பைபிளை மட்டும் புனித நூலாகக் கருதும்
பரங்கிய அடிமைகளுக்கு
பைந்தமிழ் குறள் பேகனியப் பகை நூலே
குர்ரானை மட்டும் மதிக்கும்
குறு மதி மகமதியருக்கு
குறள் முழுவதும் காஃபிரியமே
உழவுக்கு வந்தனை செய்த உத்தம வள்ளுவருக்கு
கொல்லாமை போதித்த சமணமும் அந்நியமே
இன்பத்துப் பால் எழுதிய இல்லற ஞானிக்கு
புலனடக்கம் போதித்த புத்தனும் அந்நியரே
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும்
ஆதிபகவன் வாரிசுக்கு
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பேசும்
உண்டியல் குலுக்கிகள் எல்லாம்
பந்தாடப்பட வேண்டிய பகைவரே
எந்தக் கல்வெட்டிலும் எழுதி வைக்காவிடினும்
தர்ம சாஸ்திரப்படி தரணியாண்டவர்கள் அனைவரும்
வள்ளுவம் வழியிலும் வாழ்ந்தவர்களே
மாமிசப் படையல் உண்டென்றாலும்
மத மாற்றும் மலினம் இல்லாததால்
மாடன் வம்சமும் அந்த மறையோன் வம்சமே
கள்ளுண்ணாமை போதித்து
கற்றவற்றின்படி நிற்கச் சொன்னவர்
சாராயம் விற்று நடக்கும்
சாக்கடை மாடல்களையெல்லாம்
காலில் கிடப்பதைக் கழற்றி அடிப்பார்
தர்ம சாஸ்திரங்களையெல்லாம்
தங்கத் தட்டில் வைத்த மலமென்ற மலடனையும்
அந்நிய தேசத்து விருந்தாளிகளுக்குப் பிறந்த
அவனுடைய பிள்ளைகளையும்
எழுத்தாணியை எறிந்தே
எல்லையை விட்டு ஓடச் செய்வார்
கூவத்தைக் குப்பைக் காடாக்கியவர்களுக்கு
கங்கையைப் பற்றிப் பேச அருகதை ஏது?
கட்டியவனைக் கடவுளாக மதிக்கச் சொல்பவர்
பெண்ணியம் பேசுபவர்களைப்
புறமுதுகிட்டு ஓடச் செய்வார்
பிறன்மனை நோக்கா பேராண்மை போதித்தவர்
நடிக்க வந்தவர்களைப் படுக்கையில் வீழ்த்தி,
கூட்டியும் கொடுக்கும் திரையுலகக் கூத்தாடிகளை
நெல் வயலில் முளைத்த களையைப் போல்
நெடுகக் களையவேண்டுமென்பார்
குண, கர்மத்தோடு குலமும் முக்கியம் என்பதுதானே
குடிப் பெருமை பேசும்
குறளும் போதித்த குறைவிலா ஞானம்
உலகப் பொதுமறை தந்து
உலகின் குருவாக அவர் உயர
உங்களில் ஒருவராக அவர் இருந்திராததே காரணம்
உலகில் உள்ளோரைக் கொன்றும் ஏய்த்தும்
தன் மறையைப் பரப்பென்று சொல்லாத
எங்கள் தர்மத்தின் வழியில்
அவர் இருந்ததே காரணம்
ஏழு பிறவிகள் பற்றிப் பேசிய
எங்கள் ஐயன் அவன்
முற்பகல் வினைப்பயன் பற்றி
முந்திச் சொன்ன முனிவன் அவன்
தென்புலத்தார் பற்றிப் பேசிய தென்னவன் அவன்
அந்தணர் பெருமையை அகிலத்துக்கு அறிவித்தவன்
வேள்விப் பெருமையை விண்டுரைத்தவன்
தாள் சேர்தலை தலையாய இலக்காய் வைத்தவன்
தாமரைக் கண்ணான் பற்றி தனியே பாடியவன்
எண் குணத்தான் பற்றி எழுதி வைத்தவன்
ஊழியல் எழுதி உண்மையைப் பேசியவன்
வானோர் பெருமையை வாழ்த்திப் பேசியவன்
ஒற்றைக் குறளையாவது ஒழுங்காகப் படித்துவிட்டு
ஊர் முன்னால் வந்து உளறத் தொடங்குங்கள்
ஒன்றுக்கும் உதவாத உருட்டல் பேர்வழிகளே
கங்கைக்கு எதற்கடா புனிதம் சேர்க்கவேண்டும்?
தாய்க்கு எதற்கடா அன்பை ஊட்டவேண்டும்?
தமிழுக்கு எதற்கடா இனிமை சேர்க்க வேண்டும்?
காவிக்கு எதற்கடா சாயம் பூசவேண்டும்?
(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)