மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?

சுருக்கமான பதில்: இல்லை.

அத்தியாவசிய மருந்துகள் என 652 மருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவைகள் விலை எப்பவும் அரசால் கட்டுப்படுத்தப்படும். பார்க்க இணைப்பு. ஜூலை 2014 இல் மேலும் 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என அறிவிக்கப்பட்டன. இது அறிவித்தவுடன் மருந்துகம்பெனிகள் மும்பை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் இதை நீக்க கோரி அணுகின. செப்டம்பர் 2014 இல் மேற்கண்ட உத்தரவுக்கு அரசு ஒரு விளக்கம் அளித்தது. இதிலே ஜூலை 2014 உத்தரவு அப்படியே இருக்கும் ஆனால் மேற்கொண்டு உத்தரவுகள் ஏதும் வராது. எனவே ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துவிலைகள் அப்படியே இருக்கும்.

லட்சரூபாய் எல்லாம் ஏறவில்லை. ஏறவும் ஏறாது. அது கடைந்தெடுத்த டுப்பாக்கூர். இதைப்பற்றி தெரிந்துகொள்ள விரிவான பதிலை படிக்கவும்.

Medical store

விரிவான பதில்:

தேசிய மருந்து விலைகள் கட்டுப்பாட்டு ஆணையம் என்பது 29 ஆகஸ்ட் 1997 இல் அமைக்கப்பட்டது. இதன் வேலை அத்தியாவசிய மருந்துகள் என்பது எவை என தீர்மானிப்பதும் அதன் விலையை நிர்ணையிப்பதும் ஆகும். இது மத்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் வருகிறது. இது தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் என்பதை அவ்வப்போது வெளியிடும். மருந்து தயாரிப்பவர்களும் விற்பவர்களும் தங்களுடைய விற்பனையை இந்த ஆணையத்திடம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அளிக்கவேண்டும் அதைப்பொறுத்து ஆணையம் மருந்து விலையில் தலையிடலாமா என்பதை முடிவு செய்யும்.

பார்க்க https://www.medindia.net/buy_n_sell/pharm_industry/ph_orgainisation.asp
https://www.nppaindia.nic.in/index1.html

மே 15 2013 அன்று கடைசியாக 652 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் என அறிவித்தது. இந்த மருந்துகளை பார்க்க https://www.nppaindia.nic.in/DPCO2013.pdf போய் NLEM என தேடினால் 24 ஆம் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும். டிபி வியாதிக்கு 6 மருந்துகளையும் நீரிழிவு வியாதிக்கும் 7 மருந்துகளையும் கேன்சர் வியாதிக்கு 31 மருந்துகளையும் உள்ளடக்கியது.

ஜூலை 2014 இல் இன்னோர் உத்தரவு மூலம் இன்னும் 108 மருந்துகளை இந்த அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கிறது. அவை என்னென்ன என்பதை இந்த லிங்கில் பாருங்கள் https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-44-2014.html (இதிலே 50 தான் இருக்கு மிச்சம் 58 எங்கேன்னா அது ஒவ்வொரு மருந்து அளவையும் சேர்த்து கணக்கிட்டு இருக்காங்க)

இந்த உத்தரவை எதிர்த்து மருந்து கம்பெனிகள் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். காரணம் மருந்து கட்டுப்பாடு சட்டம் 2013 இன் 19 ஆம் பிரிவு அவரச கால நிலையிலுமோ அல்லது ஒரே கம்பெனி மருந்துவிலையை கட்டுப்படுத்தும் நிலையிலுமோ(monopoly) மட்டுமே மருந்து விலை கட்டுப்பாடு ஆணையம் விலைய கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறது. ஆனால் ஜூலை உத்தரவில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை என.

பதிலுக்கு கட்டுப்பாட்டு ஆணையம், மருந்துவிலைகளில் இருக்கும் வித்தியாசத்தை சொல்கிறது. எ.கா. Gliclazide எனும் மருந்து 29.5 ரூபாயில் இருந்து 44.25 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. அதெப்படி 15 ரூபாய் வித்தியாசம் என கேட்கும் முன் ஜெனிரிக் மருந்து என்றால் என புரிந்து கொள்ளவேண்டும். காப்புரிமையால் கட்டுப்படுத்தப்படாத மருந்துகள் ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும் பார்க்க https://en.wikipedia.org/wiki/Generic_drug

Gliclazide மருந்து விலைகள்:
https://www.medindia.net/drug-price/gliclazide/glycor-80-mg.htm – 44.25
https://www.medindia.net/drug-price/gliclazide/apdeb-80-mg.htm– 29.50
https://www.medindia.net/drug-price/gliclazide/aliza-80-mg.htm – 32.00

மொத்த விலைகளும்:  https://www.medindia.net/drug-price/gliclazide.htm

இது பற்றி தெரிவதற்கு முன்னர் நானும் ஏமாந்திருக்கேன். ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு 320 கொடுத்து வாங்கினேன். ஆனால் அதே மருந்து 120க்கும் கிடைக்கிறது. அதிலிருந்து மருத்துவர் எழுதிக்கொடுத்தாலும் அங்கிருக்கும் மருந்துக்கடையில் வாங்காமல் வேறு மருந்துக்கடையில் ஜெனிரிக் இருக்கா என கேட்டு குறைந்த விலை மருந்தை வாங்குவது. எல்லாம் அதே தான் ஆனால் விலை மட்டும் தான் வித்தியாசம்.

சரி இன்னும் அந்த லட்ச ரூபா மேட்டருக்கு வரலையேன்னு கேக்குறது புரியது அதுக்கு வர்றேன்.

இந்த லட்ச ரூபா ஆளுங்க எல்லோரும் இந்த https://www.dnaindia.com/india/report-cancer-drug-price-goes-up-from-rs-8000-to-rs-108-lakh-2022667
சுட்டியை அடிப்படையாக கொண்டு தான் பொங்கல் வடை எல்லாம் சுடுகிறார்கள்.

இதிலே சொல்லப்பட்டிருக்கும் Glivec என்பது 8500 இல் 1,08,000 ஆக ஏறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது Gleevec அல்லது Imatinib எனவும் விற்கப்படுகிறது. இதன் விலை ரூ 900 ஆம் தான். 8500 அல்ல. பார்க்க
https://www.medindia.net/drug-price/imatinib/celonib.htm

இதன் முழு விலைகளையும் பார்க்க https://www.medindia.net/drug-price/imatinib.htm மொத்தம் 18 கம்பெனிகளை இதை தயாரிக்கின்றன.

இந்த Glivec என்பதற்கு இன்னோர் கதை இருக்கிறது. இந்த மருந்தை தயாரித்த நோவாட்டிஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் வரை இதற்கு காப்புரிமை கேட்டு சுப்ரீம் கோர்ட் இதை மறுத்துவிட்டது. எனவே இது ஜெனிரிக் ஆக விற்கப்படுகிறது. பார்க்க https://en.wikipedia.org/wiki/Novartis_v._Union_of_India_%26_Others
https://en.wikipedia.org/wiki/Imatinib

ஜெனிரிக் ஆக விற்கும் மருந்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும் என்று இருக்கும் மருந்தை விலை ஏறிவிடும் என பூச்சாண்டி காட்டுவது என்ன விதமான டுபாக்கூர்த்தனம் என தெரியவில்லை. அதுவும் சுப்ரீம் கோர்ட்டே காப்புரிமை தரமறுத்த பிரபலமான மருந்துக்கே இப்படி அண்டப்புளுகு ஆகாசபுளுகு புளுகவேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. இதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியும் டிஎன்ஏ பத்திரிக்கை ஏற்க மறுத்துவிட்டது. பார்க்க https://dnasyndication.com/dna/top_news/dna_english_news_and_features/Cancer_drug_price_goes_up_from_%608,500_to_%601.08_lakh/DNMUM316965

இதை விரிவாக விளக்கும் சுட்டிகள். முழுதாக படித்தால் புரியும்.
https://spicyip.com/2014/10/cancer-drug-price-is-not-going-from-8000-to-1-08lakhs.html

https://spicyip.com/2014/09/govt-withdraws-nppa-powers-to-cap-prices-of-non-essential-mediccines-in-public-interest.html

தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள்
https://www.nppaindia.nic.in/ceiling/press15sept14/workingsheet-15-9-14.html
https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-65-2014.html
https://www.nppaindia.nic.in/wh-new-2014/wh-new-64-2014.html

சரி இப்போ என்ன நடக்கும்? இப்படி மருந்துவிலையை கட்டுப்படுத்த வழியே இல்லையா அப்படீன்னா இருக்கு. அது அரசே மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு கொடுப்பது தான்.

மருந்து கண்டுபிடிப்பவர்கள் குறைந்த பட்சம் 10-20 வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தும் தான் மருந்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த செலவை யாரேனும் ஒருவர் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும். திருட்டுவிசிடியில் படம் பார்க்கிறார்கள் என படம் தயாரிப்பை நிறுத்திவிட்டால் யாரும் சாகப்போவதில்லை ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் செய்தால்? எனவே உழைப்பும் பணம் செலவு செய்வதையும் யாரேனும் ஒருவர் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இதை செயல்படுத்தி வருகின்றன. அம்மா மருந்தகம் ஞாபகம் வருகிறதா? மத்திய அரசும் இதை செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது. அதுவே தீர்வாக இருக்கும்.

எனவே லட்ச ரூபாய் ஏறுகிறது, ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது என்பதெல்லாம் பொய். யார் வேண்டுமானாலும் தயாரிக்கும் மருந்துகளின் விலை லட்சக்கணக்கில் ஏறும் என்பதெல்லாம் கடைந்தெடுத்த புளுகுகள்.

கூடவே மோடி அமெரிக்கா போனார் மருந்துவிலை ஏறிவிட்டது எல்லாம் தமிழ் சினிமா கதைக்கு நல்லாயிருக்கலாம் ஆனால் அதுவும் சுத்த பொய். காரணம் இந்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாம் ஐரோப்பிய கம்பெனிகள். நோவாரிட்டிஸ் கம்பெனி சுவிட்சர்லாந்து கம்பெனி. சுவிட்சர்லாந்து கம்பெனிக்கு மோடி அமெரிக்காவில் ஒப்பந்தம் போட்டு வர்றார் என யோசிக்க மிகவும் அபாரமான டுபாக்கூர்த்தனம் வேண்டுமல்லவா?

இது பற்றி வந்த பல சுட்டிகளை இணைத்திருக்கிறேன்:
https://in.reuters.com/article/2014/09/19/india-drug-prices-idINKBN0HE0Z420140919
https://www.livemint.com/Companies/LEMUIazD96HeWnq9QkALpM/Price-caps-on-drugs-hurt-Indian-units-of-global-pharma-compa.html
https://www.thehindu.com/business/Industry/nonessential-drugs-nppa-withdraws-price-control-order/article6439154.ece
https://www.thehindu.com/business/Industry/pricing-row-hits-pharma-industry/article6453089.ece
https://www.thehindu.com/sci-tech/health/medicine-and-research/sc-to-hear-pil-against-hike-in-drug-price/article6492733.ece
https://articles.economictimes.indiatimes.com/2014-10-10/news/54868306_1_national-pharmaceutical-pricing-authority-nppa-formulations
https://www.dnaindia.com/health/standpoint-why-price-control-of-drugs-by-the-national-pharmaceutical-pricing-authority-is-important-2025065

(ராஜசங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

6 Replies to “மருந்துகளின் விலை ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் ஏறுதா?”

  1. நன்றிகள் பல. நான் பல டுபாக்கூர்களை கேட்டு தலை சுற்றி போயிருந்தேன்.

  2. உயிர்காக்கும் மருந்து விலை உயர்வை பற்றிய பதிவிற்கு ஒரு காவி நண்பர் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டிருந்தார் .

    மத்திய அரசின் இணைய தளமான
    National Pharmaceutical Pricing Authority – NPPA – இந்த இணைய தளத்தில் உள்ளது .

    https://www.nppaindia.nic.in/order/withdrawguideline-22-9-14.pdf

    இது போதுமா , இல்ல இன்னும் வேணுமா ?

  3. iyya oru சந்தேகம் .நான் ஈரோடு நகரத்தில் வசிக்கிறேன் .இந்த நகரத்தில் அனைத்து மருந்துகளும் வரி இல்லாமல் மற்றும் 15 விழுக்காடு கழிவுடன் பல கடைகளில் வாங்க முடியும். இஹைபற்றி மருந்து வணிகத்தில் உள்ள திருச்சியை சேர்ந்த என் நண்பரிடம் பேசியபோது எரோடே நகரத்தில் மருந்து வணிகத்தை ஒழிக்க பார்க்கின்றனர் அவை பெரும்பாலும் டுபாக்கூர் என்கிறார் எது உண்மை

  4. ஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *