தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை

சில ஸம்ஸ்க்ருதச் சொற்கள் தமிழில் கையாளப்படுகையில் வேறு பொருளில் கையாளப்படுகின்றன. இவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.

 சொல்ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்தமிழில் பொருள்
1நிஜம்தனது   உண்மையானது
2ப்ரமாதம்  ஏமாற்றம் / மதமதப்புஅமக்களம் / அற்புதம்
3நிதானம்தேக்கம்மந்தம்
4வினோதம் விளையாட்டு   வித்தியாசம்
5அஸுயை வெறுப்பு  பொறாமை
8ஆலயம்புகலிடம் கோவில்
9ஸமாதி ஒருமுகபட்டு ஓயும் த்யான நிலைஅடக்கம் செய்த இடம்
10கல்யாணம் மங்களம்திருமணம்
11அறம்அமைப்பு, திருப்தி தருமம்
12ஆசாரம்நடத்தை
மடி
13கண்ணியம் கணக்கெடுக்கமுடிதல் தன்மானம்
14மானம்அளத்தல், ஞானம், கோபம், தன்மானம் தன்மானம்
15பசுமிருகம் மாடு
16கல்பனை அமைத்தல்கற்பனை
17காயம்உடல்புண்
18ஆதரம்  அன்பு  ஆதரவு காட்டுதல் (Support)
19பக்திஅன்புகடவுளிடம் அன்பு
20நைவேத்யம்அறிவித்தல்  இறைவனுக்குப் படைத்த உணவு
21ப்ரஸாதம்அருள்இறைவனுக்கு அளித்த உணவு
22ஆணவம்அணுவின் தன்மை (atomic)அகங்காரம்
23அல்பம்சிறியது  குறுகிய மனதுடன் பழகுதல்  
24கேவலம்ஒன்றுஅற்பத்தனம்
25சோதனம்  தூய்மைபடுத்துதல்  பரிட்சை செய்தல்  
26புருஷன்ஆண், ஆன்மாகணவன்
27வைராக்யம்  பற்றற்ற தன்மைஒருமுகப்படுதல்,
தீவிரத் தன்மை  
28அலி  தோழி   பேடி  
29ஆபாஸம் தோற்றம்அதீதக்காம வெளிப்பாடு
30விஹிதம்விதிக்கப்பட்டதுமதிப்பீடு (விகிதம்)

மேற்கண்ட தரவுகளைக் கொண்டு தமிழனின் மனநிலையை ஆராய விரும்புகிறேன்.

[1] “தனது” என்ற பொருள் கொண்ட ஸம்ஸ்க்ருதச் சொல்லை “உண்மை” என்பதற்குக் கையாள்கிறானே! அவன் ஆன்மாவையே உண்மை என்று புரிந்துக்கொண்டவன் என்று தெரிகிறது.

[2] அமக்களங்களும், படாடோபங்களும் ஏமாற்றக்கூடும் என்ற அறிவால் அவைகட்கு ப்ரமாதம் என்ற சொல்லை உபயோகித்தனர்.

[4] “வித்தியாசம், “பலவிதம்,” Creativity” இவைகளை விளையாட்டில் கண்டதால் “வினோதம் ” என்ற சொல்லாடல்

[8] கோவிலைப் புகலிடமாய் கண்டே ஆலயம் என்றான்

[9] துறவிகள் மரிக்கையில் ஒருமுகப்பட்டு ஒய்ந்தனர். அதனால் அடக்கம்செய்யும் இடம் ஸமாதி.

[22] அகங்காரத்தால் குறுகுகிறான். ஆதலால் ஆணவம் (atomic) என்ற சொல்லாடல்.

[25] பரீட்சித்தலையே தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக என்று எடுத்துக்கொண்டதால் சோதனை என்ற சொல்லாடல்.

[28] அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பேடிகள் தோழிகளாய் இருந்ததால் “அலி ” என்ற சொல்லாடல்

[29] அதீதக் காம விகாரத்தை வெறும் புரத்தோற்றமாகக் கருதியதால் “ஆபாஸம்” என்ற சொல்லாடல்

[30] வைராக்யம் என்றால் பற்றற்ற நிலை. தமிழில் தீவிரத்தன்மை, ஒருமுகப்படுதல் என்ற பொருளில் உபயோகிக்கப் படுகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதன்றோ?

இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள்.

“கோ”:

ஸம்ஸ்க்ருதத்தில் “கோ” என்றால் மாடு. “ப ” என்றால் காவலன். “கோபன் ” “கோபாலன் ” என்றால் பசுக்காப்பவன் என்று பொருள். ஆனால் “கோபன்” “கோப்தா” “கோபாயதி” முதலிய சொற்கள் பசுகாத்தலுக்கு மட்டுமின்றி பொதுவாகக் காத்தலுக்குப் பயன்படுவதைக் காணவேண்டும். தமிழிலும் கோனார், கோவலன், கோன் முதலிய சொற்களைக் காண்க. அவ்வாறே அமைகின்றன.

“திராவை”:

தமிழகத்தின் வைதீகர்களுக்கிடையே சில பரிபாஷைகள் உள்ளன. “த்ராபை” என்றால் வீணானவன் என்று பொருள். ஒருவனை வெளிப்படையாய் “தரித்ரம்” என்று கூற விரும்பாததால் அங்கதமாக (euphemistic) “த்ராபை ” என்பார்கள். ஏனெனில் வேத மந்திரத்தில் “த்³ராபே அந்த⁴ஸஸ்பதே” (ஸ்ரீ ருத்ரம்) என்று துவங்கும் மந்திரத்தில் அடுத்து “தரித்ர” என்ற சொல் வருகிறது. இவர்களின் இந்த “த்ராபை”யே பொதுவழக்கில் “திராவை” என்று ஆனது.

“இத்தா”:

“இத்தா துலூகா” என்று ஒரு வேத மந்த்ரம். அதில் “துலுகா ” என்று வருகிறது.அந்த “துலுகா” என்ற சொல் “துருக்கிய” துலுக்க” என்பதோடு ஒத்திருப்பதால் முஸ்லீம்களை குறிக்க வேதியர்கள் “இத்தா “என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இச்சொல்லை சில முஸ்லீம் தலைவர்களும் பயன்படுத்துகின்றனர் என்பது வியப்பாய் உள்ளது.

வேத சாஸ்திர அறிஞரும், ஆசாரியருமான கட்டுரையாசிரியர் டாக்டர் ரங்கன் ஜி அவர்கள் புகழ்பெற்ற இராமாயண உபன்யாசகர், ஆராய்ச்சியாளர். பெங்களூரில் வால்மீகி ஆசிரமம் என்ற பாரம்பரியமான வேத குருகுலத்தை நடத்தி வருகிறார். இவரது உரைகளை யூட்யூபில் இங்கு கேட்கலாம்.

5 Replies to “தமிழில் சம்ஸ்கிருத சொற்பொருள் மாற்றங்கள்: ஒரு பார்வை”

 1. ஆஹா, அருமை. பொதுவாக தமிழ் மொழியின் உள்ளொளிரும் உயிரான அறிவு அது ஸமஸ்கிருதத்திலிருந்து வந்துதித்தது என்பது தான் எனது தீர்க்கமான அபிப்ராயம். அப்படி நோக்குகையில், இந்த சொற்கள் எல்லாம் ஆகுபெயர்களாக ஸமஸ்கிருத்தத்திலிருந்து தமிழில் உண்மையான பொருளின் அர்த்தத்தோடு தொடர்பு கொண்டே விளங்குகின்றன என்பது தெளிவாக விரிகிறது.

  இது உண்மையில் வியப்பானதாக நமக்கு தெரிவதில் ஆச்சரியம் இல்லை. அதே வேளையில் இப்படியாகவே தமிழும் சம்ஸ்கிருதமும் புணர்ந்தே விளங்குகின்றது என்பது தான் உண்மையான ஆச்சரியமும் கூட.

  “ப்ரமாதம்” என்பது கூட ஏமாற்ற கூடும் என்பதைவிட மதமதப்பைத் தரும் ஒரு விஷயத்தை அப்படி கூறுவது மிகப் பொருந்தும்.

  அதே போல “ஆணவம்” அணு என்பதைக் கூட நான் இன்னும் கூடுதலாக அதனை பஞ்ச பூதங்களோடு தொடர்பு கொண்டு, இது இந்த பூத உடல் சார்ந்தது அதாவது அணு எப்படி பூதத்திற்கு ஆதாரமாகிறதோ அதனை போன்றே அது சார்ந்த உடலுக்கு மாத்திரமே உரியதாகிறது. ஆணவம் ஆத்மாவிற்கு தொடர்பில்லாத தாகவும் ஆகிறது. ஆணவம் “அகங்காரத்தில் குறுகிறான்” என்பதை விட நாம் கூறும் காரணமும் கூட பொருத்தும் என்றும் தோன்றுகிறது.

  மொத்தத்தில் இவைகள் யாவும் ஆகுபெயர்கள் எனலாம்.

  ஆகுபெயர் என்பது ” பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகை இயற்பெயர்களும் அவற்றோடு சம்பந்தமுடைய பிற பொருள்களுக்கு ஆகிவரும்போது, ஆகு பெயர்கள் அடிப்பைடயில் ஆறு வகைப்படும்”

  பகிர்விற்கு நன்றிகள். இந்த உயிரோட்டமானக் கட்டுரை எனது சிந்தனையை இன்னும் பெரிதாக விரிவடைச் செய்கிறது.

  அருமை! அருமை!! அருமை!!!
  பகிர்விற்கு நன்றிகள்.

 2. Sir, I have a doubt. Can someone please explain? We chant Om Namah Shivaya. It’s either Shivaya or Sivaya. But in Tamil, we say Om Namachivaya. Some people speaking other languages say saying Namachivaya is wrong and brings sin. As someone who has grown in Tamil Nadu, I am aware this is how many Siddhars, Nayanmars and Yogis themselves chanted and still chanted in temples and that is how Tamil ilakkanam is created. But why are some people speaking other languages say so? Please help understand.

 3. நானும் வடமொழி கற்றவன் தான். வெறுமனே வடமொழி கற்றால் போதாது. அது மேக்ஸ்முல்லர் போலாகிவிடும். எனவே நிருக்தம், வ்யாகரணம் போன்ற வேதாங்கங்களையும், அமரம் போன்ற நூல்களையும் பயிலவேண்டும். அதன்படி
  சில திருத்தங்களை சொல்கிறேன். வடமொழியில்
  ப்ரமாதம் – விபத்து, கவனமின்மை
  நிதானம்-சுமப்பது
  அலி – வண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *