ம(மா)ரியம்மா – 14

This entry is part 12 of 14 in the series ம(மா)ரியம்மா

நீங்கள்தானே மதம் மாறியாகவேண்டும் என்று சொன்னீர்கள்.

அது நான் மனு ஸ்ம்ருதியின் பிடியில் இருந்து உங்களை விடுவிக்க அப்படிச் சொன்னேன். மனு ஸ்ம்ருதி இன்று பரணில் போடப்பட்டுவிட்டது. அதோடு இன்று புதிய ஸ்ம்ருதி எழுதப்பட்டுவிட்டது. இன்று நீங்கள் இந்துவாக இருந்தாலே, இந்துவாக இருந்தால்தான் உங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். கிடைக்கவேண்டும்.

கிறிஸ்தவத்தை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் அண்ணலே.

முதலாவதாக அது தலித்களுக்கு மட்டும் தன் சேவையைக் குறுக்கிக்கொண்டிருக்கவில்லை.

அதில் என்ன தவறு இருக்கிறது?

அது எப்படி சரியென்றுசொல்லமுடியும்?

மனித குலம் அனைத்தின் மீட்பர்தானே இயேசு.

காவலர் என்றால் கயவர்களுக்குத் துணை போகக்கூடாது. தீண்டாமையை ஒழிப்பதென்றால் தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்களுக்கு உதவி செய்வதா? தனது பள்ளிகளில் தனது மருத்துவமனைகளில் தீண்டாமையைக் கைவிட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை என்று சொல்லியிருந்தால் என்றைக்கோ தீண்டாமை ஒழிந்திருக்குமே. ஆனால், அவர்கள் மேல் ஜாதிகளில் இருந்தும் பலர் கிறிஸ்தவர்களாகவேண்டும் என்று விரும்பினார்கள். அதுகூடப் பரவாயில்லை அந்த மேல் ஜாதியினர் ஜாதிக் கொடுமையை கிறிஸ்தவத்துக்கு வந்த பின் கடைப்பிடித்தபோதும்கண்டுகொள்ளாமல் இருந்தனர். இன்றும் ஒரு ஜாதி இந்துவின் திருச்சபைக்கு தலித் பாதிரி தலைவராக முடியாதே. கிறிஸ்தவத்துக்குச் சென்ற பின்னும் ஜாதியைக் கொண்டுசெல்லும் ஜாதி கிறிஸ்தவரைவிட இந்துத்துவ அமைப்பில் சேர்ந்துகொண்டு ஜாதி உணர்வைக் கைவிட்டுவிட்டுவரும் ஓர் ஜாதி இந்து மேலானவர்தானே.

அந்தவகையில் இஸ்லாம் இன்னும் மேலானது அல்லவா? அவர்களுடைய மசூதியில் ஏற்றத் தாழ்வு இருப்பதில்லையே.

அவர்கள் மதத்தின் பேரில் தனி நாடு கேட்டார்கள். ஆனால், அதை வாங்கிக் கொண்டுவிட்டு இங்கேயே இருந்துவிட்டார்கள்.

நீங்களும் பாகிஸ்தன உருவாக ஆதரவு தெரிவித்திருந்தீர்களே அண்ணலே.

தனி நாடு கொடுக்காவிட்டால் உள்ளுக்குள் இருந்துகொண்டு முஸ்லிம்கள் கொடுக்கும் தொந்தரவுக்கு அவர்கள் பிரிந்து சென்று அதன் மூலம் வரும் பிரச்னையே மேல் என்பதால்தான் அப்படிச் சொன்னேன். அதோடு பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு நாம் அடைக்கலம் கொடுத்தாகவேண்டும் என்று அன்றே சொல்லியிருந்தேன். இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் அது கொண்டுவரப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது என் கனவு ஒன்று நனவாகப்போகும் மகிழ்ச்சியே எனக்கு ஏற்படுகிறது.

ஒரு அகதியை மத அடிப்படையில் விலக்குவது சரியாக இருக்குமா அண்ணலே.

இஸ்லாமியர் ஒருவருக்கு அதுவும் இந்துக்களுடன் எங்களால் வாழமுடியாதுஎன்று சொல்லி பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைக் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றவர்கள், ஐம்பது வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடு என்று கேட்டால் என்ன அர்த்தம். இதற்கு பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு தேவையே இல்லையே. இஸ்லாமிய அரசாலும் அவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்றால் பேசாமல் இந்து ராஷ்டிரத்துடன் சேர்ந்துகொண்டுவிடலாமே. ஒரு விஷயம் சொல்லட்டுமா. முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களாக மாறாதவரையில் தலித்கள் மீது பாசம் எதுவும் கிடையாது. தலித்களை தலித்களாகவே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது இந்துத்துவர்கள் மட்டுமே. எனவே காலம் மாறும்போது அதற்கு ஏற்ப நம் கருத்துகளை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அதோடு மத மாற்றம் என்பது இரண்டு காரணங்களினால் மிகவும் மோசமானது. முதலாவதாக அது சமூக சேவையை வியாபாரமாக்கிவிடுகிறது. சரியாகச் சொல்வதென்றால் ஒரு உதவியைச் செய்துவிட்டு உயிரைக் கொடு என்று பறித்துவிடுகிறது.

இது அபாண்டமான குற்றச்சாட்டு அண்ணலே.

இல்லை. நான் எதையும் மிகைப்படுத்தமாட்டேன். ஒரு இந்துவுக்குக் கல்வி கொடுத்துவிட்டு கிறிஸ்தவராக மாறு என்று கேட்பது அந்த இந்துவைக் கொல்வதற்குத்தான் சமம். ஒருவரை அவருடைய கலாசாரத்தில் இருந்து பிரிப்பதென்பது அவர்களுடைய முன்னோர்களைக் கொல்வதற்கு சமம். அந்த இந்து இந்துமரபில் தொடர்ந்து இருப்பதன் மூலமே அவருடைய முன்னோர்களை, அவர்களுடைய கலாசரத்தை உயிர்ப்புடன் திகழச்செய்வார். அதைக் கைவிட்டால் அவர்களைக் கொல்வதற்கு சமம். இயேசு என்ன சொல்லியிருக்கிறார் மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்றுதான் சொல்லியிருக்கிறார்.

அண்ணலே இல்லற வாழ்வில் இருந்து ஒருவரை சமூக நலனுக்காகக் குடும்பத்தைவிட்டு பிரிந்து வரச் செய்வதை அப்படிச் சொல்லியிருக்கிறார். குறுகிய சுய நலமான குடும்ப்ப் பாசத்துக்குப் பதிலாக பிறருடைய துயரையும் தன் துயராகப் பார்க்க வைப்பதை அப்படிச் சொல்லியிருக்கிறார்.

இதை அப்படிக் குறுக்கிவிடமுடியாது. ஒரு தமிழரை அவருடைய அப்பாவிடமிருந்து பிரிந்துவந்து அமெரிக்காவில் சமூக சேவை செய்ய வைத்தால் தவறில்லை. மீண்டும் அந்தத் தமிழரை அந்தக் குடும்பத்துக்கு அனுப்பிவைத்தால் பரவாயில்லை. நீ கிறிஸ்தவராக மாறி கம்பரை விட்டுவிட்டு வா… நீ கிறிஸ்தவராக மாறி ராஜராஜ சோழனை திட்டு என்று சொல்வது அந்தத் தமிழரைக் கொல்வதற்குச் சமம் தான்.

எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்ய இந்த உலகில் யாரால் முடியும் அண்ணலே.

நன்றியை எதிர்பார்க்கலாம். ஒரு உதவிக்காக என் அடிமையாகிவிடு என்பது தவறு. கிறிஸ்தவமும் இஸ்லாமும் அதைத்தான் செய்கின்றன. அமெரிக்கா,, ஆஸ்திரேலியா, ஆஃப்ரிக்காவில் பூர்வ குடிகளை உடனே கொன்று குவித்தது. இந்தியாவில் சிறுகச் சிறுகக் கொல்கிறது. ஒரு ஊரில் ஒரு சிலுவை நடப்படுகிறதென்றால் ஒரு சிறு தெய்வம் கொல்லப்படுகிறது, கைவிடப்படுகிறது என்றுதான் அர்த்தம். கிறிஸ்தவத்துக்கு மாறிய பின்னும் உன் குலதெய்வத்தைக் கும்பிடு என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா?

நீங்கள் கூட உங்க உறுதிமொழியில் அதைச் சொல்லவில்லையே அண்ணலே.

நான் குல தெய்வத்தை கும்பிடாதே என்றும் சொல்லவில்லையே. அதோடு பௌத்தம் என்பது மாமிசப் படையலை மறுக்கக்கூடிய சன் மார்க்கம். எனவே அந்த ஆன்மிக அம்சத்துக்கு முக்கியத்துவம் தந்தேன். மத மாற்றத்தின் இரண்டாவது பெரிய அபாயம் என்னவென்றால், மதம் மாறுவதால் ஒருவர் தன் தாய் நாட்டுப் பற்றை இழந்துவிடுகிறார். நாட்டுக்கு எதிராகத் திருப்பப்படுகிறார். அதுதான் மிகப் பெரிய தவறு.

எப்படிச் சொல்கிறீர்கள் அண்ணலே, அப்துல்கலாம் இல்லையா கர்னேலியஸ் இல்லையா.

ஜின்னாவைப் பார்த்தும் இதைச் சொல்லமுடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவ்ஹீத் ஜமாத்தைப் பார்த்தும் இதைச் சொல்லமுடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு அப்துல்கலாமினால் ஏற்பட்ட நல்லிணக்கத்தைவிட ஒரு ஜின்னாவினால் ஏற்பட்ட இழப்பே மிக அதிகம். எனவே மத மாற்றத்தை அதை அடிப்படையாகவைத்துத்தான் எடைபோடவேண்டும்.

தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் தனிநாடா கேட்கிறார்கள்.

இன்று கேட்கவில்லை. நாளை கேட்பார்கள்.

இது பெரிய அவதூறு அண்ணலே.

பங்களாதேசம் தெரியுமா உங்களுக்கு.

ஆமாம்.

அது எப்படி உருவானது என்று தெரியுமா?

பாகிஸ்தானின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டார்கள்.

ஆமாம். அனைத்து வங்காளிகளுக்கான ஒரு நாடு. நாம் வங்காளிகள் என்று சொல்லித்தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். இந்தியாவும் அதைப் பெற்றுக் கொடுத்தது. பத்தே ஆண்டுகளில் வங்காளிகளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். கொன்று குவித்தார்கள். பங்களாதேசம் ஒரு இஸ்லாமியக் குடியரசு என்று அறிவித்துவிட்டார்கள். பங்களாதேஷில் இருந்து அடித்துவிரட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்களே. அவர்களுக்கு வங்காள இந்துக்களால் நேர்ந்த கொடுமையைவிட வங்காள முஸ்லிம்களால் அதாவது முஸ்லிம்களால் ஏற்பட்ட கொடுமையே அதிகம். இங்கும் நாம் தமிழர்கள் என்று ஆரம்பிப்பார்கள். நாளைக்கே தமிழை விட்டுவிட்டு நாம் கிறிஸ்தவர், நாம் முஸ்லிம் என்று மாறிவிடுவார்கள். மாற்றிவிடுவார்கள். மாறவில்லையென்றால் அடித்துவிரட்டுவார்கள். கொன்று குவிப்பார்கள். நான் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளச் சொல்கிறேன். அவதூறு செய்யவில்லை. எதையும் மிகைப்படுத்தவில்லை.

நீங்கள் வகுத்துக்கொடுத்த அரசியல் சாசனத்தில் மத மாற்றத்துக்கு அனுமதி தந்திருக்கிறீர்களே?

இல்லை. மத பிரசாரத்துக்கும் மதச் சடங்குகளைப் பின்பற்றும் சுதந்தரத்துக்கும்தான் இடம் தந்திருக்கிறேன். வலியவர் தன் சக்தியைப் பயன்படுத்திச் செய்யும் மத மாற்றத்துக்கு அல்ல. ஒரு மரத்தை வெட்டினால் நான்கு கன்றுகளை நடவேண்டும் என்று சொல்வதுபோல் ஒருவரை மதம் மாற்றினால் மாற்றப்பட்டவரின் கலாசாரத்துக்கு மரபுக்கு நான்கு உதவிகள், நன்மைகள் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கவேண்டும். சிறுபான்மை என்ற பெயரில் அரசின் உதவிகளைப் பெற்றால் பெரும்பான்மைகளின் கலாசாரத்துக்கு நான்கு நன்மைகளை நல்லிணக்க நோக்கில் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கவேண்டும்.

அப்படியானால் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் அண்ணலே. அடங்கு அத்துமீறு கலகம் செய் என்று சொன்னதெல்லாம் பொய்யா.

இல்லை. நிச்சயம் இல்லை. இப்போதும் அதையேதான் சொல்கிறேன். ஆபிரஹாமிய மதங்களின் பிரிவினைவாதங்களுக்குள் அடங்க மறு ஆபிரஹாமிய மதங்களின் ஏய்ப்புகளிலிருந்து அத்துமீறு; ஆபிரஹாமிய மதங்களின் தந்திரங்களை எதிர்த்துக் கலகம் செய்; நல்லிணக்க மலர்களை நயமுடன் சூடிக்கொள்; அனைவருக்குமான வளர்ச்சியை அரவணைத்துக்கொள்; அழிவற்ற தர்மத்தை ஆர்வத்துடன் பற்றிக்கொள் என்று சொல்பவர் மரியம்மாளையும் ஜானையும் மேடைக்கு வரச் சொல்கிறார்.

பய பக்தியுடன் அவரை நெருங்குபவர்கள் அவர் காலில் விழுந்து வணங்குகிறார்கள். அவர்களை ஆசிர்வதிப்பவர், நான் சொல்வதைக் கேட்பீர்களா நீங்கள் என்கிறார்.

நிச்சயமாக அண்ணலே. நீங்கள் சொல்லவேண்டாம். உத்தரவிடுங்கள்.

நான் உத்தரவெல்லாம் விட விரும்பவில்லை. நான் எழுதிய அரசியல் சாசனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையிருந்தால்…

என்ன அண்ணலே இது கேள்வி. நீங்கள் சொன்னதே எங்களுக்கு வேதம்.

நல்லது. அது அனைவருக்கும் சம வாய்ப்பைத் தருகிறது என்ற நம்பிக்கை இருந்தால், பட்டியலினத்தினருக்கு பரிவுடன் சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால் அதற்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள். இந்த முறை உறுதிமொழிகளை நான் எழுதிக் கொடுக்கப்போவதில்லை. நீங்களே எழுதிக் கொள்ளுங்கள் என்று பண்புடன் கேட்டுக்கொள்கிறார். கூடியிருக்கும் மக்களைப் பார்த்து நீங்களே ஒன்றுகூடிப் பேசி உறுதிமொழிகளை எழுதிக் கொண்டுவாருங்கள் என்று சொல்கிறார்.

மக்கள் அனைவரும் கலந்தாலோசிக்கின்றனர். அண்ணல் சொன்னதுபோல் பௌத்தத்துக்கே மாறுவோம் என்று சிலர் சொல்கிறார்கள். உயிர்கள் மீது கருணை கொள்ளவேண்டும் என்று அது சொல்கிறதே. அந்த உறுதிமொழியை எடுத்துவிட்டு அண்ணலுக்கு துரோகம் செய்ய முடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.

நாத்திகர்களாகிவிடுவோமா… இயற்கையின் படைப்பில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரும் கடவுளை நம்பவில்லைஎன்று சிலர் சொல்கிறார்கள். விலங்குகளாக வாழ விரும்புபவர்களுக்குக் கடவுள் தேவையில்லை. மனிதர்களுக்கு அது அவசியம் என்று சிலர் சொல்கிறார்கள்.

சிராத்தங்கள் எல்லாம் செய்யவேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள். இறந்த ஆத்மாக்களை கதி கெட்டு அலையவிட்டா அதைவிடப் பெரிய பாவம் ஒண்ணுமே இல்லை. அப்பறம் மனுஷன்னு நாம் சொல்லிக்கறதுல அர்த்தமே இல்லை என்கிறார் ஒரு முதியவர்.

ராஜராஜனைவிடவா நாம் புத்திசாலிகளென்று ஒருவர் கேட்கிறார். ராஜராஜனும் சில தவறுகள் செய்திருக்கிறாரே என்று இன்னொருவர் சொல்கிறார். ஆனால், அதை விக்டோரியா மகாராணிக்கு சாமரம் வீசியபடி சொல்லக்கூடாது அல்லவா… ஔரங்கஜீபுக்கு அடிவருடிக் கொடுத்தபடியே ராஜராஜனைத் திட்டக்க்கூடாது அல்லவா; மன்னர்களை எதிர்ப்பதென்றால் அனைத்து மன்னர்களையும் எதிர்க்கவேண்டும். அதுதான் அறத்தின் குரல். யாரேனும் ஒரு மன்னரை ஆதரிப்பதென்றால் குறைந்த தவறுகள் செய்தவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் நம்மவராக இருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவேண்டும் என்று சொல்கிறார் முதலாமவர்.

இப்படி ஒவ்வொரு விஷயமாகப் பேசி அனைவரும் சேர்ந்து எழுதிக் கொடுத்த உறுதிமொழிப் பட்டியலை எடுத்துக்கொண்டு அம்பேத்கரிடம் சென்று கொடுக்கிறார்கள். அதைப் படித்துப் பார்க்கும் அவர் புன்முறுவல் பூத்தபடியே அவர்களை ஆசிர்வதித்து மேடையில் நடுவில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அங்கே குங்குமச் சிமிழ், சிலுவை டாலர், குல்லா ஆகியவை வைக்கப்பட்டிருக்கின்றன.

மரியம் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறார். அம்பேத்கர் அருகில் இருந்த மண் பானையில் இருந்து நீர் முகர்ந்துகொடுக்கிறார். அதைக் குடித்ததும் சற்று ஆசுவாசமடைகிறார் மரியம். தைரியமாகப் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்துகிறார் அம்பேத்கர்.

நம்பிக்கையையும் துணிச்சலையும் வரவழைத்துக்கொள்ளும் மரியம்மா, உரத்த குரலில் உறுதிமொழி எடுக்க ஆரம்பிக்கிறார்.

மாரியம்மாவாகிய நான்…

கூட்டம் ஆரவாரமாகக் கூச்சலிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது. தணிந்த குரலில் அவர் பேசுவது உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

என் குல தெய்வ வழிபாட்டுக்குத் திரும்புகிறேன் என்று சொல்கிறார்.

பாதிரியாரின் உடம்பில் இறங்கியிருக்கும் அம்பேத்கரின் ஆன்மா, குங்குமத்தை எடுத்து இட்டுவிடுகிறது.

இனிமேல் நாங்கள், கர்த்தரையோ அவருடைய குமரனையோ கன்னி மரியாளையோ பரிசுத்த ஆவியையோ அல்லாவையோ அவருடைய இறைத்தூதரையோ வழிபடமாட்டோம்.

உறுதிமொழிகள் தொடர்கின்றன.

மாரியம்மாளின் பாட்டியும் தாத்தாவும் விண்ணில் இருந்தபடி மலர் தூவி ஆசிர்வதிக்கின்றனர்.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 12<< ம(மா)ரியம்மா – 11

One Reply to “ம(மா)ரியம்மா – 14”

  1. Mr. எடப்பாடி அந்த நெடுவாசல மூடுங்க…

    மூடிடுறேனுங்

    அறிவு பரோல் ல விடுங்க

    வுட்டுடறேனுங்

    Delta ல ஒரு பய உள்ள வரக்கூடாது
    தீர்மானம் போடுங்க

    போட்டுடறேனுங்

    அந்த Sterlite அ seal வைங்க

    வச்சாசுங்க

    தப்ளீக் க freeya விடுங்க..
    வடுறேனுங்க…

    மோடிக்கே கொலைமிரட்டல் விட்டாலும் கைது பண்ணக்கூடாது

    மாட்டேங்க..

    ########

    ஏறக்குறைய இந்த level ல தான் கடந்த எடப்பாடி ஆட்சி , அறிவாலயம் சொன்னப்படி கேட்டு நடந்துச்சு…

    அதிமுக உருவாக காரணமே திமுக வை காலி பண்ணத்தானே ஒழிய அடிமையா இருக்க அல்ல…

    ஜெ இருந்தவரைக்கும் அப்படித்தான் இருந்தாங்க…எடப்பாடி வந்ததும் அப்படியே தலைகீழ்…

    இதெல்லாம் தெரிந்தும் அடிப்படை தொண்டன் எப்படியோ ஆட்சில இருக்கோம் வருமானம் வருதுனு அமைதியா இருந்தாங்க..

    இப்ப ஆட்சி மாறியாச்சு…

    உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிஞ்சு அடிமட்டம் வரை ஊழல் ஏகபோகமா நடந்துகிட்டுருக்கு…

    போன ஆட்சில சின்ன சின்ன பிரச்சனையை கூட பரிசு படுத்தி குடைச்சல் குடுத்தானுங்க…

    ஆனா இப்ப லட்டு மாதிரி வாய்ப்பு கிடைச்சாலும் வாய்ல பூட்டு போட்டு உக்காந்திருக்காங்க..

    அதே நேரம் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அதிமுகவின் திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை பாஜக வின் அண்ணாமலை முன்னெடுத்து போறாரு…

    இது களத்துல இருக்கும் உண்மையான அதிமுக தொண்டர்கள் மனசுல அண்ணாமலை மீதான மரியாதையும் அதிமுக முண்ணனி தலைவர்கள் மீதான அவநம்பிக்கையையும் அதிகரிக்க செய்யுது…

    இது இப்படியே போனா நாளைக்கு பாஜக ஆதரவு நிலையா மாறிடும் ங்கற பயம் அதிமுக தலைவர்ளிடையே வந்திருச்சு…

    ஏன்னா , உண்மையான அதிமுக தொண்டர்கள் / பொதுமக்கள் க்கு திமுகவை யார் தூக்கி போட்டு மிதிச்சாலும் கண்ணை மூடிகிட்ட ஆதரவு தருவாங்க

    இது போக..

    அண்ணாமலை யின் தொடர் திமுக எதிர்ப்பு. ஒரு வித நெருக்கடி நிலையை அதிமுக முண்ணனி தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கு..

    அவங்களும் எதிர்க்கனும் / ஒருவேளை அப்படி எதிர்த்தா இவனுங்க பண்ண ஊழலையெல்லாம் கிளருவாங்கன்ற பயம்

    ரெண்டு கெட்டான் நிலை…

    அதே மாதிரிதான் பாமக வும்…

    திருப்போருர் மாதிரி வன்னியர் strong தொகுதியிலேயே அதுவும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் கிட்டயே தோத்து போனது கடும் அவமானம்..

    ஆனாலும் இந்த அவமானத்திற்கு காரணமான திமுக கூடவே கூட்டணி போட நினைக்கும் தலைவர் என பாமக தொண்டர்களும் கடுமையான அதிர்ச்சில இருக்காங்க…

    அண்ணாமலை வளர்ச்சியோ பாஜக வளர்ச்சியோ முக்கியமான பிரச்சனை இல்ல இவங்களுக்கு..

    உண்மையான பிரச்சனை என்னன்னா..

    தன் சொந்தகட்சி தொண்டர்களிடையே அதன் தலைவர்களே Expose ஆகிக்கொண்டிருப்பதுதான் பிரச்சனை…

    அதிமுக பலம் தலைமை + தொண்டர் பலம் + சின்னம்

    இதில் தலைமை ஏற்கனவே போயாச்சு…

    அடுத்து

    தொண்டர் பலமும் போய்ட்டா சின்னத்தை மட்டும் வைச்சிகிட்டு என்ன செய்ய முடியும் ,?

    கதறத்தானே செய்வாங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *