வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள்

நமது அன்றாட அனுபவங்களான விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ்ந்த உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று உணர்வு நிலைகளை (அவஸ்தா-த்ரயம்) குறித்த விசாரத்தின் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர்தல் என்பது வேதாந்தத்தில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அது குறித்த அடிப்படை விளக்கம் இந்த உரை.

2026 பிப்ரவரி 7 சனி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சிவகுரு மஹாக்ஷேத்ரம் (கே.என்.ஜி புதூர் பிரிவு ) கோயில் அரங்கில் ஜடாயு நிகழ்த்திய உரையின் பதிவு இது.

“மிக அருமையான தெள்ள தெளிந்த நீரோட்டமென வேதாந்தம் குறித்த சொற்பொழிவு. மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் பொதுவான வேதாந்த பிம்பத்திலிருந்து விவேகானந்த சுவாமியின் செயல்முறை வேதாந்தம் என்கிற உண்மையான வேதாந்த நிலைபாட்டுக்கு கொண்டு செல்லும் உரை. இவ்வுரையின் இறுதியில் அத்வைத பரமாச்சாரியராக ஸ்ரீ நாராயண குருதேவரைக் குறிப்பிடுவது சிறப்பு. கட்டாயமாக கேளுங்கள். சிறப்பான உன்னதமானதோர் வேதாந்த உரையை நல்கியமைக்கு நன்றி ஜடாயு” என்று அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த உரையைப் பாராட்டியிருக்கிறார்.

யூட்யூப் வீடியோ சுட்டி இங்கே.

இந்த நிகழ்ச்சி சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் அருளாசியுடன் இயங்கும் Aham Brahmaasmi Foundation வேதாந்தக் கல்வி அமைப்பால் ஏற்பாடு செய்து நடத்தப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *