காஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முன்வைத்து

ஒத்திசைவு ராமசாமி அவர்கள் எழுதியுள்ள முக்கியமான பதிவு இது. ஆங்கிலத்தில் ஓரளவு பரவலாகவே வாசிக்கக் கிடைக்கும் இந்த விவரங்களைத் தமிழில் தொகுத்தளித்துள்ள ஒ.ரா. அவர்களுக்கு நன்றி. தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வரலாற்று உண்மைத் தன்மை மற்றும் பின்னணி குறித்து அறிய விரும்புபவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய பதிவு.

பதிவின் சுட்டி இங்கே.

பதிவிலிருந்து:

“ஆவணபூர்வமாகவே இது ஏழாம் துரத்தியடித்தல்/’புலம் பெயர்தல்’ – பலர் நினைப்பது போல இது திடுதிப்பென்று 1990ல் ஏற்படவில்லை; கடந்த பல நூற்றாண்டுகளாகவே (அயோக்கிய ‘மெய்ஞான’ ஸூஃபிகள், அல்லாஹ் சுழி போட்டு ஆரம்பித்த அட்டூழியமிது!) இது தொடர்ச்சியாகச் செவ்வனே நடந்து வருகிறது. துரத்தியடிக்கப் பட்டவர்கள் – சுமார் 4-7 லட்சம் பண்டிட்டுகள் – பல காத்திரமான கணக்கெடுப்புகளின் படி, இது சுமார் 6 லட்சத்தில் இருக்கிறது. அதாவது ஆறு லட்சம் சோகக் கதைகள். படத்தில் நான்கு குடும்ப நிகழ்வுகளின் சோகங்களைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்..

பல கொடூரங்கள் நடந்தேறின: முஸ்லீம் பக்கத்து வீட்டுக் காரர்களால், சுட்டப்பட்டு – ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட பண்டிட்டுகள். அபயம் கொடுக்கிறேன் எனச் சொல்லி ஏமாற்றப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பண்டிட்டுகள். அபகரிக்கப்பட்டு மதமாற்றம் செய்து சீரழிக்கப்பட்ட பண்டிட் இளம்பெண்கள். தகப்பனுக்கும் தாய்க்கும் எதிரில் அவர்களுடைய பெண்குழந்தைகள் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணரப்பட்டது. கணவனுக்கு எதிரில் கும்பல்கும்பலாக மனைவி கற்பழிக்கப் படுவது; அச்சமயம், அவன் கண்ணை மூடவிடாமல் செய்வது. மனைவிக்கு எதிரில் கணவனைச் சித்திரவதை செய்து கொல்வது. ஹலால் வகையில் அல்லாஹூஅக்பர் (‘அல்லாஹ் தான் முதன்மையானவர்’) கூக்குரலுடன் கழுத்தை அறுத்தல்…

பெருமளவில் இந்த அட்டூழியங்களில் முஸ்லீம் சிறுவர்களும், பெண்மணிகளும் ஈடுபட்டது.

.. தொடரத் தொடர வேதனை மிகும்; இவை அனைத்துக்கும் அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இந்த அட்டூழியங்கள் தொடர்பாக, ஒரு விஷயம் கூட ஊதிப் பெருக்கப் படவில்லை; மாறாக பலப்பலபல விஷயங்கள் குறைத்தே காட்டப்பட்டுள்ளன. டயலாக், ஓயாத பேச்சுகள்/உரையாடல்கள், மேடைப்பேச்சு இவற்றைத் தவிர அனைத்து விஷயங்களும் நடந்தவைகளின் நீர்க்கடிக்கப்பட்ட சோகங்கள்தாம்… “

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

One Reply to “காஷ்மீரில் இஸ்லாமிய ஜிஹாத் கொலைவெறித்தனத்தின் வரலாறு, பிரத்யட்ச உண்மைகள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முன்வைத்து”

  1. *கன்னட சிற்பி*

    *கர்நாடகாவைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராமசாமியும் சமகாலத்தவர்கள்*
    .
    இதில் *கன்னட விஸ்வேஸ்வரர் ஒரு அய்யர்*. அக்காலத்திலேயே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்.
    *மிகச்சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்டதொலைநோக்கும் கொண்டவர்*. *அவரின் ஆற்றலும் அறிவும் அவரை* *திவான் எனும் நிலைக்கு* *உயர்த்தின*
    அன்றைய மைசூர் சமஸ்தானம் பின்தங்கித்தான் இருந்தது. காவேரியின் பிறப்பிடம்
    என்றாலும் சொல்லிக்கொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை.

    இது போக *தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது*.

    மன்னரும் தலையில் அடித்துக்கொண்டே கட்டிக்கொண்டிருந்தார்.

    *விஸ்வேஸ்வரய்யர் அதைத் தடுக்க யோசனை சொன்னார். இந்த நஷ்ட ஈட்டுக்கு பதிலாக அணை கட்டி, நம் பக்கம் காவேரியினை திருப்பினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொன்னார்*.

    *அதே நேரம் தமிழக நலன் காக்க மேட்டூர் அணை திட்டம் பற்றியும்* அவர் சொன்னார்.

    *காவேரியின் அணைகளில் மேட்டூர் அணைதான் குறிப்பிடத்தக்கது*.

    அதுகூட *காமராஜரின் புண்ணியத்தில் உருப்பெற்று இன்று வரை நம்மை ஓரளவு காப்பாற்றுகிறது.*

    விஸ்வேரய்யாவின் சிந்தனையினை ஏற்றுக்கொண்ட சமஸ்தானம் செழித்தது. மாபெரும் ஆலைகளும் விவசாய நிலங்களும் செழித்து வளர்ந்தன‌.
    *சிறு கிராமான பெங்களூர், அதாவது 18ஆம் நூற்றாண்டில் சென்னை மதராசப்பட்டினம் எனக் கொண்டாடப்பட்ட காலத்தில், சிறு கிராமமாக இருந்த பெங்களூர் அசுரவளர்ச்சி பெற ஆரம்பித்தது.*
    மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வரும் பொழுதும் கன்னட சட்டசபையான “*விதான சவுதா*” அவரே திட்டமிட்டுக் கொடுத்தார்.

    *இன்று பெங்களூரும் மற்றும் முழு மாநிலமும் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றது* என்றால்,
    *எந்த தஞ்சாவூர் பக்கம் இருந்து வெள்ளத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டினார்களோ, அவர்களையே தண்ணீர் தா என கதறவைத்திருக்கிறது* என்றால் அதற்கு காரணம்…… *விஸ்வேசரய்யர்*.

    *பெங்களூர் இன்று உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று என்றால் அதற்கு காரணமும் அவரே*.

    *இது கன்னட நிலை.*

    *விஸ்வேஸ்வரய்யாவை “அய்யர்” என மதித்து அவரின் அறிவுக்காக கன்னடம் தலைவனாக்கி வளர்ந்த பொழுது*…..

    *தமிழகம் ஒரு முட்டாளை தலைவன் எனச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர் பெயர் ஈரோட்டு ராமசாமி.*

    * கன்னடதேசம் படிப்படியாக விவசாயம், தொழிலகம், தேசியம், இந்தி படித்தல், மாநில முன்னேற்றம் என வேகமாக இருந்தபொழுது*

    இங்கே
    *இந்து எதிர்ப்பு*,
    *இந்திய எதிர்ப்பு*,
    *மாநிலத்தை நாசமாக்குதல்* என செய்துகொண்டிருந்தார் *ராமசாமி*.

    அங்கே *ஒரு பிராமணனை அறிவாளி* எனக் கொண்டாடி அவர்கள் வேகமாக வளர்ந்தபொழுது,
    *பார்ப்பானிய எதிர்ப்பு* எனச் சொல்லி *இங்கு அறிவாளிகளை விரட்டிவிட்டு அயோக்கியர்கள் சூழ வலம் வந்தார் ராமசாமி*.
    *காவேரியில் அந்தக் கன்னடர்கள் அணைகட்டி, அணைமேல் அணைகட்ட திட்டமும் வைத்திருக்க*,

    இங்கே *வெட்டிப் பகுத்தறிவு*, *வேடிக்கை இந்து எதிர்ப்பு* எனச் சொல்லித் *தமிழனை முட்டாளாக்கிக் கொண்டிருந்தார் ராமசாமி*.

    *இன்று கர்நாடகம் அந்த பிராமணர் போட்ட பாதையில் செழித்து வளர்ந்து கணிப்பொறி முதல் விவசாயம் வரை முன்னணியில் நிற்கின்றது.*

    ஆம். *18ம் நூற்றாண்டில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் இன்று உலக நகராயிற்று*,

    ஆனால் அன்றே உலகப் பெருநகராக இருந்த *சென்னை இன்று கூவம் ஓடும் அளவு நாசமாயிற்று*.

    *அந்த அய்யரைக் கொண்டாடிய மாநிலம் இன்று நீரில் செழித்து முப்போகம் விளைவிக்கின்றது*.
    *பிராமணனை விரட்டி அடித்த தஞ்சை டெல்டா இன்று நீருக்கு கதறிக் கொண்டிருக்கிறது*.

    *ஒரு அறிவாளியினை அவன்* *சாதி தாண்டி மதம் தாண்டி*
    *இந்தியன்* எனக் கொண்டாடிய மாநிலம் முன்னணியில் இருப்பதும்,

    *பார்ப்பான், இந்து எதிர்ப்பு* எனக் *காட்டுமிராண்டித்தனம் செய்த ஒரு கயவனை பெரியான்* என கொண்டாடி, அவனுக்கு ஜால்ரா அடித்தவனை *பேரறிஞன்* எனக் கொண்டாடிய மாநிலம் நாசமாகிக் கொண்டிருக்கின்றது.

    *இப்பொழுது பெங்களூர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல்*
    *குளிரூட்டப்பட்ட ரயில் நிலையமாய்* இன்று திறக்கப்படுகின்றது.

    ஆனால் *ராமசாமியின் தமிழகம் பழைய வெள்ளையன் கால கட்டடத்துக்குப் புரட்சி தலைவன் பெயரை வைத்துப் பல்லிளித்துக் கொண்டிருகின்றது*.

    *விஸ்வேஸ்ரய்யர் எங்கள் தந்தை எனச் சொன்ன கன்னடன், இன்று பல துறையில் முன்னேறி நாட்டுக்கு வழிகாட்டுகின்றான்*.

    *ராமசாமி பகுத்தறிவுக்குத் தகப்பன் எனச் சொன்ன தமிழகக் கோஷ்டி ஒரு குவாட்டருக்கும், பிரியாணிக்கும் சில நூறு ரூபாய் பணத்துக்கும் ஏங்கி கோஷம் போட்டு அலைகின்றது*.

    *தன்னலமற்ற அறிவாளியினைக் கொண்டாடும் இனம் செழிக்கும் என்பதற்கும், அரைக்கிறுக்கு காட்டுமிராண்டிக் கிழவன் ஒருவனைக் கொண்டாடும் சமூகம் உருப்படாது என்பதற்கும் கன்னடமும் தமிழகமும் மிகச் சிறந்த உதாரணங்கள்*.

    *அந்த பிராமணன் எவ்வளவோ கட்டடமும், தொழிற்சாலையும், பெரும் அணைகளும் கட்டினான்*.

    *ஈரோட்டு ராமசாமி வளர்ப்பு மகளான மணியம்மையினைக் கட்டினான்..*.

    *அந்தம்மையை வைத்து வீரமணி என்பவன் பல கல்லூரிகளையும் மாளிகைகளையும் கட்டினான்*.

    *அவன் வாரிசுகள் மட்டும் இன்று நோகாமல் அவற்றை அனுபவிக்கின்றனர்.*

    இதுதான் தமிழகத்தின் தீரா சாபத்திற்குக் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *