யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்..
– பாரதியார் (கண்ணன் என் சீடன்)
மனதிற்கினியதும், வசீகரமானதும், ஆழமான தத்துவ உட்பொருள் கொண்டதுமான பிரம்ம மோகன லீலை ஶ்ரீமத்பாகவம் பத்தாவது ஸ்கந்தம் 13-14 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. மாயத்தால் கண்ணனுடன் விளையாட பிரம்மா பின்பு தானே மாயச்சுழலில் சிக்கி திகைத்து நிற்பதும், பிரபஞ்ச சிருஷ்டியின் அற்புதத்தையே யமுனை நதிக்கரையிலும் ஆயர்பாடியிலும் ஒரு நாடகம் போல கண்ணன் விளையாட்டாக நடத்திக் காட்டுவதும், பிரம்ம தேவர் செய்த அற்புதமான ஸ்துதியும் இதில் மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றியது இந்த உரை.
சிருங்கேரி ஶ்ரீ சாரதா பீடத்தின் வேதாந்தக் கல்வி அமைப்பான அஹம் பிரம்மாஸ்மி டிரஸ்ட் நடத்திய ஶ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி உரைத்தொடரில் 2025 ஆகஸ்டு 15ம் நாள் இரவு ஜூம் செயலி வழியே ஜடாயு இந்த உரையை நிகழ்த்தினார்.