சாணக்கிய நீதி தொடருகிறது:
மூர்க்கா2ஶிஷ்யோபதே3ஶேந துஷ்டஸ்த்ரீப4ரணேந ச |
து3:க்கிதை: ஸம்ப்ரயோகே3ண பண்டி3தோப்ய(அ)வஸீத3தி || 4 ||
பதவுரை: மூர்க்கச் சீடனுக்கு உபதேசிப்பதாலும், தீய பெண்ணை ஆதரிப்பதாலும், துன்பத்திலிருப்பவருடன் சேர்ந்திருப்பதாலும் அறிவாளியும் பேரிழப்பை அடைகிறான். … … 4
விளக்கம்: ஓர் அறிவாளி எதனால் பெரும் இழப்பை, தாங்கொணாத் துயரை அடைகிறான் என்று இந்தச் செய்யுளில் சொல்லப்படுகிறது. அறிவாளி அல்லது ஆசானிடம் கற்கப் பலரும் சீடராக வருவர். தகுந்த சீடருக்குச் சொல்லித் தருவதால், சீடரும் பயனடைகிறார், ஆசானுக்கும் பெருமை கிட்டுகிறது. அதை விடுத்து, அறிவிலியாகவோ, முட்டாளாகவோ, மதிகெட்டவனாகவோ உள்ள சீடனுக்குக் கற்றுக்கொடுக்க முயன்றால், என்றும் துன்பமே விளையும்.
ஏனெனில், அறிவிலிக்கு எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் அது மனதில் ஏறாது. முட்டாளால் சொல்வதைப் புரிந்துகொள்ள இயலாது. மதிகெட்ட சீடனோ, ஆசான் ஒருமுறை சொல்வது ஏறவில்லை என்று திரும்பச் சொன்னால், கோபமடைவான். மற்ற நல்ல சீடர்களைக் கண்டு பொறாமைப் பட்டு, ஆசிரியர் பாரபட்சம் காட்டுகிறார் என்று தூற்றுவான்.
‘துஷ்ட’ என்றால் பல பொருள்கள் உள்ளன. தீய, நன்னடத்தை இல்லாத, வஞ்சகமான, பொறாமை கொண்ட, அடுத்துக் கெடுக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ‘பரண’ என்றால், ஆதரிப்பது, பாதுகாப்பது, தொடர்புகொள்வது, அணுக்கமாகப் பழகுவது என்று வருவதால், இங்கு கெட்ட நடத்தையுள்ள பெண்ண அணுக்கமாக வைத்து ஆதரிப்பது என எடுத்துக்கொள்வதே பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட பெண்ணுடன் இருக்கும் எந்த அறிவாளியை மக்கள் மதிப்பர்? அவர் சொல்லை எவர் கேட்பர்? அவள் தகாத செயலைச் செய்து, இவரையும் மாட்டிவைத்தாலும் வைக்கலாம். எனவே, அப்பெண்ணிண் உறவினால் அப்பண்டிதருக்குத் துன்பமே விளையும்.
அடுத்து, துன்பத்தில் இருப்பவரைப் பற்றிப் பார்ப்போம். உடனே, கஷ்டப்படுபவருக்கு உதவி செய்வது அறிஞனுக்கு அழகல்ல, அதனால் துன்பம் விளையும் என்று நினைத்துவிடக் கூடாது. ஒருவர் உண்ண உணவின்றி இருக்கிறாரென்றால், அவருடைய பசியைத் தீர்த்துவைக்கலாம்; உடுக்க உடையில்லை என்றால் நம்மாலியன்ற உடைகளைக் கொடுக்கலாம். ஆனால், தன் முயற்சியே இல்லாது, எவ்வுதவி செய்தாலும், அதன் மூலம் முன்னேறாது, திரும்பத் திரும்பத் துயரத்தில் ஆழ்பவரைத்தான் இங்கு சாணக்கியர் குறிப்பிடுகிறார்.
சான்றாக, ஒருவர் நம்மிடம் பண உதவி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவருக்கு மனமிரங்கி நாம் கொடுக்கும் பணத்தை அவர் குதிரைப் பந்தயத்திலோ, சூதாட்டத்திலோ, குடிப்பழக்கத்திலோ, இன்னும் வேறுபல தகாத செயல்களில் விட்டுவிட்டு, மீண்டும் உதவிக்கு வந்தால் – நமது பணமும் போயிற்று, பணத்தைத் திருப்பிக் கேட்டால் நட்பும் போய்விடும். அவருடன் மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்டால், அவருடைய பழக்கவழக்கங்களும் நமக்கு வந்துசேர்ந்து, நாமும் கைநஷ்டப்பட நேரிடும்.
ஆகவேதான், அப்படிப்பட்ட – மதியின்றித் துன்பக் கடலில் எப்பொழுதும் மூழ்கியிருப்பவர்களுடன் தொடர்புகொண்டால், அறிவாளிகளும் துன்பத்தில் மூழ்குவர் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
து3ஷ்டா பா4ர்யா ஶடம் மித்ரம் ப்4ருத்யஶ்சோத்தரதா3யக: |
ஸஸர்ப்பே ச க்3ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந ஸம்ஶய: || 5 ||
பதவுரை: தீய மனைவி, ஏமாற்றும் நண்பன், எதிர்த்துப் பேசும் வேலையாள், பாம்பும் வீட்டில் குடியிருந்தால் மரணம்தான், ஐயமே இல்லை. … 5
விளக்கம்: சென்ற செய்யுளிலேயே துஷ்ட என்பதற்கான விரிவான விளக்கம் கொடுத்திருக்கிறது., அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ, நிலத்திலோ கடினமாக உழைத்துவிட்டு, வீட்டிற்கு வரும்போது, தீநடத்தையுள்ள, பொறாமைப்படுகின்ற, வஞ்சகமாகச் செயல்படுகின்ற மனைவி வீட்டிலிருந்தால் அதைப்போன்ற தொல்லை, மனவருத்தம், துன்பம் கிடையவே கிடையாது; ஏன் வீட்டுக்கு வருகிறோம் என்ற மன அழுத்தமே சிறிதுசிறிதாக உடல் நலத்தைக் குன்றவைக்கும்.
இது போதாதென்று, நம்மை வெறுக்கும், எளிதில் கோபமடைந்து சிடுசிடுவென்று பேசும் நண்பரும் (இப்படி நடந்துகொள்பவரை நண்பர் என்றா சொல்வோம்?) இருந்தால், மனைவிமூலம் ஏற்படும் மன அழுத்தத்தைக்கூடப் பகிர்ந்துகொள்ள இயலாது. அதையும் தாண்டி, வீட்டிலோ அலுவலகத்திலோ நம்மிடம் வேலைபார்ப்பவர் எந்த வேலையைச் சொல்லும்போதும், திமிருடன், மட்டுமரியாதையின்றி, வரம்புகடந்து எதிர்த்துப் பேசினால் அவரிடம் எப்படி வேலைவாங்கி, மேலதிகாரி நம்மிடம் ஒப்படைத்த பணியைச் பொறுப்பாக நிறைவேற்ற இயலும்? உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்திற்கு இருபக்கமும் இடி என்பதுபோல, மேலதிகாரியிடமும் நற்பெயர் பெறாது, நம்மிடம் வேலை பார்ப்பவரையும் ஒன்றும் செய்ய இயலாது, மாரடைப்புதான் ஏற்படும்.
இதையெல்லாம் தப்பி வீட்டில் மனைவி கொடுக்கும் தொல்லையையும் தாண்டித் தோட்டப் பக்கம்போனால், அங்கு பாம்பு இருந்து அதன் மீது காலை வைத்தாலோ – வீட்டு அடைசலில் குடியிருக்கும் பாம்பு, அதை நாம் சுத்தப்படுத்தலாம் என்று கையைவைத்தாலோ, அதனிடம் கடிபட்டுச் சாகவேண்டியதுதானே நிச்சயம்?
நினைத்துப்பாருங்கள், நம் எதிரிக்குகூட இப்படிப்பட்ட நிலைமை வரவேண்டும் என நினைக்கமாட்டோம். இத்தனையும் ஒருவருக்கு ஒருங்கே ஏற்பட்டால், அவர் இவ்வுலகில் இருக்கும் சீட்டைக் கிழித்தாகிவிட்டது, ஐயமே இல்லை, என்று சொல்கிறார், சாணக்கியர்.
உடனே, பெண்களைப் பற்றிச் சாணக்கியர் இவ்வளவு மோசமாக எழுதுகிறாரே, ஆண்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே, இவர் ஒருதலைப் பட்சமாக எழுதுகிறார் என்ற நினைப்பு தோன்றும். துஷ்ட மனைவி என்ற இடத்தில் துஷ்ட கணவன் என்று மாற்றி எழுதினால், அதுவும் சரியாகத்தான் இருக்கும். ஆண், பெண் எவராக இருந்தாலும், தீயவராக இருந்தால் தீராத் துன்பம்தான்.
ஆபத3ர்த்தே2 த4னம் ரக்ஷேத்3 தா3ராந் ரக்ஷேத்3த4னைரபி |
ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத்3 தா3ரைரபி த4னைரபி || 6 ||
பதவுரை: இடுக்கணுக்காகச் (துரதிருஷ்டம்) செல்வத்தைக் காப்பாற்றுக; செல்வத்தைவிட மனைவியைக் காக்க; மனைவியையும், செல்வத்தையும் விடத் தன்னை எப்பொழுதும் காத்துக்கொள்க. … 6
விளக்கம்: எப்பொழுது எதைக் காக்கவேண்டும் என்று இந்தச் செய்யுளில் வரிசைப் படுத்தப்படுகிறது. வாழ்க்கையை நடத்திச் செல்லச் செல்வம் தேவை. வருவதையெல்லாம் உடனுக்குடன் செலவுசெய்தால், நமக்கு இடுக்கண், துன்பம், அவசரச் செலவு என்று வரும்போது அல்லாட வேண்டியிருக்கும். அதனால், எதிர்பாராது வரும் தேவைக்காகப் பணத்தை – அதாவது, செல்வத்தைக் காப்பாற்றி வைக்கவேண்டும்.
அந்தச் செல்வத்தைக்கூட, இல்லாளுக்காக – மனைவியைக் காப்பதற்காகச் விட்டுவிடவேண்டும் என்கிறார், சாணக்கியர். செல்வமா, மனைவியின் நலனா என்ற கேள்வி எழுந்தால், மனைவிதான் முக்கியம் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
சென்ற செய்யுளில் தீய மனைவி மரணத்தைத் தருவாள் என்றவர், அடுத்த செய்யுளிலேயே, செல்வத்தைவிட மனைவிக்கு ஏன் முதன்மை கொடுக்கிறார்? மனைவி அமைவது இறைவன் கொடுக்கும் வரம். அந்த மனைவிதான் சிறந்த செல்வம் ஆகவே, அவளுக்காகச் செல்வத்தைப் புறந் தள்ளத்தான் வேண்டும்.
அப்படியானால், மனைவி தீயவளாக இருந்தாலும், அவளைக் காக்கச் செல்வத்தையும் இழக்கலாம் என்றே பொருள்கொள்ளவேண்டுமா என்ற கேள்வி எழும். எனவே, அடுத்த வரியிலேயே அதற்கு விடையையும் கொடுக்கிறார்.
மனையாட்டியைவிட, செல்வத்தைவிட, எப்பொழுதும் தன்னைக் காத்துக்கொள் என்பதே அது. ஆக முந்தைய செய்யுளில் சொல்லியதை மறுத்து முரணாகச் சாணக்கியர் எழுதவில்லை. தீய மனைவியால் உயிருக்கே தீங்கு வரலாம் என்னும்போது, தன்னைக் காத்துக்கொள்ள அந்த மனைவியையும் விட்டுவிடவேன்டும் என்றே மீண்டும் வலியுறுத்துகிறார். அதே சமயம், செல்வத்தைவிட நல்ல மனைவியின் நலனே சிறந்தது என்றும் சொல்கிறார். ஆகவே, சாணக்கியர் பெண்களுக்கு எதிரானவர் அல்லர் என்றே பொருள்படுகின்றது.
இன்னும் ஒன்று; அனைவரும் இறுதியில் விரும்புவது மோட்சம்தான். அந்த மோட்சத்தைத்தான் – பரம்பொருளைத் தேடித்தான் – பரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதே ஆத்மாவின் இலக்கு. அதற்குப் பற்றை விடவேண்டும். திருவள்ளுவரும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்
பற்றைப் பற்றுக பற்று விடற்கு,
எனப் பகர்ந்துள்ளார். ஆகவே, ஆத்மாவின் இலக்கை அடையவேண்டுமெனில் செல்வம், மனைவி, மக்கள் அனைத்தையும் விடவேண்டும். அதாவது தன் இறுதி இலக்கை அடைய அது அவசியம் என்று சுட்டுகிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆபத3ர்த்தே2 த4னம் ரக்ஷேச்ச்2ரீமதாம் குத ஆபத3: |
கதா3சித்சலிதா லக்ஷ்மீ: ஸ்ம்சிதோ(அ)பி விநஶ்யதி || 7 ||
பதவுரை: கஷ்ட(கால)த்துக்காகச் செல்வத்தைக் சேமித்தால் கஷ்ட(கால)ம் எப்படி வரும்? எக்காலத்திலும் செல்லும் இலக்குமி சேர்த்துவைத்தாலும் சென்றுவிடுகிறாள். … … 7
விளக்கம்: எதிர்பாராத தேவை வருவதற்காகச் செல்வத்தைச் சேமிக்க (காப்பாற்றிவைக்க) வேண்டுமென்றும், அதைவிட எவரைக் காக்கவேண்டும் என்றும் அறிவுறுத்திவிட்டு, இப்பொழுது அப்படிப்பட்ட நேரத்திற்காகச் செல்வத்தைச் சேமித்துவைத்தால், துயரம் எப்படி வரும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
பொதுவான தேவைகள் அனைத்தும் செல்வத்தின் துணைகொண்டு நிறைவேற்றப்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. எடுத்துக்காட்டாகச் சில நிகழ்வுகளைக் காண்போம்:
திடுமென்று புயலடிக்கிறது, பலத்த காற்று வீசுகிறது. அருகே இருக்கும் மரம் வீட்டின்மீது விழுந்து ஒரு பகுதி இடிந்துபோகிறது. கையில் பணம் சேமித்துவைத்திருந்தால், விழுந்த மரத்தை அகற்றி, இடிந்த பகுதியை மீண்டுக் கட்டிவிடலாம்.
திருமென்று நம் வீட்டிலிருக்கும் பெரியவருக்கு மார்புவலி வந்து துடிக்கிறார். மருத்துவசாலைக்குக் கொண்டுசென்றால், உடனே பை-பாஸ் அறுவைசிகிச்சை செய்தாகவேண்டும், இதனை இலட்சம் கட்டுங்கள் என்று மருத்துவர் கூறுகிறார். வங்கியில் பணமிருந்தால், உடனே அத்தொகையைக் கட்டி, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, பெரியவரை வரவிருந்த ஆபத்திலிருந்து காத்துவிடலாம்.
ஆயினும், எப்பொழுதும் செல்வம் கைகொடுக்காது என்பதும் தெரிந்த ஒன்றே!
செல்வத்தையே அதற்கு நாயகியான இலக்குமி என்று குறிப்பிட்ட சாணக்கியர். எப்படிச் சேர்த்துவைத்தாலும், நிலையாமல் சென்றுகொண்டிருக்கும் செல்வமான இலக்குமி சென்றுவிடுவாள் என்று செல்வம் நிலையானதல்ல என்றும் எச்சரிக்கை செய்கிறார், செல்வோம் என்பதே செல்வம்.
செல்வத்தைத் தங்கமாக, பெரிய நிறுவனங்களின் ஸ்டாக்காக, பெரிய வங்கிகளில் பணமாகச் சேர்த்துவைக்கிறோம். திருடர் தங்கத்தைத் கவர்ந்துசெல்ல வருவர்; திடுமென்று நிறுவனங்களின் ஸ்டாக்கின் மதிப்பு கீழிறங்கி, ஒன்றுக்கும் உபயோகமில்லாது போகலாம். பணத்தின் அருமை தெரியாத மக்கள் அதைக் கண்டபடி சூதாடியோ, கேளிக்கைகளிலோ செலவிட்டுக் கரைத்துவிடலாம்.
செல்வத்தைக் காப்பாற்று என்று சொல்லிவிட்ட கையோடு, செல்வத்தின் நிலையாமையையும் ஏன் குறிப்பிடவேண்டும்?
அதை அறிந்தவர் திறமையுடன் செயலாற்ற வேண்டும், செல்வம்தான் முக்கியம் என்று செலவழிக்காது கஞ்சராகவும் இருக்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார்.
யஸ்மின் தே3ஶே ந ஸம்மாநோ ந வ்ருத்திர்ந ச பா3ந்த4வா: |
ந ச வித்3யா(ஆ)க3ம: கஶ்சித் தம் தே3ஶம் பரிவர்ஜயேது || 8 ||
பதவுரை: எந்த நாட்டில் மதிப்பு, வாழும் வழி, உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி இவை எதுவும் இல்லையோ, உடனே அந்தநாட்டை விட்டு நீங்கு. … 8
விளக்கம்: சாணக்கிய நீதியின் அறிமுகத்தில் இந்தச் செய்யுளைக் குறிப்பிட்டு, இது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்று குறிப்பிட்டேன். எனவே, முன்பு கொடுத்த விளக்கத்தை நினைவில்கொண்டு, நாடுவிட்டு நாடு குடிபெயர்தல் ஏன் நிகழ்கிறது என்பதைக் காணலாம்:
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம்: ‘திரை கடலோடியும் திரவியம் தேடு,’ என்னும் பழமொழி அனைவரும் அறிந்ததே. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் பலநாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தனர். அது செல்வம் சேர்க்கத்தானே தவிர, தமிழகத்தில் வாழ வழியில்லை, கற்க வழியில்லை, உற்றார் உறவினர் இல்லை, மதிப்பு இல்லை என்பதற்காக அல்ல. பாரதம் முழுவதுமே அப்படித்தான் இருந்தது.
இருப்பினும் சிலசமயம் வான் பொய்த்து வெள்ளாமை குன்றும் சமயங்களும் உண்டு. அப்பபொழுது வாழ வழியின்றிப் போகக் கூடாது என்று கோவில் கோபுரக் கலசங்களில் தானியங்களைச் சேர்த்துவைத்து, அடுத்த ஆண்டு வெள்ளாமைக்கு வழிசெய்தனர், நம் முன்னோர்.
அதையும் தாண்டி அந்நியர் படையெடுப்பினால், வாழ் வழியின்றி வேறு இடங்களுக்குச் சென்று குடி பெயர்ந்தனர்.
வெள்ளையர் ஆட்சியில், அவர்கள் வேண்டுமென்று செய்த வஞ்சகத்தால் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒருகோடி மக்கள் பாரதம் முழுவதும் மடிந்தனர். மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்காவிலிருக்கும் பிரிட்டிஷ் கயானா, தெற்கு ஆப்பிர்க்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், மலேயா, ஃபிஜித் தீவுகள் போன்ற கண்காணாத நாடுகளுக்கு அச்சமயம் அடிமைகளாக (indentured labors) நம்மவர் வேற்று நாடுகளுக்குச்
சென்றனர், [1]
இப்பொழுது சிறப்பான மேல்படிப்புக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குச் செல்லும் அனைவரும், தனது கைப்பணத்தைச் செல்வழித்துக்கொண்டா செல்கின்றனர்? இல்லையே! எத்தனை சிறப்பான மாணவருக்கு இந்தியாவில் கல்விக் கூடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது? எத்தனை சிறந்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காது போகிறது? எத்தனை பேர் அவர்களின் பிறப்பிற்காக அவமதிக்கப்படுகின்றனர்?
இவையும் வெளிநாடுகளுக்குக் குடியேறும் காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பாரதத்திலிருந்து ஓராண்டுக்கு ஐம்பது இலட்சம்பேர் வெளிநாட்டுக்குக் குடியேறுகின்றனர்.[2] இதற்குக் காரணத்தை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.
***
[1] Why did Indians agreed to become indentured labourers? (ஏன் இந்தியர் ஒப்பந்தக் கூலிகளாகச் சம்மதித்தனர் ?), https://www.bbc.co.uk/bitesize/topics/z7kvf82/articles/ztwyvwx#zjb2xbk3
[2] India Immigration Statistics 1960-2022, Microtrends, India Immigration Statistics 1960-2022, https://www.macrotrends.net/countries/IND/india/immigration-statistics
இந்து ராஷ்ட்ரத்தில் வாழமுடியாது என சொல்லித்தான் தேசத்தை மூன்றுபங்காக உடைத்து இருபங்கை எடுத்து கொண்டார்கள், காஷ்மீரத்திலும் ஒரு பங்கை வைத்து கொண்டார்கள்
இப்பொழுது இந்து ராஷ்ட்ரத்தை எதிர்ப்போம் என இங்கே இருந்தும் குதிக்கின்றார்கள், அதை இந்திய நாடாளுன்ற உறுப்பினரான திருமா என்பவரும் ஆதரிக்கின்றார்
இதெல்லாம் அனுமதிக்கமுடியாத விஷயங்கள்
உங்களுக்கு இந்து ராஷ்ட்ரம் எங்களுக்கு பாகிஸ்தான் என்றுதான் பிரிந்தார்கள், அப்படி பிரிந்த பின்பும் இன்னும் இங்கு இந்துராஷ்ட்ரத்தை எதிர்கொள்வோம் என்பது மீண்டும் குழப்பம் ஏற்படுத்தும்வழி
இதனையெல்லாம் அரசுகள் கண்டிக்க வேண்டும், நீதிமன்றமோ ஆளும் பீடங்களோ களமிறங்கி கேட்க வேண்டும் ஆனால் கேட்காது
காரணம் இந்திய பலவீனமான சட்டம் அப்படி
இந்த சட்டங்கள் திருத்தபடாதவரை ஆபாச ராசாவும், திருமாவும், அரபின் வாரிசுகள் நாங்கள் என பேசுபவர்கள் பேசிகொண்டேதான் இருப்பார்கள்
ஏம்பா ராமசாமி
நாங்க என்னமோ நீ பெரிய ஆளுன்னுல்லா நினைச்சிட்டிருந்தோம், நீ வெள்ளக்காரன் கால பிடிச்சித்தான கவுன்சிலரா இருந்தியாம் அப்படியா?
காங்கிரசுல 7 ஆயிரம் ரூபா ஊழல்லதானப்பா உன்ன அடிச்சி விரட்டுனாங்களாம், அந்த ஊழலை கண்டுபிடிச்சது ஒரு பார்ப்பான்னுதான கடைசிவர பிராமண எதிர்ப்புல இருந்தியாம்?
பாவம் ஏழை மக்களுக்கான கதர் துணியில ஊழல் பண்ணிருக்கண்ணா நீயெல்லாம் என்னய்யா ஆளு….
1920ல 7 ஆயிரம் ரூபாண்ணா இப்ப பல்நூறு கோடியப்பா, சும்மாவா உனக்கு திமுகாரன் சிலை வச்சி கொண்டாடுறான்
நீதிகட்சியிலேயும் சேட்டை பண்ணிட்டுதான இருந்திருக்க, அதான அங்கிருந்தும் அடிச்சி விரட்டிருக்கானுக… ரொம்ப மோசமான ஆளால்ல இருப்ப போல
அந்த எழுத்தாளர் பிரபாகரு பக்கம் பக்கமா புட்டு வைக்கிறாரப்பா.. ரொம்ப அசிங்கமால்லா இருக்கு உங்க கதையெல்லாம்…”
தாழ்த்தபட்டோர் நிலத்தை பறித்து பிராமணர்களுக்கு கொடுத்தான் ராஜராஜ சோழன் : ராசா விழுதுகள
இவர்கள், அந்த ஜி ஸ்குவர் நிறுவணம் வைத்திருக்கும் நிலத்தை பறித்து நிலமில்லாதவருக்கு இலவசமாக கொடுப்பார்கள், அய்யா கருணாநிதி கனவுபடி அந்த கோபாலபுரம் வீட்டினையாவது பறித்து தாழ்த்தபட்டோருக்கு கொடுப்பார்கள் என நம்புவோம்..
அப்படியே இன்று காவேரி கரையில் விளையும் நிலமெல்லாம் யார் கையில் இருக்கின்றது? திராவிட ஆட்சியில் அதனையெல்லாம் ஏன் அரசு எடுத்து தாழ்த்தபட்டோருக்கு கொடுக்கவில்லை என கேட்டால் அவன் சங்கி..
(சமீபத்தில் பிராமணர் வறுமையால் விற்ற வீட்டை வாங்கியவர் அய்யா கருணாநிதி அவர்கள் என அவர் மகனே பேசியது குறிப்பிடதக்கது)
மக்கள் : பஸ் டிக்கட் விலையை ஏன் உயர்த்தியுள்ளீர்கள்?
கொத்தடிமை : மனு ஸ்மிரிதில 45 ஆவது பக்கத்துல 8 ஸ்லோகத்துல …..
மக்கள்: மின்கட்டனத்தை ஏன் உயர்த்தினீர்கள்?
கொத்தடிமை : பிராமணன் இருக்கானே அவன் தான் உன்ன…..
மக்கள்: தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள்?
பெட்ரோல் டீசல் விலையின் மாநில வரியை எப்பொ குறைப்பீங்க?
கொத்தடிமை : பெரியார் மட்டும் இல்லண்ணா…..
மக்கள்: தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளதே, அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
கொத்தடிமை : இது பாசிச பாஜக மற்றும் இந்துதுவாவின் சதி.
மக்கள் :உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு
கொத்தடிமை :அதுக்கு பாஜகதான் காரணம்
கடைசில நாங்களும் ஒரு வகை இந்துக்களே!
ஐரோப்பாவில் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை ரோமரிடம்தான் இருந்தது, ரோமரின் வாரிசாகத்தான் வாட்டிகன் போப் அமர்ந்திருக்கின்றார்
இன்றைய மக்களாட்சி உலகின் சட்டம் ரோமரின் சாயல் கொண்டது, அங்கிருந்துதான் பிரிட்டனுக்கு சென்று பின் இந்தியாவுக்கும் வந்தது
இன்று பழைய கொடும் சிலுவை சட்டம், சிங்கத்திடம் மனிதனை போட்டு கொல்லும் கொடூர சட்டமெல்லாம் வழக்கில் இல்லை
யாராவது “ஏ ஐரோப்பியமே இப்படியெல்லாமா வதைத்தாய், உன்னோடு பேசமாட்டேன், உன் பொருளை வாங்கமாட்டேன் ” என பேசி சீரியசாக காமெடி செய்தால், இதை சொல்லி குழப்பம் விளைவித்தால் உலகம் எப்படி பார்க்கும்
ஒரு பைத்தியகாரனை பார்ப்பது போல் பார்க்கும், பார்ப்பது என்ன சிகிச்சைக்கே ஏற்பாடு செய்யும்
அப்படிபட்ட கோஷ்டிதான் மனுநீதி என கொக்கரிக்கின்றன, எவனாவது பழைய சிலுவை தண்டனை பற்றி பேசுகின்றானா என்றால் இல்லை
அதையாவது விட்டுவிடலாம்
17ம் நூற்றாண்டுவரை இருந்த அடிமை முறை, அதாவது இந்துக்களிடம் அல்லாமல் மேற்குலகில் இருந்த அடிமை வியாபாரம், மனிதனை மனிதன் அடிமையாக பிடித்து விற்ற கொடுமையினை பேசுவானா என்றால் இல்லை
17ம் நூற்றாண்டுவரை இருந்த அடிமை முறை பற்றி பேசமாட்டான், 1500 ஆண்டுக்கு முன்பிருந்த சிலுவை கொடுமை பற்றி பேசமாட்டான்
ஆனால் பத்தாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மனுநீதி என பேசுவானென்றால் அவன் எப்படிபட்ட குதர்க்க குழப்ப மூளைகொண்டவனாக இருக்கமுடியும்?
#இராசேந்திர சோழன் 1080 வடநாட்டு பிராமணர்களை இங்கு இறக்குமதி செய்து அவர்களுக்கு 57 ஊர்களை திரிபுவனதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் தானமாக வழங்கியதாக ஒரு கருத்து திராவிட இயக்க தத்துவவாதிகளால் பரப்பப்பட்டு நிலவுகிறது……
#இது உண்மை தானா? என்று அறிய வேண்டி “கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” என்ற சி.கோவிந்தராசன் எழுதிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தை இன்று ஒரு நண்பரிடம் ( காளிங்கன்) வாங்கிப் படித்தேன்…
#அதில் இராசேந்திரச் சோழன் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் தன் தாயான திரிபுவன மாதேவியின் பெயரில் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரிட்டு தானமாக வழங்கிய 57 ஊர்களை தானமாகப் பெற்ற 1080 அந்தனர்களின் பெயர்கள் 57 செப்பேடுகளில் முழுமையாக பட்டியல் இடப்பட்டுள்ள விபரம் பற்றி கூறப்பட்டுள்ளது..அந்தச் செப்பேடுகள் தான் கரந்தைச் செப்பேடுகள் ஆகும். இந்தச் செப்பேட்டில் தொகுதியை வெளியிட்டது இராசேந்திர சோழன்..
#அதில் குறிப்பிடப்பட்டுள்ள 1080 பார்ப்பனர்கள் எவரும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படவில்லை… ஒவ்வொருவரின் ஊர் மற்றும் கோத்திரம் சூத்திரம் தொடங்கி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது… அதிலுள்ள ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாகவே உள்ளன… அதிலுள்ள அந்தனர் பெயர்கள் பட்டன் என்னும் தமிழ்ப் பார்ப்பனர்களின் ஒரு பட்டப் பெயரிலேயே முடிகிறது…
#அவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்து வரும் வளநாடு (அப்போது சோழ நாட்டின் தமிழகப் பகுதிகள் வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன) அதிலுள்ள ஊர் பிறகு கிராமம் பிறகு அவர்கள் கோத்திர சூத்திரப் பெயர்களுடன் ( பல்லவர் காலத்தில் இருந்து தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு கோத்திரப் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது) இயற்கைப் பெயர் பின் பட்டப் பெயர்களுடன் அழைக்கப்பட்டுள்ளனர்… அனைவரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்த தமிழ் பார்ப்பனர்கள் தான்… அவர்களையே இராசேந்திர சோழன் திரிபுவன சதுர்வேதி மங்கலத்தின் 57 ஊர்களில் குடியேற்றி நிலங்களை வழங்கியுள்ளான்… இந்த 57 ஊர்களுக்கும் தலைமை ஊர் தான் கரந்தை.
அந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ள சில பார்ப்பனர்களின் பெயர்கள் (எடுத்துக் காட்டாக சிலப் பெயர்கள் மட்டும்)
அவர்கள் வாழ்ந்த தமிழக ஊர்கள் மற்றும் அந்தப் பார்ப்பனர்களின் பெயர்களில் சில…. அதாவது எடப்பாடி பழனிசாமி… செல்லூர் ராஜூ… வீரபாண்டி ஆறுமுகம் என்பதைப் போல…
2. நாலூர் நாராயணன்
3.வேலங்குடி நீலகண்டன்
3. இடையாற்று மங்கலத்து நந்தி நாராயணப் பட்டன்.
4. முடபுரத்து பய்யகுட்டி
5.திருவெண்காட்டடிகள் பட்டனம் பிதச புரியன்
6. பொன்னம்புரத்து பவக்ருதன்
7.அட்டாம்புரத்து வெண்ணையன்
8. திருவேழ்விக்குடி தஸ்புரியன்
9. அரணைபுரத்து நாராயணன்
10.ஒலிக்கொன்றை ஐயன் பெருமான் சிவன பட்டன்
11.காராம்பிச் செட்டுத்துரை அந்திக்குமரன்
12.பதம்புரத்து கபோதீஸ்வரன்
13.உறுப்புட்டூர்க் கேசவன்
14.கதறு முண்டூர் அக்குமரன்
15.திருமங்கலத்து நந்தியாலன்
16.பேரூர் நாராயணப் பட்டன்
17.தென்குன்றத்து எழுவடியான்
18.வேற்புரத்து நாராயணன்
19.குரவசரி நீலசிவன்
20.திருவெண்காடன் திருவரங்க தேவபட்டன்
21.இருங்கண்டி கிருஷ்ணன் கோவிந்த பட்டன்
22.திருமாலிருஞ்சோலை ஸகஸ்ரயன்
23.பெருமருதூர் பதபதி நாராயணப் பட்டன்
24.ஆதனூர் நக்கன் சோலைப் பிரான்
25.சிறுகொட்டையூர் நீலகண்டன்…
இது போல 1080 பேர்கள் வாழ்ந்த ஊர்களும் தமிழக ஊர்களே….
மேலும் அவ்வாறு நிலங்களை வழங்கும் போது பறையர் மற்றும் கம்மாளரது நிலங்களை விட்டுவிட்டு பிற புதிதாக உருவாக்கப்பட்ட பாசன நிலங்களைத் தான் தானமாகத் தந்துள்ளனர். பார்ப்பனர் நிலங்களுக்கு வரி உண்டு.. ஆனால் பறையர் மற்றும் கம்மாளரது நிலங்களுக்கு வரிகள் இல்லை.. இதுவே கரந்தைச் செப்பேடுகளில் உள்ளது.
இவ்வாறிருக்க இவர்கள் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமணர்கள் என திராவிட இயக்க தத்துவவாதிகள் கூறுவது ஏன்? இங்குள்ள பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல வடவர் என்று பொய் பரப்புரை செய்வதற்காகத் தானே…
#திராவிடப் பொய்களைத் தோலுரிப்போம்.
காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறுவதை அனுமதிக்க கூடாது, திருமா சீற்றம்
அக்டோபர் 2 காந்தியின் நாள் மட்டுமல்ல, ஒருங்கிணைந்த இந்தியாவினை கனவு கண்டு காஷ்மீரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு அதனாலே இறந்தும்போன லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் அதுதான்
அப்படிபட்ட சாஸ்திரியின் கனவைத்தான் மோடி நிறைவேற்றி காஷ்மீரை இந்தியாவோடு சேர்த்தார், அவ்வகையில் இது சரியான நாளே
சரி, காந்தி என பொங்கும் திருமா காந்தியின் கொள்கையில் ஒன்றை கடைபிடித்தாரா? குறைந்தபட்சம் மதுகடைகளை மூட சொல்லி ஸ்டாலினாரிடம் மனுகொடுத்தாரா போராடினாரா என்றால் இல்லை
தாழ்த்தபட்டோரை ஹரியின் மக்கள் என அழைத்த காந்தியின் சொல்லை கூட “ஹரிஜனம்” என்ற சொல்லை கூட ஏற்காதவர் திருமா
அவருக்கெல்லாம் காந்திபற்றி என்ன கவலை என்பதுதான் தெரியவில்லை
அடிக்கடி என்னவெல்லாமோ பேசும் திருமா, அது நடக்க கூடாது இது நடக்க வேண்டும் அந்த அனுமதி கூடாது இந்த அனுமதி கூடாது என்றெல்லாம் பேசும் திருமா என்ன பதவியில் இருந்தார் அல்லது இருக்கின்றார் என்பதுதான் தெரியவில்லை
அவர் என்ன காவல் அதிகாரியா? உச்சநீதிமன்ற நீதிபதியா? இல்லை நாட்டுக்கு பாடுபட்டு சிறை சென்ற தியாகியா? ஒன்றுமே இல்லை என்பதுதான் விஷயம்
திருமா அப்படி உண்மையிலே கொள்கை குன்று என்றால் நாடாளுமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்துக்கு வரகூடாது என பேசட்டும் பார்க்கலாம்
தமிழகத்தை இந்தியாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என திட்டமிடும் சக்திக்கு ஆக்டோபஸ் போல பல கரங்கள் உண்டு
அது திக திமுக பொதுவுடமை என பல கரங்களை கொண்டவை, அந்த கரங்களில் புதிதாக வந்த கரங்களே திருமாவும் சைமனாரும் என்பது ஒன்றும் ரகசியம் அல்ல