பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”

”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)

(முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

periyar_marubakkamதமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர். இதைச் சொல்ல ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்பது தான் உண்மையானத் தமிழர்களின் கேள்வி.

அது மட்டுமல்ல, ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர்-

-அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.

அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா? இல்லையே! சாக்ரடீஸ் முதலானவர்களோடு ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஓப்பிடுகிறார்களே- அப்படியானால் ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா? ஆங்கிலம் படித்ததனால் ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு ஆற்றலும் திறமையும் வந்ததா? பதிலைப் பகுத்தறிவுவாதிகள்தான் சொல்ல வேண்டும்!

– தொடரும்

25 Replies to “பெரியாரின் மறுபக்கம் – பாகம் 2 (ஆங்கில மோகம்)”

 1. இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
  (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

  இதுதாண்டா பெரியாரின் உண்மையான நோக்கம், தமிழில் குப்பைகளை, புராண புழுகுகளை சுமந்து கொண்டு திரிந்தால், தமிழ் எதற்கு வேண்டும்.

  அறிவு வளர்க்க பயன்படாத மொழி, தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல எந்த சமூகத்திற்கும் தேவையற்றது.

  சும்மா மொழி காவலர்கள்போல் ஆள்பிடிக்கிற வேலையை கைவிடுங்க தோழர்களே திருந்துங்க

 2. ”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
  (குடியரசு 20.01.1920)

  இந்தியாங்கிற நாடு செயற்கையாக கட்டியமைக்கப்பட்ட பொழுது, தமிழன் வடவனுக்கு அடிமைப்பட்டு விடக்கூடாது, ஆகையால் ஆங்கிலமா? இந்தியா?என்று வரும்பொழுது ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியே!

  இன்றைய சூழலிலும், வடவர்களின் சூழ்ச்சியாலும், தமிழகத்தில் காட்டிக் கொடுத்த, பெரியாரிய பாரம்பரியத்தை கெடுக்க வந்த கருணாநிதிக்களாலும், வடவருக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்யும் ஆரிய, ஆரிய அடிவருடிக் கூட்டங்களாலும், இன்று நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமோ?

  இதே நிலை, மொழியாலும் நமக்கு வந்துவிடக்கூடாதும், சிந்தனையில் மேலும் வடவருக்கு அடிமையாகிவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு சரியானதே.

 3. Mr மகிழ்நன், for your infoimation E V Ramasamy is saying all this against tamil language. He should have said this against his kannada language. Did he do that?
  Why bother so much when his mother tongue is not even tamil?
  He is a sadist.
  Tamil is a language to communicate. A Karnatak like Mr EV should preach about his beliefs in his Kannada state.
  Not in Tamil Nadu.

 4. மதிப்பிற்குரிய மகிழ்நன்,

  நீங்கள் சிந்திக்க சில கேள்விகள்…

  01. ஆங்கிலத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரியாரின் தொலைநோக்கு. சரி. ஆனால், ஹிந்தியை எதிர்க்க, ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர், தமிழைக் கொச்சைப் படுத்துவது ஏன்?

  02. புராணக் குப்பைகள் ஆங்கிலத்தில் இல்லையா? தொலைநோக்குப் பார்வையில் கிட்டப்பார்வை குறை என்று இதைச் சொல்லலாமா? ஆங்கிலம் புராணக் குப்பைகளைத் தண்ணி தெளித்துவிட்ட மொழியா?

  03. புராணக் குப்பைகள் என்பது யார் பார்வையில்? யார் எதைக் குப்பை என்று சொல்வது? புராணம் என்பது ஒரு மொழியின் சொத்து. தன் பாட்டன் பேசியதைக் குப்பை என்று சொல்லி, அதற்குக் காரணம் மொழிதான் என்று கண்டறிவதுதான் பகுத்தறிவா?

  04. ஒரு மொழியில் கருத்துகள் தவறாக இருக்குமானால், அது மொழியின் குற்றமா அல்லது அம்மொழியில் சிந்திப்பவர்களின் குற்றமா? மொழி என்கிற அருவத்தைச் சாடும் ஒருவரை எப்படி பகுத்தறிவாளர் என்று சொல்லமுடியும்?

  05. ஆங்கிலம் தேவை என்பதைக் கண்டுகொண்டுவிட்ட பெரியாரின் தொலைநோக்கு கூட மேம்போக்கானதாக இருக்கிறது. வெள்ளைக்காரன் பேசும் மொழி என்கிற ஒருவித மயகக்த்திலும், ஆராதனை மனப்பான்மையிலும் அவர் இதைச் சொன்னதாகத் தெரிகிறது. ஏனென்றால், ’தமிழில் என்ன இருக்கிறது, ஆங்கிலத்தில் என்ன இல்லை’ என்பதை, இதைப்போன்ற மனநிலை உடைய ஒருவரே சொல்லமுடியும். உண்மையில் மொழி என்பது வெறும் மொழியல்ல. ஒரு கலாச்சாரத்தின், அக்கலாச்சாரத்தில் வாழ்ந்த மக்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் இருந்துகொண்டு யோசித்தால் தமிழ் மொழியின் போதாமையும், தமிழ் மொழியில் இருந்துகொண்டு யோசித்தால் ஆங்கிலத்தின் போதாமையும் தெரியும். இது எந்த ஒரு மொழிக்கும் பொருந்திவரும் என்பதே உண்மை. அதைவிட்டுவிட்டு, ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழ்மொழியில் என்ன இருக்கிறது என்று கேட்பது குழந்தைத்தனமானது.

  06. கட்டுடைத்தல் என்பதைப் பெரியார் மேலோட்டமாகப் புரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது. தடலாடிக் கருத்துகளின் ஒட்டுமொத்த உருவமாகப் பெரியார் தெரிகிறது. பெரியாருக்கு வரலாற்றுப் புரிந்துணர்வும், ஆழமான சமூகக் கண்ணோட்டங்களும் சுத்தமாக இல்லையோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது, பெரியார் தமிழ் குறித்துச் சொல்லும் கருத்துகளைக் காணும்போது.

  இந்தத் தொடர் தொடரும்போது பார்க்கலாம், பெரியார் இன்னும் என்ன என்ன மொழி குறித்துச் சொல்லியிருக்கிறார் என்று.

  உங்கள் கருத்துக்களையும் எனது கேள்விகளையும் குறித்துச் சிந்தியுங்கள். முரன்பாட்டின் மொத்த உருவமாய் வாழ்ந்துவிட்டுபோன ஒருவர் எப்படி பெரியாராகவும், தந்தையாகவும் கொண்டாடப் படுகிறார் என விளங்கவில்லை.

 5. பாரதபுத்திரன், அருமையான கேள்விகளை எழுப்பி மகிழ்நனது மகிழ்ச்சியைக் கெடுத்து விட்டீரே ஐயா !

  // கட்டுடைத்தல் என்பதைப் பெரியார் மேலோட்டமாகப் புரிந்துகொண்டதாகத் தோன்றுகிறது.//

  “மேலோட்டமாக” என்பது ரொம்ப மென்மையான வார்த்தை. பெரியார் உருவாக்கியது மகா அபாயகரமான வெறுப்பியல் களம்.. முற்றான சமூக, கலாசாரச் சீரழிவே அதன் நோக்கம்.

  இதனை ”அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை” என்ற அருமையான கட்டுரையில் ஜெயமோகன் விளக்குகிறார். முன்பு திண்ணையில் வெளிவந்தது:

  https://www.thinnai.com/?module=displaystory&story_id=20203102&format=html

 6. பாரதபுத்திரனுக்கு நன்றி.

  நாயக்கர் ஜாதியினர்தான் அதிகமாக இப்பொதும் தலித்களை அடக்கவும், கொல்லவும் , கோவிலில் விடாமல் விலக்கவும் செய்திருக்கின்றனர். பெரியார் இவர்களின் ஜாதியைச் செர்ந்தவரா? யாரேனும் கூறுங்களேன்.

  மகிழ்நன் கருத்தைப் படிக்கும் போது, ‘வடவர் வராமல் செய்ய தமிழை ஒழிக்க வென்டும்’ என்ற அர்த்தம் உருவாகிறதே? பாவம், தனக்கு எல்லாம் தெரியும், “பெரியார்தான் நமக்கு பதிலாகச் சிந்தித்துவிட்டாரே, நாம்வேறு எதற்கு அநாவஸ்யமாய்?” என்று இருக்கிறார் போலத் தெரிகிறது.

 7. ‘னை , லை, ணா’ போன்ற எழுத்துக்களின்உண்மையான வடிவம் இங்கு உள்ளது https://upload.wikimedia.org/wikibooks/ta/9/9f/Tamil_vwl2.gif அதை விடுத்து தமிழ் மொழி வெறுப்பாளரான பெரியார் பரிந்துரைத்த எழுத்துக்களை நாம் பெருமைப்பட எழுதிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ் மொழி எழுத ஆங்கிலத்தையே உபயோகிக்கலாம் ‍ ‘ ஈ.வே.ராமசாமியின் உளரல் முத்துக்களை பொன்னேட்டில்தான் எழுதவேண்டும்

  ராம‌குமரன்

 8. ///01. ஆங்கிலத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரியாரின் தொலைநோக்கு. சரி. ஆனால், ஹிந்தியை எதிர்க்க, ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டவர், தமிழைக் கொச்சைப் படுத்துவது ஏன்?

  02. புராணக் குப்பைகள் ஆங்கிலத்தில் இல்லையா? தொலைநோக்குப் பார்வையில் கிட்டப்பார்வை குறை என்று இதைச் சொல்லலாமா? ஆங்கிலம் புராணக் குப்பைகளைத் தண்ணி தெளித்துவிட்ட மொழியா?///

  பெரியார் ஒன்றும் கற்றறிந்த ஆய்வாளர் அல்ல, மாறாக சுயசிந்தனையாளர், தன்னுடைய கருத்துக்களை பட்டறிவால் ஆய்வு செய்து தவறென்று பட்டதை திருத்திக் கொள்ள தயங்காதவர்.

  பெரியார் ஆங்கிலத்தில் புலமை பெற்றவரில்லை, ஆங்கில அறிவு தமிழர்களின் உலகத்தொடர்புக்கு தேவையாயிருந்ததால் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டதாகவே எடுத்துக் கொண்டாலும், அதில் அவருக்கு ஏதும் சொந்த உள்நோக்கம் கிடையாது.

  பெரியாரின் கொள்கைவழி பிள்ளைகள் நாங்கள், ஆங்கிலத்தில் புராண குப்பைகளும் பெருவாரியாக இருந்தன, இருக்கின்றன, ஒப்புக் கொள்கிறோம். அம்மொழியை பேசிய மக்களிடைய மட வழக்கங்களும் இருந்தன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் மேலைநாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, பொதுவுடமை புரட்சி முதலானவற்றின் தாக்கங்களால், மதத்தின் ஆணிவேர் நடுங்கியதை யாரும் மறுக்க முடியாது. மதத்தின் பார்பட்டு சிந்திக்க தொடங்கிய அறிஞர்களால்தான் அந்நாடுகளில் முன்னேற்றம் இவ்வளவு ஏற்பட்டிருக்கிறது,என்பதை உலகிலுள்ள தேவையற்ற நெறிகளில் ஒன்றான பார்ப்பன நெறிக்கு வக்காலத்து வாங்குவோர் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்

  பெரியாரே சொன்னதுபோல்,

  “ நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டாம், சுய அறிவு கொண்டு சிந்தித்து, சரியென்று படுவதை பயன்படுத்தி, தவறென்று படுவதை ஒதுக்கி விடுங்கள்.”

  ஆக, தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன் என்று பெரியார் கருதியது கிடையாது.

  நாங்கள் தூய தமிழில் பேச,எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வட, ஆங்கில, பிற மொழி கலப்பிலிருந்து தமிழை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

  ஆனால், மேலை நாட்டு புராண குப்பைகளை பற்றி கேள்வி எழுப்பும் மேதைகள், இந்நாட்டில் உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பன பண்டாரங்களில் புழுகுகளை ஏனோ கண்டிப்பதில்லை.

  03. புராணக் குப்பைகள் என்பது யார் பார்வையில்? யார் எதைக் குப்பை என்று சொல்வது? புராணம் என்பது ஒரு மொழியின் சொத்து. தன் பாட்டன் பேசியதைக் குப்பை என்று சொல்லி, அதற்குக் காரணம் மொழிதான் என்று கண்டறிவதுதான் பகுத்தறிவா?

  பாட்டன் வெட்டிய கேணியாக இருந்தாலும், நஞ்சு கலந்த நீரை யாரும் அருந்த மாட்டார்கள். என் பாட்டன் விட்டுச் சென்ற நிலம் தரிசாக இருக்கிறது, என்பதற்காக அதை விளைநிலமாக மாற்றும் முயற்சி தவறென்றால் அந்த தவறை தவறாமல் தொடர்ந்து செய்வோம்.

 9. வடவர் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று பெரியார் கூறினார். பெண் விடுதலைக்கு வித்திட்ட playboy, penthouse போன்ற இலக்கிய தரமான பத்திரிக்கைகள் இந்த காட்டு மிராண்டி பாஷையில் உண்டா? ( சரோஜா தேவி எல்லாம் அவர் காலத்தில் இல்லை)

 10. /////04. ஒரு மொழியில் கருத்துகள் தவறாக இருக்குமானால், அது மொழியின் குற்றமா அல்லது அம்மொழியில் சிந்திப்பவர்களின் குற்றமா? மொழி என்கிற அருவத்தைச் சாடும் ஒருவரை எப்படி பகுத்தறிவாளர் என்று சொல்லமுடியும்?/.///

  சிந்தித்தவர்களை சாட வில்லையா?…பெரியார்.
  கம்பன் முதல் வள்ளுவர்வரை யாரையும் நேர்மையான விமர்சனத்தோடு ஏற்றுக் கொள்வதுதான் பெரியாரியல்.
  ஏன், பெரியாரை முன்னிருத்தும் கவிஞர் அறிவுமதி, வாய்ப்புக்கு பகுத்தறிவு பேசும் வைரமுத்துவரை கருத்தியல் ரீதியாக சமூக அக்கறையோடு விமர்சித்தவர்கள்தான் பெரியாரியல்வாதிகள். அதுதான் பெரியாரியத்தின் உட்கூறு.

  யாரையும் தனிநபர் துதிபாடும் எண்ணம் பெரியாரியலுக்கு.

  அது பெரியாராக இருந்தாலும் சரி

 11. ஆன்மீக நுணுக்கங்களை விளக்க தென்னிந்தியாவில் நடந்த முயற்சிகளின் விளைவே தமிழ் மொழி. பண்டைத் தமிழில் உள்ள இலக்கியங்கள் அனைத்துமே ஹிந்து ஞான பொக்கிசங்கள். தமிழ் அழிந்தால் இந்த ஞானச் செல்வமும் அழிந்துவிடும். அதனால்தான் தமிழ் மொழியை அழிக்க எவாஞ்சலிக்கர்கள் பாடுபடுகிறார்கள்.

  ஒரு நாட்டு மக்களையும், அந்த நாட்டு வளங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே கிருத்துவ எவாஞ்சலிக்கர்களின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்திற்கு மொழியோ, கலாச்சாரமோ எதிராக இருக்குமாயின் அவற்றை அழித்தோ அல்லது தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ செய்கிறார்கள்.

  இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.
  நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத் தங்களது மொழியின் எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதே இப்போது தெரியாது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைத் தவிர வேறு எது இந்த இழிநிலைக்குக் காரணமாக இருக்க முடியும்?

  தங்களது மாநிலத்தை கிருத்துவர்களின் மாநிலம் என்றே பெருமையாக அந்த மாநிலத்தின் ஒரு முதல்வர் சொல்லிவந்தார். நாகர்களாக மஹாபாரதத்தில் வர்ணிக்கப்படும் அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது. வயதான பெண்களையும், தனிமையில் வாழும் பெண்களையும் சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தி சூனிய வேட்டை நடத்திவருகின்றது. அவர்களில் பலர் செல்வந்தர்களாக இருப்பதால், அவர்களுடைய சொத்துக்கள் நேரடியாக சர்ச்சிற்குச் சென்றுவிடுகிறது. இது மிகவும் லாபம் தரும் தொழில்.

  எனவே, தமிழ் மொழியையும் ஆங்கில மொழியின் அடிப்படையில் மாற்றவேண்டும் என்ற குரல்களை அவர்கள் எழுப்பியது புதியதல்ல. அந்தக் கிருத்துவ எவாஞ்சலிக்கர்களால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் ஈவேரா. அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் திராவிடர் கழகமும், அதன் முந்தைய வேடங்களும்.

  அது நாள்வரை நேரடியாக இந்துத் தெய்வங்களையும், தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசிவந்த எவாஞ்சலிக்கர்களுக்கு அந்த வேலைகளைச் செய்ய கிடைத்த வேலையாட்களாக இந்த திராவிடர் கழகக் கும்பல்களும், தமிழ் தேசியக் கும்பல்களும் உழைத்துப் பிழைப்பை நடத்துகின்றனர்.

  கிருத்துவ எவாஞ்சலிக்கர்களை மறைத்து நின்று, அவர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு வரும் இவர்கள் தமிழ்மொழி காட்டுமிராண்டி பாசை என்றும், தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று சொல்லுவதும் ஆச்சரியமளிக்கத் தேவையில்லை.

  தமிழில் முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பட்டது. தங்களது மதத்திற்கு ஏற்றவாறு தமிழை அழிக்க விரும்பிய பெஸ்கி உள்ளிட்ட எவாஞ்சலிக்கர்கள், சங்கப் பாடல்களும், மற்ற பண்டை இலக்கியங்களும் இருக்கும்வரை தெய்வீகமொழியே தமிழ் என்பதை மறுத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல என்பதைப் புரிந்துகொண்டார்கள். (சங்கப் பாடல்களை மீட்டு தமிழினத்திற்குக் கொடுத்த உவேசா உள்ளிட்ட சான்றோர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.)

  தெய்வீகத் தமிழை எப்படி அழிப்பது, தமிழர்களை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்பதைப் பற்றிச் சிந்தித்து எவாஞ்சலிக்கர்கள் அக்காலத்திலேயே ஒரு நெடுங்காலத் திட்டத்தைத் தீட்டினர். ஆரிய-திராவிட இனவாதத்தைக் கால்ட்வெல் பாதிரி மூலமும், மாக்ஸ் ம்யூலர் மூலமும் உருவாக்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிக்க முடிவு செய்துள்ளனர். தமிழர்கள் எல்லாரும் தோமா கிருத்துவர்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பது இந்த நீண்ட காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.

  நவீன தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தவர்களும் இவர்களே. எனவே, இந்த புதிய வடிவைக் கொடுக்க ஆரம்பித்தவர் ஈவேரா என்று தவறாக எண்ண வேண்டாம். எவாஞ்சலிக்கர்கள் இட்ட கட்டளையைச் செயல்படுத்தினார் ஈவேரா. அவர்களின் அல்லக்கையாக இருந்து சொத்து சேர்ப்பதைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எதையும் அவரால் சாதிக்க இயலவில்லை என்பது வருந்தத் தக்க உண்மை.

  இந்து எனும் குடையின்கீழ் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வின்றி, ஒற்றுமையாக இருக்க வேண்டிய தமிழர்கள் சாதிவெறி பிடித்துத் தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதற்கும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பிய ஈவேராவே காரணம்.

 12. யாரையும் தனிநபர் துதிபாடும் எண்ணம் பெரியாரியலுக்கு இல்லை

  அது பெரியாராக இருந்தாலும் சரி

 13. .// ‘னை , லை, ணா’ போன்ற எழுத்துக்களின்உண்மையான வடிவம் இங்கு உள்ளது https://upload.wikimedia.org/wikibooks/ta/9/9f/Tamil_vwl2.gif அதை விடுத்து தமிழ் மொழி வெறுப்பாளரான பெரியார் பரிந்துரைத்த எழுத்துக்களை நாம் பெருமைப்பட எழுதிக்கொண்டிருக்கிறோம்.//

  நம்முடைய பாரம்பரிய எழுத்துக்களில் யூனிகோடு தமிழை படிக்க விரும்பினால், கீழ்க்கண்ட ஃபான்டை பயன்படுத்தவும்

  https://noolaham.net/Grantha/e-Grantamil.ttf

  அல்லது e-TamilOTC என்ற ஃபான்ட்டை https://www.uni-hamburg.de/Wiss/FB/10/IndienS/Kniprath/INDOLIPI/Indolipi.htm இல் இருந்து – ஃபான்ட் பாக்கேஜை டவுன்லோடு செய்து. அதிலிருந்து பெறலாம்.

  நான் பலகாலமாக இதைப்பயன்படுத்திதான் வலையுலகத்தமிழை வாசித்து வருகிறேன் 🙂

  // ‘தமிழ் மொழி எழுத ஆங்கிலத்தையே உபயோகிக்கலாம் ‍ ‘ ஈ.வே.ராமசாமியின் உளரல் முத்துக்களை பொன்னேட்டில்தான் எழுதவேண்டும் //

  idha ippadi ezudhunaa eppadi !. neenga adha idhu maadhiri illa ezhuthi irukkanum !!

  Vengaayam !!! Vengaayam !!!

  :))))))))))))))))))))))))))

 14. //இந்தியாவின் பல இடங்களில் அவர்களது மொழி அழிப்பு வெற்றி பெற்றுவிட்டது.
  நாகலாந்து மாநிலத்தில் நாகா மொழியானது முழுக்க முழுக்க ஆங்கில எழுத்துக்களையே கொண்டது. நாகலாந்து மக்களுக்குத்
  […]
  அந்த பழம்பெருமை மிக்க இனம் தனது ஆன்மீகப் பொக்கிஷங்களை எவாஞ்சலிக்கர்களிடம் இழந்துபோய், கிருத்துவ மதத்தின் பிடியில் சிக்கி அல்லாடுகிறது. தங்களது முன்னோர்கள் சாத்தானை வழிபட்டவர்கள் என்றும், கீழ்த்தரமானவர்கள் என்றும் மிக உறுதியாக நம்புகிறது.//

  நாகர்கள் தங்களுடைய கலாச்சாரத்தை இழந்தது முற்றிலும் கொடுமையிலும் கொடுமை !! நாடாண்ட நாகர்களிடம் தம்முடைய முன்னோர் கலாச்சாரம் காட்டுமிராண்டி கலாச்சாராம் என்ற நச்சை அவர்கள் மனதில் எடுக்க இயலாது அளவுக்கு கிறிஸ்தவ விஷநரிகள் (ஆம்.. மிஷனரிகள் அல்ல) கலந்துவிட்டார்கள். அவர்கள் தாய்மொழியும் ஆங்கிலம் என்றாகிவிட, தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

  கண்ணெதிரில் நம்முடைய பாரம்பரியம் வடகிழக்கில் அழிந்து கொண்டிருக்க, நாம் மௌனிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை !!

 15. களிமிகு கணபதி

  உளரல் திலகம்…

  ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
  என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.

  அதோடு, தமிழில் இருக்கும் வடமொழி கலப்பு எந்த நீண்ட கால செயல்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை ஏன் விளக்கவில்லை.

 16. //களிமிகு கணபதி

  உளரல் திலகம்…//

  உங்களைவிடவா மகிழ்நன்? முதலில் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், மொக்கை போடுவதே உங்கள் வழக்கமாக இருக்கிறது. எப்படி பதில் தர முடியும், உங்கள்பக்கம் நியாயம் இருந்தால்தானே?

 17. வணக்கம்,

  //ஆங்கிலத்தை கொண்டு தமிழை அழிக்க முயற்சி செய்தார்களா? இல்லையா?என்பது எமக்கு பிரச்சினையில்லை, தமிழில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது.
  என் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும்,என் மொழியை கீழ்த்தரமாக பார்க்க வைத்திருக்கும் ஆங்கில மோகம் போன்றவைக்கு எதிராக நிற்கும் பெரும் கூட்டம் பெரியாரியல், தமிழ் தேசிய வழி வந்தவர்கள்தான்.//

  கண்ணை மூடிக்கொண்டு கட்டுரை படித்தால் இப்படித்தான் நடக்கும்.
  ஈ. வே. ரா வின் ஆங்கில மோகத்தையும், தமிழ் மீதுள்ள அக்கறையும் பற்றி கட்டுரையின் ஆரம்பத்திலேயே வெளிச்சமாக்கிய பின்னரும் ஆங்கில மோக எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளுகிரார்களே? தலைவனின் வழி நடக்காத இவர்கள் உண்மையான தொண்டர்களா?

 18. நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டாம், சுய அறிவு கொண்டு சிந்தித்து, சரியென்று படுவதை பயன்படுத்தி, தவறென்று படுவதை ஒதுக்கி விடுங்கள்.”

  It was the same EVR who said that he would like to be surrounded by fools who would listen to whatever he says.

  Whren asked why he said this, he said ” For the task I have underataken, I require people who would obey my orders unquestioningly”.

  That was EVR – a bundle of contradictions.

 19. Friends,
  It is heartening to note that atleast some came out with a view which is contrary to the popular belief that Evr played a major role in the development of Tamil nadu. I think nothing wrong in contradicting the view taken earlier becoz even great people had done that. My question is the intention behind it. Kannadiga naicker speaking ill of tamil language is highly obnoxious. Calling the same as a torch-bearer of tamil people is even more unbearable. It is high time to unravel the real face of evr and propogate the same without any fear.

 20. ////முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்! இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு.)////
  ஒரு மனிதன் ஒரு காரியத்தை செய்ய பல காரணங்கள் உண்டு. அதே போல, பெரியார் ஹிந்தியை எதிர்ப்பதற்கான காரணங்களாக பலவற்றை கூறியுள்ளார். அவற்றுள், 1 .பார்ப்பன எதிர்ப்பு, 2 . ஆங்கில அறிவு போன்றவையை வெவ்வேறு சமயங்களில் கூறியுள்ளார். இதில் எங்கேயும் முரண்பாடு இல்லையே!!!
  ////அப்படியானால் ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஆற்றலும் திறமையும் உடையவர்களா? ///
  பெரியார் கூறியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கருத்துகள் உள்ளன. தமிழில் அறிவியல் கருத்துகள் மிக குறைவு. எனவே, ஆங்கில அறிவியலை கற்றவன் தான், அறிவியலில் சிறந்து விளங்க முடியும். தமிழில் ஆங்கில அறிவியலை மொழிபெயர்த்து கற்றுக்கொள்ளலாம். ஆனால், பெரியார் காலத்தில் தமிழ் அறிவியல் வளராத காரணத்தால், பெரியார் தமிழை விமர்சித்தார். உண்மையில் தமிழ் மீது அக்கறை இருப்பவர்கள், பெரியார் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, தமிழ் அறிவியலை வளர்க்க வேண்டுமே தவிர, பெரியார் கூறிய முற்போக்கு கருத்துகளை கேள்வி கேட்கக்கூடாது.
  ////ஆங்கிலேயே நாட்டிலேதான் பிச்சைக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியானால் ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்களுக்கும் ஆற்றலும் திறமையும் இருந்திருக்குமே, எதற்காக ஆற்றலும் திறமையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்? ஆக ஆங்கிலம் படிப்பதால் மட்டும் ஒருவர் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி விடமுடியாது.////
  இதற்கு காரணம் முதலாளித்துவம் தானே தவிர, மொழி கிடையாது. பிச்சைக்காரனுக்கு ஆற்றலும், திறமையும் கிடையாதா?? ஆங்கில நாடுகளில் சில மாணவர்கள் பிச்சை எடுப்பதை பகுதி நேர வேலையாகவே வைத்திருக்கின்றனர். தங்கள் செலவுகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்துகின்றனர். பிச்சைக்காரனுக்கு ஆற்றலும் திறமையும் கிடையாதென்றால், கோவிலில் போடும் பிச்சை காசை எடுத்து வைத்துக்கொள்ளும் பிச்சைக்கார அர்ச்சகருக்கு திறமையும், ஆற்றலும் கிடையாதா?? அவருடைய திறமையினால் தான் மக்களை “ஆன்மிகம்” என்ற பெயரில் ஏமாற்றி பிச்சை எடுக்கிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சை அர்ச்சகர்கள் கொள்ளையடித்த பணம் கணக்கில் அடங்காதே!!! முதலில் பெரியார் கூறியது, “அறிவியல் அறிவு”. அறிவியல் அறிவு இருப்பவன் எல்லாம் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. “அறிவயல் அறிவோடு” பிச்சைக்காரனும் இருக்கிறான். தன் பணத்தை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவிட்டு, ஏழையாக இருப்பவர்கள் எத்தனையோ பெயர்கள். இதனால், திருவாளர் வெங்கடேசன் அவர்களே, உங்கள் “ஒப்பீடு” தவறு. “அறிவியலையும்:”, பணத்தையும் ஒப்பிடாதீர்கள். அந்த அறிவு ஆங்கில மொழியில் நிறைய இருக்கும் போது, நமக்கு இரண்டு வழிகள் தான் உண்டு. 1 . ஆங்கில அறிவியல் கல்வி, 2 . தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில அறிவியல் கல்வி. பெரியார் காலத்தில், தமிழ் அறிவியலை யாரும் வளர்க்காத காரணத்தால் பெரியார், முதல் வழியை ஆதரித்தார். நம்மால், தமிழ் அறிவியலை வளர்க்க முடிந்தால், நாம் இரண்டாவது வழியை தேர்ந்தெடுக்கலாம். அதை விட்டு விட்டு, பெரியார், தமிழ் மொழியில் அறிவியல் கருத்துகள் குறைவு என்று கூறியவற்றை விமர்சிப்பது தேவையற்றது.
  ////”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
  (குடியரசு 20.01.1920)////
  1920 ஆம் ஆண்டு குடியரசே வரவில்லை. 1925- ஆம் ஆண்டு முதல் தான் குடியரசு வந்தது. எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டு தவறு. பெரியார் ஆங்கிலத்தை பொதுமொழியாக ஏற்கசொன்னதில் எந்த தவறும் இல்லை. இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை பொதுமொழியாக தேர்ந்தெடுப்பது, மற்ற மொழிக்காரர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
  ////”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”////
  தமிழ் எழுத்துகள் பனை ஓலையில் எழுதுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டன. இப்போது, தாளில் எழுதுவதற்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். பெரியார் இந்த நல்ல எண்ணத்தில் தான் சொன்னார். ஆனால், பெரியார் கூறியதை அப்படியே செய்யாமல், தமிழ் மொழிக்கு ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, தமிழ் எழுத்துகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
  ////வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்////
  எந்த பெரியார் தொண்டனும் இதை பின்பற்றுவதில்லை. பெரியாரும் பின்பற்றவில்லை. அப்படியென்றால், என்ன அர்த்தம்?? பெரியார் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் என்று தானே அர்த்தம். அவரே கருத்தை மாற்றிக்கொண்ட பிறகு, நீங்கள் இதை பிரச்சனை ஆக்குவது சரியா?? அவரே பின்பற்றாத ஒரு கொள்கையை நீங்கள் அவரை வைத்து விமர்சிப்பது சரியா??
  ////ஆங்கிலப் புட்டிப்பாலை உண்டுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பகுத்தறிவாளரானாரா?////
  ஆங்கில அறிவியல் அறிவு பெரியாருக்கு அதிகமாக இருந்திருந்தால், எல்லா மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக “அறிவியல் விளக்கங்களை” அவரால் கொடுத்திருக்க முடியும். தமிழில் அறிவியல் கருத்துகள் குறைவாக இருப்பதால், அவரால், நிறைய அறிவியல் விளக்கங்களை கூற முடியாமல் போனது. ஒருசில மந்திரங்களை , இவை தந்திரங்கள் தான் என்று கூறுவதற்கு “அறிவியல்” தெரிந்திருக்க வேண்டும். பிள்ளையார் சிலை பால் குடிப்பதை பார்த்தால், ஒரு படித்த வெள்ளைக்காரனால், அந்த பொருளின் “உறிஞ்சு தன்மை” தான் இதற்கு காரணம் என்று கூற முடியும். ஆனால், தமிழ் அறிவியலில் இந்த பொருளை பற்றியோ, உறிஞ்சும் தன்மை பற்றியோ, செய்திகள் இல்லாத போது, எத்தனை தமிழர்களால், இந்த அறிவியல் காரணத்தை சரியாக கூறமுடியும்??? எனவே, ஆங்கில அறிவியல் தெரிந்திருந்தால், பெரியாருடைய பகுத்தறிவு இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஆங்கில அறிவியலை கற்று, அதன் மூலம் தமிழ் அறிவியலை வளர்ப்பது, நம் பணியாக இருக்கவேண்டும். அரசாங்கம், ஒரு குழுவை அமைத்து, நல்ல ஆங்கில அறிவியல் புத்தகங்களை மொழிபெயர்க்கவேண்டும். இதன் மூலம், ஆங்கிலத்தின் உதவி இல்லாமல், நம் தாய்மொழியிலேயே, நாம் அறிவியலை கற்கும் வாய்ப்பு ஏற்படும்.

 21. ராமசாமியின் செயல்பாடுகளை பகுத்துணர்ந்து ஆராய்ந்து அவரின் தோலுரிப்பது ஒருபுரம் இருந்தாலும்.
  “”உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்லுகிறேன்”” என்ற முதுமொழிக்கேற்ப ராமசாமியின் நண்பர்களாகிய புலவர் மருதையா, கைவல்ய சாமியார் , முகமதலி ஜின்னா உள்ளிட்ட ராமசாமியின் நண்பர்களையும், ராமசாமியின் மாநிலம் மற்றும் தேசம் தாண்டிய நபர்களின் நட்புறவு ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுதும், ஹிந்து மதத்து பெண்ணியத்தை, புராணகதைகள், மூடநம்பிக்கைகள் என்று குருடன் யானையை தடவி உருவத்தை கூறியதை போல் ஹிந்து மதத்தை சாடிய ராமசாமி இஸ்லாமிய மதத்தை பற்றியும் கிருத்தவம் பிடித்த கிருத்தவ மதத்தை பற்றியும் வாய் திறக்கவில்லை. இதிலிருந்து ராமசாமி யாருடைய கையாளாக, யாருக்கு ஏஜண்டாக. யாருக்கு எடுபிடியாக (இன்னும் எத்தனையோ) செயல்பட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது. மேலும் இந்தியாவின் சுகந்திர பிரகடனம் பெருவாரியான இந்துக்களுக்கு எதிராக வரப்போவதை அங்கிலேயர்கள் , முகமதலி ஜின்னா மற்றும் காந்தி மூலம் நன்குணர்ந்த ராமசாமி மற்றும் கன்சிராம் உள்ளிட்டோர் முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் காப்பாற்றவும் ஹிந்து மதத்தை புறம் கூறி ஏனைய மதத்தை வளர்க்கவும் மிகப்பெரிய சகுனி வேலைய பார்த்திருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

  மு.கா.ச.ஓம்பிரகாஷ்.

 22. வணக்கம்,
  2009 இல் துவங்கி 2011 இல் அளித்த பதில்களுக்கு இப்போது தான் பதிலளிக்கிறேன். இன்று தான் இக்கட்டுரையைக் காண நேர்ந்தது.

  திரு எட்வின் பிரபாகரன் கூறியிருக்கிறார். //பெரியார் கூறியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கருத்துகள் உள்ளன. தமிழில் அறிவியல் கருத்துகள் மிக குறைவு. எனவே, ஆங்கில அறிவியலை கற்றவன் தான், அறிவியலில் சிறந்து விளங்க முடியும். தமிழில் ஆங்கில அறிவியலை மொழிபெயர்த்து கற்றுக்கொள்ளலாம். ஆனால், பெரியார் காலத்தில் தமிழ் அறிவியல் வளராத காரணத்தால், பெரியார் தமிழை விமர்சித்தார். உண்மையில் தமிழ் மீது அக்கறை இருப்பவர்கள், பெரியார் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு, தமிழ் அறிவியலை வளர்க்க வேண்டுமே தவிர, பெரியார் கூறிய முற்போக்கு கருத்துகளை கேள்வி கேட்கக்கூடாது.// அட அட அட அட…. என்ன தத்துவம்? இவர் சொன்ன முதல் வரியே பொய். பெரியாரைப் போலவே ஆராயாமல், அல்லது ஆராய விருப்பமில்லாமல் மேம்போக்காக சொல்லியிருக்கிறார். “ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கருத்துகள் உள்ளன. தமிழில் அறிவியல் கருத்துகள் மிக குறைவு.” எவ்வளவு உண்மை இதில் இருக்கிறது?

  ஐயா, உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். இன்று உலகமே பின்பற்றும் “Big Bang Theory” என்னும் கோட்பாடு 1900 களுக்குப் பிறகு தான் வடிவமெடுத்தது. 1600 களில் எல்லாம் கலிலியோவின் கோட்பாட்டை தீவிரமாக எதிர்த்தனர் கிறித்தவர்கள். அப்போதெல்லாம் அவர்களைப் பொருத்தவரை உலகம் தட்டையானது தான். ஆனால் Telescope என்ற உபகரணத்தை வடிவமைத்து, உலகம் முட்டை வடிவமானது, பூமி உருண்டை வடிவமானது, பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்று அறிவித்த போது கிறித்தவ மகாசபை அவரை போப் முன்னிலையில் கைது செய்து சிறையிலடைத்தது.

  Galileo was found guilty, and the sentence of the Inquisition, issued on 22 June 1633,[37] was in three essential parts:
  Galileo was found “vehemently suspect of heresy,” namely of having held the opinions that the Sun lies motionless at the center of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to “abjure, curse, and detest” those opinions.[38]
  He was sentenced to formal imprisonment at the pleasure of the Inquisition.[39] On the following day this was commuted to house arrest, which he remained under for the rest of his life.
  His offending Dialogue was banned; and in an action not announced at the trial, publication of any of his works was forbidden, including any he might write in the future.[40]

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வந்த பிறகு 1900 களில் “Big Bang theory” சிறிது சிறிதாகப் பரவலாக்கப்பட்டு இப்போதும் முழுதும் முடியாமல் எதிலிருந்து உலகம் உண்டானது என்று ஆங்கில அறிவியல் இயக்கங்களால் அறுதியிட்டுக் கூற முடியாமல் பாதியில் நிற்கின்றது. இந்த அளவுக்கு உலகத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். 2000ம் வருடம் கத்தோலிக்க சபை கலிலியோவின் சிறை தண்டனை உட்பட தவறான அறிவியலுக்கு உட்படாத மதக் கோட்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டது.
  In 2000, Pope John Paul II issued a formal apology for all the mistakes committed by some Catholics in the last 2,000 years of the Catholic Church’s history, including the trial of Galileo among others.

  ஆங்கில அறிவும், மத நம்பிக்கைகளும் பிரமாதம் அல்லவா? இனி நம் வரலாற்றைப் பார்ப்போம்.

  திருமூலர் கூறியிருக்கிறார்.
  “அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை!
  பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெரும்,
  உண்டி சுருங்கில் உபாயம் பல உலா,
  கண்டங்கருத்த கபாலியுமாமே!”

  டெலஸ்கோப்பின் துணை கொண்டு வெறும் சூரிய மண்டலத்தை மட்டும் அதுவும் முழுவதுமாகக் கூறாமல் 4 கரங்களைப் பற்றி மட்டும் கூறிய கலிலியோவின் மொழியையும், அதன் ஆங்கில அறிவையும் கொண்டாடும் நீங்கள், எந்த துணை கொண்டு அண்டம் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது என்று ஒரே வரியில், ஒரே போடாகப் போட்ட திருமூலரைப் புரிந்து கொள்ள முடியும்? அண்டம் விரிவடைவது சரி. அது எதிலிருந்து உருவானது? இதை ஆங்கில அறிவும் இது வரை கண்டுபிடிக்கவில்லை, ஆங்கில மதமும் கண்டுபிடிக்கவில்லை. நம் ஹிந்து சனாதன தர்ம மார்கத்தில் இதற்க்கெல்லாம் விளக்கங்கள் உண்டு. அதையெல்லாம் விவரித்தால் உபன்யாசம் செய்வது போலாகி விடும் என்று கருதி இதோடு விடுகிறேன். தமிழ் மொழியில் ஒரு சித்தர் 3000 வருடங்களுக்கு முன்பே சிவத்தொண்டாற்றிய திருமூலர், 63 நாயன்மார்களுள் ஒருவரென்று போற்றப்படும் தவமுடையார், இன்று உலகமே ஒப்புக்கொண்ட விஷயத்தை தம்முள் உணர்து கூறியிருக்கிறார். அதைக் கேட்கவும், கொண்டாடவும் உங்களுக்கு மனமில்லை. ஆங்கில ஜால்ரா அடிக்க வந்து விட்டீர்கள். வெட்கமாயில்லை?

  உங்கள் முதல் பாயிண்டே தவறு வாத்யாரே! அதற்கே எங்களால் இவ்வளவு பதிலளிக்க முடிகிறது என்றால், உங்கள் மொத்தக் கூற்றிற்கும் நாங்கள் பதிலளித்தால் ஏரியா பக்கமே தலை காட்ட மாட்டீர்கள். மகிழ்நன் என்னும் ஒருவர் “பாப்பாரப் பண்டாரங்கள்” என்று வைகிறார். எத்துணை அர்ச்சகர்களுக்கு இவர் சலவை நோட்டுகளாக தட்டில் இதுவரை போட்டாராம்? கோவில் பக்கமே போகக்கூடாது. சாமி சிலைக்கு அதுவும் குறிப்பாக ராமர் சிலைக்கு செருப்பு மாலையெல்லாம் போட்ட சூப்பர் பாரம்பரியமல்லவா? அப்படித்தான் பேசுவார். இன்னொருவர் பிச்சைக்காரர்களையும், அர்ச்சகர்களையும் ஒரே மதிப்பீட்டில் வைத்துப் பேசுகிறார். சூப்பர். இப்படிப் பேசி பேசி தான வாத்தியாரே ஐயமாருகளை அடக்கிபோட்டீங்க? உங்க தில்லு பூராம் வெறும் கோவில் பூசாரி, தமிழ் வாத்தியாரு, பழைய பேப்பர்காரன், பித்தளைக்கு ஈயம் பூசுறவர் இப்புடி சாப்டான ஆளுகளாதான வாத்யாரே மிரட்டும்?

  எங்கள் தமிழ் நாட்டிலே எத்தனையோ யோகிகள், ஞானிகள் அவதரித்து தமிழை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இன்று ஆங்கிலம் கோலோச்சுவது அவர்களின் தந்திரத்தால். உலக நாடுகளை மிரட்டி, அவர்களின் எண்ணெய் வளங்களையும், மனித வளங்களையும் சுரண்டி, ஆரியம், திராவிடம் என்று இல்லாத இனவாதக் கோட்பாடுகளை எல்லாம் வளர்க்க முயன்று மொத்தமாக ஹிந்துக்களையும், நம் இந்தியாவையும் அபகரிக்க முயலும் ஆங்கில நாட்டானின் மொழிக்கு நீங்கள் மதிப்பு அளிப்பீர்கள்! சுத்தமாக வேத பாராயணத்தை ஒழித்து ஓரமாக வைத்து விட்டு சமையல் கரண்டியைக் கையில் பிடித்துக் கொண்டு, யாராவது நம்மை வேலைக்கு கூப்பிட மாட்டார்களா என்று நிற்கும் நோஞ்சான் பாத்திரமாகப் பிடித்து தர்ம அடி அடிப்பீர்கள். சூப்பர்ணே! என்னா பகுத்தறிவு?

 23. “எங்கள் தமிழ் நாட்டிலே எத்தனையோ யோகிகள், ஞானிகள் அவதரித்து தமிழை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இன்று ஆங்கிலம் கோலோச்சுவது அவர்களின் தந்திரத்தால்.” – அதாவது ஆங்கிலேயர்களின் தந்திரத்தால். சரியான புரிதலுக்கு நன்றிகள்.

 24. பெரியாரின் கொள்கைகள் சூப்பர் கொள்கை.
  அவரின் பொன்மொழிகள் சில…….
  1) வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்

  2)இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?- ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார்

  3).அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை(28.3.60)யில் பெரியார்

  4)இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை(28.7.51)யில் பெரியார்

  5)தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – தந்தை பெரியார் விடுதலை(27.11.43)யில்

  6)தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *