமிழகத்தின் மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுர சம்பவத்துக்கெல்லாம் ஓடிவந்து இந்து மக்களுக்கு உதவிற்று, அப்படித்தான் ஈழவிவகாரத்தில் கருணாநிதியோடு சேர்ந்து டெசோ அமைப்பில் பங்குபெற்றது

  ராஜிவின் காலங்கள் வலுவான காங்கிரஸின் அந்திம காலங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது, அவரின் கொடும் மரணத்துக்கு பின் இனி தேசம் முழுக்க குழப்பம் இந்தியா வலுவான தலைவன் இல்லை எனும் நிலையில் பாஜக மெல்ல மெல்ல வளர்ந்தது

  காங்கிரஸ் விழ விழ மெல்ல மெல்ல வளந்த கட்சி, 1997ல் ஆட்சியினை பிடித்து அசத்தியது

  1984ல் வெறும் 2 இடங்களில் இருந்த கட்சி அடுத்த 17 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்திருக்குமென்றால் எவ்வளவு உழைத்திருக்கும்?

  அடுத்த தேர்தலில் வலுவான எதிர்கட்சியாக அமர்ந்த பாஜக குஜராத் உள்ளிட்ட மாகாணங்களில் அசைக்க முடியா சக்தியானது, அங்கிருந்து மோடி எனும் தேச தலைவனை உருவாக்கியது

  இந்திராவுக்கு பின் வலுவான தேச தலைவன் இல்லை இனி வரமுடியாது என்பதை உடைத்து மோடியினை தனிபெரும் கட்சியாக நிறுத்தியிருப்பது பாஜக‌

  ஒரு விஷயம் எல்லோரும் ஒப்புகொள்ள வேண்டும்

  இன்றுவரை பாஜகவில் கோஷ்டி பூசல் இல்லை, நிரந்தர தலைவர் என யாருமில்லை, எல்லோருக்கும் வாய்ப்பும் உழைப்புக்கேற்ற பதவியும் கொடுக்கும் கட்சி அது

  ஊழல் என்பது அதில் இல்லை

  காஷ்மீர் இணைப்புக்காக உயிர்விட்ட முதல் தலைவனின் வழியில் இன்று காஷ்மீரை இந்தியாவோடு அதுதான் இணைத்திருகின்றது, ராமர்கோவில் உள்ளிட்ட தீரா சிக்கலை அதுதான் தீர்த்திருக்கின்றது

  இன்று இந்தியாவின் மிக பலமான கட்சியாக மிகபெரும் பலத்தோடும், இனி 100 வருடமானாலும் அசைக்க யாருமில்லை என கம்பீரமாக அமர்ந்திருக்கின்றது பாரதீய ஜனதா

  பாஜக என்பது 1980ல் ஆரம்பித்து வெறும் மதவெறி ஊட்டி இந்துக்களை ஏமாற்றி வளரும் கட்சி என யாராவது சொன்னால் அதனைவிட பெரும் மடத்தனம் இருக்கவே முடியாது

  அது ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நடந்த சுதந்திர போரின் தாக்கத்தில் உருவான கட்சி, ஆயிரம் ஆண்டுகளாக மன்னர்களும் எத்தனையோகோடி இந்துக்களும் போராடிய போராட்டத்தின் இன்றைய வடிவம்

  இந்தியா என்பது இந்துக்கள் தேசம் இங்கு இந்துக்கள் மரியாதையோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் , இந்து ஆலயமும் வழிபாடும் காக்கபட வேண்டும், இந்து கலாச்சாரம் நிலைக்க வேண்டும் என வாளேந்திய விஜயநகர பேரரசின் வடிவம்

  இந்துஸ்தான விடுதலைக்காக தன்னையே யாகநெருப்பாக்கி நின்ற வீரசிவாஜியின் வடிவம்

  புலிதேவன், கட்டபொம்மனில் தொடங்கி வேலு நாச்சியார், வேலுதம்பி தளவாய், மருதிருவர், ஜான்சிராணி, சந்திரசேகர ஆசாத், பகத்சிங் நேதாஜியின் ஆத்மா அங்குதான் இருக்கின்றது

  ஆன்மீகத்தால் ஒரு இந்து எழுச்சியினை ஏற்படுத்தினால் முழு விடுதலை சாத்தியம் என இந்திய விடுதலைக்கு இந்துமத எழுச்சியினை கொடுத்த விவேகானந்தரின் தவமும் யோகமும் அங்குதான் இருக்கின்றது

  பாரதி, வஉசி போன்றோரின் கனவும், சாவர்க்கர் வாஞ்சிநாதன் போன்றோரின் தியாகமும் அங்குதான் இருக்கின்றது

  அக்கட்சிக்கு வயது வெறும் 42 ஆக இருக்கலாம்

  ஆனால் அதன் வேர்கள் ஆயிரம் ஆண்டு பூர்வீகம் கொண்டவை, அந்த வேரில் இருந்து இந்து சுயராஜ்யம் எனும் தரு துளிர்த்தபொழுதெல்லாம் வெட்டினார்கள் ஆனாலும் அது அவ்வப்போது துளிர்த்தது

  அது விஜயநகர பேரரசாக, சிவாஜியின் ராஜ்யமாக இன்னும் பலவாக அடிக்கடி தளிர்ந்து நிழல் கொடுத்தது, பிரிட்டிசார் அதை வெட்டியபின் வளர்ந்ததை “சமய சார்பற்ற” மரம் என ஞானஸ்நானம் கொடுத்தார் நேரு

  அந்த பொய்யினை களைந்து இன்று பூரண இந்து தேசமாக அத்தேசம் மலர்ந்து கொண்டிருகின்றது, பாஜக எனும் கட்சி அந்த அதிசயத்தை செய்தது

  பாஜக என்றொரு கட்சிமட்டும் சரியான நேரத்தில் உருவாகி வலுவாக அமர்ந்திராவிட்டால் தேசம் இப்பொழுது மாபெரும் சிக்கலை சந்தித்திருக்கும், மிகபெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்

  தேசம் அக்கட்சியால் காக்கபட்டது , ஆயிரம் ஆண்டு போராட்டம் அக்கட்சியின் எழுச்சியால் வீணாகிபோகாமல் இன்று தேசத்தை நிறுத்தியிருக்கின்றது

  இந்துஸ்தானம் எப்பொழுதும் கடவுளின் தனி ஆசிபெற்ற நாடு

  இங்கு இந்த பாரத கண்டம் இக்கட்டுக்குள்ளாகும்பொழுதெல்லாம் ஒவ்வொரு அவதாரம் வந்து அந்த கண்டம் உடையாமல் காக்கும், அதன் கலாச்சார வேர்களில் காக்கும்

  ஆதி சங்கரர் முதல் சாணக்கியன் என எவ்வளவோ பேர் வந்தார்கள், பாண்டியர் சோழர் குப்தர் என பலர் வந்தார்கள்

  ஆன்மீகமும் அரசியலும் ஒரு குடையில் கொண்டு இத்தேசத்தை ஆண்டார்கள், ஒரு சக்தி அதை செய்தது

  சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் சரிந்தபொழுது இனி குழப்பம் மிஞ்சும் இந்த பரதகண்டம் உடைந்து சிதறும் பெரும் குழப்பம் அதிகரிக்கும் இந்துக்களுக்கு இனி ஏதுமில்லை என்ற காலத்தில் பாஜக மிக சரியாக வந்து தாங்கிற்று

  அக்கட்சியாலே இன்று தேசம் வளமாயும் பாதுகாவலாயும் உள்ளது

  உண்மையான தேசபற்றாளர்களால் உருவான அக்கட்சி மிக உன்னதமான தேசதலைவனை கொடுத்து தேசத்தை தாங்கி காவல்காத்து நிற்கின்றது

  42 வயதாகும் பாஜகவினை தேசம் வாழ்த்துகின்றது, மோடி எனும் அதிசிறந்த பிரதமரை கொடுத்து இனிவரும் காலங்களில் எல்லா பிரதமரையும் மோடியுடன் ஒப்பிட்டு பேசும் அளவு வலுவான அடையாளத்தை கொடுத்தற்காய் வாழ்த்துகின்றது

  ஜனநாயக கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாய் நிற்கும் அக்கட்சியினை வாழ்த்துகின்றது

  கட்சியின் பிதாமகன் வாஜ்பாய், அதை உயிருக்கு அஞ்சாது வளர்த்து கொடுத்த அத்வாணி இன்று பெரும் வளர்ச்சி கண்ட நிலையிலும் தனக்கென ஒரு கோஷ்டியோ தன் குடும்பத்து வாரிசுக்கு ஒரு பதவியோ ஒதுங்கியிருக்கும் அந்த மாண்புக்காய் வாழ்த்துகின்றது

  கட்சி என்பது குடும்பத்துக்காய் ஆட்சி என்பது தன் அடிமைகள் ஆளவும்தன் குடும்பம் வாழவும் என நினைக்கும் பலர்மத்தியில் நாடடுக்காய் இயங்குவது எப்படி ஊழலற்ற ஆட்சியாய் ஆள்வது எப்படிஎன்பதை நிரூபித்தற்காய் வாழ்த்துகின்றது

  இன்று தேசம் பலமாகவும் நலமாகவும் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையுடனும் நிற்பதற்கும், இந்து அடையாளம் துலங்கி காசி முதல் பல ஷேத்திரங்களும் ஆலயங்களும் ஒளிர காரணமானதுமான அக்கட்சியின் நிறுவண நாளில் தேசம் நன்றிகலந்த வணக்கங்களை சமர்பிக்கின்றது

  இப்பொழுது உலகின் சக்திமிக்க நாடாக, உலக நாடுகளெல்லாம் கவுரமமாக பார்க்கும் நாடாக, மிகபெரிய மாண்புடன் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது, அதன் எதிரிகளெல்லாம் மண்டியிட்டு நிற்கின்றனர்

  இந்த காலம் இனி நிரந்தரமாக தொடரட்டும், ஆயிரமாண்டு போராட்டத்தின் பலன் அது ஒன்றாகத்தான் இருக்கமுடியும், உண்மையான சுதந்திரத்தினை இந்தியாவுக்கு கொடுத்து அதன் பலனையும் கொடுக்கும் பாஜகவுக்கு தேசாபிமானிகள் சார்பாக ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்

  பாரதி தன் கோடங்கி பாடலில் பாடுவான், அதுதான் இந்நேரத்துக்கு சரியான வரிகள்

  “நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது
  சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
  சொல்லடி சொல்லடி சக்தி,மாகாளீ
  வேதபுரத் தாருக்கு (இந்தியருக்கு) நல்ல குறி சொல்லு

  தரித்திரம் போகுது செல்வம் வருகுது
  படிப்பு வளருது பாவம் தொலையுது
  படிச்சவன் சூதும் பாவமும் (நாட்டுக்கு) பண்ணினால்,
  போவான் போவான் ஐயோவென்று போவான்!

  வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
  தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
  சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
  யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
  மந்திர மெல்லாம் வளருது வளருது

  சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது
  தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
  எட்டு லச்சுமியும் ஏறி வளருது
  சாத்திரம் வளருது சாதி குறையுது
  நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
  பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
  வீரம் வருகுது மேன்மை கிடைக்குது
  சொல்லடி சக்தி மலையாள் பகவதி
  தர்மம் பெருகுது தர்மம் பெருகுது”

 2. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கெல்லாம் காரணம் இனவாதம் மதவாதம் என யாராவது சொன்னால் அது இந்த நூற்றாண்டின் மிகபெரும் காமெடியே தவிர வேறொன்றுமில்லை

  இலங்கையில் சிங்களர் பெருவாரிநாடு சந்தேகமில்லை , பவுத்தம் அதன் தேசிய மதமாக அங்கீகரிக்கபட்டிருக்கின்றது

  அங்கு ஆட்சி செலுத்துவோர் பெரும்பாலும் புத்தமதத்தவர் அல்ல, அங்குள்ள சட்டபடி புத்தமதம் சார்ந்தோர் அதிபராக முடியும், மதமும் கலாச்சாரமும் அப்பொழுதுதான் நிலைக்கும் என்ற ஏற்பாடு அது

  இன்றும் பல நாடுகளில் மன்னராட்சி ஏன் தொடர்கின்றது என்றால் முக்கிய காரணம் அரசமதம் என ஒன்று இல்லாவிட்டால் அது அழிந்துவிடும் என்பதே, அதனாலே பல நாடுகள் மன்னர்களை ஆதரிக்கின்றன‌

  அங்கு டட்லி சேனநாயகா முதல் ஜெயவர்த்தனே இன்றைய ராஜபக்சேக்கள் வரை யாரும் பிறப்பால் பவுத்தர்கள் அல்ல, அவர்கள் பிறப்பால் கிறிஸ்தவர்கள்

  இவர்கள் திறமையானவர்கள், கற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதால் தேர்தலில் போட்டியிட வருவார்கள் பெருவாரி பவுத்த சிங்களவரும் ஆதரிப்பார்கள், வென்றவர்கள் கடமைக்கு புத்தமதம் தழுவி சட்டபடி பவுத்தனாக ஆட்சியில் அமர்வார்கள்

  சிங்கள நாயக்கர்களின் குலதெய்வமான திருப்பதிபெருமாளையும் பார்க்க வருவார்கள்

  அங்கு மக்கள் இனவாதம் பிரிவினைவாதமெல்லாம் பேசவில்லை

  பெருவாரி வாக்கு வங்கிக்கு எல்லா நாட்டிலும் சில சலுகைகள் உண்டு மக்களாட்சியின் சாபம் அது, அதுவன்றி ஆட்சி அமைக்க முடியாது

  இலங்கையில் இனவாதம் மதவாதம் சிங்களவருக்கு தனி உரிமை என்பவர்கள் இந்தியாவின் இட ஒதுக்கீட்டையும், சில வகுப்பினருக்கான தனி சலுகைகளையும் வசமாக மறைப்பார்கள்

  இலங்கையில் நடந்தால் அது இனபாகுபாடு என்பதும் தமிழகத்தில் நடந்தால் “சமூக நீதி” என்பதெல்லாம் எவ்வகை நியாயமோ தெரியாது

  உண்மையில் இலங்கையின் சிக்கலுக்கு காரணம் இரண்டு

  முதலாவது கொரோனா காரணமாக அவர்களின் சுற்றுலா உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கபட்டது, இரண்டாவது இயற்கை விவசாயம் மூலம் சம்பாதிப்போம் என நாம் தமிழர் போல் கிளம்பியது

  இயற்கை விவசாயம் நல்லதுதான் சந்தேகமில்லை, பூமியின் தத்துவபடி அதன் ஆகசிறந்த விளைச்சல் நவீன விவசாயத்தை ஒப்பிடும்பொழுது குறைவு, இயற்கையின் விதி அது

  ஊசிபோட்டு பால்கறக்கும் மாட்டுக்கும் நாட்டு மாட்டுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது

  இயற்கை விவசாயம் வேண்டுமானால் சாகுபடி பரப்பு அதிகரிக்கபட வேண்டும், இப்பொழுதுள்ள மக்கள் தொகைக்கு இப்பொழுதுள்ள நிலங்களை விட ஐந்துமடங்கு நிலம் வேண்டும்

  அக்காலத்தில் தொடர்ந்து விளைநிலங்கள் ஏன் பெருக்கபட்டன என்றால் இதுதான்

  புதிதாக விவசாய நிலத்தை பெருக்காமல் இருக்கும் நிலத்திலே இயற்கை விவசாயம் என்பது விளைச்சலை சுருக்கும், இலங்கையில் இதுதான் நடந்தது

  இதையெல்லாம் தாண்டி அவர்கள் சிக்கிய விஷயம் சீனாவிடம் நெருங்கியது

  சீனா உலக அரசியலுக்கு புதிதான நாடு, கடன் கொடுப்பதும் அதை வசூலிப்பதும் அவர்களின் உரிமை என்றாலும் அந்த அணுகுமுறை மகா குழப்பமானது பலரால் புரிந்துகொள்ளமுடியாதது

  அமெரிக்கா, பிரிட்டனை போல் சீனாவினை அணுகித்தான் பாகிஸ்தான் குப்புற கிடக்கின்றது அதில்தான் இலங்கையும் சேர்ந்துவிட்டது

  ஹம்பந்தோட்டா, கொழும்பு துறைமுக முனையம், வட இலங்கையில் அனுமதி என இலங்கை சீனாவிடம் விழ அமெரிக்கா முகம் சுழித்தது

  அதுவும் குவாட் அமைப்பு, பிரான்ஸின் தனி சீன எதிர்ப்பு என காட்சிகள் மாறும்பொழுது பல நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சம்பாதித்தது

  இப்பொழுது அங்கு நடக்கும் கொந்தளிப்பு அரசுக்கு எதிரான மக்களின் போராட்டமாக உலகுக்கு தெரிந்தாலும் ராஜதந்திர மொழியில் “சீனாவிடம் சேராதே என்றால் கேட்டியா? அடிவாங்கு நல்லா வாங்கு..” என்பதே பொருள்

  அப்படித்தான் நடக்கும், அங்கு ராஜபக்சே அல்ல அந்த ஜெயவர்த்தன இருந்திருந்தாலும் இதுதான் நடக்கும்

  இலங்கையின் அமைவிடம் முக்கியமானது, இதனால் உலக அரசியலின் தாக்கம் அடிக்கடி விழும் , இப்பொழுது அதுதான் விழுகின்றது

  அதற்கு “மத நல்லிணக்கம்” “இன வெறி” “மதவெறி” என சாயம் பூசினால் அதெல்லாம் காரணமே அல்ல‌

  உக்ரைனும் ரஷ்யாவும் ஒரே இனம் ஒரே மொழிகுடும்பம், என்ன வெறியில் மோதுகின்றார்கள் என்றால் இவர்களிடம் பதிலே வராது

  சீனாவும் தைவானும் ஒரே இனம், ஏன் முறுகுகின்றார்கள்?

  அட இரு கொரியாக்களும் ஒரே இனம் ஒரே மொழி ஆனால் ஏன் சேரவில்லை என்றால் சுத்தமாக பதில் வராது

  இரு பாகிஸ்தானியரும் இஸ்லாமியர்கள் ஒன்றாகத்தான் தனிநாடு அடைந்தார்கள் பின் ஏன் 1971ல் மோதி கொண்டு பிரிந்தார்கள்?

  இந்த “நல்லிணக்க” கும்பலெல்லாம் திராவிட முகமூடிகள், இந்துமத‌ எதிரிகள் அன்றி வேறு யாருமே அல்ல

 3. அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருச்சிக்காரார். 18ம் நூற்றாண்டின் மிகசிறந்த தமிழ் அறிஞர், அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் தமிழிலக்கணம் , தமிழ்பாடல்கள் என எல்லாமே தமிழ்

  திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு “மகா வித்துவான்” எனும் பட்டத்தை வழங்கியது

  அவரின் தமிழ் அவ்வளவு அழகு, ஓலைசுவடிகள் புழக்கத்தில் இருந்த காலத்திலே சுமார் 70 நூல்களை எழுதினார், பெரியபுராணத்துக்கு புதுவடிவம் கொடுத்து மக்களிடம் கொண்டுவந்ததில் அவருக்கு மிகபெரிய பங்கு உண்டு

  ஆன்மீகமும் தமிழும் தன் இரு கண்களாக வாழ்ந்த அதி உன்னத தமிழ் அறிஞர் அவர், 18ம் நூற்றாண்டி அவர் அளவு தமிழ்தொண்டு இன்னொருவர் செய்திருக்கமுடியாது

  மிகச் சிறந்த அறிவாளியான அவர் தமிழ்பால் இருந்த பற்றால் பல கனவுகளை அவர் வைத்திருந்தார்

  ஆனால் காலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 1850களில் அச்சுகலை பெரிதாக இல்லை

  தன் கனவுகளை எல்லாம் தன் மாணவன் மீது இறக்கிவிட்டு சென்றார், அந்த மாணவன் அவரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து ஏட்டில் இருந்த தமிழ் பொக்கிஷங்களை எல்லாம் அச்சிக்கு கொண்டுவந்தான்

  அவர்தான் உ.வே சாமிநாதய்யர்

  நல்ல ஆசிரியரின் கனவு அந்த மாணவன் மூலமே நிறைவேறிற்று

  அந்த நல்ல ஆசிரியர் மீனாட்சி பிள்ளைக்கு இன்று பிறந்தநாள், தமிழ் உலகில் மறக்கமுடியாத மனிதர் அவர்.

  தமிழுக்கு அவர் அளவு தொண்டுசெய்தவர் கடந்த 300 ஆண்டுகளில் யாருமில்லை, ஆனால் அந்த உத்தம தமிழரை தெரியாமல் தமிழுக்கு உழைத்தவர் ராம்சாமி, பராசக்தி வசனம் எழுதிய கருணாநிதி என்ற அளவு இங்கு நிலமை கடுமையாக மாற்றபட்டிருப்பதில்லாம் தமிழன்னை தலைவிரித்து தற்கொலை செய்யுமளவு அலங்கோலம்

  ஏன் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழகத்தில் மறைக்கபட்டார்?

  ஒன்றுமில்லை , அவர் எழுதிய 75 நூல்களுமே திருவாரூர்த் தியாகராசலீலை முதல் கோவிலூர் புராணம் வரை எல்லாமே சிவபெருமான் பெருமைகள், சிவதல பெருமைகள், சைவ மத மகிமையினை சொல்லும் பெரும் சிறப்பான நூல்கள், அதுவும் அழகு தமிழில் சொல்லபட்ட அற்புதமான நூல்கள் என்றபின் எப்படி திராவிட தமிழகத்தில் அவரைபற்றி பேசவிடுவார்கள்?

 4. ஆம் அதை நாம் ஒப்புகொள்கின்றோம், கச்சதீவில் அந்த மிகபெரிய கொடுமை நடந்ததை வரலாறு எழுதி வைத்திருக்கின்றது

  கச்சதீவு முன்பு ராமநாதபுரம் சேதுபதிகளுக்கு சொந்தமானது. முத்து சங்கு குளித்தலுக்கு அந்த தீவு பயன்பட்டது, கச்சம் என்றால் ஆமை என்பதால் ஆமைகள் நிரம்பிய தீவு கச்சதீவானது

  ராமேஸ்வரத்தை போல அங்கும் ஒரு சிவன் கோவில் முதலில் இருந்தது, அதனை சேதுபதி மன்னர்கள் கட்டி பராமரித்தனர்

  16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் வங்ககடலில் கால் வைத்தபொழுது இலங்கையிலும் தென் தமிழக கடற்கரையிலும் பல பகுதிகள் அவர்கள் கட்டுபாட்டில் வந்தன, நாயக்க மன்னர்களிடம் வலுவான கடற்படை இல்லாதது, சேதுபதி மன்னர்களும் கடற்படையில் கவனம் செலுத்தாது போன்ற காரணங்களால் கடல் பாதுகாப்பும் இதர விஷயங்களையும் போர்ச்சுகீசியர் எளிதில் பெற்றனர்

  அவர்கள் முதலில் குத்தகைக்கு பெற்ற இடங்களில் கச்சதீவும் ஒன்று

  கால்வைக்கும் இடமெல்லாம் பெரும் மதமாற்றம் செய்யும் போர்ச்சுகீசியர் இலங்கையிலும் தென் தமிழகத்திலும் ஏகபட்ட இந்து ஆலயங்களை கிறிஸ்தவ ஆலயமாக்கினார்கள்

  கண்ணகி ஆலயம் பல முன்பு இலங்கையில் இருந்தன அவையெல்லாம் மாதா கோவில்களாயின‌

  அப்படியே கச்சதீவில் சிவன் கோவில் இடிக்கபட்டு அந்தோணியார் கோவில் எழும்பி இன்றுவரை நிலைத்து நிற்கின்றது திருவிழா எல்லாம் உண்டு

  இந்திய தமிழகத்திற்கு தோமா வந்தார் என்ற கட்டுகதையினை பரப்பிய போர்ச்சுகீசியர் இலங்கைக்கும் அவர் வந்தார் என கதை பரப்பி வைத்திருக்கின்றது, இன்றும் தோமா இலங்கைக்கு வந்தார் மதம் பரப்பினார் என நம்பும் கூட்டம் உண்டு

  இதைத்தான் இலங்கையில் மறவன்புலவு சச்சிதானந்தம் வரை பலர் சொல்கின்றார்கள், இன்னும் பலர் சொல்கின்றார்கள்

  கச்சதீவில் இருந்த சிவாலயம் பெயர் கச்சேந்திரநாதர் ஆலயமென்றும், அங்கிருந்த சிவாலயத்தை போர்ச்சுகீசியர் தகர்த்தபின்னும் சூலம் வைத்து இந்துக்கள் வழிபட்டனர் பின் அது நின்றுபோயிற்று என்பதும் அவர்களை போன்றவரின் வாதங்கள்

  இந்தியாவிலும் இலங்கையிலும் வலுவான இந்துதலமை இல்லாததால் இதையெல்லாம் யாரும் பேசுவதில்லை

  கச்சதீவு 1921ல் இந்திய பகுதியாக காட்டபட்டது, 1973ல் இந்திரா தன் அணுகுண்டு சோதனை, திரிகோணமலை துறைமுகம் என பலவற்றுக்காக அதனை இலங்கைக்கு விட்டு கொடுத்தார் அதாவது உரிமையினை விட்டு கொடுத்தார்

  இப்பொழுதும் கச்சதீவில் சிவன் கோவில் உண்டு என ஈழசைவர்கள் சொல்வதும் இல்லை போர்த்துகீசியர் புதுகோவில்தான் கட்டினர் என மதமாறிய தரப்பு சொல்வதும் ஈழம் பக்கம் வாடிக்கை

  ராமேஸ்வரம் தனுஷ்கோடியெல்லாம் சிவாலயம் இருக்கும் நிலையில் கச்சதீவிலும் சைவ ஆலயமே இருந்திருக்க வேண்டும், காரணம் போர்த்துகீசியர் புது கோவில் கட்டி வழக்கபட்டவர் அல்ல, அப்படி புதிதாக கட்டினால் பழமை மதம் வெளிதெரியும் என்ற அச்சத்தில் பழைய இந்துகோவிலை அப்படியே கிறிஸ்தவ கோவிலாக்கி அங்கு இந்து அடையாளமே இல்லாமல் செய்வதில் வல்லவர்கள்

  அதை பல இடங்களில் செய்தார்கள், இந்து மக்கள் இருக்கும் இடத்திலே செய்தவர்களுக்கு ஆளில்லா கச்சதீவில் செய்வது மிக கடினமாக இருந்திருக்குமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *