கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

“பெரியாரின்” பெயரில் சூளுரைத்து ஆட்சியில் அமர்ந்த திமுகவை சார்ந்த நீங்கள் சிலப்பதிகாரத்தை துணைக்கு அழைத்து, பாராளுமன்றத்தில் பேசியது, விந்தை.

உங்கள் “பெரியார்” சிலப்பதிகாரத்தை தகாத வார்த்தை சொல்லி கொச்சைப்படுத்தினார் என்பது தெரியாத அளவு தமிழ்நாட்டுக்கு அந்நியம் அல்ல நீங்கள். உங்கள் பெரியாரால் இழிவு படுத்தப்பட்டு, அதை *** கதை என்று பேசிய கதையை பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா?

(பெரியார் சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறிய மேற்கோள்களின் தொகுப்பு பதிவில் இறுதியில் – ஆசிரியர் குழு).

தமிழை கும்மிடிப்பூண்டி தாண்டவிடாமல் கூட்டுக்குள் அடைந்து வைத்திருந்தது திராவிடம். இன்று எங்கள் இந்திய தேசத்தின் பாராளுமன்றத்தில் தமிழ் வேதம் ஒலிக்க தமிழ் முறைப்படி செங்கோல் நிறுவப் பட்டிருக்கிறது. தமிழரெல்லாம் நெகிழ்ச்சி அடைந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது திராவிடத்தின் கொள்ளிக் கண்கள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது நாடறியும்.

நரேந்திர மோடி தமிழுக்கும் செய்யும் சேவையை பாராட்ட மனமில்லாமல், திராவிடம், இப்படி வெறுப்பைக் கக்குவது, தனக்கு தேர் கொடுத்த பாரியின் கழுத்தை முல்லைக்கொடி நெரித்தது போல இருக்கிறது .

தமிழுணர்வும் இல்லை நன்றியுணர்வும் இல்லை, உங்களுக்கும் உங்கள் இயக்கத்துக்கும்.

மோடிக்கு தமிழ் வரலாறு தெரியுமா என்று கேட்டீர்களாம். You will be surprised that he may know Thamil history more than some of your comrades .

Anyways உங்களிடமும் சில சிலப்பதிகாரக் கேள்விகள் கேட்பதற்க்கு இருக்கிறது.

“வனத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்,
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்பு என்னை” –

“கோவலன், அருந்ததி போல இருக்கும், கண்ணகியை முதிய பார்ப்பனன் ஓருவர் வேதம் சொன்னபடி, சடங்குகளை செய்து தீவலம் வர செய்வித்து திருமணம் புரிந்து வைத்தான்” என்று இளங்கோவடிகள் பாடுகிறார்.

உங்கள் அண்ணனும், தமிழக முதல்வருமான ஒருவர் “ஹிந்து திருமணங்களில், புகையை கிளம்பி எல்லார் கண்ணிலயும் தண்ணீர் வந்து ஒரு சோகமா இருக்கும்” என்று பழித்துப் பேசியது ஞாபகம் இருக்கிறதா?

“மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. அதை “சோகமாக கண்ணில் கண்ணீர்வரும்” என்று சொன்னது எந்த முறை? யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே!

மாதவி ஆடுகிறாள். என்னென்ன ஆடல் வகைகள் என்று இளங்கோவடிகள் பட்டியல் இடுகிறார்.

“மாயோன் பாணியும், வருணப் பூதர்
நால் வகைப் பாணியும்” பாடி
“திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,
எரி முகப் பேர் அம்பு ஏவல் கேட்ப,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்” ஆடி
“கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் தொகுதியும்” ஆடுகிறாள்.

திருமால், வருணன், சிவபெருமான், கருப்புநிறக் கண்ணன் ஆடிய ஆடல் வகைகளை ஆடிக் காட்டுகிறாள் மாதவி, அந்தக்கால வழக்கப்படி.

கடவுள் வழிபாடு என்பது எங்கள் தமிழரின் தொன்மையோடு தொடர்புடையது.ஆனால் ஸ்ரீ ரங்கநாதனை பீரங்கி வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்று மிலேச்சர் புத்தி கொண்டது திராவிட இயக்கம். உமையவளுக்கு மூக்குத்தி எதுக்கு என்று கேட்ட கயமை கொண்ட தலைவர்கள் வளர்த்தது இயக்கம் திராவிட இயக்கம். எந்த வகையில் நீங்கள் தமிழர்கள்? சிலப்பதிகாரத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?அசிங்கமாக இல்லையா நீங்கள் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காண்பிப்பது?

சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன். பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடியவன் அந்தப் பொற்கொல்லன். திருடனுக்கே உரிய குணம், தன் திருட்டை மறைத்து அடுத்தவர் மீது பழி போடுவது. கோவலன் கொண்டு வந்த சிலம்பைக் கண்டவுடன், “இது சாதாரண சிலம்பு அல்ல. தான் திருடிய சிலம்பு தன்னிடம் இருக்கிறது என்று யாரும் கண்டுபிடிப்பதற்கு முன்னர், அதைத்திருடியவன் கோவலன் தான்” என்று திருப்பிவிடும் திமுகத்தனம் செய்ய எத்தனித்தான் அந்த பொற்கொல்லன்.

“கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்”

காவேரியில் தண்ணீர் பெற முடியாமல், பழியை மோடி மீது போடுவதும், கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு “பாரீர் பாரீர். மோடி கச்சதீவை மீட்க மாட்டேன் என்கிறார் பாரீர்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும் அன்றே இந்தப் பொற்கொல்லன் செய்த வேலை.

இன்னும் நிறைய இருக்கிறது எம்.பி. அவர்களே, உங்களிடம் கேட்க.

சிலப்பதிகாரம் தமிழரின் மாண்பைச் சொல்லும் இலக்கியம் தான். அதை உங்கள் குடும்பத்தில், இயக்கத்தில் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று முதலில் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி படித்தவர்கள் உண்மையில் தமிழின் மாண்பை ரசித்தர்களா, இல்லை ஈவேராவைப்போல பழித்தார்களா என்று உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடியிடம் பிறகு கேட்கலாம்.

பாரதப் பிரதமர் திரு மோடியின் சார்பாக,
-ச. சண்முகநாதன்.

((ச.சண்முகநாதன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் ஈ.வே.ரா கூறிய கருத்துக்கள்:

“சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி. இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்” – விடுதலை (28.7.51)

“இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு.”

“இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி! மார்பைக் கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும் அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா?”

“விபச்சாரத்தில் ஆரம்பித்து பத்தினித் தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடியும் பொக்கிஷம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *