ம(மா)ரியம்மா – 5

This entry is part 5 of 14 in the series ம(மா)ரியம்மா

பாதிரியார் முன்னால் வந்து பேச ஆரம்பிக்கிறார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் தமிழர்களின் ஆதி தெய்வ வாக்கு. பிராமணர்கள் வந்த பின்னர்தான் பல தெய்வங்களை உருவாக்கி புராணங்களையும் மூட நம்பிக்கைகளையும் உருவாக்கி மக்களை ஏய்த்து ஒடுக்கிவிட்டார்கள். ஓரிறைக் கொள்கை கொண்ட ஆப்ரஹாமிய மதங்களே தமிழர்களின் இறையியலுக்கு மிகவும் நெருக்கமானவை. பிராமணர்களின் இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதே தமிழர்களின் மீட்சிக்கான ஒரே வழி.

கிறிஸ்தவர் பக்கமிருந்து அல்லேலூயா முழக்கம் கேட்கிறது. முஸ்லிம்கள் பக்கமிருந்து அல்லாஹு அக்பர் என்ற முழக்கம் உரத்து ஒலிக்கிறது. இந்துக்கள் மெள்ள இதை வேடிக்கை பார்த்தபடியே சிரிக்கிறார்கள்.

பாதிரியார் நிலைமை மெள்ள கை நழுவிச் செல்வதைப் பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம் முப்பாட்டன் சொன்னது யாரை மனதில் கொண்டு தெரியுமா… இன்று அந்நிய தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே அந்த ஆப்ரஹாமிய மதத்தினரைத்தான் தமது கேளிர் என்று சொன்னார்கள். ஜெருசலேமும், நாஸரத்தும் நமது ஊர் என்பதைத்தான் யாதும் ஊரே என்று சொன்னார்கள். இந்திய மொழிகளில் வேதாகமம் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது தமிழில்தான்.

ஹஜ்ஜியார் இடையில் புகுந்து பேச ஆரம்பிக்கிறார்.

இந்த மொழிபெயர்ப்பு 17-ம் நூற்றாண்டில் நடந்தது. ஆனால், ஏழாம் நூற்றாண்டிலேயே அதாவது முஹம்மது நபிகள் அவர்களின் காலத்திலேயே இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் முதன் முதலாக பள்ளிவாசல் கட்டப்பட்டது தெரியுமா?

பாதிரியார் அதிர்ச்சியில் உறைகிறார்.

ஏழாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பள்ளிவாசலா?

ஆமாம். சேரமான் பள்ளி. அவர்தான் முதன் முதலாக இஸ்லாமைத் தழுவிய தமிழர். முஹம்மது நபியால் மதம் மாறியவர். மெக்காவுக்குச் சென்று வந்த முதல் இந்தியர்.

சேரமான் பள்ளியா. அது சமணப் பள்ளியாக இருக்கப்போகிறது ஹஜ்ஜியாரே.

அதெல்லாம் இல்லை. எங்கள் பள்ளிவாசல்தான்.

தமிழகத்தில் இருக்கும் பள்ளிப்படைகள் எல்லாமே முன்பு பள்ளிவாசலாக இருந்ததுதான் என்றுகூட அடுத்ததாக உருட்ட ஆரம்பிப்பீர்கள் போலிருக்கிறது.

அதுதானே உண்மை. மதராஸ் என்ற பெயர் கூட இந்தியாவில் முதன் முதல் மதரஸா அமைந்த இடம் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களுக்கு ஞானக் கல்வி கிடைத்த இடம் பள்ளிவாசல் என்பதால்தான் இன்று கல்விக்கூடங்களுக்கு பள்ளிக்கூடம் என்ற பெயரே வந்திருக்கிறது என்கிறார் ஹஜ்ஜியார்.

இதைக் கேட்டதும் பாதிரியார் கிட்டத்தட்ட மயங்கி விழுந்தவர் போல் ஆகிவிடுகிறார்.

பொதுவாக நீங்கள் இப்படிப் பேசமாட்டீர்களே ஹஜ்ஜியாரே என்ன ஆயிற்று இன்று?

நான் பேசியிருக்கமாட்டேன்தான். ஆனால், நீங்கள் பாட்டுக்கு தமிழர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்தான் என்பதுபோல கிறிஸ்தவத்துக்குத் திரும்பவேண்டும் என்பதுபோலவும் பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது. அதுதான் நானும் உங்களைப்போல் கொஞ்சம் பேசிப் பார்த்தேன்.

நான் சொன்னதில் என்ன பிழை இருக்கிறது? இயேசு நாதரின் சீடர் தாமஸ் தமிழகத்துக்கு வந்ததும் திருவள்ளுவருக்கு கிறிஸ்தவ வேதங்களைப் போதித்ததும் உண்மையில்லையா என்ன..? அந்தப் புனிதரை நமது பொது எதிரியான மயிலாப்பூர் பிராமணர்கள் கொன்று புதைத்தது உண்மையில்லையா என்ன?

எங்களுக்கு இப்படியான பூர்வகாலத் தொடர்புகள், வரலாறுகள், காரண காரியங்கள், கதைகள் எல்லாம் தேவையில்லை. எங்கள் மதத்துக்கு மாறு என்று சொல்வோம். அமைதியாகச் சொல்லும்போதே மாறிவிட்டால் அமைதி மார்க்கமாகவே இருந்துவிடுவோம். இல்லையென்றால் மயான அமைதியை உருவாக்குவோம். உங்களுடைய இந்த அணுமுறை எங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை என்று பாதிரியின் காதில் மெதுவாகச் சொல்கிறார். இவர்களுடைய உரையாடலைப் பார்க்கும் மூப்பர், விவாதத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் குறுக்கிடுகிறார்.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 4ம(மா)ரியம்மா – 6 >>

5 Replies to “ ம(மா)ரியம்மா – 5”

 1. ஆப்கானியர் ஆட்சியில் பல இந்து ஆலயங்கள் இந்துக்கள் புராண தலங்கள் அவர்கள் வழிபாட்டு தலமாக மாற்றபட்டன என்பது ஒன்றும் ரகசியமல்ல ஒரு இனம் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் பொழுது இது இயல்பாக நடப்பது

  அடிமைபட்ட இனம் தன்னை மீட்டெடுத்தால் அடையாளங்களை மீட்கும் இல்லையேல் பண்டைய அடையாளம் அற்றுபோகும்

  ரோம், ஏதென்ஸ், எகிப்து, மெசபடோமியா போன்ற பண்டைய அடையாளங்கள் இப்படித்தான் மறைந்து ஒழிந்து போயின‌

  இந்துக்களின் தலைநகரான காசிக்கும் அதே சோதனை பவுத்தகாலத்தில் வந்தது இந்துமதம் அதை மீட்டு காசியினை தனதாக்கி கொண்டது, இரண்டாம் சோதனை ஆப்கானியர் காலத்தில் வந்தது

  அதுவும் மொகலாயர் காலத்தில் இது வலுவானது ஆனாலும் இந்துக்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார்கள், குமரகுருபரர் எனும் தமிழ்சித்தர் 16ம் நூற்றாண்டில் காசிக்கு சென்றதும் ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷிக்கோ முன் புலியில் அமர்ந்து உருதுபேசி காசி ஆலயத்தை மீட்டு மடம் அமைக்க இடம் வாங்கியதும் வரலாறு

  காசி ஆலயம் மீட்கபட்டாலும் நாளைடைவில் சுருக்கபட்டது, அதுவும் சிவாஜியின் எழுச்சிக்கு பின் காட்சிகள் இன்னும் மோசமாயின‌

  அப்படி எழுந்ததுதான் காசியின் ஞானவாபி மசூதி

  1660 வரை காசியில் அந்த ஞானவாபி மசூதி இல்லை, அது 1666ல் சிவாஜி அவுரங்கசீப்பின் கடும் காவலில் இருந்து தப்பியபின் உருவாகியிருக்கின்றது என்கின்றது வரலாறு

  அதுவரை ஓரளவு தன் வெறுப்பை வெளிகாட்டாமல் இருந்த அவுரங்கசீப், சிவாஜி தன் கண்ணில் மண்ணை தூவி தப்பித்ததும் கடும் ஆத்திரமுற்றான், அவனின் ஆத்திரம் ஜெய்பூர் மன்னன் மிர்சா ராஜா ஜெய்சிங் மேல் திரும்பிற்று

  இந்த மிர்சா ராஜா ஜெய்சிங்கின் சமாதான ஒப்பந்ததில்தான் சிவாஜி அவுரங்கசீப்பை சந்திக்க சென்றான் அப்பொழுதுதான் சிறைவைக்கபட்டான் இதனால் ஜெய்சிங்குக்கும் அவுரங்கசீப்புக்கும் மோதிற்று

  ஆக்ராவில் சிவாஜி தப்பியதும் அவுரங்கசீப் சிவாஜி இந்துராஜ்யம் அமைப்பதன் பதிலடியாக காசியினை மாற்ற ஆரம்பித்தான்

  மராட்டியத்தில் இந்து ராஜ்யம் உருவானால் காசி இந்து அடையாளத்தை இழக்கும் எனும் மிரட்டல் அது, அந்நேரம் ஜெய்சிங்கிற்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே கடும் உரசல்கள் எழுந்தன, அப்பொழுதுதான் ராஜா ஜெய்சிங்கின் மரணமும் நிகழ்ந்தது

  ராஜா ஜெய்சிங்கின் மரணம் இந்துக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்த அதை அவுரங்க்சீப் கடுமையாக அடக்கி வடக்கே மோதிகொண்டிருந்த காலத்தில்தான் சிவாஜி தன்னை இந்து அரசனாக பலபடுத்தி முடிசூட்டிகொண்டான்

  இந்துஸ்தானத்தில் மொகலாயருக்கு அடங்காத சுதந்திர இந்து அரசாக சிவாஜி முடிசூட்டியதின் பதிலடியாக காசியில் இந்து அடையாளமற்று போகும்படி மாற்று எழுப்பினான் அவுரங்கசீப் என்பது வரலாற்றாளர்கள் கருத்து

  அப்படி இந்துக்களின் ஞானகிணறு இருந்த பகுதியில் கட்டபட்டது ஞானவாபி மசூதி என்பது 300 ஆண்டுகளாக இருக்கும் சர்ச்சை

  இதுபற்றிய ஆதாரங்கள் ஜெய்பூர் அரசகுடும்பத்திடம் உண்டு அதை தொடர்ந்து மராட்டிய இந்து அரசின் பகுதிகளான இந்தூர் ராஜ்ஜியம் உள்ளிட்டவைகளிடம் ஆதாரங்கள் பல உண்டு

  அந்த சர்ச்சைதான் மறுபடியும் நீதிமன்றம் சென்றிருக்கின்றது இனி நீதிமன்றம் முதற்கட்ட ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்து இப்பொழுது சிவலிங்கம் உள்ளிட்ட பல அடையாளங்கள் வெளிவருகின்றன‌

  அதாவது அந்த இடம் முன்பு சிவாலயமாக இருந்த ஆதாரங்கள் எளிதாக கிடைக்கின்றன‌

  காசிக்கு மோடி ஆட்சி நல்ல காலம், அவரால் கங்கை சீர்பட்டது, சில அடி கணக்குக்கு சுருங்கியிருந்த காசி வளாகம் பெரிதாக மாற்றபட்டது, இப்பொழுது ஞானகிணறும் வெளிவருகின்றது

  சிவாஜி தொடங்கி தாராபாய், அகல்யாபாய், ரஞ்சித்சிங் என எத்தனையோ மன்னர்கள் போராடிய போராட்டத்தின் பலன்கள் இப்பொழுதுதான் கைகூடுகின்றன‌

  காசி வாழட்டும், காசி துலங்க துலங்க தேசம் துலங்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று

 2. தமிழை வளர்ப்பது என்றால் “ஸ்” நீக்குவது “ஷா”வினை நீக்குவது அல்ல, தமிழை வளர்ப்பது என்றால் இந்தியினை எதிர்ப்பதுமல்ல, தமிழை வளர்ப்பதென்றால் அதன் ஆதார வேரில் இருந்து வளர்க்க வேண்டும்

  நாம் உலகெல்லாம் இருக்கும் புலம்பெயர் தமிழர்களை உற்றுபார்க்கின்றோம், அவர்கள் 18 அல்லது 19ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்திருக்கலாம், அவர்களில் கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் அப்படியே ஐரோப்பிய சாயலுக்கும் வாழ்வுக்கும் மாறிவிட்டனர், உடை நடை பாவனை வாழ்க்கைமுறை வீடு வாசல் என எல்லாமே முழுக்க ஐரோப்பா சாயல் நிறம் மட்டும் விலக்கு

  அவர்கள் வீட்டில் ஆங்கிலம், அவர்கள் மதத்துக்கு ஆங்கிலம் எளிதாக ஒத்துழைக்கின்றது காரணம் அம்மொழி மூலமாகத்தான் அது அவர்களை அணைத்தது, அங்கு சகலமும் ஆங்கிலம் ஐரோப்பிய வாழ்வு எனும் பொழுது முதலில் இந்துமதம் விடைபெறுகின்றது பின் தமிழ் மெல்ல சாகின்றது

  இதுதான் இதர மதங்களை பின்பற்றுவோர் நிலையும்

  ஆனால் அங்கு இந்துக்களிடம் மட்டும் தமிழ் வாழ்கின்றது, என்னதான் ஆங்கிலம் மற்றும் இதரமொழிகள் பேசினாலும் வழிபாட்டுக்கு தமிழும் தமிழ் கலாச்சார வடிவமும் இயல்பாக வந்துவிடுகின்றன‌

  உடை முதல் வழிபாடு வரை தமிழ் கலாச்சாரத்தை இந்துமதம் ஒன்றுதான் இழுத்துவருகின்றது

  இந்துவாக வாழ்வதுதான் தமிழை காக்கவும் தமிழ் கலாச்சாரத்தை காக்கவும் அதன் இலக்கிய செழுமைகளை காக்க்கவும் ஒரே வழி, அது அன்றி வழியில்லை

  விஞ்ஞானம் ஒரு நாளைக்கு ஒருவடிவம் காட்டும் , உலகை ஒவ்வொரு காலமும் ஒரு மொழி ஆளும்

  இந்த உலகை அலெக்ஸ்டாண்டர் காலத்தில் கிரேக்கம் ஆண்டது, சீசர் காலத்தில் லத்தீன் ஆண்டது, ஆங்கிலேயன் காலத்தில் ஆங்கிலம் ஆண்டது இன்னும் சில தசாப்தங்களில் அது சரியலாம் வீழலாம்

  ஆனால் தொன்றுதொட்டு தமிழ் இக்காலமும் நிலைக்க பெரும் காரணம் தமிழன் இந்துவாக இருந்த ஒரே காரணம் அன்றி வேறல்ல‌

  அவன் அசோகர் காலத்தில் பவுத்த பாலிமொழியில் சிக்கியபொழுது இந்துமதத்தின் தமிழ் அவனை தமிழனாக நிறுத்திற்று, தமிழனை மதம்மாற்ற பவுத்தனும் சமணனும் தமிழ்படித்தார்கள், இந்துமதத்தை வேரறுக்க தமிழ்படித்தார்கள் தமிழ் காவியங்களும் படித்தார்கள் தமிழ் அவர்களை தன்பார் ஈர்த்தது, ஒரு கட்டத்தில் இந்துமதத்தால் தமிழ் வென்று பாலிமொழியினை விரட்டி தன்னை நிறுத்திற்று

  பின் ஆப்கானிய ஆட்சி மிரட்டலில் இந்துமதம் ஒன்றால் தமிழ் நிலைத்தது, சுமார் 100 ஆண்டுகால ஆப்கானிய ஆட்சியில் இந்துவாக இருக்க தமிழ் அவசியம் என்பதால் தமிழ் நிலைத்தது

  பின் ஆங்கிலேயன் ஆட்சியிலும் இந்துமதம் ஒன்றே தமிழை நிறுத்தியது, தமிழை கொன்றால் இந்துமதம் அழியும் என்றுதான் தமிழின் இரட்டை மொழியான சமஸ்கிருதத்தை துண்டித்து தமிழை இந்தியாவில் இருந்து துண்டித்து தமிழை வெட்டி இந்துமதத்தை அழிக்கும் திட்டம் மிஷனரிகளால் உருவானது

  சமஸ்கிருதம் இந்தி என எல்லாவற்றையும் விரட்டிவிட்டு அங்கு ஆங்கிலத்தை நிறுத்தி பின் தமிழை அப்படியே கொல்லும் மிக நுணுக்கமான திட்டம் அது

  அதையும் தாண்டி தமிழ் வாழ இந்துமதம் ஒன்றே காரணம்

  இன்றும் என்றும் பழந்தமிழர் பாடலெல்லாம் தேவாரமும் திருவாசகமும் ஆழ்வார் அடியார் பாடல்களாக தமிழில்தான் இருக்கும், தமிழரின் வாழ்வும் தெய்வங்களும் தமிழில்தான் இருக்கும், இந்துமதம் வாழ வாழ அதன் கோவில்களும் விழாக்களும் பண்டிகைகளும் வாழ வாழ தமிழ் தானாக வாழும்

  அதுதான் தமிழ் வளர்க்கும் வழி, மூன்று தமிழ்சங்கங்களும் இந்துமதம் மூலமாக தமிழ் வளர்த்தன அன்றி வெறுமையாக “டமிலனங்கு” என வளர்க்கவில்லை அப்படி வளர்த்தால் தமிழ் நிலைத்திருக்காது

  தமிழின் வேரும் பலமும் இந்துமதத்தில்தான் உள்ளது, அதை மீட்டெடுத்து நிறுத்தினால் தமிழ் தானாக வளரும் நிலைக்கும், தமிழ் வாழவும் வளரவும் ஒரே வழி பூரண இந்துவாக இருப்பது, இந்துவாக நிலைப்பதில்தான் இருக்கின்றது

 3. உயிரோடு இருக்கானா இல்லையா”னு தெரியாத சுஜித்துக்கு விடிய விடிய லைவ் டெலிகாஸ்ட் போட்டீங்களே…

  உயிரோடு கையை உயர்த்தி காப்பாற்றுங்கள் என்று 15 மணி நேரமாக போராடிய செல்வத்தைப் பற்றி ஏன் ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை ?

  எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல….

  15 மணி நேரத்திற்கும் மேலாக “யாராவது என்னை காப்பாற்றுங்கள்” என்று கையை உயர்த்தி வேண்டுகோள் வைத்த செல்வம் தற்போது உயிரிழந்துள்ளார்.

  போர்க்கால அடிப்படையில் இத்தனை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்த போதும்…அரசு எதுவுமே செய்யவில்லை என, சுஜித் மரணத்தில் 24 மணிநேரமும் ஒப்பாரி வைத்த ஊடகம் வெட்கமின்றி தற்போது மட்டும் அமைதி காப்பது ஏன் ?

  பிண அரசியல் நடத்திய திருட்டு கட்சி எங்கே ?
  அரக்கோணத்தில் இருந்து மீட்பு படை வருகிறது வருகிறது என்று சொல்லி 15 மணி நேரம் ஆகியும் வராமல் இருக்கிறதே அதற்கு காரணம் என்ன?

  லாக்கப் மரணம் பற்றி விவாதிப்பதில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியும் விவாதிப்பதில்லை, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சுஜித்துக்கு காட்டிய அக்கறை, கல்குவாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த செல்வதற்கு கிடைக்கவில்லை.

  ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் ஊடக தர்மம் இருந்திருக்க வேண்டும்.
  ஆனால் இன்று ஒரு குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு ஜனநாயகத்தையும் குழிவெட்டி புதைப்பது எந்த வகையில் நியாயம் ?

  சென்ற ஆட்சியில் எங்கே ஒரு சிறு தவறு நடந்தாலும் பூதாகரமாக்கி அரசியல் செய்த ஊடகம்,
  தற்போது மயான அமைதி காப்பது ஏன்?

  இதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாக ஒரு நாள் ஜனநாயகம் தமிழகத்தில் மலர்ந்தே தீரும், அந்த நாள் பாஜக ஆட்சி இந்த மண்ணில் அமைந்திருக்கும்.

 4. இந்த பேரரிவாளன் விவகாரம் மட்டுமல்ல தங்கள் இலங்கை நிலைபாட்டிலே மத்திய அரசு வெளிபடையாக இருத்தல் வேண்டும் தங்கள் திட்டத்தை தமிழக மக்களுக்கு சொல்லவேண்டும் காங்கிரஸ் அரசு அதை செய்யாததால்தான் பெரும் குழப்பம் ஏற்பட்டது

  இப்பொழுது பாஜக அரசு அதையே செய்வது போல் தோன்றுகின்றது, அப்படி செய்தால் அது பெரும் குழப்பமாக முடியும் பாஜகவுக்கு இவ்விவகாரத்தில் சில வெளிபடைதன்மை அவசியம்

  ஈழவிவகாரம் தமிழகத்தில் 1983க்கு முன்பு கிடையாது, வரலாற்றில் ஈழதமிழருக்கும் தமிழக தமிழருக்கும் ஒரு இடைவெளி பெரிதாக இருந்திருக்கின்றது, தமிழக தமிழர்களை யாழ்பாண தமிழர்கள் ஒருமாதிரி விலக்கி வைத்ததும் இன்னும் பல “கள்ளதோணி” “நாகரீகமற்ற தமிழன்” என பாகுபாடு காட்டியதெல்லாம் வரலாறு

  1960களில் கூட 5 லட்சம் மலையக தமிழரை கதற கதற இலங்கை அரசு விரட்டி இந்தியாவுக்கு அடித்தபொழுது, மாபெரும் அந்த கொடுமையில் கூட தமிழகம் அமைதிதான் காத்தது

  தனிதமிழீழம் முதலில் கேட்ட செல்வநாயகம் வந்து ஈரோட்டு ராம்சாமியிடம் ஆதரவு கேட்டபொழுது கூட ராம்சாமி மறுத்தது வரலாறு, அவ்வளவுதான் ஈழ தமிழர் தமிழக தமிழர் உற்வுகள்

  1975களில் இருந்து ஈழதமிழர் சிங்களர் மோதல் தொடங்கினாலும் தமிழகம் அதன் போக்கில் இருந்தது

  1980களில் கூட இந்தியாவின் இந்திரா அரசு திரிகோணமலை துறைமுகம் இன்னும் பல அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் கால் வைத்தது, அப்போதைய இலங்கை எதிர்கட்சி தலைவரும் தமிழர் பிரதான தலைவருமான அமிர்தலிங்கத்தை இந்திரா கையில் எடுத்தபொழுதுதான் ஈழ அரசியல் இங்கு நுழைந்தது

  இலங்கை அரசுக்கு ஈழசிக்கலால் இந்திய தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் இந்திய அரசு தலையிடவேண்டும் என காட்டுவதற்கும் விரும்பினார் இந்திரா, அதிலிருந்துதான் ஈழதிணிப்பு வலிய நடந்தது

  ஆனால் அதை காங்கிரஸ் செய்யாமல் தமிழகம் செய்வதாக மக்கள் புரட்சிபோல் அவர் எழுப்ப விரும்பினார், அதே நேரம் இலங்கையில் தமிழருக்கு தனிநாடு கொடுக்கும் ஆசையும் அவருக்கு இல்லை

  அப்படி ஒரு விருப்பம் இருந்தால் 1983லே இந்திய ராணுவம் இலங்கைக்கு சென்றிருக்கும்

  ஆனால் வங்கபோர் என்பதற்கும் ஈழம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு, வங்கத்தில் ஒரேமொழி என்றாலும் மதம் வேறு, கிழக்குவங்க மக்களால் மேற்கு வங்கத்தில் சிக்கல் இல்லை என்பதால் தனிநாடு உருவாக தடையில்லை

  ஆனால் தமிழீழம் எனும் தனிநாடு உருவானால் அது தமிழ்”நாடு” எனும் திராவிட பிரிவினைவாத மாநிலத்தை நிம்மதியாக இருக்கவிடாது, பல கனவுகள் தமிழகத்தில் உருவாகும் கடல் கடந்த தமீழிழமும் அதற்கு உதவினால் இந்தியாவுக்கு சிக்கல் என்பதும் இந்திராவுக்கு தெரிந்தது

  இதனால் தன் திட்டத்தை வெளிகாட்டாமல் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கினார்

  அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது “நாவலரே வருக” என கருணாநிதி மாலையோடு நிற்க, முதல்வர் எனும் வகையில் எம்ஜிஆரைத்தான் சந்திப்பேன் என அமிர்தலிங்கம் எம்ஜிஆரோடு செல்ல அதிலிருந்துதான் ஈழ அரசியல் தமிழகத்தில் தொடங்கிற்று

  தொடர்ந்து இந்திராவின் உத்தரவில் பிரபாரகனின் புலிகள் உள்ளிட்ட 4 குழுவினருக்கும் இந்திய ராணுவபயிற்சி தொடங்கியது தமிழகம் இன்னும் உற்சாகமானது

  பயிற்சியில் புலிகள் உள்ளிட்ட எல்லோரும் இந்தி கற்றுகொண்டதும் உண்டு, திராவிட கும்பல் அப்பொழுதெல்லாம் மகா அமைதி

  (இந்த இந்திதான் பின் புலிகள் இந்திய ராணுவத்தோடு மோதும்பொழுது புலிகளுக்கு கைகொடுத்தது)

  இக்காலகட்டத்தில் நடந்த இந்திராவின் மரணம் காரியத்தை குலைத்தது, இந்திரா இல்லா இடத்தில் ராஜிவும் குழம்ப விவகாரம் தமிழக அரசியல்வாதிகள் கைக்கு சென்றது, ராஜிவால் அதை தடுக்க முடியவில்லை

  அப்பொழுது எம்ஜிராம்சந்திரன் பிரபாகரனை தன் கைபாவையாக்கி ராஜிவினை நோக்கி புன்னகைத்தார், கருணாநிதிக்கு மற்ற குழுக்கள் கிடைத்தன‌

  இந்திரா ரகசியமாக செய்த ஈழ அரசியல் தமிழக அரசியல்வாதி கைகளுக்கு வந்ததை ராஜிவால் தடுக்க முடியவில்லை , ஈழகுழப்பம் இங்குதான் தொடங்கிற்று

  தொடர்ந்து எம்ஜிராம்சந்தரின் மரணம், இந்திய அமைதிபடை இலங்கை சென்றது, இந்திய இலங்கை ஒப்பந்தம் என எல்லாமே குழப்பி அடிக்க ராஜிவ் திணறினார்

  தேர்ந்த அரசியல்வாதியான கருணாநிதி ஆட்டத்தை அடித்து ஆடினார், டெல்லி பெரும் குழப்பத்தில் சிக்கியது

  1983ல் இந்திராவின் உத்தரவுக்கு கட்டுபட்ட தமிழக அரசியல் கோஷ்டிகள் 1988ல் ராஜிவினை குழப்பி அடித்தனர்

  இந்த கால்கட்டத்தில் புலிகளோடு உறவாடியவன் இந்த பேரரிவாளன், அவன் இலங்கை சென்றது உண்டு புலிகளோடு உறவாடியது உண்டு, “சாத்தானின் படைகள்” என இந்திய படைகளை புலிகள் கொச்சைபடுத்தி அச்சடித்தபொழுது அதற்கு உதவியன் இந்த பேரரிவாளன்

  அப்பொழுது 17 வயது கொண்ட அவனை முகமூடியாக கொண்டுதான் ராஜிவ் கொலைசதிகாரன் சிவராசன் களமாடினான்

  சென்னையில் பத்மநாபா கொலையினை வெற்றிகரமாக முடித்த சிவராசன் கருணாநிதி ஆட்சியில் தப்பினான் பின் அவர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டபின் மறுபடி ராஜிவ் கொலைசதியோடு வந்த அவனுக்கு கார் பேட்டரி (வயர்லெஸ்ஸை இயக்க) ,காவசாகி பைக் என எல்லாமும் ஏற்பாடு செய்தது பேரரிவாளனே

  அந்த குறிப்பிட்ட காலத்தில் சிவராசனின் எல்லா நடவடிக்கையும் அவன் அறிவான், இன்னும் அவனிடம் ரகசியம் உறங்கிகொண்டிருக்கின்றது, நளினிபோல முழு அப்ரூவராக அவன் மாறவில்லை என்பது நிஜம்

  ராஜிவ் கொலையில் போட்டோ எடுத்து செத்துபோன ஹரிபாபுவுக்கும் பேரரிவாளனுக்கும் நல்ல நட்பு உண்டு என்பது இன்னொரு கோணம்

  அப்படிபட்ட பேரரிவாளன் ராஜிவ் கொலையில் சிக்கினான்

  விஷயம் பேரரிவாளன் இல்லை என்பதால் இத்தோடு நிறுத்திவிட்டு விஷயத்துக்கு செல்லலாம்

  அப்படி தமிழக அரசியல்வாதிகள் கையில் ஈழவிவகாரம் சிக்கியபின்புதான் நினைத்துபார்க்கமுடியா விபரீதமெல்லாம் தமிழகத்தில் நடந்தன‌

  இலங்கையில் இந்திய ராணுவத்தை கொன்ற புலிகள் இந்திய தமிழகத்தில் மிக உல்லாசமாக வளைய வந்தனர், அவர்கள் தமிழகத்தை இரண்டாம் தலமாக பயன்படுத்தி மருத்துவமனை முதல் பெட்ரோல் நிலையம் வரை அமைத்து தளமாக்கினர்

  அதனை டெல்லி தடுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம் குறைந்தபட்சம் தங்கள் ராணுவத்தை கூட தமிழகத்துக்கு அனுப்பவில்லை

  டெல்லியின் இந்த குழப்பத்தைத்தான் தமிழகம் “ஈழ அரசியல்” என பயன்படுத்தியது, கருணாநிதி விபிசிங்கோடு சேர்ந்து அமைதிபடையினை மீளபெற்றார், அதைவரவேற்காமல் அவமானபடுத்தவும் செய்தார்

  இந்த உற்சாகத்தில்தான் இந்திய ராணுவத்தையே தாங்கள் எதிர்த்தபொழுது தமிழகம் தங்களோடு இருந்தது எனும் உற்சாகத்தில்தான் ராஜிவ் கொலைவரை சென்றான் பிரபாகரன்

  ஆனால் அதன் பின் கொஞ்சகாலம் தமிழத்தில் புலி ஆதரவு இல்லை, ஜெயின் கமிஷன் ஆதரவு வேறு திமுக வாயினை கட்டிபோட்டது

  பின் மெல்ல மெல்ல தேச எதிர்ப்பு அரசியலுக்காக திமுகவும் அதிமுகவும் ஈழவிவகாரத்தை தொட்டன, அப்பொழுதும் தனிஈழம் தமிழீழம் என சொல்லாமல் இந்த 7 பேர் விடுதலை என ராகத்தை மாற்றின‌

  அதன்பின் ஈழஇறுதிபோர் வந்தது, திமுக ஆட்சியில் இருந்ததால் தமிழகம் தப்பித்தது இல்லையேல் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்

  இப்பொழுது பேரரிவாளன் விடுதலை என அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கின்றது

  நாம் சொல்வது இதுதான்

  நிச்சயம் பேரரிவாளன் மத்திய அரசின் அனுசரனையின்றி விடுவிக்கபட்டிருக்க முடியாது, உள்துறை அமைச்சு இதர பாதுகாப்பு உளவு அமைப்புக்கள் பல கட்சி தலைவர்கள் கூடி எடுத்தமுடிவு இது என்பது தெரிகின்றது

  பேரரிவாளனே விடுதலையான நிலையில் வழக்கின் அப்ரூவரும் ராஜிவ் கொலையின் மர்மத்தை உடைத்தவளுமான நளினி விடுதலைசெய்யபடத்தான் வேண்டும் அதுதான் சரி

  இப்பொழுது பாஜக ஈழதமிழர் அரசியலை தொடங்குகின்றது, தமிழக தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் தாங்கள் எதிரி அல்ல என காட்டி ஈழ அரசியலை கையில் எடுக்கின்றது

  நாட்டுக்கு அது நல்லது, இலங்கை எனும் தந்திரகார நாட்டைமிரட்டி வைக்க ஈழ அரசியலும் அதற்கு தமிழகத்தில் ஒரு ஆதரவும் அவசியம் அது அல்லாது இலங்கையினை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமுடியாது

  அப்படி ஒரு அவசியம் இருந்தால்தான் வங்கப்போரை காட்டி இலங்கையினை மிரட்டலாம் அதுவரை சரி

  ஆனால் மத்திய பாஜக அரசு இந்திரா தமிழக அரசியல்வாதிகளை தன் கையில் வைத்து ஈழ அரசியல் செய்தது போல் செய்யட்டும் மாறாக ராஜிவ் விபிசிங் மன்மோகன் போல ஈழவிவகாரத்தினை தமிழக அரசியல்வாதிகள் கையில் விட்டு குழப்பி அடித்து தீராசிக்கலில் தமிழகத்தையும் தேசத்தையும் தள்ளியது போல் குழப்பாமல் இருக்கட்டும்

  தங்களின் ஈழகொள்கை என்ன என்பதையும் தங்களின் திட்டம் என்ன என்பதையும் அண்ணாமலை மூலமாக அவர்கள் தொடக்கத்திலே விளக்கிவிடுவது நல்லது

  ஆம், நிச்சயம் மத்திய அரசின் ரகசிய அனுமதியுடனே பேரரிவாளன் விடுவிக்கபட்டிருப்பது எல்லோரும் அறிந்தது, அண்ணாமலையும் அதனை வரவேற்றிருக்கின்றார்

  ஆனால் “உச்சி மன்ற குடுமைய்னை பிடித்த ஸ்டாலின், உருண்டு புரண்ட டெல்லி”, “முத்துவேலர் மகன் முறைத்தார் திறந்தது சிறை கதவு” “ஸ்டாலின் பெயரை கேட்டதும் நீதிமன்றம் தீர்ப்பு” என ஒரு கோஷ்டி ஆரம்பித்துகொண்டிருக்கின்றது

  இன்னொரு கோஷ்டி இதை கேட்டுவிட்டு சொல்வதுதான் விபரீதம் “ஆமா, இல்லாட்டி எங்க அண்ணன் சும்மா விடுவாரா?

  எங்க அண்ணனுக்குத்தான் சென்னை, டெல்லி, நீதிமன்றம் எல்லாம் பயந்திருக்கு புஹஹஹ்ஹஹ்ஹஹா”

  இம்மாதிரி பழைய குழப்பங்கள் மறுபடி கூடாமல் இருக்க மத்திய அரசு தங்கள் நிலைபாட்டை விளக்கி மாகாணத்தை அமைதியாக்கி, 1980க்கு முன் இருந்த நிலையினை கொண்டுவருவது மகா அவசியம்

 5. பேரரிவாளன் விடுதலை என்பதை இந்திய சட்டம் பலவீனமாது என்பதை தாண்டி பல கோணங்களில் பார்க்க வேண்டும், இப்பொழுது உலக பரபரப்பு செய்திகளில் ஒன்றாகியுள்ள இந்த விவகாரம் குறிப்பாக இலங்கைக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள இந்த தீர்ப்பு பற்றி இந்தியா தாண்டி உலக அளவில் பேசபடும் அலசல்களை இங்கு பார்க்கலாம்

  நிச்சயம் இந்திய உள்துறை அமைச்சகம் புகுந்து இதெல்லாம் தேசிய பாதுகாப்பு பிரச்சினை, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யபட்ட இயக்கம் என பல வாதங்களை முன்வைத்தால் நீதிமன்றம் மறுத்திருக்க முடியாது, தேசிய பாதுகாப்பில் நீதிமன்றம் ஒரு காலமும் சமரசம்செய்ய முடியாது

  இந்த வழக்கின் இறுதியில் மத்திய அரசு மவுனம் காத்தது வலுவான வாதம் எதையும் வைக்கவில்லை

  அதற்கு முன்பே அண்ணாமலையின் இலங்கை பயணம், ஈழஅபிமானிகளின் திடீர் பாஜக ஆதரவெல்லாம் பெரும் கவனத்தை ஈர்த்தன, பழ.நெடுமாறன் காசி அனந்தன் போன்ற பிம்பங்களெல்லாம் அண்ணாமலை பக்கம் வரும்பொழுதே ஏதோ விவகாரம் தட்டுபட்டது

  இன்று புலிகள் இயக்கம் இல்லை, பேரரிவாளனை வெளியே விட்டால் பெரும் அசமபாவிதம் நடக்க போவதுமில்லை இனி இவர்கள் உள்ளே இருந்தாலும் ஒன்றுதான் வெளியே வந்தாலும் ஒன்றுதான்

  அந்த இடத்தில்தான் சர்வதேச அரசியலை கையில் எடுக்கின்றது இந்தியா

  உலக நாடுகளின் தேர்ந்த உளவுதுறைகள் இதை செய்யும், பின்லேடனின் மறைவுக்கு பின் அல்கய்தா பலமிழந்த பின் அமெரிக்கா ஏகபட்ட அல் கய்தா மற்றும் தாலிபன்களை விடுவித்தது அதிலெல்லாம் கனத்தை உளவுதுறை அனுகூலமும் அரசியலும் இருந்தது

  இஸ்ரேல் அடிக்கடி இதை செய்யும், ஆபத்தில்லா பாலஸ்தீன போராளிகளை விடுவித்து தனக்கு வேண்டியதை பெற்றுகொள்ளும்

  இப்பொழுது இந்தியாவும் இந்த ராஜதந்திரத்தில் வந்துவிட்டது

  முதலாவது இவர்கள் விடுதலை செய்யபடுவது மூலம் இலங்கை அரசுக்கு ஒரு செய்தி சொல்கின்றது, அப்படியே தமிழக அரசுக்கும் ரகசிய செய்திகள் உணர்த்தபட்டிருக்கின்றது

  காங்கிரஸால் ஏற்பட்ட ஈழகுழப்பத்துக்கும் அதன் கொடூர விளைவுகளுக்கும் முந்தைய காலத்தையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்துகின்றது பாஜக அரசு

  அதாவது எதெல்லாம் ஈழசிக்கலின் கண்ணிகளோ அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்க்க தொடங்கிவிட்டது, இனி ஈழ அரசியல் தமிழகத்தில் நிறைவு பெறும், அடுத்த ஆட்டத்தை பாஜக ஆரம்பிக்கும்

  பேரரிவாளன் விடுதலைக்கு பாஜக சார்பில் ஒரு சத்தமில்லை என்பதை கவனித்தால், அண்ணாமலை வரவேற்றிருப்பதை கவனித்தால், இன்னும் பழ.நெடுமாறன் அண்ணாமலை அருகே இருந்து வரவேற்பதை கவனித்தால் ஒரு விஷயம் உங்களுக்கு புலனாகும்

  பேரரிவாளன் சட்டபடி விடுதலையாகி இருக்கலாம், ஆனால் மத்திய அரசு தன் வழக்கமான தடையினை கொடுக்காமல் மவுனமாக அவன் விடுதலையாக தலை அசைத்தது என்பதுதான் உண்மை

  இனி அடுத்து வரும் காட்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம், இப்பொழுது இலங்கைக்கு விடபட்டிருப்பது கனத்த எச்சரிக்கை

  ராஜிவ் கொலையினை தாண்டி இந்தியா அடுத்த கட்டத்துக்கு வருகின்றது, இனி ஈழவிவகாரங்களில் இந்தியா தலையிட ராஜிவ் கொலை ஒரு தடையாக இருக்காது எனும் செய்தியினை இந்தியா மவுனமாக சொல்கின்றது

  சுமார் 30 ஆண்டு காலம் ராஜிவ் கொலையினை வைத்து இந்தியாவுக்கு அணை போட்ட இலங்கை இப்பொழுது கனத்த அதிர்ச்சியில் இருக்கின்றது, இவர்களை விடுதலை செய்துவிட்டு ஈழபக்கம் இந்திய அரசு கால் வைக்கும்பொழுது பெரும் வரவேற்பு இந்தியாவுக்கு வடக்கே கிடைக்கும்

  அதை நோக்கித்தான் இந்தியாவின் நகர்வுகள் தெரிகின்றன‌

  ஆக இலங்கைக்கு சுத்தமாக நேரம் சரியில்லை 12 கட்டத்திலும் சனிபகவான் தன் குடும்பத்தோடு அமர்ந்து அடித்து கொண்டிருக்கின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *