அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

“ஸ்டுபிட் ஆக்ட்” இதுதான் கொஞ்ச நாள்களாக அமெரிக்காவைக் கலக்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள். உதிர்த்தவர் பராக் ஒபாமா.

henry-louis-gatesஹென்றி லூயிஸ் கேட்ஸ் என்பவர் ஒரு ஹார்வோர்ட் ப்ரொஃபசர்; கருப்பர்; கருப்பர்கள் வரலாற்றுத் துறையில் பேராசிரியர்; ஆராய்ச்சியாளர்; ஜனாதிபதி ஒபாமாவுக்கு நன்கு அறிமுகமான நண்பர்; பெரிய ஆள். வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும் பொழுது சாவி வேலை செய்யாதபடியால். பின்பக்க வாசல் வழியாகச் சென்று உள்ளே நுழையப் பார்த்திருக்கிறார். இதை நோட்டம் விட்ட அக்கம் பக்கத்து நலவிரும்பி யாரோ உடனடியாக 911-க்கு ஃபோன் செய்து என் பக்கத்து வீட்டில் யாரோ ஒரு கருப்பன் திருடுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறான் உடனே வருக என்று அழைத்து விட்டார். நம்ம ஊர் போலீஸ் மாதிரி காரியம் முடிந்தபின்னால் சாவகாசமாக வராமல், அழைத்தவுடனேயே கலர் லைட்டுக்கள் சுழல உடனடியாக ஸ்தலத்தில் ஆஜராகி விட்டார்கள் மாசசூட்ஸஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் நகர போலீஸ்காரர்கள். அதற்குள் ப்ரொஃபசர் கேட்ஸ் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். உள்ளே நுழைந்த போலீஸ், கேட்ஸைப் பிடித்து, ”நீதான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் என்பதற்கு என்ன ஆதாரம்? நீ பின்பக்க வழியாக ஏறிக்குதித்து வந்ததை ஆட்கள் பார்த்திருக்கிறார்கள்..” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உலுக்க, பதிலுக்கு கேட்ஸும் தன் ஃபோட்டோ, பல்கலை ஐடி எல்லாம் காட்டி, தான் தான் அந்த வீட்டின் உரிமையாளன் என்று நிரூபித்து விட்டிருக்கிறார்.

பிரச்சினை அத்தோடு நிற்கவில்லை. தன் வீட்டிற்குள் நுழைந்துgates-under-arrest தன்னையே சந்தேகப்படும் வெள்ளைப் போலீஸாரிடம் கடுப்பாகிய கேட்ஸ், போலீஸ்காரர்களிடம் கடும் கோபத்தில் எகிற ஆரம்பித்திருக்கிறார். போலீஸார் உடனே அவரை வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லி, காவல்துறையினரின் கடமையைச் செய்ய விடாமல் வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்து கையில் விலங்கு மாட்டி, ஃபோட்டோ எடுத்து, ‘எதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லிக்க!’ என்று நம்ம ஊர் போலீஸ்காரர்கள் சொல்வது போல பிடறியில் கைவைத்துத் தள்ளி  லாக்கப்பில் கொண்டுபோய் வைத்து விட்டார்கள். ப்ரொஃபசர் செய்த குற்றம் கடமையைச் செய்ய வந்த வெள்ளைக்காரக் காவல்காரர்களின் ‘நிறவெறி பிடித்த நடவடிக்கை‘ என்று எண்ணி, அவர்களிடம் கோபமாகப் பேசி, முரடாக நடந்து கொண்டது.

பின்னர் ஆள் அடையாளம் எல்லாம் நன்கு விசாரித்துவிட்டு, போட்ட வழக்கை ரத்து செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் போலீஸ்காரர்கள். ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியர், ஜனாதிபதியின் நண்பர், இத்தனை இருந்தாலும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்தினால்தானே கைது செய்து அவமானப் படுத்தினார்கள் என்று அமெரிக்கா முழுவதும் கருப்பர்கள் கோபத்தில் குமுற ஆரம்பித்து விட்டார்கள். விஷயம் அத்தோடு நிற்கவில்லை. ஹார்வர்டின் லா ப்ரொஃபசரும் கேட்ஸின் நண்பருமானவர் போலீஸ் மேல் கேஸ் போடப் போகிறேன் என்று குதித்து விட்டார்.

போலீஸ்காரர்களோ நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம். அவர் வீட்டில் நுழைந்து அவரிடம் அடையாளம் கேட்டோம் அவர்தான் பதிலுக்கு எங்களைத் திட்டி, எங்கள் மீது இனவெறி வசைகளைக் கூறி எங்கள் மீது பழி போட்டார். அவர் எங்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டபடியால் நாங்கள் அவரைக் கைது செய்ய நேரிட்டு விட்டது என்கிறார்கள். விஷயம் அத்தோடும் முடிந்து விடவில்லை.

ஜனாதிபதி ஒபாமா நிருபர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்துவிட்டு, கடைசியாகக் கேட்கப்பட்ட ‘கேட்ஸ் கைது’ குறித்தான கேள்விக்கு பதில் சொல்கையில், “கேட்ஸ் எனது நண்பர். அவர் வீட்டைப் பொறுப்பாகப் பாதுகாத்து அவர் வீட்டுக்குப் போய் அவரிடம் அடையாளம் கேட்டவரை சரியான செயல்தான்; ஆனால் அதற்குப் பிறகு போலீஸ்காரர்கள் நடந்து கொண்ட விதம் முறையற்றது ஸ்டுப்பிட் ஆக்ட்,” என்று சொல்லி விட்டார்.

உடனே வெள்ளை ஆதரவு, கன்சேர்வேடிவ்கள், ரிபப்ளிக்கன்கள் எல்லோரும் ஒபாமாவைக் கடித்துக் குதற, உடனே மறுநாள் மீண்டும் மீடியாவைக் கூட்டி, “நான் நேற்று சொன்ன வார்த்தைகள் அவ்வளவு சரியான வார்த்தைத் தேர்வுகள் அல்ல, நான் அந்த போலீஸ்காரர்களிடமே பேசிவிட்டேன். கேட்ஸ் உடனும் பேசி விட்டேன். இப்பொழுது இருவரும் சுமுகமாகப் போய் விட்டார்கள். விஷயத்தை இப்படியே விடுங்கள்!” என்றார்.

ஆனாலும் அப்படியே விட்டுவிட யாரும் தயாராக இல்லை. முறையற்று நடந்த ஒருவருக்கு ஜனாதிபதி ஆதரவாக, தன் இனத்தவர் என்பதனால், செயல்படுவதா? இனிமேல் போலீஸ்காரர்கள் தன்னிச்சையாக எப்படிச் செயல்பட முடியும் என்று போலீஸ்காரர்கள் எல்லாம் ஒபாமாவுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் கருப்பு போலீஸ்காரர்களும் அடக்கம். கைது செய்த சார்ஜெண்டும் ஒபாமாவை ஒருபிடி பிடித்து விட்டார். போலீஸ் மீதான ஒபாமாவின் கண்டனம் கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கும், இருவருக்கும் பரஸ்பரம் மோதல்களை உருவாக்கக் கூடிய ஒரு கொதிநிலையை உருவாக்கும் பேச்சாகவும், போலீஸ்காரர்கள் இனிமேல் குற்றம் செய்யும் கருப்பர்களை தண்டிக்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்ற அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தி விட்டன. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் இனப் பிரச்சினை என்று வரும் பொழுது சரியான நிலைப்பாடாகவே இருந்தாலும் கூட தன் மனதில் பட்டதைப் பேச முடியாது என்பதற்கான ஒரு சரியான உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்து விட்டது.

தன் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்தாலும் கூட, அந்தப் பேராசிரியர், அவர்கள் கேட்ட அடையாளத்தைக் காண்பித்துவிட்டு, தன் வீட்டை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாத்ததிற்கு ஒரு நன்றி கூறி ஒரு காஃபியோ டீயோ கொடுத்து வழி அனுப்பியிருந்தால், பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும். அநாவசியமாக, ‘ஆஃப்டரால் 35000 சம்பளம் வாங்கும் சாதாரண போலீஸ்காரனுக்கு இவ்வளவு திமிரா, நான் எவ்வளவு பெரிய ப்ரோஃபசர்? என்கிட்ட… என்கிட்டயே அடையாளம் கேட்கிறாயா?’ என்ற ஆணவத்தில் திருவிளையாடல் நாகேஷ் பாணியில் போலீஸ்காரர்களை எகிறப் போக கையில் விலங்கு மாட்டி விட்டார்கள்.

சரிதான். ஒருவரின் உண்மையான வீட்டில் நுழைந்து அவரிடமே இது உன் வீடா என்று கேட்டால் அவருக்குக் கோபம் வரத்தான் செய்யும். அதிலும் அவர் கருப்பராக வேறு போய் விட்டார். வெள்ளைப் போலீஸ்காரர்களாகிய நம்மை தப்பாகத்தான் எடுத்துக் கொள்வார்; அவரது கோபத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. கத்தினால் கத்தி விட்டுப் போகிறார். ஒரு நியுசென்ஸ் கேஸ் என்று நினைத்துக் கொண்டு, ‘நன்றி ப்ரொஃபசர் நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம். தொந்தரவுக்கு மிக்க மன்னிக்கவும். இனிய இரவு,’ என்று சொல்லி விட்டு அமைதியாக வராமல், ‘நாங்கள் எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த போலீஸ்காரர்கள், எங்ககிட்ட… எங்ககிட்டயே உன் ப்ரொஃபசர் பந்தாவைக் காண்பிக்கிறாயா? உன்னை விட்டேனா பார்? உள்ளே தள்ளி ரெண்டுநாள் கஞ்சி குடிக்க வைத்தால்தான் சரிப்படும், கருப்பன் என்றால்– ப்ரொஃபசர் என்றால்– உனக்கு ரெண்டு கொம்பா முளைத்திருக்கிறது?,’ என்று ஆணவத்துடன் கழுத்தைப் பிடித்துத் தள்ளி கையில் விலங்கு மாட்டி லாக்கப்பில் வைத்து அந்த வெள்ளைக்கார போலீஸூம் இதை ஒரு ஈகோ பிரச்சினையாக, தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, சற்று பொறுமையுடன் நடந்து கொண்டிராமல், பெரிதுபடுத்தி விட்டிருக்கிறார்கள்

‘இது ஏதோ அமெரிக்காவில் ஒரு நகரத்தில் நடந்து விட்ட கம்யுனிக்கேஷன் கேப், இருவரும் சமரசமாகப் போய் விடுவார்கள் அல்லது கேஸ் போட்டுக் கொண்டு போவார்கள்; ஒரு ஜனாதிபதியாக எனக்கு இதில் சொல்ல எதுவும் இல்லை,’ என்றோ அல்லது, ‘நான் இன்னும் இந்தக் கேஸ் பற்றி முழு விபரமும் அறியவில்லை’ என்றோ, அல்லது ‘இன்னும் விசாரணை நடக்கிறது; யார் மீது தவறு என்று அறிந்து, அந்த ஊர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றோ சொல்லிவிட்டுப் போயிருந்தால் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் பிரச்சினை ஏதும் வந்திருக்காது.  நிகழ்ச்சி ஒரு சின்ன ஊரில் நடந்த ஒரு சிறு பிரச்சினையாகக் காலப் போக்கில் ஆறி விட்டிருந்திருக்கும். ஸ்டுப்பிட் ஆக்ட் என்று சொல்லி ஒபாமாவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். இந்த மாதிரி விஷயங்களில் இவர்கள் எல்லாம் நம்ம கருணாநிதியிடம் ஒரு க்ராஷ் கோர்ஸ் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறேன்.

cnn-live-show-moment-of-truthபிரசிடெண்ட் ஒபாமா ஒரு ஹெல்த் கேர் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதைப் பற்றி மீடியாக்களும், அரசியல்வாதிகளும், மக்களும் பேசி அமெரிக்கா முழுவதும் ஒரு மாபெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். அப்படி ஒரு விவாதம் நடக்க ஆரம்பிக்கும் தருணத்தில் இந்த கேட்ஸ் விவகாரம் பூதாகரமாக உருவாகி இப்பொழுது எல்லோரும் இதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். மீடியாக்கள், கேட்ஸ், அவர் பெண், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவில் போவோர் வருவோர், அந்தத் தெரு நாய்க் குட்டி, பூனைக் குட்டி என்று சகலரிடமும் இரு பக்கமும் பேட்டி கண்டு சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை நம்ம ஊர் கருணாநிதி ஸ்டைலில் ஒபாமாவே திட்டமிட்டே திசை திருப்பி விட்டு விட்டாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

Beers of Choice
Beers of Choice

தான், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டதாக ஒபாமா மன்னிப்புக் கேட்ட பின்பும் கூட, நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்துள்ள ஒபாமா உடனே நிலமையைக் கட்டுப்படுத்த அதிரடியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். அதாவது சம்பந்தப்பட்ட ப்ரொஃபசரையும், போலீஸ் சார்ஜெண்டையும் தன் வெள்ளை மாளிகைக்கு அழைத்து, இருவரிடமும் பேசி, நிலைமையை சகஜத்துக்குக் கொண்டு வந்து, இருவருக்கும் பீர் கொடுத்து உபசரித்து, நட்பான சூழ்நிலையை உருவாக்க வெகுவாக மெனக்கெட்டிருக்கிறார். ஆரம்பத்தில் சற்று கவனிமில்லாமல் பேசியிருந்தாலும்கூட பின்னால் நிலைமையை சமயோஜிதமாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மாபெரும் இனப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கக் கூடிய ஒரு விஷயத்தை, தான் ஒரு மாபெரும் ஜனாதிபதி என்ற கவுரவம் எல்லாம் பார்க்காமல், ஒரு சாதாரண பேராசிரியரையும் ஒரு சாதாரண போலீஸ் சார்ஜெண்டையும் அழைத்துப் பேசியது ஒபாமாவின் எளிமையையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.

இங்கு நாய் உவமானம் கருப்பரை மட்டும் குறிப்பது அல்ல. வீட்டுக்குள் காவலுக்கு வந்த போலீஸ்காரரையும் இதே நாய் குறியீடூ குறிக்கிறது. அதே போல மீடியாவில் பேசத் தெரியாமல் வாய் விட்ட ஒபாமாவின் செய்கையையும் இந்த நாய் குறியீடு குறிக்கிறது. மேலும் போலீஸ்காரர்கள் விலங்கு மாட்டிய கேட்ஸையும் நாய் குறியீடு குறிக்கிறது.

வெள்ளைப் போலீஸ்காரருக்கு கருப்பர் கேட்ஸ் ஒரு நாய். போலீஸ்காரர்கள் மேல் போடப் படும் வழக்குகளும், கல்லடிகளும், கண்டனங்களும் அவர்கள் சுமந்த பிரச்சினைகள்

கருப்பு கேட்ஸ்ஸுக்கு வெள்ளை போலீஸ்கார சார்ஜெண்ட் ஒரு நாய். கையில் மாட்டப்பட்ட விலங்கும், லாக்கப் வாழ்வும், அவர் மீது வீசப்படும் கண்டனங்களும் அவர் சுமக்கும் பிரச்சினை

Obama Crowley Gates Bidenகருப்பு ஒபாமாவுக்கு அவர் வாயால் தேவையில்லாமல் உளறிக் கொட்டியது ஒரு நாய் என்றால் அவர் மீது வீசப் படும் கண்டனங்களும் அவரது சமாளிப்புக்களும் அவர் சுமக்கும் பிரச்சினைகள். ஏற்கனவே ஃபோனில் பேசியது பத்தாமல் இப்பொழுது இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து சமாதானம் செய்யப் போகிறாராம். ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு இப்படி பெட்டிக் கேஸ்களைத் தீர்ப்பதுதான் வேலையா, தேவையில்லாமல் வாய் விட்டு விட்டு இப்பொழுது சமாளிப்பதில் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பாக கிட்டத்தட்ட இது போன்ற பல்வேறு சம்பவங்களைக் கோர்த்து க்ராஷ் என்றொரு சினிமா வந்தது. அதற்கு ஆஸ்கார்களும் கிட்டின. பல்வேறு இனங்கள் அருகருகே நெருக்கமாகச் சேர்ந்து வாழும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒருவர் கலாசாரம் ஒருவருக்குப் புரியாமல், ஒருவரின் நிலைமை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் படும் சந்தேகங்களும், அவநம்பிக்கைகளும் எவ்வாறு பெரும் சிக்கல்களுக்கும் போராட்டங்களுக்கும் இட்டுச் செல்கிறது என்பதை விளக்கும் அருமையான ஒரு படம். இந்தப் படத்தைச் சம்பந்தப் பட்ட பேராசிரியர், போலீஸ்காரர்கள், ஜனாதிபதி அனைவருமே பலமுறை பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரை செய்கிறேன். சம்பந்தப் பட்டவர்கள் தவிர அனைத்து அமெரிக்கர்களுமே இந்தப் படத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு பாடங்கள் உள்ளன.

இப்பொழுது கட் ஷார்ட், ஓவர் டு இந்தியா:

இதே மாதிரி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒரு ஐ ஐ டி அல்லது ஐ ஐ எஸ் ஸி ப்ரொஃபசரை உள்ளே தள்ளியிருந்தால்?

முதலில் நம் ஊரில் எவனோ பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிட்டவுடன் போலீஸ்காரர்கள் உடனே வந்து சுறுசுறுப்பாக நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். வீடே பத்தி எரிந்திருந்தால் கூட, கொள்ளையடிக்கப் பட்டிருந்தால் கூட சாவகாசமாக ரெண்டு நாள் கழித்துதான் வந்திருப்பார்கள் ஆகவே இந்தச் சம்பவமே நடந்திருக்காது.

அப்படியே ஒரு வேளை உடனே வந்திருந்தாலும் கூட, பெரிய இடத்திற்கு வேண்டப் பட்ட ப்ரொஃபசர் என்று தெரிய வந்தால் கூழைக் கும்பிடு போட்டு முடிந்தால் அந்த ப்ரொஃபசரின் ஷூவுக்கு பாலீஷ் போட்டுவிட்டுப் போயிருந்திருப்பார்கள்.

அப்படியே ஒரு வேளை உள்ளே நுழைந்திருந்தால் இப்படி அடையாளம் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். அந்தப் ப்ரொஃபசர் சாதாரணமாக கேள்வி கேட்டிருந்தால் கூட, ”நாயே போலீசையே எதிர்த்துப் பேசுறியா” என்று புடனியில் ரெண்டு போட்டு, அவரை உள்ளாடையுடன் நடத்தியே ஸ்டேஷன் வரைக் கூட்டிக் கொண்டு போய் அங்கும் உள்ளாடையுடனே லாக்கப்பில் மூத்திர நாத்தத்தில் ரெண்டு நாள் உட்கார வைத்து கண், மூஞ்சி எல்லாம் வீங்க வைத்து அடி கொடுத்து அனுப்பியிருப்பார்கள்.

ஐ ஐ டி போன்ற பெரிய இடத்துப் ப்ரொஃபசர் என்றால் மாணவர்களும், ஆசிரியர்களும் இந்துவுக்கும் எக்ஸ்பிரஸுக்கும் கண்டனக் கடிதம் எழுதி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்திருப்பார்கள். சாதாரணக் காலேஜ் என்றால் மாணவர்கள் இதைச் சாக்காக வைத்து நாலு பஸ், ரெண்டு கார், ஸ்கூட்டர் என்று தீ வைத்துக் கொளுத்தி காலேஜை மூட வைத்திருப்பார்கள்; ப்ரொஃபசர் மட்டும் உள்ளேயே இருந்திருப்பார். காவல் மிருகங்களின் அராஜகம் குறித்து நம் முற்போக்குகள் ப்ளாக் எழுதி இந்திய தேசிய சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். போலீஸுக்கு வக்காலத்து வாங்கி சோ மட்டும் ஒரு தலையங்கம் எழுதியிருப்பார்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் இறங்கிlaw-college பொறுக்கிகளாக நடந்துகொண்ட பொழுது கருணாநிதி அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் இரு புறத்திற்கும் நல்லவராக நடந்து கொண்டார்; பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களானார்கள். இது போலவே முன்பு தென் தமிழ் நாட்டில் ஜாதிக் கலவரங்கள் நடை பெறும் பொழுதெல்லாம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட பல சமயங்களை நாம் கண்டிருக்கிறோம். அமெரிக்காவிலோ ஒரு ஜனாதிபதி பிரச்சினைகளை ஊதி வளர்த்து விடக் கூடாது என்ற அக்கறையில் ஒரு சாதாரண பேராசிரியரையும், போலீஸ்காரரையும் கூட வீட்டுக்கு அழைத்துப் பேசுகிறார்.

பெங்களூர் ஐ ஐ எஸ் ஸி வளாகத்தில் ஒரு பேராசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட பொழுது பிரதமரோ, முதலமைச்சரோ ஏன் ஒரு வார்ட் கவுன்சிலர் கூட அனுதாபம் கூடத் தெரிவிக்காதது நம் நாட்டில் அறிஞர்களுக்கு நம் அரசியல்வாதிகள், ஆளும் வர்க்கத்தினர் காட்டும் அக்கறை. பிரதமர் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார். ஒரு வேளை கைதான ப்ரொஃபசர் முஸ்லீம் என்றால் உடனே தனக்குத் தூக்கம் போய் விட்டது என்று அறிக்கை விடுவார்.

professor paramasivamமதுரையில் மதுரைக் கல்லூரி பேராசிரியரான பரமசிவம் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் துண்டு துண்டாக வெட்டிப் படு கொலை செய்யப் பட்ட பொழுது அவருக்கு அனுதாபம் தெரிவித்தாலோ அவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்தாலோ இஸ்லாமியர் ஓட்டுப் போய் விடுமே என்ற அச்சத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர்கூட வாய் திறக்காததுதான், தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் கற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நாம் அளிக்கும் மரியாதையாக இருந்து வருகிறது. மாதா , பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்த ஒரு தேசத்தில் நம் அரசியல்வாதிகள் குருவுக்கு தெரிவித்த மரியாதை இந்த லட்சணத்தில் இருக்கிறது. இப்படி தெய்வத்தைக் கூட குருவுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று கற்றறியாத கலாசாரத்தில் வந்த ஒரு ஒபாமாவால் கூட ஒரு பேராசிரியர் என்பவர் முக்கியத்துவம் அறிந்து அவர் அவமானப் பட்ட பொழுது அதைக் கண்டிக்கக் கூடிய அக்கறை உள்ளது. நம் கலாச்சாரம் இங்கு அமெரிக்காவில் பேணப் படுகிறது. நாமோ பேராசிரியர்கள் கொல்லப் பட்டாலும் கூட ஓட்டு ஒன்றே குறி என்று ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை– கற்றாரை மதிக்கத் தெரியாத ஆள்களை– நம் தலைவர்களாகப் பெற்றுள்ளோம்.

இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.

16 Replies to “அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்”

  1. Mr Thirumali, I enjoyed your style of writing and completely agree with your views on Indian police. I burst out laughing when you introduced Nagesh from Thiruviliadal!! Please keep writing!!

  2. அட்டகாசமான அங்கதமும், நையாண்டியும் இழைய அமெரிக்க சம்பவத்தை விவரித்திருக்கிறீர்கள் திருமலை.

    அதோடு, இந்தியர்கள் கற்கவேண்டிய பாடங்களையும் கடைசியில் சிந்தனையைத் தூண்டும் வகையில் சொல்லியிருப்பது மிக நன்று. ஆசிரியர்களை மதிக்காத சமூகம் உருப்படாது.

  3. Pingback: tamil10.com
  4. கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. ஆம் ஆசிரியர்களை மதிக்காத சமுதாயம் நிச்சயம் உருப்படாது.

  5. Good one… keep writing !!! cultural harmony is an important foundation for a healthy society… even when hindus are willing to harmoniously live along with other community our politicians dont allow it to happen… troublesome elements in any community can be narrowed down to just 5 to 10 % the remaining people mind their own business for survival.

    And your article is teaching us as how to learn from others mistakes… only a smart person will be willing to learn from others mistake…. Good one keep writing !!

  6. When Amma’s police went to Gopalapuram to arrest MK (during NDA’s time), Murasoli Maran physically assaulted the police team members. Don’t you remember this incident? Had Maran been with the Professor in the US, he would have beaten the police team black and blue. He had the relevant experience. The whole case would have died instantly.

  7. //மதுரையில் மதுரைக் கல்லூரி பேராசிரியரான பரமசிவம் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் துண்டு துண்டாக வெட்டிப் படு கொலை செய்யப் பட்ட பொழுது அவருக்கு அனுதாபம் தெரிவித்தாலோ அவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்தாலோ இஸ்லாமியர் ஓட்டுப் போய் விடுமே என்ற அச்சத்தில் பொறுப்பில் இருந்த ஒருவர்கூட வாய் திறக்காததுதான்//

    sir,,i read all your feed..and all are fine..and i am a muslim,why u always use islamic terrorism…..by this u are trying to tell every muslim as aterrorist….including me…
    terrorism,who ever did is not acceptable,and with out fail it is punishable….he must be punished….
    my religion and personnnaly me condemt the terrorism most….
    so please use the word terrorist….because in alover the world in every religion have some group of people,and they did the terrorism….but no one call them as a christian terrorist…hindu terrorist….
    this word islamic terrorism is spread by media…you people are most educated..and you too dont hold that word….as against a common muslim….

    thank you……

  8. Well written.Yes, the Nagesh line is apt. Our people have a feudal attitude. Makes us sigh about when the democracy will grow up.
    The previous comment abt how the whole case would have died made me laugh.
    We have a unique way of settling disputes:-)Hope the US doesnt learn from us.

  9. Dear Brother,
    Good article. But could have given a better title. Even though omaba made a mistake, he took a nice effort to solve the issue. This is something everyone has to learn, not to make fun about it.

    With Love,
    Ashok

  10. பதில் அளித்த்த, பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    அஷோக்: இந்தக் கட்டுரையை முதலில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அதன் தலைப்பே வேறு. தமிழ் இந்துவுக்காக மாற்ற வேண்டி வந்து விட்டது. நீங்கள் சொல்வது போல ஒபாமா முதலில் தடுமாறியிருந்தாலும் பின்னர் ஒரு முதிர்ச்சியான தலைவருக்குரிய பொறுப்புடன் நடந்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர். நேற்று தமிழ் நாட்டில் அன்பழகன் என்ற ராமையா என்ற மந்திரி பேசியதைப் படித்திருப்பீர்கள். இந்துக் கடவுள்களை குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் நாடகம் ஆடும் ரம்சான் மேடையில் கேவலமாகத் திட்டியிருக்கிறார். வயது வளர்கிறது அறிவு மட்டும் வளர்வதேயில்லை நம் தலைவர்களுக்கு. இப்படிப் பட்ட கேடுகெட்ட பிரிவினையை வளர்க்கும் ஆட்களை ஒரு சமூகம் பேராசிரியர் என்று அழைத்துக் கொண்டாடினால் அது எப்படிப் பட்ட தரம் கெட்ட சமுதாயமாக மக்கள் கூட்டமாக இருக்க முடியும் என்பதை யோசியுங்கள்

    சன்மார்க்கம்.ப்ளாக்ஸ்பாட் இஸ்லாமிய நண்பருக்கு. உங்கள் வருத்தம் புரிகிறது. ஏன் இஸ்லாமியத் தீவீரவாதம் என்று அழைக்க வேண்டும் தீவீரவாதத்திற்கு ஏது மதம் என்று அப்பாவியாகக் கேட்க்கிறீர்கள். உங்களுக்கு உண்மைகள் பல தெரியவில்லை என்று தெரிகிறது. ஒரு தீவீரவாதம் வெறும் கொள்ளையடிக்கும், மிரட்டும், பழிவாங்கும் நோக்குடன் செய்யப்பட்டால் தான் அது வெறும் தீவீரவாதம். ஆனால் ஒரு மதப் புத்தகத்தைப் படித்து விட்டு அதில் உள்ளது எல்லாம் தேவ வாக்கு என்று நம்பிக் கொண்டு பிற மதத்தினரைக் கொல்லும் பொருட்டு செய்யப் படும் தீவீரவாதம் மதத் தீவீரவாதம் என்றே அழைக்கப் படும். காஃபீர்களான இந்துக்களைக் கொன்றால் சொர்க்கத்தில் 72 கன்னியர்கள் காத்திருப்பார்கள் என்ற வாக்கை நம்பிச் செய்யப் படும் கொலைகளும், உலகம் முழுக்கப் பொதுவான இஸ்லாமிய தாருல் இஸ்லாமை உருவாக்கும் நோக்குடன் செய்யப் படும் தாக்குதல்களும் நிச்சயமாக இஸ்லாமியப் பயங்கரவாதம் என்றுதான் அழைக்கப் படும். அப்படி அழைக்கப் படக் கூடாது என்று நீங்கள் உண்மையாகவே நினைப்பீர்களாயின் நீங்களும் உங்கள் மதக் குருமார்களும் என்ன செய்திருக்க வேண்டும்? அப்சல் குருவைத் தூக்கில் போடு என்றல்லாவா இன்று கோரிக்கை வைத்து ஊர்வலம் போயிருக்க வேண்டும்? இமாம் அலியைக் கொன்றது நியாயம் தான் என்று அரசை ஆதரித்திருக்க வேண்டும்? மாறாக உங்கள் சமுதாயம் செய்வது என்ன? அப்சல் குருவைத் தூக்கில் போடக் கூடாது என்று அரசை மிரட்டுகிறீர்கள்? இந்தியா கார்கிலில் தாக்கப் படும் பொழுது அப்பொழுதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனாவில் ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் இந்தியாவை ஆதரித்துக் கோஷம் எழுப்பிய பொழுது கடும் அர்த்தமுள்ள அமைதி காத்தீர்கள். இன்று வரை காஷ்மீர் பண்டிட்களைக் கொன்று அவர்கள் சொத்துக்களைப புடுங்கிக் கொண்ட காஷ்மீர இஸ்லாமியர்களை இந்த முஸ்லீமாவது கண்டித்தது உண்டா? ஒரு சர்வாதிகாரியும் மக்களை ஈவு இரக்கமும் இன்றிக் கொன்றவனான சதாம் உசேனுக்கு ஆதரவாக ஊர்வலம் போய் கடைகளையும் வாகனங்களையும் கொளுத்துகிறீர்கள். ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதியான முகமது அலி என்பவன் இந்துக்கள் அனைவரையும் கொன்று குவிக்கத் திட்டம் போட்டவன் கொல்லப் பட்ட பொழுது அவனுக்கு ஆதரவாக மதுரையில் பந்த் நடத்தினீர்கள், கருப்புக் கொடி போராட்டம் நடத்தினீர்கள். இப்படி பெரும்பாலான இஸ்லாமிய சமுதாயமே தீவீரவாதிகளை ஆதரிக்கும் பொழுது மத ரீதியாக அவர்களின் பயங்கரவாத செயல் பாடுகளை ஆதரிக்கும் பொழுது மதத்தின் அடிப்படையில் அப்பாவி இந்துக்களை அந்தப் பயங்கரவாதிகள் கொல்லும் பொழுது அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொன்னால் உடனே சண்டைக்கு வந்து விடுகிறீர்கள், முதலில் மதத்தில் அடிப்படையில் யாரையும் கொல்லக் கூடாது என்று ஃபட்வா போடுங்கள் அப்படிச் செய்பவர்களௌ சமூகப் பகிஷ்காரம் செய்யுங்கள் தள்ளி வையுங்கள் ஆதரவு செய்யாதீர்கள் அப்புறம் சொல்லுங்கள் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று. அது நடக்கும் வரை இஸ்லாமிய மதத்தின் பெயரைச் சொல்லி நடக்கும் படுகொலைகளை நீங்கள் ஆதரிக்கும் வரை, அப்சல் குருவையும், இமாம் அலியையும் நீங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, ஒவ்வொரு தீவீரவாதத்தையும் பாபர் கட்டிடத்தைச் சொல்லியும், குஜராத்தைச் சொல்லியும் நீங்கள் நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் வரை இஸ்லாமியர்கள் செய்யும் அனைத்து பயங்கரக் கொலைகளும் இஸ்லாமியப் பயங்கரவாதமே. இங்கு சொல்லப் பட்ட இரண்டு பேராசிரியர்களின் கொலைகளும் இஸ்லாம் மதத்தின் பெயரைச் சொல்லியே நியாயப் படுத்தப் பட்டு நடத்தப் பட்டவை ஆகவே இவை நிச்சயமாக இஸ்லாமியப் பயங்கரவாதமே. நீங்கள் போய் உங்கள் முல்லாக்களிடமும் சொல்லுங்கள் இனிமேல் நம் மதத்தின் பெயரால் எவன் குண்டு வைத்தாலும் அவனை நாம் ஆதரிக்கக் கூடாது என்று. தப்பான இடத்தில் வந்து அறிவுரை கூறுகிறீர் நண்பரே. ஒரு புறம் இஸ்லாமின் பெயரால் கொலை வெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டியது மறுபுறம் வந்து இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று சொல்வது என்று இரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள் முதலில், அதன் பின்னர் யாருமே இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பதத்தையே பிரயோகப் படுத்த மாட்டார்கள்.

    அன்புடன்
    ச.திருமலை

  11. Dear Sir,

    Your have written nicely. Unfortunately, you are one hundred percent correct about India, its politicians and its (Police) administration. But, please don’t be rude about the Police Department. They are to obey their bosses who are constantly kept under pressure by the unscrupulous politicians.

    Yours
    T. Ramadass

  12. Dear Ramadass

    You are right about our corrupt police force. It has become rotten with casteist and corrupt political influence of late. Still there are lot of dutiful officers and service people, because of them we still have a trace of law and order in our society. I certainly salute them. They are overburdened by their political bosses to do all sort of sundry jobs and leave them little time to take care of the people. When a sundry politician visits any place in TN, he needs thousands of policemen to stand on the road sides to protect him, in fact people need to be protected from him. Our police force waste most of their time in such unproductive protection works rather than finding criminals.

    Thanks
    Sa.Thirumalai

  13. /////ஒரு தீவீரவாதம் வெறும் கொள்ளையடிக்கும், மிரட்டும், பழிவாங்கும் நோக்குடன் செய்யப்பட்டால் தான் அது வெறும் தீவீரவாதம். ஆனால் ஒரு மதப் புத்தகத்தைப் படித்து விட்டு அதில் உள்ளது எல்லாம் தேவ வாக்கு என்று நம்பிக் கொண்டு பிற மதத்தினரைக் கொல்லும் பொருட்டு செய்யப் படும் தீவீரவாதம் மதத் தீவீரவாதம் என்றே அழைக்கப் படும். காஃபீர்களான இந்துக்களைக் கொன்றால் சொர்க்கத்தில் 72 கன்னியர்கள் காத்திருப்பார்கள் என்ற வாக்கை நம்பிச் செய்யப் படும் கொலைகளும், உலகம் முழுக்கப் பொதுவான இஸ்லாமிய தாருல் இஸ்லாமை உருவாக்கும் நோக்குடன் செய்யப் படும் தாக்குதல்களும் நிச்சயமாக இஸ்லாமியப் பயங்கரவாதம் என்றுதான் அழைக்கப் படும். அப்படி அழைக்கப் படக் கூடாது என்று நீங்கள் உண்மையாகவே நினைப்பீர்களாயின் நீங்களும் உங்கள் மதக் குருமார்களும் என்ன செய்திருக்க வேண்டும்? அப்சல் குருவைத் தூக்கில் போடு என்றல்லாவா இன்று கோரிக்கை வைத்து ஊர்வலம் போயிருக்க வேண்டும்? இமாம் அலியைக் கொன்றது நியாயம் தான் என்று அரசை ஆதரித்திருக்க வேண்டும்? மாறாக உங்கள் சமுதாயம் செய்வது என்ன? அப்சல் குருவைத் தூக்கில் போடக் கூடாது என்று அரசை மிரட்டுகிறீர்கள்? இந்தியா கார்கிலில் தாக்கப் படும் பொழுது அப்பொழுதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனாவில் ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் இந்தியாவை ஆதரித்துக் கோஷம் எழுப்பிய பொழுது கடும் அர்த்தமுள்ள அமைதி காத்தீர்கள். இன்று வரை காஷ்மீர் பண்டிட்களைக் கொன்று அவர்கள் சொத்துக்களைப புடுங்கிக் கொண்ட காஷ்மீர இஸ்லாமியர்களை இந்த முஸ்லீமாவது கண்டித்தது உண்டா? ஒரு சர்வாதிகாரியும் மக்களை ஈவு இரக்கமும் இன்றிக் கொன்றவனான சதாம் உசேனுக்கு ஆதரவாக ஊர்வலம் போய் கடைகளையும் வாகனங்களையும் கொளுத்துகிறீர்கள். ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதியான முகமது அலி என்பவன் இந்துக்கள் அனைவரையும் கொன்று குவிக்கத் திட்டம் போட்டவன் கொல்லப் பட்ட பொழுது அவனுக்கு ஆதரவாக மதுரையில் பந்த் நடத்தினீர்கள், கருப்புக் கொடி போராட்டம் நடத்தினீர்கள். இப்படி பெரும்பாலான இஸ்லாமிய சமுதாயமே தீவீரவாதிகளை ஆதரிக்கும் பொழுது மத ரீதியாக அவர்களின் பயங்கரவாத செயல் பாடுகளை ஆதரிக்கும் பொழுது மதத்தின் அடிப்படையில் அப்பாவி இந்துக்களை அந்தப் பயங்கரவாதிகள் கொல்லும் பொழுது அதை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொன்னால் உடனே சண்டைக்கு வந்து விடுகிறீர்கள், முதலில் மதத்தில் அடிப்படையில் யாரையும் கொல்லக் கூடாது என்று ஃபட்வா போடுங்கள் அப்படிச் செய்பவர்களௌ சமூகப் பகிஷ்காரம் செய்யுங்கள் தள்ளி வையுங்கள் ஆதரவு செய்யாதீர்கள் அப்புறம் சொல்லுங்கள் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று. அது நடக்கும் வரை இஸ்லாமிய மதத்தின் பெயரைச் சொல்லி நடக்கும் படுகொலைகளை நீங்கள் ஆதரிக்கும் வரை, அப்சல் குருவையும், இமாம் அலியையும் நீங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, ஒவ்வொரு தீவீரவாதத்தையும் பாபர் கட்டிடத்தைச் சொல்லியும், குஜராத்தைச் சொல்லியும் நீங்கள் நியாயப் படுத்திக் கொண்டிருக்கும் வரை இஸ்லாமியர்கள் செய்யும் அனைத்து பயங்கரக் கொலைகளும் இஸ்லாமியப் பயங்கரவாதமே. இங்கு சொல்லப் பட்ட இரண்டு பேராசிரியர்களின் கொலைகளும் இஸ்லாம் மதத்தின் பெயரைச் சொல்லியே நியாயப் படுத்தப் பட்டு நடத்தப் பட்டவை ஆகவே இவை நிச்சயமாக இஸ்லாமியப் பயங்கரவாதமே. நீங்கள் போய் உங்கள் முல்லாக்களிடமும் சொல்லுங்கள் இனிமேல் நம் மதத்தின் பெயரால் எவன் குண்டு வைத்தாலும் அவனை நாம் ஆதரிக்கக் கூடாது என்று. தப்பான இடத்தில் வந்து அறிவுரை கூறுகிறீர் நண்பரே. ஒரு புறம் இஸ்லாமின் பெயரால் கொலை வெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டியது மறுபுறம் வந்து இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று சொல்வது என்று இரட்டை வேடம் போடுவதை நிறுத்துங்கள் முதலில், அதன் பின்னர் யாருமே இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற பதத்தையே பிரயோகப் படுத்த மாட்டார்கள்./////

    ச.திருமலை,

    மிகவும் தெளிவாக, அழகாக சொல்லியுள்ளீர்கள். இதை சற்றே விரிவாக்கி ஒரு தனிக்கட்டுரையாகவே நீங்கள் எழுதவேண்டும். இது எனது வேண்டுகோள்.

    மாணிக்கவாசகம், சீர்காழி.

  14. அமெரிக்க
    கலாச்சாரத்தை அழகாக எடுத்துக் காட்டியிருகிரீர்கள். மிக்க நன்றி. நம் அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. இது தமிழ்நாடு அரசின் வலைப்பதிவில் வரவேண்டும். அப்போது தான் அலுவலர்களும் அரசியல்வாதிகளும் திருந்துவார்கள். கட்டுரையை ஒட்டி வந்த கருத்துகள் பல விடயங்களை விளக்கின. மிக அருமையான பகுதி. ஆசிரியருக்கும் வெளியிட்ட உங்களுக்கும் மிக்க நன்றி.

  15. இது போன்ற கருத்தை நான் ஏற்கனவே சொல்லியிருப்பதாக ஒரு தகவல் திரையில் வருகிறது. நான் இந்த கட்டுரையை இப்போது தான் படித்து கருது சொல்லி உள்ளேன். ஆனால் இப்படிப்பட்ட அருமையான கருத்து வெளிவரும் போதெல்லாம் இவை தமிழக மக்களை சென்றடையவேண்டும் என்பதிலே நான் ஆவல் கொண்டவனாக உள்ளேன். ஆகவே தான் தமிழ்நாடு அரசு நடத்தும் வலைப்பதிவில் வரவேண்டும் என்று கூறுகிறேன். படிப்பார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நப்பாசை. வந்தால் முதலமைச்சர் கவனத்திற்கோ அதிகாரிகள் கவனத்திற்கோ போகுமே என்கிற அசை அப்படி கூறச் சொல்கிறது. தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *