கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்

coimbatore blastsபெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள். 11 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பினால் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன், எம் சமுதாயத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் அரசியல் துரோகங்களையும் நினைவு கூர்கிறோம். (படம் – நன்றி: பி.பி.ஸி)

அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் நேற்று ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் அறிவிக்கின்றன. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் அனுசரித்துப் பல்லாயிரக் கணக்கானோர் ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபடுவதைக் காண்கிறோம.

மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதித்ததாக இதுவரை நாம் பார்க்கவில்லை. மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.

கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பும் அதில் பலர் பலியானதும் நம் மக்களில் பலருக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில் அவர்கள்தான் அதே நாளில் ‘காதலர் தினத்தைக்’ கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறார்களே!

ஓட்டு-வங்கி அரசியலை அழித்து அனைவரையும் சமமாக நடத்தும் உண்மையான ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கவும் பயங்கரவாதக் கூட்டங்களை உருவாக்கும் பாசிச மார்க்கங்கள் அழிந்து மனிதநேயம் உதயமாகவும் தர்மம் தழைத்தோங்கவும் எங்கும் நிறைந்த இறையருளை வேண்டுவோம். அதற்காக உழைப்போம் அதுவே உயிர்நீத்த சகோதரர்களுக்கு நாம் செய்யும் சிரத்தாஞ்சலி.

6 Replies to “கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்”

  1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை ஒவ்வொருவரும் உணரவேன்டும். இல்லையெனில் அவரவர் அதற்கான விலையை இன்றில்லையெனினும் நாளை கொடுத்தே தீரவேன்டும்.

    எத்தனை முறை குண்டுவைத்து நடுரோட்டில் உடல் சிதறி இறந்தாலும் இன்னும் நமது எதிரி யார் எனத்தெரியவில்லை இந்துக்களுக்கு. அதுவரை அவரக்ள் குண்டுவைக்க நாம் மரிக்கவேண்டியது நமது தலையெழுத்தே… காதலர் தினத்திற்க்கு எஇர்ப்பு தெரிவிக்கப் புறப்பட்ட நமது நன்பர்கள் இறந்தவர்களுக்கு அஞலியாவது தெரிவித்திருக்கலாம்.

  2. பா.ஜ.க. வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைக்கக் கோவை குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அனுதாப/ஆத்திர அலை ஒரு முக்கிய காரணம். ஆனால், சுமார் ஏழு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும், குற்றவாளிகளைத் தண்டிக்க பா.ஜ.க. எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது வெளிப்படை. அப்போதிலிருந்தே கோவைக் குண்டுவெடிப்பு நாளை ஒரு துக்க தினமாகவோ அல்லது பயங்கரவாத எதிர்பு நாளாகவோ அகில இந்திய அளவில் அனுசரிக்கத் தொடங்கியிருந்தால் அது குறைந்தபட்சம் காதலர் தினத்தை ஒரு பாதிரியின் பெயரால் கொண்டாடுபவர்களைச் சற்றேனும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கியிருக்கும்.

    இச்சம்பவத்தைத் தமிழகத்தில் நடந்த ஒரு Stray Incident என பா.ஜ.க. கருதுவதும், தமிழக பா.ஜ.க. மட்டும் பெயரளவில் அச்சம்பவத்தை நினைவுகூர்வதும் கொடுமையிலும் கொடுமை. குறிவைக்கப்பட்டது இல. கணேசனுக்கோ அல்லது திருநாவுக்கரசருக்கோ என்றால்கூட இப்போக்கை மன்னித்துவிடலாம். ஆனால் குறிவைக்கப்பட்டவர் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவரான அத்வானி. இந்த வித்தியாசம்கூட பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமைக்குப் புரியவில்லை என்று விட்டுவிட முடியவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்திக்குமேயானால் அதில் வருத்தப்படவோ, வியப்படையவோ எதுவுவில்லை. இதையெல்லாம் மீறியும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருமாயின் அந்த ஆட்சி இன்றைய காங்கிரஸ்-கழக ஆட்சிகளைவிட மோசமாகவே இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

  3. ஆசிரியர் குழுவின் செயல் இன்னும் தமிழ் மண்ணில் மானமும், மனிதமும் செத்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது. நன்றி.

    சென்ற வருடம், இதே நாளில், இதே நகரில், என்ன நடந்தது? இதே தான். ஒன்றும் மாறவில்லை. அஞ்சலி செலுத்தச் சென்று கைதானவர்கள் எண்ணிக்கை மட்டும் கொஞ்சம் கூடியிருக்கிறது. கொஞ்சம் ஆறுதல், நம்பிக்கை. அப்போது ‍ நான் எழுதிய பதிவு ‍:

    https://jataayu.blogspot.com/2008/02/blog-post_19.html

    Tuesday, February 19, 2008
    கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடை!

    பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினக் கதகதப்பில் தமிழகத்தின் இளவட்டங்கள் திளைத்துக் கொண்டிருக்கையில், இதே நாளில், 1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் இஸ்லாமிய ஜிஹாதி வெறியர்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 58 அப்பாவித் தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்த, அஞ்சலி செலுத்த ஒரு சிறு கூட்டம் கோவை நகரில் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டு அனுமதி கோரப்பட்டது. இந்த அமைதியான கூட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்து விட்டது.

    இருப்பினும் அஞ்சலி செலுத்தியே தீருவோம் என்ற உறுதியுடன் மாநகரில் முதல் குண்டு வெடித்த இடத்தில் சாலையிலேயே அமர்ந்து விட்டனர் பாஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்கள். காவல்துறை 462 பேரைக் கைது செய்தது.

    ஜிஹாதி தீவிரவாதத் தாக்குதலில் தங்கள் குடிமக்களை இழந்த மும்பை, தில்லி, லண்டன், நியூயார்க், மாட்ரிட் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் வருடாவருடம் மறைந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று உறுதிபூண்டும் இத்தகைய தினங்களை அனுசரிக்கின்றனர். அரசு அதிகாரிகளும் இவற்றில் பங்கேற்கின்றனர்.

    ஆனால் தமிழக காவல்துறை அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அனுமதியும் மறுத்து, பின்னர் அவர்களைக் காரணம் எதுவும் கூறாமல் கைதும் செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த மனித விரோத, அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.

    அங்கே இறந்தவர்கள் தமிழர்கள் தானே? இந்த நாட்டின், இந்த மாநிலத்தின் குடிமக்கள் தானே? அவர்களது நினைவை அவமதித்து, இழிவு செய்யும் இந்த ஜிஹாதி ஆதரவு அரசை இதற்காகக் கண்டிக்கும் குறைந்த பட்ச மானம், ரோஷம், மனிதாபினம் கூடவா இல்லாமல் போய்விட்டதா தமிழக பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும்?? வெட்கப் படவேண்டிய விஷயம்.

  4. நினைவுறுத்தலுக்கு நன்றி. ஆனால் நினைவுதான் உறுத்துவதில்லையே? பா.ஜ.க.வின் ஆட்சிக்காலம் மிகவும் மந்தமானது. ஹிந்துக்களை ஏமாற்றியது அவர்களின் ஆட்சி. வாஜ்பாயி தன்னை நல்லவராகவும், மதச்சார்பற்றவராகவும் காட்டிக்கொள்ள முயற்சி செய்தார். பாகிஸ்தானுக்கு பஸ் விட்டார். முஷ்ராப்‍க்கு காஷ்மீரைச் சுற்றிக்காட்டினார். ஹிந்துக்களுக்கு என்ன செய்தார்? அயோத்தியில் குறைந்தபட்சம் கோவிலையாவது கட்ட முயற்சித்து இருக்க வேண்டும். பாபர் மசூதி என்று ஒன்று இல்லை. அது பாபரின் தளபதியின் கல்லறையே என்று நிறுவி இருக்கவேண்டும். மெக்காலே கல்வித்திட்டத்தை மாற்றக்கூட எதுவும் செய்யவில்லை பா.ஜ.க. ஆட்சி.

  5. நண்பர்களே குஜராதில் 20,000 முஸ்லிம்களும், மும்பயில் 8000 முஸ்லிம்களும், அஸ்ஸாமில் 5000 முஸ்லிம்களும், பகல்பூரில் 4000 முஸ்லிம்கலையும் இன்னும் எவ்வலவோ முஸ்லிம்களீன் உயிரை குடித்தவர்கள் யார் என்பதும், இந்த நாட்டில் யார் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்பதும் நடுநிலையுடன் சிந்தித்துப்பார்தால் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *