கன்னியின் கூண்டு – 1

அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது…. எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம்…. ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது….

View More கன்னியின் கூண்டு – 1