ம(மா)ரியம்மா – 7

This entry is part 7 of 14 in the series ம(மா)ரியம்மா

இந்து என்றால் யார் தெரியுமா..? உயிர் கொலையில் ஈடுபடமாட்டார்கள். ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வார்கள். பக்தி சிரத்தை மிகுந்தவர்களாகவும் தூய இதயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சுத்தம், தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். பொய் பேசமாட்டார்கள். எளியோருக்கு தான தர்மங்கள் செய்வார்கள்.

வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். யாரையும் ஒடுக்கி, இழிவுபடுத்தமாட்டார்கள். சடங்கு சம்பிரதாயங்கள், பூஜை புனஸ்காரங்கள், விழாக்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். எதையும் அளவுக்கு அதிகமாகத் துய்க்கமாட்டார்கள். பிறர் பொருளின் மீது ஆசை கொள்ளமாட்டார்கள். திருடமாட்டார்கள். இருப்பதை வைத்து மனநிறைவுடன் வாழ்வார்கள். இவையெல்லாம் யாரைப் பற்றி, யார் எழுதியவை என்று தெரியுமா?

கிறிஸ்தவ புனிதர்கள் பற்றி அவர்களை நன்கு புரிந்துகொண்ட ஐரோப்பிய, அமெரிக்கர் யாரேனும் எழுதியதாக இருக்கும்.

ஆமாம். புனிதர்கள் பற்றி எழுதப்பட்டவைதான். அந்தப் புனிதர்களுக்கு இந்தியாவில் பொதுவான ஒரு பெயர் உண்டு: பிராமணர்கள்.

பிராமணர்கள் பற்றி எழுதியவையா..? அப்படியானால் நிச்சயம் ஏதோ ஒரு ஐயரோ ஐயங்காரோ எழுதியிருப்பார்.

ஆமாம். அவர் பெயர் சீகன் பால்கு ஐயர்!

என்னது சீகன் பால்குவா..? பைபிள் புதிய ஏற்பாட்டை இந்திய மொழிகளில் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தாரே அவரா.

ஆமாம் அவரேதான்.

ஆனால், மிஷனரிகள் பலர் பிராமணர்கள் பற்றி மிகவும் கடுமையாக எழுதியிருப்பதைத்தானே பார்த்திருக்கிறோம்.

அதுவும் உண்மைதான். சீகன் பால்கு மேலே பட்டியலிட்டதுபோல் பிராமணர்கள் சத்தியசந்தர்களாக இருந்ததால் இந்து மதத்தை எளிதில் வீழ்த்தமுடியவில்லை. எனவே, அந்த வெறுப்பு முழுவதையும் பிராமணர்கள் மேல் மிஷ நரிகள் காட்டினர். அதோடு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் அனைவருமே பெரும் குடியர்களாக, அனைத்து மாமிசங்களையும் தின்பவர்களாக, சுத்தம் சுகாதாரம் இவற்றில் அக்கறை இல்லாதவர்களாக சுரண்டல் பேர்வழிகளாக, கொடுங்கோலர்களாக, மாதவிடாய் நாட்களிலும் உடலுறவு கொள்பவர்களாக இருந்தனர். கிறிஸ்தவம் இப்படியான அரக்கர்களைத்தான் உருவாக்கும் என்று புரிந்துகொண்ட இந்துக்கள் கிறிஸ்தவத்தைச் சீண்டவே இல்லை.

இது அவதூறு.

பிரிட்டிஷ் மிஷனரிகளின் ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் இவை. அதோடு போர்ச்சுகீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என தேசம் சார்ந்தும் லுத்தரன், ஜேசூயிட், கத்தோலிக்கர் என கிறிஸ்தவ ஜாதிகள் சார்ந்தும் தமக்குள் வெட்டிக்கொண்டும் குத்திக் கொண்டும் செத்த கிறிஸ்தவர்களைப் பார்த்து அன்றைய சொரணையுள்ள இந்துக்கள் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? ஆளாளுக்கு உங்களோட இயேசுதான் கடவுள்னு சொல்றீங்களே… எந்த ஏசுதான் உண்மையானவர். போய் ஓரமாப் போய் விளையாடுங்க தம்பிங்களா என்று மதம் மாற்றவந்த கிறிஸ்தவர்களை ஓரங்கட்டியிருக்கிறார்கள். பொதுவாக, பிராமணர்களை அடிப்படையாக வைத்துத்தான் இந்துக்கள் தமது வாழ்க்கைப் பார்வையையும் சமூக அங்கீகாரங்களையும் அமைத்திருந்தனர். அந்த அடிப்படை அளவுகோலின்படிப் பார்த்தால் கிறிஸ்தவர்கள் எல்லாம் மிகவும் ஆன்மிக அளவிலும் ஒழுக்க அளவிலும் பண்பாடு அளவிலும் மோசமானவர்களாகவே இருந்தனர். எனவே, இந்து சமூகம் கிறிஸ்தவர்களை ஏற்கத் தயாராக இருந்திருக்கவே இல்லை.

இல்லை. ஆரம்பத்தில் இந்துக்கள் கிறிஸ்தவத்தை ஏற்கத் தடையாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று ஐரோப்பிய அமெரிக்க கிறிஸ்தவர்களின் பளீர் நிறம். இரண்டாவது அவர்கள் இந்தியாவை அடக்கி ஆண்ட அந்நியர்களாக இருந்தனர். எனவே கிறிஸ்துவைப் புரிந்துகொண்டு ஏற்பதற்கு இந்த இரண்டும் பெரிய தடையாக இருந்தன. இப்போது இந்தியாவில் இருந்தே மிஷனரிகள் பலர் வந்துவிட்டதால் இன்று அறுவடை வெகு எளிதில் நடந்தேறிவருகிறது.

அது உண்மைதான். கிறிஸ்தவர்கள் ஆட்சியில் இருந்த சுமார் 200 ஆண்டுகளில் மதம் மாறியவர்களைவிட சுதந்தரத் துக்குப் பின் மதம் மாறியவர்கள் பல மடங்கு அதிகம் இருப்பார்கள். ஐரோப்பிய பாதிரிகள் கூட இந்தியர்களைப் போல் தங்களுடைய தோலின் நிறத்தை மாற்றும் வேதி எண்ணெய் ஒன்றை உருவாக்கித் தரும்படி போப்புக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிறிஸ்தவர் ஆக்கப்பட்டதும் அவர், இந்துவாக இருந்தபோது பின்பற்றிய நல்லொழுக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு எஜமானர் களைப் போலவே ஒழுக்கங்கெட்டுச் சீரழிந்துவிடுகிறார்.

இது பெரிய பொய்.

சொன்னது யாரென்று தெரிந்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள்.

யாராக இருந்தால் என்ன… பொய்யைச் சொன்னால் பொய்தான்.

இதைச் சொன்னவர் தன் வாழ்நாளில் பொய்யே சொல்லாதவர். சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து உண்மையே சொல்வேன் என்று சத்தியம் செய்தவர். அந்த சத்தியத்தை வாழ்நாள் முழுவதும் பரிசோதனை செய்து பார்த்தவர்.

அவரா சொன்னார்?

ஆமாம். கிறிஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திவிட்டு, நல்லவர்களாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் ஒரு கேள்வி வருகிறது. ஒருவர் கிறிஸ்தவராக மாற்றப்பட்டாலோ பிறந்தாலோ ரட்சிக்கப்பட்டுவிடுவாரா… நல்லொழுக்கங்கள் தேவையே இல்லையா. தவம், புலனடக்கம், விரதம் என்றெல்லாம் மனதையும் உடம்பையும் தூய்மைப்படுத்திக்கொள்ள கிறிஸ்தவத்தில் எதுவுமே கிடையாதா?

இல்லையே கிறிஸ்தவத்தில் நல்லொழுக்கத்துக்கும் குறிப்பாக சமூக சேவைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் உண்டே. ஆன்மிக விஷயங்களைவிட லௌகிக விஷயங்களில் அவர்கள் அளவுக்கு சேவை செய்தவர்கள் யாரும் கிடையாது. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம். கிறிஸ்தவம் சேவையால் பரவும் மதம். உலகில் அதிக அளவுக்கு கல்வி மையங்கள், அநாதை விடுதிகள், சிறுவர்கள் காப்பகங்கள் நடத்துவது இன்றும் கிறிஸ்தவ அமைப்புகள்தான்.

ஆமாம். பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலில் ஆர்ச் பிஷப்கள்தான் முதலிடத்தில் இருக்கவும் செய்கிறார்கள். ஒழுக்கம் பற்றி முதலில் போதிக்கவேண்டியது இந்தப் பாதிரி வர்க்கத்துக்குத்தான். காப்பகங்களில் நடக்கும் உடலுறுப்புத் திருட்டு தனிக்கதை. இயேசு சொன்ன ஒரே ஒரு சத்திய வாக்கு : கெட்ட மரம் நல்ல கனிகளை ஒருபோதும் தரமுடியாது. அப்பறம் ஒருவர் கிறிஸ்தவராக மாறினால்தான் ரட்சிப்பேன் என்று சொல்லும் கிறிஸ்து எப்படி உலகத்தோரின் கடவுளாக இருக்கமுடியும்? அவர் புள்ளைபிடிக்காரர்போல் தன் மதத்துக்கு ஆள்பிடிப்பவர் மட்டுமே.

யாருக்குத் தமது மதம் மீது நல்லபிப்ராயம் இருக்கிறதோ அவர்கள் அதை உலகுக்கு அன்பின் மிகுதியால் பகிர்ந்துகொள்ள முன்வருகிறார்கள். நீ தீட்டு, நீ அசிங்கம், நீ இழிந்தவன் என்று சொல்லும் மதத்தைப் பரப்ப முயன்றால் யார் பின்பற்றுவார்கள். பிற நாட்டவரை மதம் மாற்றினால் எந்த ஜாதிக்குள் கொண்டுவருவார்கள்?

அப்படி வந்தால் அவர்களைத் தனியொரு ஜாதியாக இடம்பெறச் செய்யலாம். உலகில் எத்தனையோ மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தின் சுயரூபத்தை அருகில் இருந்து பார்த்துவிட்டு அதிலிருந்து வெளியேறி இந்து தர்மத்துக்கு வந்திருக்கிறார்கள். இது தானாக நடப்பது. ஆனால், மதத்தைப் பரப்புவது என்பது மிகவும் அசிங்கமான செயல். மத மாற்றம் என்பது அடிப்படையிலேயே ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதி என்பவர் ஒவ்வொரு மதத்தையும் கலாசாரத்தையும் சேர்ந்தவர்களை அவர்களுடைய பாதையில் முன்னேறிச் செல்ல வழிஅமைத்துத் தரவேண்டும். ஒரு இந்துவை நல்ல இந்துவாக, ஒரு கிறிஸ்தவரை நல்ல கிறிஸ்தவராக, ஒரு இஸ்லாமியரை நல்ல இஸ்லாமியராக ஆக்கத்தான் வழிகாட்டவேண்டும். உன் கடவுளை விட்டுவிட்டு என் கடவுளைக் கும்பிடு என்பது நம்பரை மாத்தாமலேயே செல் போன் கம்பெனியை மாத்திக்கோ என்று விளம்பரம் செய்யும் கார்ப்பரேட் வியாபாரம் போன்றது. யார் அதிக டாக் டைம், டேட்டா, கவரேஜ் கொடுக்கிறார்களோ அவர்களுடைய நெட்வொர்க்கே வெல்லும் என்பதுமாதிரி கிறிஸ்தவம் ஏகப்பட்ட ஆஃபர்களுடன் அலைகிறது. அப்பறம் ஆதி பாவம்தான் மனித இனத்தின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம் என்பதுபோன்ற முட்டாள்த்தனம் எதுவுமே உலகில் இருக்க முடியாது.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? ஆதாமும் ஏவாளும் கர்த்தரின் வாக்கை மீறி சர்ப்பத்தின் பேச்சை கேட்டு அந்த ஆப்பிளை உண்ணாமல் இருந்தால் இந்தப் பிரச்னைகளே வந்திருக்காது.

ஒவ்வொரு மனிதரும் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு அவரவர் செய்யும் செயல்களே காரணம். என்றோ யாரோ ஒரு ஆதி மனிதர் செய்ததா மனித குலத்தை இன்றும் பாதித்து வருகிறது? அதோடு, சரி-தவறு என்ற புரிதலைத் தரும் ஞானத்தைப் பெறக்கூடாதென்று ஒருவர் சொல்வாரென்றால் அவர் எப்படிக் கடவுளாக இருக்கமுடியும். ஞானம் பெறத் தடை விதித்த கர்த்தரின் புத்திரர்கள் இன்று உலகுக்கே நாங்கள்தான் கல்வியைக் கொடுத்தோம் என்று சொல்வதில் இருக்கும் அபத்தம் புரிகிறதா? கர்த்தர் ஒரே ஒரு தம்பதியை மட்டும் படைத்தார் என்றால், இன்று உலகம் முழுவதும் மனித இனம் பெருகியிருப்பது எப்படி? முதல் தம்பதிக்குப் பிறந்த குழந்தைகள் தமக்குள் உறவு கொண்டா பெருகினார்கள். கிறிஸ்தவக் கோட்பாட்டின்படி இந்த உலகத்தினரின் முப்பாட்டன், முப்பாட்டி என்பவர்கள் சகோதரர்களுக்கு உள்ளும் தாய் மகன், தந்தை மகள் என முறைகெட்டு நடந்துகொண்டவகள் என்று அல்லவா ஆகிறது. மனிதர்களுக்கு இப்படியான ’விஞ்ஞானபூர்வ வரலாற்றைக்’ கற்பிக்கும் ஒரு மதம் எப்படி கண்ணியமானதாக இருக்கும். சூத்திரர்கள் அனைவரும் வேசிக்குப் பிறந்தவர்கள் என்று ஈ.வெ.ரா சொன்னதைவிடப் படு அசிங்கமாக அல்லவா இது இருக்கிறது.

அது ஈ.வெ.ரா. சொன்னது அல்ல. இந்து தர்ம சாஸ்திரத்தில் அப்படி இருக்கிறது.

இல்லை. வேசிகளின் குழந்தைகளும் சூத்திரர்களாக அழைக்கப்பட்டனர் என்றுதான் சொல்லியிருக்கிறது. அதன் அர்த்தம் சூத்திரர்கள் எல்லாரும் வேசியின் மகன்கள் என்பது அல்ல.

ஆனால், பிராமணரல்லாதவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று இழிவாக நடத்தப்பட்டது உண்மைதானே.

ஒவ்வொரு ஜாதியும் தமக்கான குல தெய்வங்கள், தமக்கான உணவு முறை, தமக்கான உறவு முறை, தமதேயான தொழில்கள், தத்தமது முன்னோரின் மரபுகள், வாழ்க்கைப் பார்வைகள் என தற்சார்புடனும் பரஸ்பரம் நட்புறவுடனும் இருந்துவந்திருக்கிறார்கள். இந்து சமூகத்தின் குறியீட்டுச் சித்திரம் என்பது உயரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பானையை நான்கு அடுக்கு நபர்களின் மேல் ஏறிச் சென்று உறியடிப்பதுதான்.

ஆமாம். மூன்றடுக்கு நபர்களை மிதித்து ஏறி ஒருவர் உறியை அடித்து அவரே அனைத்தையும் எடுத்துச் செல்லும் தந்திரம் தான் அது.

அப்படி நீங்கள் விளக்கம் தருகிறீர்கள். உண்மையில் நான்கு அடுக்கினரும் பரஸ்பரம் உதவிக்கொண்டு வெற்றிப் பரிசை அனைவரும் பங்கிட்டுக் கொள்வத்தான் நடந்திருக்கிறது. ஒருவரே அனைத்தையும் எடுத்துச் சென்றிருந்தால் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றவர்கள் எல்லாம் அதை எப்படி அனுமதித்திருப்பார்கள்? மன்னர்களுக்கு ஆட்சி நிர்வாகம் அது சார்ந்த வசதி வாய்ப்புகள், சலுகைகள், உரிமைகள். வைஸ்யர்களுக்கு வாணிபம்; மன்னரின் அரண்மனைகளைவிட வைஸ்யர்களின் மாளிகைகள் ஆடம்பரமாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்னும் சொல்லப்போனால் வர்த்தக ஜாதிகளின் நடவடிக்கைகளில் மன்னர்களுக்குக் குறுக்கிட அதிகாரம் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட இன்றைய கார்ப்பரேட்கள் விரும்புவது போன்ற கட்டற்ற சுதந்தரம் அன்றைய வணிகர்களுக்கு இருந்தது.

ஆனால், சூத்திரர்கள் என்று நாலாம் வர்ணத்தினர் ஒடுக்கப்பட்டார்களே.

உண்மையில் அவர்கள் சூத்ரதாரிகள். அந்த பிரிவினருக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் அனைத்தும் சொந்தம். இதில் சிற்பக் கலை தொடங்கி கப்பல் கட்டும் தொழில்நுட்பம் வரை அனைத்துமே நாலாம் வர்ணத்தினரின் ஏகபோக உரிமையாகவே இருந்திருக்கின்றன.

ஆனால், அவர்ணர்கள் – தலித்கள் என்று கணிசமான மக்கள் சமூகத்தில் இருந்து விலக்கிவைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர் என்பது உண்மைதானே.

முதலில் பிராமணரல்லாதவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டதாகச் சொன்னீர்கள். அதன் பின் நான்காம் வரணத்தினர் அனைவரும் ஒடுக்கப்பட்டதாகச் சொன்னீர்கள். இப்போது வர்ண அமைப்புக்கு வெளியில் சிலர் இருந்ததாகவும் அவர்கள் ஒடுக்கப்பட்டதாகவும் சொல்கிறீர்கள். இன்று தலித்களாகச் சொல்லப்படுபவர்களில் பலர் நில உடமையாளர்களாக, போர் வீர்ர்களாக, அர்ச்சகர்களாக, திருவிழாக்களில் யானை மேல் அமர்ந்தபடி ஸ்வாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்களாகவெல்லாம் இருந்திருக்கிறார்கள். ஆலயங்களுக்கு ஆதுரசாலைகளுக்கு தான தர்மங்கள் வழங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதெல்லாம் நிலங்கள் சொந்தமாக இருந்த சில தலித்கள் செய்திருப்பார்கள். நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போல் விவசாயம் சாராத கடைநிலைப் பணிகளில் இருந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருந்திருக்கிறது. 2000 ஆண்டுகால இந்துமத மரபில் ஒரு அம்பேத்கர் உருவானதென்பது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் வருகைக்குப் பின்னர்தான்.

ஒரே ஒரு அம்பேத்கரை உருவாக்கினார்கள். ஆனால் எஞ்சிய தலித்கள் அனைவரையும் அடிமைகளாக முத்திரைகுத்தி இட ஒதுக்கீட்டுக்குக் கையேந்த வைத்து விட்டார்கள். உண்மையில் அன்றைக்கு ஒவ்வொரு தலித் குலமும் ஒவ்வொரு தொழில் சங்கங்களாகத் திகழ்ந்தன.

எது… மலம் அள்ளுதல் போன்ற மகத்தான தொழில்களிலா?

தோல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் வேலை வாய்ப்புகளை இழந்து மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட நேர்ந்தது.

இல்லை. குலத்தொழிலை நிர்பந்தித்த இந்து மதம் தான் அதற்கு முழு காரணம். 2000 ஆண்டுகால மனு அதர்மம் தான் அதற்குக் காரணம்.

சரி உங்கள் கூற்றுப்படியே பார்ப்போம். வேத காலம் போலவே சங்க காலத்திலும் மலம் அள்ளும் தொழில் கிடையாது. இந்தியாவுக்கு இஸ்லாம் வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. கிறிஸ்தவம் வந்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 2000 ஆண்டுகளாக ஒரு தோட்டி குலத்தைச் சேர்ந்தவர் மலம் அள்ளியது உண்மையென்றால், ஹூக்கா குடித்தபடியே சுல்தானும் துவா செய்தபடியே ஹஜ்ஜியாரும் வேடிக்கை பார்த்தான் செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. ஒரு கையில் வைனும் இன்னொரு கையில் சுருட்டுமாக பிரிட்டிஷ் துரைகளும் ஜெப மாலை உருட்டியபடியே பிரிட்டிஷ் பாதிரிகளும் வேடிக்கை பார்க்கத்தான் செய்திருக்கிறார்கள். ஃப்ளஷ் அவுட் டாய்லெட் கண்டுபிடித்த பிறகே அந்தப் பிரச்னைக்குத் தீர்வு வந்திருக்கிறது.

அதைக் கண்டுபிடித்தது ஒரு கிறிஸ்தவரே

ஆனால், அவர் சர்ச்சுக்குச் சென்று அதைக் கண்டுபிடிக்கவில்லை. சர்ச்சில் இருந்து வெளியேறி விஞ்ஞானரீதியாக சிந்தித்துத்தான் கண்டுபிடித்திருக்கிறார். அதோடு இன்று கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்தல், பிற வகைக் கழிவுகளை அகற்றுதல் என்று அந்தத் தொழில் முன்பைவிட மோசமாகத்தான் செய்திருக்கிறது. எந்திரங்களே கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் கழிவுப் பணிகளில் ஈடுபட்டதற்கு இந்துமதம் காரணமென்றால் இன்றும் அந்தக் கழிவுப் பணிகள் மனிதர்களால் செய்யப்படுவதற்கு யார் காரணம்?

இன்று அது குலத்தொழிலாக நிர்பந்திக்கப்படவில்லையே.

அதனால் என்ன பெரிய மாற்றம் வந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் தோட்டியாகலாம் என்பதா சமூக நீதி? கைகளால் அள்ளும் தோட்டியே இருக்கமாட்டார்; எந்திரங்களே இனி அனைத்தையும் செய்யும் என்பதுதானே சமூக நீதி. அதுதானே விஞ்ஞானத் தீர்வு. அதைச் செய்யவேண்டியவர்கள் எல்லாம் மனுவின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அந்நிய நாட்டு நிதிகளைக்கொண்டு முதலில் அந்த துப்புரவு பணி சார்ந்த கருவிகளை அல்லவா அதிக அளவில் இறக்குமதி செய்திருக்கவேண்டும். அதைச் செய்ய வக்கில்லை. கிறிஸ்துவுக்கு வா… ரட்சிக்கப்படுவாய் என்று பைபிளைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாகத் திரிய வெட்கமாக இல்லையா?

ஆக, இப்போதும் கிறிஸ்தவர்கள் யாரேனும்தான் அந்தத் தொழிலில் இருந்து அவர்களை ரட்சிக்கவேண்டும். இந்துக்கள் யாரும் செய்யமாட்டார்கள் அப்படித்தானே.

அவர்கள் படும் வேதனைக்கு அனைவருமே பொறுப்பு. அப்படி இருக்கும்போது இந்துக்களையும் இந்துமதத்தையும் மட்டுமே பழித்துக்கொண்டு பிரச்னை தீர ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாமல் இருப்பது மிகப் பெரிய அநீதி. திருட்டு முட்டாள் கழகத்தினரும் ஊழல் பெருச்சாளிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பார்ட் டைம் போராளிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். திரையுலகப் பெண் பித்தர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? தமிழ் தேசிய வெறியர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் க்ரிமினல்கள் என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? இன்று நடக்கும் இந்த இழிவுக்கு இவர்கள்தானே முக்கிய காரணம்?

Series Navigation<< ம(மா)ரியம்மா – 6ம(மா)ரியம்மா – 8 >>

2 Replies to “ ம(மா)ரியம்மா – 7”

 1. இவருடைய பேஸ்புக் பதிவில் இருந்து…..

  https://www.facebook.com/100010563041290/posts/pfbid0dEonoC2NTbQnqXqA2Z5ND9bkP2viERt5Vf69efy966fd5LU8vtLAHAFmMCzy2Svjl/

  பேரறிவாளன் விடுதலை..
  இரண்டு விதமான உணர்ச்சி மோதல்களைக்
  காண்கிறோம். அவை
  இயல்பானவையே..
  ஆனால் திருவிழாச் சந்தடியில்
  ஜேப்படித் திருடர்கள் கைவரிசை
  காட்டுவது போல தலைவெட்டி
  மும்மூஸ்கள் தங்களது ஜிஹாதி
  பிதாமகன்களுக்கும் விடுதலை
  வேண்டும் என்ற ஓலக்கச்சேரியைத்
  துவக்கியுள்ளனர்.

  2006 ஆண்டு வாக்கில் நானும் சில
  நண்பர்களும் அரசியல் மோதல்
  வழக்கு ஒன்றில் கோவை சிறையில்
  அடைக்கப் பட்டிருந்தோம்.

  அப்போது நான் ‘உண்ணிப்பூ’ என்ற
  பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்திக்
  கொண்டிருந்தேன்.

  நாங்கள் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கின்
  அடுத்து வேறொரு பிளாக்கில் அல்உம்மா
  பயங்கர வாதிகளும் இருந்தனர்.

  அல் உம்மாவின் தலைவராக இருந்த
  பாஷாவை சந்தித்து நேர்காணல்
  நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை
  நண்பர்களிடம் தெரிவிக்க அவர்களும்
  பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு
  ஒருநாள் அவரைத் தனியாகச்
  சந்திக்க முடிந்தது. பாஷாவுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில்
  அவரைச் சந்தித்தேன். அறை வெளியே
  இரண்டு மூன்று காவலர்களும்
  இருந்தனர்.

  மருதாணிச்சாயம் தோய்ந்த தாடி
  அளவாக வெட்டப்பட்ட தலைமுடி..
  நெற்றியில் தொழுகைத் தழும்பு
  சாதாரண உயரம்.. கோவையை
  மட்டுமல்ல இந்தியாவையே அதிர்ச்சி
  அடைய வைத்த அந்த மனிதர் மிகச்
  சாதாரணமாகவே காட்சியளித்தார்.

  வழக்கமான விசாரிப்புகளுக்குப்
  பிறகு கோவை குண்டுவெடிப்பு பற்றிய
  விபரத்திற்குள் நுழைந்தேன்.
  குண்டு வெடிப்பு பற்றிய என் வினாவை
  மிக லாவகமாகக் கையாண்ட அவர்
  கூறியது:-

  “ஆமாம் குண்டு வெடிப்பை நாங்கள்
  தான் நிகழ்த்தினோம். எங்களை
  அடித்தபோது நாங்கள் திருப்பி அடித்தோம். எங்களை வெட்டிய போது
  திருப்பி வெட்டினோம். ஒரு போலீஸ்
  காரன் கொல்லப்பட்டதற்காக அவர்களும்
  ஆர்எஸ்எஸ்ஸும் இணைந்து எங்களை
  வேட்டையாடினர். பதினேழு முஸ்லிம்கள்
  கொல்லப்பட்டனர். அதற்குப் பழி
  தீர்க்கவே அத்வானியின் கூட்டத்தில்
  குண்டு வைத்தோம்.”

  மருத்துவமனையில் ஏன் குண்டு
  வைத்தீர்கள்.. அதில் பல அப்பாவிகள்
  கொல்லப்பட்டார்களே எனக் கேட்ட
  போது எந்தத் தயக்கமும் இன்றி
  பதில் வந்தது.

  “அமெரிக்கா இராக்கின் மீது
  தாக்குதல் நடத்தியபோது ஒரு
  மருத்துவமனை மீதும் குண்டு
  விழுந்தது. அதை அமெரிக்கா அது
  ஒரு டெக்னிக்கல் மிஸ்டேக் என்றது.
  அதுபோலத்தான் இதுவும் ஒரு
  டெக்னிக்கல் மிஸ்டேக் அவ்வளவு
  தான்” …என்றார் அவர் கூலாக.

  வழக்கை சட்டப்படி எதிர் கொள்வீர்களா
  எனக் கேட்டபோது “எங்களில் சிலர்
  தூக்கிலிடப்படலாம்.. சிலருக்கு ஆயுள்
  தண்டனை கிடைக்கலாம். சிலர்
  விடுதலையாகலாம். எங்களுக்கு
  கோர்ட்டு தீர்ப்பின் மீதெல்லாம்
  நம்பிக்கை இல்லை.அல்லாவின்
  இறுதித் தீர்ப்புக்கு மட்டுமே நாங்கள்
  கட்டுப்பட்டவர்கள்” என்றார்.

  அப்போது அதே சிறையில் அடைக்கப்
  பட்டிருந்த அப்துல் நாசர் மதனி குறித்து
  அவருக்கும் இந்த வழக்கிற்கும்
  சம்பந்தமில்லை என்று ஒரு போனஸ்
  தகவலையும் கூறினார்.
  மதானி தற்போது பெங்களூரில்
  வேறொரு வழக்கில் கைது செய்யப்
  பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில்
  உள்ளார்.

  நான் அவதானித்த வரையில்
  அல் உம்மாவினர் தாம் சிறைக்
  காவலர்களை சிறை பிடித்து
  வைத்துள்ளார்களோ என்ற விதத்தில்
  நிலைமைகள் இருந்தன. அவர்களுக்குத்
  தேவையான எல்லா வசதிகளும்
  தங்கு தடையின்றிக் கிடைத்துக்
  கோண்டிருந்தன. சிறைக் காவலர்கள்
  பலர் இவர்களுக்கு சேவை புரிவதற்
  கென்றே பிறவியெடுத்தது போல்
  செயலாற்றிக் கொண்டிருந்தனர்.
  அவ்வப்போது சில உயர் அதிகாரிகள்
  வரும்போது மட்டும் கொட்டடிகளைச்
  சோதனை செய்வது போல பாவ்லா
  காட்டினர்.

  பேரறிவாளன் தான் நிரபராதி என
  வாதாடியவர். விசாரணை அதிகாரி
  யாக அன்றிருந்த தியாகராஜன்
  பேரறிவாளனது வாக்குமூலத்தை
  தான் வேண்டுமென்றே மாற்றிப்
  பதிவு செய்ததாக பகிரங்கமாக
  வெளிப்படுத்தியுள்ளார். எனவே
  அவரது விடுதலையில் ஏதோ ஒரு
  ஈசானமூலையில் நியாயத்தின்
  நூலாம்படை தொங்கிக் கொண்டு
  நிற்கிறது.

  ஆனால் அல்உம்மா குண்டு வெடிப்புப்
  படுகொலையாளர்கள் எவ்விதக்
  கருணையும் எதிர் நோக்கத் தகுதி
  அற்றவர்கள். அவர்களே குற்றத்தை
  பெருமிதத்துடன் ஒப்புக் கொண்டவர்கள்.
  நீதிமன்றம் சட்டம் அரசமைப்பு ஜன
  நாயகம் இவற்றின்மீது எவ்வித
  நம்பிக்கையுமற்றவர்கள். அவர்களே
  கூறியது போல அல்லா வேண்டுமானால்
  அவர்களை விடுவிக்கட்டும். அதுவரை
  சிறைக்கொட்டடியிலேயே ஆயுளைக்
  கழிக்கட்டும்.

  இன்னொரு குண்டுவெடிப்பைத்
  தாங்கும் சக்தி கோவையிடம்
  இல்லை…!!!

 2. A very good article. Small whinge. NEVER EVER SAY THAT CONVERSION IS WRONG. All Christians and Muslims should return to Sanatana Dharma, a mass Ghar wapsi is sorely needed and should not ever be discouraged. Conversion to other religions from Hinduism should be made illegal as it causes demography changes and unrest within the population.
  There is nothing called a good Christian or Good Muslim. The so called good christians or Muslims DO NOT FOLLOW THE FUNDEMENTAL SAVAGE EXCLUSIVE DOCTRINES OF THEIR RELIGIONS. A good Christian or a Muslim is fundementally a fanatic as their religions are the nature of EXCLUSIVISM. My way or the high way!! Don’t ever preach to Christians to be good Christians or to Muslims to be good Muslims.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *