தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

தியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது… “வெறும் உடல்பலத்தால் என்னபயன்? உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்? சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் – காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா? கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா? ஆடு புல்தின்றால் அது உபவாசமா? வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?…”

View More தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு… “உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் – உன் கருணை பெருமையோடு பேசப்படும் – என்னால்தான் உனக்குப் பெருமை – உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் – ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்… ”அலமேலு மங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு…”

View More வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்

கனகதாசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு அவருடைய வேதாந்தப் பண்பிற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. யாருக்கு ’மோட்சம்’ கிடைக்கும் என்பது பற்றி அறிஞர்கள் கூடியிருக்கும் இடத்தில் விவாதம்நடக்கிறது. அங்கிருக்கும் கனகதாசர் தனக்குத்தான் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார். நான் போனால், போவேன் [நானு ஹோதரே ஹோதேனு] என்று அவருடைய விளக்கம் அமைகிறது. கூடியிருந்த பண்டிதர்கள் அதிர்ந்து போகின்றனர்.

View More ‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான்.
அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள்.

View More பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை… “இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை – கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே, விஶ்வப் பிரமாவினுரா வேமா”…

View More வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா? எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்” என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்…

View More ஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…

பாரதி மரபில் ஜெயகாந்தன்

பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது… பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற நிலைதான் பொருத்தமானதாக இல்லை….

View More பாரதி மரபில் ஜெயகாந்தன்

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி – பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்… வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன… தீ எரியும் அசைய முடியாது – காற்று அசைய முடியும் எரியாது – தீ காற்றைச் சேரும் வரை – ஓரசைவும் இல்லை – தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது – மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா (தேவர தாசிமையா)… எனது மனமோ அத்திப் பழம் பாரையா ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை.. (பசவண்ணர்).. பொறி பறந்தால் – என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக எண்ணுவேன் – வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன் – தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே எண்ணுவேன் (அக்கா மகாதேவி)….

View More சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்