சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7

‘எல்லாம் ஏக பிரம்ம மயம்’ என்பதனை ‘சர்வாத்ம பாவனை ‘ வழிபாடு என்பர். பிரபஞ்சம் முழுதும் சிவச்சொருபமாகக் கண்டு வழிபடுதலை அட்டமூர்த்தி வழிபாடு என்பர். மண்ணையும் நீரையும் நெருப்பினையும் காற்றினையும் ஆகாயத்தையும் தெய்வமாகக் கண்டு வழிபடுதல் பாமர மக்களிடையேயும் உண்டு.
அனாத்மாவாகிய பிரபஞ்சம் தோற்றக் கேடுகளுடன் பல்வேறு வகைப்பட்டுக் காணப்பட்டாலும் அதனுள் முழுவதும் படர்ந்திருப்பது ஒரே ஆத்மா என்றுணர்வதுவே சர்வாத்தும பாவனை.. பொன்னால் ஆன அணிகள் பலவாக இருந்தாலும் மூலப்பொருள் பொன்னே, அதுபோலவாம் இதுவும்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 7

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6

இந்த நிலைகளை அனுபவிக்கும் போதெல்லாம் ‘நான்’ குழந்தையாக இருந்தேன், ‘நான்’கௌமாரன், ‘நான்’ வாலிபன். ‘நான் முதியவன்’, ‘நான்’ கோபத்துடன் இருக்கிறேன், ‘நான்’ அமைதியுடையேன், ‘நான்’ நோயுடையேன், ‘நான்’ வலியேன் என எல்லா அவத்தைகளிலும் ‘நான்(இவ்வாறு) இருக்கிறேன்’ எனும் உணர்வு, பூக்களை மாலையாகக் கட்டிய நார் போலத் தொடர்ந்து உள்ளதை அறியலாம். இதனால் ‘நான்’ வேறு; என் குணமாக அறியப்பட்ட குழந்தைப் பருவம் முதலியன, நனவு கனவு முதலியன, கோபம் மகிழ்ச்சி என்பனவெல்லாம் என் இயல்பல்ல, நான் எப்பொழுதும்.இருப்பதுதான் என்னியல்பு என அறிதல் வேண்டும்… குருநாதர் சுட்டு விரலாகிய ஆன்மாவை ஆவரணம் விக்ஷேபம் பாபகர்மம் எனும் மூன்று விரல்களிலிருந்து பிரித்துச் சிவப்பிரமம் எனும் கட்டைவிரலொடு இணைத்துச் சின்முத்திரை காட்டுகின்றார். சுட்டுவிரல் நுனியையும் கட்டை விரல் நுனியையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் காட்டுகின்றார்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 6

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5

சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்க மேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4

ஒரு குடம். அதில் ஐந்து தொளைகள் (ஓட்டை) உள்ளன. குடத்தின் நடுவில் ஒரு தீபம் உள்ளது. நள்ளிரவில் தீபத்தினொளி ஐந்து தொளைகளின் வாயிலாக, ஐந்து பிரகாசமான கதிர் வீச்சுக்களாக (light beams) வெளிப்படுகிறது.. குடம் நம் உடல். குடத்திலுள்ள தொளைகள் ஐம்பொறிகள். அதிலிருந்து வெளிப்படும் கதிரொளி ஐம்புலன்கள் அவையாவன: சத்த பரிச ருப ரச கந்தங்கள். இவை வாயிலாகவே உயிரானது உலக போகத்தைத் துய்க்கின்றது; அறிவைப் பெறுகின்றது.
இவ்வுடலை ‘மாயா யந்திர தநு விளக்கு” என்று சிவஞான போதம் கூறுகின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 4

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3

உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர்.. பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே… மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 3

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்… தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு… நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது? அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இதனை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் – முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர். இரண்டாவது சொப்பன நகர். அதாவது, சொப்பனத்தில் காணப்படும் நகர்… கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா? கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா? நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது உண்மை?.. இந்த சொப்பனப் பிரபஞ்சம் முன்னம் என்னுள் இருந்தது; அதற்கு என் அஞ்ஞான உறக்கம் ஆதாரமாக இருந்தது.; ஞான விழிப்பு நிலை பெற்று, அஞ்ஞான உறக்கம் நீங்கிய பின்னர் சொப்பனப் பிரபஞ்சம் பொய்யெனத் தேறினேன்; நனவு கனவு இரண்டனையும் அனுபவித்துக் கழிந்த நானே மெய் எனத் தெளிந்தேன்…

View More சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22

கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா மாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்… (அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் சூரியன் உதிப்பதும், மறைவதும் என்றில்லாது எப்போதும் பிரகாசித்துக்கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாய்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்னி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன…. உணர்பவன் பொருளை உணரவில்லை என்றால், உருவங்களும் நாதங்களும் எதற்கும் பயனில்லாது போகின்றன. இவ்வாறு உணர்பவனின் பிரம்ம நிலையில் அனைத்துமே அதன் தன்மைகளான சத்-சித்-ஆனந்த சொரூபங்களாகவே விளங்குகின்றன. அந்த நிலையில் காண்பவன்- காணப்படுவது- காட்சி என்று எதனையும் பிரித்து அறிய முடியாது எல்லாம் ஏக சொரூபமாகவே விளங்கும். காணும் தனது சொரூபமே காட்சியாகி நிற்பதை உணர்வதே அறிய வேண்டியவற்றுள் எல்லாம் உயர்வான பேரறிவாகும்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20

ஒரு நல்ல இளமையுடன் இருக்கும் பலசாலி மற்றும் அறிவாளி ஏகச் சக்கிராதிபதியாக இருக்கும்போது அனுபவிக்கும் ஆனந்தமே மனிதனின் ஆனந்தம் என்று வரையறுக்கப்படுகிறது. அதாவது மற்ற மனிதர்களின் ஆனந்தம் எதுவுமே ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அந்த மனிதனில் தொடங்கி பிரம்மா வரை சொல்லப்பட்டு, அந்த பிரம்மா அனுபவிப்பதே ஆத்மானந்தத்தின் ஒரு துளி என்றும், மற்றவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆனந்தம் கிடைத்தும், அவர்கள் எல்லோருமே உயர்வாய் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது….. நாமம், ரூபம் மட்டுமே உள்ளதால் இவ்வுலகப் பொருட்கள், செய்கைகள் எல்லாமே மாயை என்றாகின்றன. அவைகளும் அந்தப் பிரம்மத்தின் சந்நிதானத்தில்தான் இருக்கின்றன, நடக்கின்றன. அதைத்தான் நமது அவ்வப்போதைய ஆனந்த நிலை காட்டுகிறது. அப்படி எல்லாமே பிணைந்து இருப்பதை நாம் எளிதாகக் காண இயலாது. எப்படி பாலில் இருக்கும் நெய்யைக் காண முதலில் பாலைத் தயிராக்கி, அதில் நீர் கலந்து மோராக்கி, அதைக் கடைந்து, வெண்ணையைத் திரட்டி, பின்பு அதை உருக்கி நெய்யை அடைகிறோமோ, அதேபோல தொடரும் நம் ஆன்ம விசாரம் எனும் பெருமுயற்சியால் பிரம்மம் எதிலும் இருப்பதை உணரலாம்…..

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20