அண்மையில் மிகவும் பாதித்து மிகவும் மனத்தளர்ச்சியில் தள்ளிய விடயம் – குழந்தை ருத்ராவின் வீடியோ. அவள் என்றுமே நம் குடும்ப குழந்தைதான். அவளுக்கு நம் மீது எத்தனை கோபம் இருந்தாலும். எந்த மேடையில் ஏறி எத்தனை வசை மொழி பொழிந்தாலும் – அவள் என்றும் நம் வீட்டு குழந்தைதான். ஏனெனில் அவள் தந்தையும் அவள் சகோதரர்களும் அந்த குடும்பமும் செய்த தியாகம் அத்தகையது. அதன் ஒரு துளிகூட செய்யாத ஒருவனாக அவர்களைக் குறித்து எழுதக்கூட கைகூசுகிறது. அதனால்தான், அந்த குழந்தையின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் உள்ள அளப்பரிய அன்பாலும் மதிப்பினாலும் மட்டுமே, அவள் சொல்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
(இந்த வீடியோவில் பேசும் செல்வி. ருத்ரா மறைந்த இந்து பலிதானி தென்காசி குமார் பாண்டியன் அவர்களது சகோதரர் மகள். பலிதானம் பற்றிய விவரங்கள் இப்பதிவின் இறுதியில்).
இன்றைக்கு ஹெச்.ராஜா அவர்கள் தன்னைத்தானே இணைய மீம் பொருளாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் களத்தில் போராளியாக விளங்கியவர். மற்றவர்களை முன்னால் விட்டு பின்னால் நின்றவரில்லை. போலீஸ் தடியடியை வாங்கியவர்.
ஜிகாதி வெறியர்களால் பலிதானியானவர்கள் சாதி வித்தியாசமில்லாத இந்துக்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் எந்த சாதி? வெட்டு வாங்கி மரணம் வரை சென்று வாழ்க்கை முழுவதும் மரணத்தை விட மோசமான வலியையும் வேதனையையும் அனுபவித்த ராம.கோபாலன் எந்த சாதி? மதுரை தெருக்களில் பட்டபகலில் வெட்டப்பட்டு பலிதானியான பேராசிரியர் பரமசிவம் எந்த சாதி? தன் தள்ளாத வயதில் மண்டைக்காட்டில் இந்து உரிமையை நிலைநாட்ட கடற்கரையில் தள்ளப்பட்டு முகம் முழுவதும் மண் வீசி எறியப்பட்ட போதும் தொடர்ந்து போராடிய தாணுலிங்க நாடார் எந்த சாதி? வீர சிவா? வீர கணேஷ்?
நமக்கு தெரியாது. அவர்கள் அனைவரும் ஒரே சாதிதான். பாரத அன்னையையும் சனாதன தர்மத்தையும் நேசித்த சாதி. அதற்காக உயிரைக் கொடுத்த கொடுக்க துணிந்த அதற்காக அவமானங்களையும் வேதனைகளையும் உடல் காயங்களையும் அனுபவித்த சாதி.
குமார பாண்டியனும் அவர் சகோதரர்களும் அதே சாதிதான். ஒரே சாதி – இந்து சாதி.
பார்க்க: என்று தணியும் இந்து சுதந்திர தாகம்? – தமிழ்நாட்டின் இந்து பலிதானிகள்
பூணூலை அறுத்து வீசுங்கள் என்கிறார் ருத்ரா. அப்படி விரும்புகிறவர்கள் செய்யலாம். இல்லை என்றால் அனைத்து இந்துக்களும் பூணூல் தரிக்கலாம். எந்த இந்துவும் வேதபாடசாலையில் சேரலாம். எந்த இந்துவும் எந்த இந்து கோவிலிலும் பூசகர் ஆகலாம். இதையெல்லாம் நாம் செய்ய வேண்டிய விடயங்கள். இல்லை என்று சொல்லவே முடியாது. இந்த ஆதங்கம், வேதனை இயக்கத்திலேயே பலருக்கும் உண்டு. ருத்ரா சொன்ன இதே வார்த்தைகளைக் கூட கீதை சித்தராக விளங்கிய கேப்டன் எஸ்.பி.குட்டி சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் என்றும் எதிரிமேடை ஏறியதில்லை. அவர் அவமானங்களையும் புறந்தள்ளலையும் சந்தித்திருக்கிறார். இயக்கங்களிலிருந்து விலகி அவருண்டு அவர் கீதை வகுப்புகள் உண்டு, ஆன்மிக அறிவியக்கம் உண்டு என உருவாக்கி செயல்பட்டார். சாதியத்தையும் சாதியையும் கடுமையாக வெறுத்தார். கடிந்தார். ஆனால் ஸ்ரீ ராம ஜென்மபூமி நனவான போது அந்த தெருவிலேயே நின்று அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அவர் குடும்பமே கொலை வெறித்தாக்குதலை எதிர்கொண்டு நூலிழையில் காப்பாற்றப்பட்டது – அவர் இந்து ஒற்றுமைக்காக உழைத்ததால். ஆண்டுகளுக்கு பின்னர் -அதுவரை இந்து என்கிற வார்த்தையையே தவிர்த்து வந்த- பிரபலமான இந்து சாமியார் ஒருவர் அவரை அவமானப்படுத்தினார். அந்த சாமியாரை இந்து இயக்கங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. என்ற போதிலும் கேப்டன் குட்டி எதிரி மேடை ஏறவில்லை.
இங்கிருந்து போராடினார். நான் இந்து இயக்கங்களிலிருந்து முழுமையாகவும் கசப்புடனும் விலகிவிட்டேன். காரணம் இந்துத்துவம் தவறென்பதால் அல்ல. இந்துத்துவத்தை இங்குள்ள இந்து இயக்கங்கள் கசடும் வக்கிரமும் கொண்ட சாதியமாகவும் கீழ்மைக்காகவும் பயன்படுத்துவதால். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் எதிரி-மேடை ஏறப்போவதில்லை.
காரணம் என்ன? இது நம் குடும்பம். இந்த இயக்கங்களில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். ஆதார பிழைகள் இருக்கலாம். இருக்கின்றன. அவை இந்த இயக்கங்களை செல்லரித்துக் கொண்டும் செய்யப்பட்ட உயிர் தியாகங்களை பலிதானங்களை செல்லாக்காசாக்கிக் கொண்டும் இருக்கின்றன. இவையெல்லாம் உண்மைதான். கடுமையான நின்று சுடும் உண்மைகள். இன்றைக்கு இந்துத்துவம் பேசுகிற இணைய வாய்பேச்சு வீரர்கள் எல்லாம் -நான் உட்பட- நின்று பேசுவது குமாரபாண்டியன் போன்ற பலிதானிகளின் குருதியால் கட்டப்பட்ட மேடையில் நின்றுதான். அதில் நிற்க எங்கள் அனைவரை விட உரிமையும் தகுதியும் ருத்ராவுக்கு உண்டு.
இங்கு செய்யப்பட்ட பலிதானங்களுக்கு ஒரு பொருள் இருக்கிறது. இங்கிருக்கும் கசடுகளையும் குறைபாடுகளையும் ஆதார குற்றங்களையும் தாண்டி கூட ஒரு பொருள் இருக்கிறது.
இந்த புரிதலை ஒரு குழந்தையிடம் அதுவும் பதின்ம வயதில் இத்தனை கொடூரங்களைக் கண்ட அந்த வேதனையை அனுபவித்த குழந்தையிடம் எதிர்ப்பார்ப்பது மனிதத்தன்மையற்ற செயல்.
ருத்ராவின் உடையும் உணர்ச்சிகர குரல் அந்த அடிப்படை பொருளை முன்னிலைப்படுத்த நம் ஒவ்வொருவருக்கும் தரப்படும் அழைப்புக்குரல் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இயக்கங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை ருத்ரா ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும். உங்களுக்கு எங்கள் மீது ஆயிரமாயிரம் கோபங்கள் வருத்தங்கள் இருக்கலாம். அதற்கெல்லாம் தகுதியானவர்களாகவே நாங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் தந்தையும் அவரது சகோதரர்களும் ஒரு இந்து சமுதாயத்தை கனவு கண்டார்கள். அதற்காக அவர்கள் தம் உயிரை பலிதானமாக ஈந்தார்கள். அவர்கள் மீது விழுந்த வெட்டுக்கள் ஒன்றிரண்டல்ல. குழந்தை ருத்ரா இந்து விரோத மேடையில் நிற்பது -நிற்க வைக்கும் சூழலை ஏதோ ஒருவிதத்தில் நாம் உருவாக்கியுள்ளது – அதுதான் குமார பாண்டியன் -குமார பாண்டியன் சகோதரர்கள் மீது விழுந்த இறுதி வெட்டு. அந்த வெட்டுதான் மிக மிக கொடூரமான வெட்டு. அந்த வெட்டு ஒருவிதத்தில் ஒவ்வொரு இந்துவின் இதயத்திலும் விழுந்த ஆழமான மிக வேதனையான வெட்டு.
இந்து சமுதாயமும் இந்து இயக்கங்களும் ஒவ்வொரு இந்துவும் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.
(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

தென்காசி குமார் பாண்டியன் சகோதரர்கள் படுகொலைகள் பற்றி:
தென்காசி சொர்ண தேவருக்கு பத்து பிள்ளைகள். எட்டு ஆண்கள், இரண்டு பெண்கள். அதில் ஒரு மகன் குமார பாண்டியன் இந்து முன்னணி, பாஜகவை சார்ந்தவர்.
2006-ல் காசி விஸ்வநாதர் கோயில் இடத்தில் ஜமாத் கமிட்டி பள்ளி வாசல் கட்ட முயற்சி செய்கிறார்கள். இதை தென்காசி பாஜக கடுமையாக எதிர்க்கிறது. ஜமாத் கமிட்டி அனைவரையும் விலைக்கு வாங்கி விடுகிறார்கள், குமார பாண்டியனை தவிர.
குமார பாண்டியனுக்கு 25 லட்சம் மற்றும் பள்ளி வாசலில் வாடகை இல்லாமல் இரண்டு கடை கொடுக்கிறோம் என்று விலை பேசினார்கள். ஆனால் குமார பாண்டியன் ஒத்து கொள்ள வில்லை. இதனால் 17-12-2006 அன்று குமார பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்.
அதற்கு பின் கொலையாளிகள் மூன்று மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வருகிறார்கள். குமார பாண்டியனின் சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து கொலையாளிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களும் திருப்பி தாக்குகிறார்கள். மூன்று முஸ்லிம்கள் பலி. குமார பாண்டியன் தம்பிகள் மூன்று பேரும் பலி.
2006-ல் மு.கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி. குமார பாண்டியன் குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரையும் கைது செய்து உள்ளே வைத்தார். சொர்ண தேவர் குடும்பம் தென்காசியை விட்டு வேறு ஊருக்கு குடி பெயர்ந்தார்கள்.
இந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பாஜக ஆகிய அனைத்து இந்து இயக்கங்களும் குமார் பாண்டியன் குதும்பத்திற்கு பல உதவிகளை செய்தனர். அவரது நீண்டகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்த சொர்ணத் தேவர் அவர்களும் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
மேலும் விவரங்களுக்கு:
* இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை
* ஒரு குடும்பத்தையே கருவறுத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்!
* தென்காசி படுகொலை : போலீசாரின் கட்டுக்கதையும் உண்மையும்

குழந்தை ருத்ரா !
வளர்ந்த பெண்ணை ‘குழந்தை’ என்று குறிப்பிட காரணம் ?
‘அவள்’ என்று சொல்லக்காரணம் ?
நான் மதிக்காத பெண்ணை ‘அவள்’ என்றுதான் குறிப்பிடுவேன் என்றால் சரி.
ஆனால் குழந்தை ?
ஒருவேளை அறியாமல் பேசுபவர்கள் குழந்தைகள் என்றால் சரி.
அப்படியென்றால் ஓர் என்பது வயது ஆண் ‘அறியாமையில் ‘ பெறுகிறார் என்றால் குழந்தை எனலாமா ?
மேட்டிமைத்தனம் இது.
As this essay explains, all the male members of her family were deeply involved in Hindu religious matters of the town. A religious dispute with a Muslim group led to the murders of four men in her family: her father and 3 uncles. The involvement was not a one-day or a few-day affair but burning for long years, which means since her childhood, she had been witnessing a violent life and its baleful impact on the remaining family and her. She only saw the violence then as a child, now is feeling it as an adult. We must understand this fact.
Now it is all over. That is to say, no more dispute with any Muslim group and no more fear of getting killed. She has every hope to see hereafter that the family left in peace. However, according to her, BJP men are not allowing that. Every Aug 14 the day when her father was killed, someone from BJP leadership, like H. Raja or K. Annamalai, comes to her house and sits there. A despicable sight to her because of the reason cited above; to repeat, she does not want violent history to repeat.
Her other points will be later. Now, regarding the above, what is the argument of Aravindan Neelakantan placing in his post? Nothing except to say the family members sacrificed their lives to the religion. That is true. She did not deny it. What is Aravindan’s response to her anguish about why her family should again suffer? Why not leave them in peace? If you had done so, would she have climbed the public stage to make this speech that contained many other points? My answer is: If someone is not interested in the religious affairs, leave them. Never expect all people will be as passionate as you are in religious affairs.
Before going to other points in her speech, let me point out Aravindan Neelakantan’s anguish. He says, he made the speech from a platform that is created only for anti-Hindu and anti-Brahmin attacks. From this, we can understand that Aravindnan Neelakantan is bothered only about the nature of the PF. In other words, if she had made the speech from any other PF which is not known for such attacks, it would be perfectly okey for him. Wouldn’t it be so for you, Sir?
Her other points is about caste, poonool and responsibilities.
Responsiibilites. She says it is only families like her who have to sacrifice their lives for the preservation of sanatana dharma. Not the families of H Raja or Annamalai (she includes all). They are lviing happily and their children are waiting for a bright futures. Not a single injury on the bodies of such leaders. (Here Aravindan Neelakantan says H Raja is in the forefront of battle with anti Hindu forces in TN. I accept that but she does not say about being in the forefrong but about getting injuries and losing lives. Here Aravindan Neelakantan says, போலீஸ் தடியடியை வாங்கியவர். Police ‘detained’ him and other BJP top leaders and take them to a place (not PS) like Marriage hall till sunset and released them. Some days ago, he was kept in house arrest in Sivaganga. This is the way Police treat political leaders. He enjoys the kid glove treatment of a political leader. Do you say Aravindan Neelakantan, the treatment to a political leader by police is same to the treatment police gives to her family members or any ordinary workers of BJP or VHP? So, according to her, the leaders don’t get the pain. It was her family members who got it. It is a valid point but it is unavoidable. Police always are discriminatory. For the same hate speeches and direct attack speeches on police, an ordinary party workers would be dragged to PS and thrashed. It is difficult to deny her point. For fear of spamming now, I postpone her points regarding caste and poonool.