இடுகைகளை PDF வடிவுக்கு மாற்றி சேமிக்க…

இந்தத் தளத்தில் நீங்கள் வாசிக்கும் சில இடுகைகளை பிடிஎஃப் வடிவத்தில் சேமித்து வைக்க விரும்புகிறீர்களா? அதன் செய்முறை விளக்கம் இதோ:-

 1. முதலில் https://www.primopdf.com/ தளத்திற்குச் சென்று “PrimoPDF” என்னும் இலவச மென்பொருள் செயலியை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
 2. அது ஒரு பிரிண்டராக நிறுவப்படும். வேறொரு பிரிண்டர் இருந்தாலும் இது கூடுதல் பிரிண்டராக செயல்படும்
 3. எந்தக் கோப்பையும் இதன்மூலம் பிடிஎஃப்-ஆக மாற்ற இயலும்.
 4. அதனை நிறுவியபின் தமிழ் இந்து தளத்தினுள் சென்று, நீங்கள் விரும்பும் இடுகையின் தலைப்பிலுள்ள “அச்சிட” என்னும் விசையை அழுத்திடுக
 5. அதன்பின் தோன்றும் அச்சிட ஏதுவான செம்மைப் பக்கதின் மேல் காணும் தெரிவுப் பட்டை (Browser’s Menu bar) மூலம் பிரிண்ட் ஆணையை இடுங்கள்
 6. அடுத்து வரும் பகுதியில் “PrimoPDF”-ஐ பிரிண்டராகத் தெரிவு செய்யுங்கள்
 7. “பிரிண்ட்” ஆணையை அளியுங்கள்
 8. எந்த அடைவினுள் சேமிக்க வேண்டும், கோப்பின் பெயர் போன்றவற்றை இடுக
 9. பின்வரும் இயல்பிருப்புத் தெரிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டால் போதும். இடுகை சரியான பிடிஎஃப் கோப்பாக மாறி, உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டபின் உங்கள் கண்முன் தோன்றும்!

3 Replies to “இடுகைகளை PDF வடிவுக்கு மாற்றி சேமிக்க…”

 1. கட்டுரைகளைச் சேமிக்க நல்லதொரு வழி சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல. வாழ்க!

 2. Ayya…! Tamil hindu nan romma nalaga badithu varukiren.Nan tharpothu mobile valiyaga bayanpaduthukiren.Enakku oru sienthanai. News papers app pol ,Tamil hindu mobile app veliedalame.(Thankalen kavanathirkka…) nantri

 3. எளிதான வழி:

  கீழுள்ள இணையதளத்திற்கு சென்று browser tool–னை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்

  https://www.printfriendly.com/

  பின்னர் அந்த இணையதளத்தில் உள்ளபோது அந்த புக்மார்க்கிணை கிளிக் செய்தால் போதும் PDF–ஆக பதிவிறக்கம் செய்ய முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *