சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க. தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கோபி சங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை இன்று (10 ஜூலை 2014) வெளியிடுகிறார். காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த எளிய, ஆனால் சமூக பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு தமிழ்ஹிந்து அரங்கில் நடைபெறுவதில் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.
இதற்காக நூலாசிரியர் கோபி சங்கர் அவர்களுக்கும் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் தமிழ்ஹிந்து சார்பில் எமது நன்றிகள்.
அனைவரும் வருக!
திரு. கோபி சங்கர் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதை, சுவாமி விவேகானந்தர் உபதேசங்களைத் தமது வழிகாட்டுதல்களாகக் கொண்டு, சமுதாயத்தினால் இயல்பான மரியாதையும் நேசமும் மறுக்கப் படும் பாலின மாந்தர்களின் நலனுக்காக சிருஷ்டி என்ற அமைப்பினை நடத்தி வருபவர். அவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.