என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

சுதந்திர இந்தியாவில், மதச்சார்பின்மை என்ற பெயரிலும், மனித உரிமை என்ற வழியிலும், சிறுபான்மையின உரிமை என்ற போர்வையிலும், அன்னிய மதத்தவர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் பெருகி வருகின்றது. நிலங்கள் கையகப்படுத்துவதிலும், வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதிலும், வியாபர நிலையங்கள் விஸ்தரிப்பதிலும், தொழில் நிறுவனங்கள் பெருக்குவதிலும், தங்களின் ஜனத்தொகைக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், அதைவிடப் பல மடங்குகள் அதிகமாகச் சாதித்து வருகின்றார்கள். சுயநலம் மிக்க அரசியல் வாதிகளையும் ஆட்சியாளர்களையும் மிகச் சாதுர்யமாகப் பயன் படுத்தி, விரைவாக இந்த பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றார்கள்.

நாம் நமது பூமியில் தான் இருக்கின்றோமா, நாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்து விட்டோமா, அல்லது இன்னும் அடிமைப் பட்டுத்தான் அல்லலுறுகிறோமா என்றெல்லாம் நியாயமான சந்தேகம் வரும் அளவிற்கு காரியங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்ற நிலையில், அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நம்மில் விவரம் அறிந்தவர்கள் வெகு சிலரே என்பது தான் வேதனையான உண்மை. மற்றபடி பெரும்பான்மையான ஹிந்துக்கள் தங்கள் கால்களுக்கு அடியில் தங்களை அறியாமலேயே நம் பூமி நழுவிக் கொண்டிருக்கிறதைக் கிஞ்சித்தும் உணராமல், மதச்சார்பின்மை என்னும் மாயத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

தொடரும் போராட்டமும், உயிர்த் தியாகங்களும்:

rama-gopalan-hindu-munnaniசுதந்திரப் போராட்டத்தில் தங்கள் அனைத்தையும், உயிரையும் சேர்த்து, தியாகம் செய்த மஹாத்மாக்களைப் பற்றிப் பெருமிதம் கொள்கிறோம் நாம். சுதந்திரம் பெற்ற பின்னரும், இந்தத் தேசப் பணியில் உயிர் தியாகம் செய்தவர்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. எவ்வளவு வேதனையான உண்மை!! யாரை எதிர்த்துப் போராடிச் சுதந்திரம் பெற்றோமோ, அதே அன்னிய மதத்தவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட நம் சகோதரர்களிடமே நம் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! அந்த மதமாற்றம் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதும், அம்மதத்தவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டிருப்பதும், நம் மக்கள் மீளா உறக்கத்தில் இருப்பதும் எவ்வளவு வேதனை!

மதமாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சலினாலும், குடும்பங்கள் சிதறுண்டதனாலும் தற்கொலை செய்துகொண்டு சாகின்றவர்கள் ஆயிரக் கணக்கானோர் ஒரு புறம் என்றால், பயங்கரவாதத்தினால் கொலை செய்யப் பட்டுச் சாகின்றவர்கள் ஆயிரக் கணக்கானோர் மறு புறம் இருக்கின்றார்கள். இதனிடையே, நம் சொந்த மண்ணை மீட்பதிலும், நம் வழிப்பாட்டுத் தலங்களைக் காப்பதிலும், நம் சொந்த சகோதர சகோதரிகளைக் காப்பாற்றுவதிலும், உயிரைத் தியாகம் செய்திருக்கின்றவர்கள் பல நூறு பேர்கள் என்கிற உண்மையை நாம் அறிந்திருக்கின்றோமா என்று பார்த்தால், இல்லை என்பது தான் நிதர்சனம்.

அவ்வாறு நம் ஹிந்து சமூகத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களைப் பற்றிய ஒரு சிறிய பட்டியலைப் பார்ப்போம்:

30.08.1989: கோவையில் இந்துமுன்னணி செயலாளர் வீரகணேஷ் கொல்லப்பட்டார்.

05.09.1991: கோவை இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர் சிவகுமார் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.

15.04.1995: கோவை பா.ஜ.க.பிரமுகர் ராஜேந்திரன் கொல்லப்பட்டார்.

31.12.1995: இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் கோவை அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார்.

31.01.1997: கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் (20-01-1997 அன்று பொள்ளாச்சியில் ஜிகாத் கமிட்டி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் பழனிபாபா கொலையை அடுத்து), செல்வபுரம் என்னுமிடத்தில் ஆட்டோ டிரைவர் ரகுபதி கொல்லப்பட்டார்.

03.02.1997: கோவையில் மரக்கடை என்னுமிடத்தின் அருகே சென்று கொண்டிருப்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி (நெற்றியில் விபூதி-குங்குமம் வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக) கொல்லப்பட்டார்.

01.09.1997: மகேந்திரன், அருணாசலம், ரஜினி ரமேஷ் ஆகியோர் கோவையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

02.09.1997: திரிக்மரா ராம் (ஐந்து முனை), மூர்த்தி (போத்தனூர்), முருகன் (ஆசாத் நகர்),  கண்ணன் ஆகியோர்  வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

1997: முஸ்லிம் பயங்கரவாதிகளை எதிர்த்த காரணத்துக்காக, உக்கடம் பகுதியில் கோட்டை  அமீர் என்ற பெரியவர் கொல்லப்பட்டார். (இவரது பெயரில் தி.மு.க.அரசு, மதநல்லிணக்க விருது வழங்கி வருகிறது.)

1997: கோவை சிறையில் ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.

29.11.1997: போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் உக்கடம் என்னுமிடத்தில் நடுரோட்டில், முஸ்லிம் இளைஞர்களின் தவறை சட்டப்படித் தட்டிக் கேட்டதற்காக, அவர்களால் கொல்லப்பட்டார்.

28.03.2002: ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் முருகேசன், கோவையின் புறநகரான குனியமுத்தூரில், அவரது வீட்டருகிலேயே கொல்லப்பட்டார்.

இப்பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு.

1982:  கோவை, தேர்நிலைத்திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை அடுத்து, அதில் பங்கேற்ற ஜனா.கிருஷ்ணமுர்த்தி, நாராயண ராவ், திருக்கோவிலூர் சுந்தரம், டி.ஆர்.கோபாலன் ஆகியோர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்  கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் திருக்கோவிலூர் சுந்தரம் பிழைப்பது அரும்செயலாகிவிட்டது.

18.07.1984:  மதுரையில், இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளராக இருந்த திரு.ராம.கோபாலன்ஜி அவர்கள் அல் உம்மா தலைவன் பாஷாவால் தலையில்  வெட்டப்பட்டார்.  இதில் தெய்வாதீனமாக கோபால்ஜி உயிர் தப்பினார்.

1988: கோவை- தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் நாராயணன், சக்திதாசன், சாமிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிர் தப்பினர்.

31.12.1995: இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில்  தாக்கப்பட்டார். கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.

மேலும், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மறியல் செய்தனர். தொடர் கலவரத்தில், இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

பின்னர் உச்சக்கட்டமாக, 14.02.1998 அன்று,மாபெரும் சதிச் செயலாக பா.ஜ.க. தலைவர் அத்வானியைக் குறிவைத்து  கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதில் 46 அப்பாவி இந்துக்கள் உட்பட 60 பேர் பலியானார்கள்.

தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களிலும் பல இந்துக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவற்றுள் ஒரு சில:

மதுரை பேராசிரியர் பரமசிவம்
மதுரை பேராசிரியர் பரமசிவம்

28.03.1998: அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில துணைத் தலைவர், மதுரைக் கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம் கொல்லப்பட்டார்.

02.02.1999: திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர்.பி.வி.ஸ்ரீதர் கொல்லப்பட்டார்.

21.06.2005: ஹிந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.காளிதாஸ் கொல்லப்பட்டார்.

17.12.2006: இந்து முன்னணி பொறுப்பாளர் குமார பாண்டியன் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டார்.

14.08.2007: குமார பாண்டியனின் சகோதரர்கள் மூவர் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற பல மாவட்டங்களிலும் பலர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். போராட்டங்களும் தொடர்கின்றன; தியாகங்களும் தொடர்கின்றன.

தென்காசி குமார் பாண்டியன் சகோதரர்கள் படுகொலைகள் பற்றி:

இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை

ஒரு குடும்பத்தையே கருவறுத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்!

தென்காசி படுகொலை : போலீசாரின் கட்டுக்கதையும் உண்மையும்

தென்காசி படுகொலைகள் : முஸ்லிம்கள் நடத்தும் சமாதான நாடகத்தின் பின்னணி

சோழவரமா…சோக புரமா?

அண்மையில் 27-02-10) அன்று சென்னையை அடுத்து உள்ள சோழவரம் அருகே பூதூர் கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னனி பொறுப்பாளர் திரு.மூர்த்தி (38) அவர்கள் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பட்டப்பகல் பத்து மணியளவில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  இது பற்றி ஏற்கனவே தமிழ்ஹிந்து தளத்தில் வந்த செய்தி இங்கே.

அவருடைய கொலைக்கான பின்னனி இது தான்:

சென்னை சோழவரம் ஞாயிறு கிராமத்தின் அருகில் உள்ள பூதூரில் சர்வேஸ்வர பாபா என்னும் சித்த மஹாபுருஷர் வந்து தங்கி, வாழ்ந்து சமாதி அடைந்தார். அந்த மகானுக்கு அருந்தொண்டாற்றியவர் ஸ்ரீமதி கஜலட்சுமி அம்மாள் (கணவர் திரு.கோவிந்தசாமி நாயுடு).மகான் மறைவிற்குப் பின்னர், அவரது இடத்தில் சமாதி அமைத்து, சர்வேஸ்வரா குரு வழிபாட்டிற்காகத் தங்களுடைய சொத்தை அளித்து அவர் பெயரில் சர்வேஸ்வரா அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்கள் இந்தத் தம்பதியினர். இந்தத் தம்பதியினரின் மகன் திரு.சேமாத்திரி என்பவர் அறக்கட்டளை ஏற்பாட்டில் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், தற்போது டிரஸ்டில் இருந்து நடத்திக்கொண்டும் வருகிறார். சர்வேஸ்வர பாபா ஒரு ஹிந்துத் துறவி என்பது மட்டுமல்லாமல், அவர் ”சர்வேஸ்வரா” எனும் மஹாமந்திரத்தையே தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்து வந்தார் என்பதும் உண்மையே.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம்கள் சர்வேஸ்வரா பாபாவை, ஷாஹின்ஷா பாபா என்றும் அவர் ஒரு முஸ்லிம் என்றும் ஒரு பொய்க்கதையை உருவாக்கி அந்த ஆசிரமத்தையும், அதைச் சுற்றியுள்ள நிலத்தையும் அபகரிக்க முயற்ச்சி செய்தனர். இவ்வழக்கு காவல் துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சென்றது. சர்வேஸ்வரா பாப சமாதியின் அறங்காவலர்களுள் ஒருவரான திரு.பொன்னன் அவர்கள் தான் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தவர். அந்த மகான் இந்து என்பதும் அவருக்குத் தொண்டற்றியவர்கள் இந்து தம்பதி என்பதும் இந்துக்கள் தான் அங்குச் சமாதி அமைத்து வழிபட்டு வருகின்றவர்கள் என்பதும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது முஸ்லிம் தரப்பு. உயர்நீதி மன்றம் மதநல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு இடைக்காலத் தீர்ப்பாக முஸ்லிம்களும் அங்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தான், இந்து முன்னனி ஒன்றியச் செயலாளராகவும், சர்வேஸ்வர பாபா வழிபாட்டுக்குழு அங்கத்தினராகவும் இருந்த திரு மூர்த்தி அவர்கள் 27-02-10 அன்று காலை சுமார் 10 மனி அளவில் பாபா கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்துவிட்டு வெளியில் வந்த போது முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடுமையாகத் தாக்கி கழுத்தையறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர், தலைவர் திரு.ராமகோபாலன் அவர்கள் பினவருமாறு கூறியுள்ளார்கள்:

“சோழவரம் பகுதியில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம் மதவாத பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வந்துள்ளதாகவும், பெண்களைக் கடத்தி வந்து மதமாற்றம் செய்வதாகவும் தகவல்கள் வந்தன. இது குறித்து காவல் துறைக்கும் அவ்வப்போது தகவல் கொடுக்கப்பட்டு வந்தது. மதுரை மேலப்பாளையம், திருநெல்வேலி, போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து தங்கி குற்றச் செயல் புரிவதாகத் தெரியவந்தது. திரு.மூர்த்தி அவர்கள் கொலையாவதற்குச் சில தினங்கள் முன்பு, தனது சகோதரியிடம், முஸ்லிம் பயங்கரவாதிகளால் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும், தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைக்குக் காரணம் முஸ்லிம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி தான். முஸ்லிம் பயங்கரவாதிகளை ஊக்கப்படுத்தியும், அவர்கள் குற்றச்செயல்களுக்குப் பக்கபலமாகவும் இருப்பவர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் யாசிம் அலி, சென்னை ஆடுதொட்டி ஹெச்.ஹாரூண், தென்காசி எம்.பி.ஜே.எம்.ஹாரூண் போன்றவர்கள் என்பது அப்பகுதி மக்களின் பலத்த சந்தேகம்.

… தமிழக முதல்வர் உடன் தலையிட்டு இந்தக் கொலைக்குக் காரணமானவர்களையும் பின்புலத்தில் செயல்படுபவர்களையும் கைது செய்து தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்து பொது அமைதி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திரு.மூர்த்தி அவர்கள் குடும்பத்திற்குத் தக்க நிவாரணம் வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறோம்.”

திரு.ராமகோபாலன் அவர்களின் அறிக்கையைப் படிக்கும்போது, தங்களுக்குச் சொந்தமான 64 செண்ட் நிலத்தில் உள்ள தங்கள் ஆன்மீக குருவின் சமாதியைக் காத்துக்கொள்ள இந்துக்கள் உயிர் தியாகம் உட்பட எவ்வளவு பிரயாசைப் படவேண்டியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

திண்டுக்கலில் திணரும் இந்துக்கள்:

ஒருபக்கம் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் மற்றொரு பக்கம் கிறுத்துவ பயங்கரவாதம் பயமுறுத்துகிறது.

ஏற்கனவே கன்யாகுமரி மாவட்டத்தில் கிறுத்துவ மத வெறியர்களால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில், இந்துக்கள் கோவில்களில் வழிபாடு செய்வதும், ஆலய உற்சவங்களில் மூர்த்தி ஊர்வலங்கள் நடத்துவதும் இயலாத நிலைக்கு ஹிந்துக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிராமக்கோவில்கள் இடிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது கிறுத்துவ மதவெறியும் தமிழகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த இரு கொடுமையான சம்பவங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கோம்புப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள மெய்க்கோவில்பட்டி என்கிற கிராமத்தில், ஜனவரி 7, 2010 அன்று இரவு சுமார் 8 மணி அளவில் தமிழ் சமுதாயமே வெட்கப்பட்டுத் தலைகுனியும் சமூக அநீதி நடந்தேறியது. பொங்கல் பண்டிகைக்காக வீட்டில் வெள்ளையடிக்க, சுண்ணாம்பு வாங்கச் சென்றார் தலித் வகுப்பைச் சேர்ந்த இந்து இளைஞர் சடையாண்டி. அவர் செருப்புப் போட்டு கிறுத்துவ ஆதிக்க ஜாதியினர் தெரு வழியே நடந்து சென்றார் என்கிற ஒரே காரணத்திற்காக, அவரை மிரட்டியபடியே ஆரோக்கியசாமி என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் சடையாண்டியைச் சூழ்ந்து கொண்டனர்.

செருப்பு போட்டல் என்ன தப்பு என்று கேட்ட சடையாண்டியின் ஜாதிப் பெயரை இழிவாகச் சொல்லி, தகாத வார்த்தைகளால் வசைபாடி, அவரைக் கடுமையாகத் தாக்க, சடையாண்டி நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த வெறிக்கும்பல் சடையாண்டியின் செருப்பாலேயே அவரை அடித்து, ஒரு கொம்பில் மலத்தை எடுத்து அவர் வாயில் திணித்தது. உயிருக்கு பயந்து ஊருக்கு வெளியே ஓடி, ஒரு ஓடையின் அருகே மயங்கி விழுந்தார்.

ஓடையின் அருகில் முனகல் சத்தத்தைக் கேட்ட சிலர் அரசாங்கத்தின் அவசர ஆம்புலன்ஸ் ஊர்திக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் ஒன்பதரை மணி அளவில் சடையாண்டி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்பொது சொந்தக் கிராமத்திலேயே சடையாண்டிக்குப் பாதுகாப்பற்றச் சூழல் நிலவுவதால், அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப் பட்டுள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த மற்றொரு சம்பவம் இந்துக் கோயில் நில உரிமைக்காகப் போராடிய ஏழை விவசாயி ஆண்டி அவர்கள் படுகொலை செய்யப் பட்டது. தமிழ்ஹிந்து தளத்தில் இதுபற்றி வந்த விரிவான ரிப்போர்ட் இங்கே.

குமார் பாண்டியன் குடும்பத்தில் அனாதைகளாகி நிற்கும் குழந்தைகள்
குமார் பாண்டியன் குடும்பத்தில் அனாதைகளாகி நிற்கும் குழந்தைகள்

கிறுத்துவ மிஷனரிகளும், சர்ச்சுகளும் செய்யும் மதமாற்றங்களால் பல இந்துக் குடும்பங்கள் சிதைந்து போயிருக்கின்றன. கிறுத்துவ பள்ளிகளில் பயிலும் பல மாணவ மாணவிகள் மதமாற்றச் செயல்பாடுகளால் மனவேதனைக்கும், மன அழுத்தத்திற்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகித் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கொலைகள் கூட தற்கொலைகளாக மாற்றப்பட்டு மூடி மறைக்கப் படுகின்றன. ஓமலூர் கிறுத்துவ கான்வெண்டில் கிணற்றில் இறந்து கிடந்த சுகன்யா என்ற மாணவியின் கொலை மறைக்கப்பட்டது இவ்வாறு தான்.

சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களைப் பிச்சை எடுக்கும் வெட்கம் கெட்ட அரசியல் கட்சிகள் உண்மைகள் தெரிந்திருந்தும் அவை மறைக்கப்படுவதற்கும், வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்வதற்கும் துணை போகின்றன. இம்மாதிரியான சூழலில், ஹிந்துக்கள் தங்கள் சொந்த பூமியில் இரண்டாம் தரக் குடிமக்களாக மட்டுமே வாழ்வதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேசத்தின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களுக்குச் சரியான அங்கீகாரம் கொடுக்கப் படவில்லை என்பது உறுதியாகிறது.

அரசியல் அனாதைகளாக இந்துக்கள்

நம் நாடு விடுதலை ஆன பிறகு, விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் ஒன்று கூடி அரசியல் சாஸன நிர்ணய சபையிலே பல நாட்கள் விவாதித்து, நம் நாட்டு மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கியது தான் அரசியல் சாஸனம் அல்லது அரசியல் அமைப்புச் சட்டம்.  மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று நம் அரசியல் சாஸனத்தின் பூர்வாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் உண்மையான அர்த்தம், பெரும்பான்மை-சிறுபான்மை போன்ற பாகுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்தியர் என்கிற கண்ணோட்டத்தில் அரசாங்கமும் பாராளுமன்றமும் மக்களை அணுக வேண்டும் என்பது தான். அதற்காகத்தான் பொதுச் சிவில் சட்டத்தையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அரசியல் சாஸனம் கூறுகின்றது.

ஆனால் அரசியல் சாஸனத்தில் உள்ள, அடிப்படை உரிமைகள் (Fundamental Rights), சட்டத்தின் முன் சமத்துவம் (Equality before Law), பாகுபாடுகளைத் தவிர்த்தல் (Prohibition of Discrimination), மத சுதந்திரம், கலாசார மற்றும் கல்வி உரிமைகள் (Freedom of Religion and Cultural and Educational Rights) போன்ற எண் 14-லிருந்து எண்-30 வரையிலான க்ஷரத்துகள் இந்த நாட்டின் பெரும்பான்மையினருக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு சலுகைகள் கூடியதாகவும் இருக்கின்றன. மேற்கண்ட ஷரத்துகளில் எந்தத்திருத்தமும் செய்யப்படாமலும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, மக்கள் நலத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், அரசியல் சாஸனத்தில் ஏற்படுத்திய மற்ற திருத்தங்கள், இன்று நாட்டை மிகவும் பாதித்துக் கொண்டிருக்கின்றன.

கேள்விகள் இங்கே… விடைகள் எங்கே?

bjp-help-to-kumar-pandiyan-familyஇந்நிலையில் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன? அக்குடும்பங்களுக்கு இந்து இயக்கங்களால் எந்த அளவிற்கு உதவ முடிந்துள்ளது? அவ்வாறு தொடர்ந்து உதவக்கூடிய அளவிற்கு அவ்வியக்கங்கள் நிதிப்பற்றாக்குறை இன்றி இருக்கின்றனவா? இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் உயிர் தியாகங்களுக்குப் பிறகும் ஏன் ஹிந்து சமூகம் ஒன்று படாமல், ஒரு உணர்வுமின்றி, உறங்கிக் கொண்டிருக்கிறது? உறங்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய சமுதாயத் தலைவர்களும், ஆன்மீகக் குருமார்களும் மௌனமாக இருத்தல் எதனால்? அரசியல் சாஸனத்தில் அனைவருக்கும் சமமான அந்தஸ்தும், சமத்துவமும், பொதுச் சிவில் சட்டமும், அடிப்படை உரிமைகளான மதச்சுதந்திரம், கலாசார மற்றும் கல்வி உரிமைகளும் அளிக்கும்படியான மாற்றங்கள் கொண்டு வரப்படுமா? பெரும்பான்மை ஹிந்து சமுதாயம் பரிபூரண விடுதலை பெறுமா?

என்று தணியும் ஹிந்து சுதந்திர தாகம்?

14 Replies to “என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?”

 1. இந்த காங்கிரஸ் கட்சியையும் காந்தி கொள்கைகளையும் வேரறுத்து உண்மையான தேச தந்தையாக வீர சாவர்க்கரை அறிவித்து ஒரு தீவிரமான ஹிந்து கட்சியை ஆட்சி கட்டிலின் ஏற்றினால் மட்டுமே ஹிந்துக்களுக்கு விடிவு…
  அகண்ட பாரதம் வென்றே தீர வேண்டும்

  வாழிய பாரத அன்னை

 2. Hi all,

  We are always speaking the fact and i hope our action is less. If i say our action is less, immediately some body will ask me to come to the field work. I did not mean that. An action which cannot be done by a huge group can be acheived by media.

  Recently Vishwa Hindu Parishad has started a web tv. That option was a good effort, but the effort are wasted in a useless way. I am the person whose job is to spend the entire day with computer, but even i have not visited that web tv for the past 3 months. In these days, every body wants everything should come to their desk. When we are in a need to increase the hindu awareness, our approach should be crystal clear and should be easily accessable. Instead of starting a WEB tv they should have started a satelite channel through which they can reach the common people to their bedroom. Then rest of awareness can be attained by the quality of the program we telecast.

  If fund is the main reason for not starting a channel, why can’t VHP, RSS, Hindu Munnani can combine and start a channel in Tamilnadu. The same step should be followed in all states. Though the other releigion’s evil practice has to be blamed, but blaming alone will not give us the results. We should start following the same marketing technique for a right cause. Reading such kind of articles is nowadays became a frustrating one, that we are been made only as an impotent and there is no solution for this.

  First VHP, Hindu Munnani, RSS should try to unite all hindus in one line. I mean right from Brahmins to Dalits under one umbrella with the sign of Hindu. There are even some hindus either Brahmin or Non Brahmin who literally hates Dalits. This can be corrected by RSS, VHP only. let us frame a 5 year plan as what government do. This plan should be applicable to all major Sangh working in Tamilnadu. They shall start a campaign to change the mind of the Hindus in Tamilnadu against caste differentiation. Let this be hugely marketed in channels. Let all dalits in other religion shall realize that Hinduism is the only religion which can give equality to all people.

  JAIHIND

  Siva

 3. // அரசியல் சாஸனத்தில் அனைவருக்கும் சமமான அந்தஸ்தும், சமத்துவமும், பொதுச் சிவில் சட்டமும், அடிப்படை உரிமைகளான மதச்சுதந்திரம், கலாசார மற்றும் கல்வி உரிமைகளும் அளிக்கும்படியான மாற்றங்கள் கொண்டு வரப்படுமா? //
  பக்கத்து வீட்டில் ஒரு பகத் சிங்க் பிறக்க வேண்டும்
  தூக்கில் தொங்க வேண்டும்
  எதிர்த்த வீட்டில் ஒரு காந்தி பிறக்க வேண்டும்
  உண்ணா விரதம் இருநது சாக வேண்டும்

  நாட்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்

  நான் வோட்டுக்கு பணம் வங்கி கொண்டு இருப்பேன்

 4. netru (march 20) sun tv flash news il. Kullampaalyam graamathil veedu veedaaga sendru kristuva matha bodhagargal kudisaikkul nuzhainthu matha maatra prachaaram seithu kondirukkaiyil. intha kedu ketta seialai kaana sagikkaatha makkal avargalai sirai pidithu adaithu vaikka, samaathanathirku police vanthu avargalai vidivithu irukkirathu. kullampaalayam makkalukku oru JAI, avargalin veeracheyalukku oru JAI. idhanai entha mediavum idu varai veli idavillai. suntv il flash newsodu ninrathu. athai patri vaai thirakkavillai. tamilhindu thalam idhai patri oru siriya seithiyaavadu veli ida vendum.
  baaratha prathamar.. muslimgalukke munn urimai baarathtthil endru koovugiraar. periyaardaasan netru varai inthukkalaium,inthukkalin thonmaiaana kalaachaaram,kadavulargal aagiyavatrai miga asingamaga pesi thirinthu kondu irunthaar.vekkam ketta thanamaaga aanmai enbathe illamal vayathaanathaal kuzhambia arivudan, inru abdhullah vaaga matham maari photo pottu padam kaatugiraar. ivargalaal nam naadum,naatu makkalum anniya mathathin peraal ooduruvum ayudhamatra theeviravaatha nasakkarargalai unaravum,yosikkavum moolai illayo??
  innum ul othukeedu, athukku ullra innum oru othukeedunnu poikitte irukkum. ithula kevalam ennana P.Chidambaram aagatum, Pranab Mukerjee aagattum,Pongaloor pazhanichaami aagattum, Thangkabaalu aagattum ellarum Perumaal kovilukkum, Peria udaiyaar Kovilukkum durga mandhirukkum, thavaraama poojai punaskaaramnu seiuraanga. aana vote banknu varampothu muslim madhaani valadhu kaalum, christuva headley idadhu kaium kannula thottu kumbittu avanga podura pichaikkum, kerala bayangaravaadha gumbalukkum bayandhukittu AntonioMaino,Raul ivanga pinnadi thotho kutti maari oduraanga.

 5. ivanga arasiyalukkaaga entha keezhtharamaana velaium seivaanga. Quattrochia kapaathuvaanga, madhaani kaala pudichi viduvaanga. sikhia guru thalaia aruthanga antha kaalthula muhamadhiargal. aana inru avargalin pinnaal en ippadi odugirar namma singh is kingu?. pudhu rail vandi vitta vaazhamaramum katta koodathu, mavilai thoranam koodathu, sandhanam kooda vekka koodathu. enga theriuma… pakisthano,baluchisthano kediathu. namma sontha thaaimannu baaratha thaaithirunaattula than. Maaaaaanbumigu Railway manthiri Ahmadu siroda uttharavu. sirupaanmai, ulothukeedu, votebank ivatraal nammai naame tholaithu kondu irukkirom. samarasa pechum, samanilai vaazhvum, emmadamum sammadam ellam Hindukkalukku mattume. ithil innum peria asingam oru manilathukkum innoru maanilathukkum matham,mozhi aagiyavatraal mothal,sandai,pirivinai aagiyavatrai erpaduthuthal. kerala paathirigal angu irukkum conventil thodangum mudhal paadam, thamizhargal namakku edhirigal. avargalai ekkalathilum serka vendam enbathe. ithu angu thodangi nagercoilil collegil iru tharappu (tamizh-malayali) kambu,arivaal,hockeymattai,irumbu kambi sandiayil vanthu mudigirathu. Orkut,Facebook ponra inaithalathil tamilnadu,Indiya,kerala muslims agia community page galil padu kaara saaramaaga Hindi,Tamil,Malayala mozhi manilathinar oruvarukku oruvar asingamaagavum,tharakuraivaagavum thitti kolginranar. mattamaana sinthanai,karuthu agiyavai ingu thodangi ellavatrilum kaata padugirathu. “Onru pattal undu vaazhve, yaadhum oore yaavarum kelir, indhiyar enbathil perumitham kolvom,inainthe innum pala saadhanai purivom” ithu ellam paada pusthakathulaie vazhakku ozhinchu poga aramichachu. “gangai nathipurathu gotumaipandam…. barathi paatu” enga irukku innikku 4th class pada pusthakathula?? konjam konjamaaga abrahamiya mathangalin kaaladiyil meendum adimaigalaaga maarividumo nam baaratha naadu??

 6. Hi All,
  I was a strong follower,defender and saver of our religion but I got scared to the Hindus(aprox 100 000 people(childrens and women) in Sri lanka when they were butcherd by the Sinhalese force.
  When the atrocities was carried out against them the Hindu organisations in INDIA(Bharat) did not do enough to fight for the tamil hindus of sri lanka. any hindu group took a protest march for saving the Innocent Tamil Hindus being killed??
  What was Praveen Thogadia doing, may be he thought they are tamils not Hindus will he be fighting for the Hindus cause I doubt it.

  So the hindus all over the world let us fight for the fellow Hindus in srilanka first then we will do tthe rest. I would like to recall that srilanka would not have won the war against the LTTE if INDIA led by congress has stoped helping the srilankan government.

  It was a missed oppurtunity by the BJP in last elections in not uniting all the Hindus in the country in the name of srilankan HINDUS thus Congress did not get much opposition from BJP.
  it is not late once again all the Hindus allover the world should support the HINDUS in srilanka.
  JAI HIND
  Akandra Bharat amar rahae..
  Hindu Chatriyan

  (edited and published)

 7. Why are you seeking Praveen Togadia or Nithin Gadkari? this is the question first arise when you post it or tell it to someone. But they will move with the comment/question only. But for today we must need a strong support of these kind of big hands. Better mailing to BJP,SriRamSena,ShivSena,RSS can do something in case of Srilankan Tamils and Hindus there.

 8. நண்பர் ஹரனுக்கு நன்றி.
  இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடூர முகத்தை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள். கோவை பட்டியல் பலர் அறியாதது. தமிழகம் முழுவதும் இஸ்லாமிய, கிறிஸ்தவ வெறியர்களாலும், அரசாலும் (துப்பாக்கிசூடு) கொல்லப்பட்ட ஹிந்து இயக்கத்தினர் குறித்த தகவல்கள் திரட்டப்படுவது அவசியம். நாகர்கோவில் குமார் (1982 – மண்டைக்காடு) துவங்கி சோழவரம் மூர்த்தி (2010௦ பிப்ரவரி) வரை நூற்றுக்கணக்கான செயல்வீரர்கள் பலியாகி உள்ளனர். தியாகியரின் படங்கள், அவர்களது குடும்பம் தற்போதுள்ள நிலை, அந்த வழக்குகளின் நிலை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். தமிழ் ஹிந்து இதை செய்ய வேண்டும்.
  -சேக்கிழான்.

 9. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. குற்றவாளிகள் முஸ்லிம்களா ஹிந்துக்களா என்று அரசியல் தலைமை யோசிக்கும் நிலை மிக கேவலமானது.

  // ஆனால் அரசியல் சாஸனத்தில் உள்ள, அடிப்படை உரிமைகள் (Fundamental Rights), சட்டத்தின் முன் சமத்துவம் (Equality before Law), பாகுபாடுகளைத் தவிர்த்தல் (Prohibition of Discrimination), மத சுதந்திரம், கலாசார மற்றும் கல்வி உரிமைகள் (Freedom of Religion and Cultural and Educational Rights) போன்ற எண் 14-லிருந்து எண்-30 வரையிலான க்ஷரத்துகள் இந்த நாட்டின் பெரும்பான்மையினருக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு சலுகைகள் கூடியதாகவும் இருக்கின்றன. //
  இவற்றைப் பற்றி விவரமாக எழுதுங்களேன்! ஆங்கிலப் பேரை மட்டும் வைத்துப் பார்த்தால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. (All of should be equal before law, nobody should be discriminated on the basis of religion, gender, caste etc., and we should all have freedom of religion.) என்ன பிரச்சினை என்று உங்களைப் போன்றவர்கள் சொன்னால்தான் உண்டு.

 10. we have to include the RSS swayam sevaks killed in the Chennai RSS office bomb blast ,Hindu Munnani activists like Bible Shanmugam killed in the HM office by muslim terrorists in the list as also scores of others.
  A complete list of those Hindu activists who have been killed by Islamic and Christian terrorists has be published with their photos.
  An effort should be made to meet the members of their families,give publicity their ordeals and collect funds for them.
  R.Sridharan

 11. என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார், ‘இசுலாமியர்களின் மக்கள் தொகை ஐந்து சதவிகிதம் வரை இருக்கும்போது அவர்கள் ரொம்ப பவ்யமா இருப்பது போல நடிப்பார்கள். பத்து சதவிகிதம் ஆனவுடன் கெஞ்சுவார்கள். இருபது சதவிகிதம் ஆனவுடன் உரிமை கோருவார்கள். முப்பதில் முரண்டு செய்வார்கள். நாற்பதில் ஆக்கிரமிப்பார்கள். ஐம்பதில் மற்றவர்களை அழிக்கத்தொடங்குவார்கள். ஆனால் ஒரே ஆறுதலான விஷயம், இவர்கள் பெரும்பான்மை ஆனவுடன் தங்கள் உட்பிரிவிலேயே சண்டையிட்டு மாண்டு போவார்கள். ஒரு மனிதத்தன்மையற்ற ஒரு கூட்டம் என்றால் மிகையாகாது’, என்பார். உங்கள் கட்டுரையை படித்தால் நண்பர் கூறுவது முற்றிலும் உண்மை என்றே படுகிறது.

  [Edited and published]

 12. நண்பர்களே நம்புங்கப்பா…. வேதாளங்கள் இங்கே அருளுரை படிகிறது…
  சடையாண்டி-கு நடந்த கொடுமையை கண்டிக்கிறோம் .ஆனால் இது ஹிந்துக்களுடைய முந்தைய செயல்கள்தானே அரசாங்க சட்டங்களுக்கு பயந்து ஹிந்துக்கள் மூடிகிட்டு இருக்காங்க ஆரோக்ய சாமி ஆத்திரப் pattutaan.

 13. Vote is power ful weapon .vote vote vote

  chirstians and muslims voted in based upon religion. But hindus eventhough majoirty they voted for caste or party.
  IF hindu singlely voted for reglion, then think what will happend.
  Donot go for Mutton periiyani offered by politican or church and mosques. I never seen any muslims fallen in street by drunkard. only hindus and some christians fallen on street. Muslims and chirstains poorly rated hindus and thought if we give money they easily exploited.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *