நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்… சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார் புட்பதந்தர். ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடையதாயிற்று….

View More நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி – பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்… வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன… தீ எரியும் அசைய முடியாது – காற்று அசைய முடியும் எரியாது – தீ காற்றைச் சேரும் வரை – ஓரசைவும் இல்லை – தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது – மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா (தேவர தாசிமையா)… எனது மனமோ அத்திப் பழம் பாரையா ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை.. (பசவண்ணர்).. பொறி பறந்தால் – என் வேட்கையும் பசியும் தீர்க்கப் பட்டதாக எண்ணுவேன் – வானம் திறந்தால் என் குளியலுக்காகத்தான் என எண்ணுவேன் – தலைவனே என் தலை தோளில் சாயும் போது உன்னையே எண்ணுவேன் (அக்கா மகாதேவி)….

View More சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

சைவசித்தாந்தத்துக்கு வித்து

‘அபேதம்’ என்பதற்கு மாற்றாகச் சைவசித்தாந்தம் ‘ஒன்றாயிருத்தல்’ என்று கூறும். கலப்பினால் ஒன்றாயிருத்தல். மெய்கண்டார் ஒன்றாயிருத்தலுக்குக் கூறும் எடுத்துக்காட்டு, ‘உடலுயிர்’ என்பதாம். ஒருவன் என் பெயரைச் சொல்லி அழைக்கிறான். நான் அவன் அழைப்பை ஏற்றுப் பதில் கூறுகிறேன். அந்தப் பெயர் உடலுக்கு உரியதா? உயிருக்கு உரியதா? இரண்டும் இல்லை. ஆனால் உடலும் உயிரும் கலந்து ஒன்றாக இருக்கும் அந்த நிலைக்கு உரியது. உயிரின் கலப்பு இல்லையேல் உடல் இல்லை; உடல் அழியும். அதுபோல, சிவமாகிய முதல்வன், உலகு உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இராதபோனால் அவற்றிற்கு இருப்பு (existence) இல்லை…. மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு…

View More சைவசித்தாந்தத்துக்கு வித்து

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்…. குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை…

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

எதற்காக இவ்வளவு பயங்கரமும் அச்சமும்? இதற்குப் பதிலாக, இயல்பாக நடனமாடினால் என்ன? எல்லாவற்றிலும் எப்போதும் புனிதத்தை நாடும் ஒரு உக்கிரமான, பித்துப் பிடித்த, உணர்வுடன் கூடிய, சிரத்தையான தேடலை முயற்சித்தால் என்ன? … பல நூற்றாண்டுகளாக, ரிஷிகளும், ஞானிகளும், கவிஞர்களும் கலைஞர்களும் அந்த தெய்வீக உருவை உள்ளுணர்ந்தும் ஓதியும், போற்றியும் பாடியும் ஆடியும், செதுக்கியும் வடித்தும் வரைந்தும் எண்ணற்ற விதங்களில் தரிசித்துள்ளனர்…. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியை நான் குறிப்பிட்டுத் தேடிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு நடராஜரிடத்திலும் அவரை வடித்த சிற்பி செய்திருக்கும் சில நுட்பமான கலை அம்சங்கள் புலப் படும். நடராஜ வடிவம் என்பதே ஒரு தனித்த சிற்ப மொழி என்றும், ஒவ்வொரு சிற்பியும் அதன் மூலம் தான் வடிக்கும் நடராஜ மூர்த்தங்களில் சில குறிப்பிட்ட உணர்ச்சிகளை மையமாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறாரோ என்றும் தோன்றும்….

View More அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

சத்தியத்தை – சிவத்தை – சுந்தரத்தை, சுடுகாட்டு அரங்கின் மைய நடனமாக அனுபவிக்கின்றது அம்மையின் மனம்.. புழுதி அள்ளி அவிக்க முயல்கின்றது பேய்! பூச்சுக்கள் உதிர்கையில், சாயம் வெளுக்கையில், புழுதி அள்ளி அவிக்க முயலும் கைகளும் நம் கைகளே என்பது புலனாகின்றது… ஒப்பனைகளின் அழிவில் பேயரங்கமும், அதன் மைய நிகழ்வாம் அப்பனின் ஆட்டமும் தெரிகின்றன. அந்த ஆட்டமே பிரபஞ்சத்தின் இயக்க மையம்; இலட்சிய மையம்.

View More பக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்

“தன்பெருமை தான் அறியான்”

நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.

View More “தன்பெருமை தான் அறியான்”