கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர். அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை.
இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல் கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன் மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர் சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.
இராமானுஜன் இறுதிமுடிவு தன் தாயினுடையதுதான் என கூறிவிட்டார். அன்று இரவு இராமானுஜனின் அன்னையின் கனவில் ஐரோப்பியர்களுக்கு மத்தியில் இராமானுஜன் தலையில் ஒளிவட்டத்துடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வர, அது அவர்களது குலதெய்வம் நாமகிரி தாயார் கொடுத்த உத்தரவு என கருதி அவரது அன்னை அவரை ப்ரிட்டன் போக அனுமதித்தார்.
1914ம் ஆண்டு இராமானுஜன் லண்டன் கிளம்பினார். அப்போது அவரது வயது 27. அவரது 22வது வயதில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ஜானகி. ஆனால் அன்றைய சம்பிரதாயப்படி அவருக்கு திருமணம் நடக்கையில் ஜானகிக்கு வயது 10 தான். திருமணம் ஆகிய பெண்கள் அதன்பின் வயதுக்கு வரும்வரை தந்தை வீடு சென்றுவிடுவார்கள். அதுபோல் ஜானகியும் தந்தைவீட்டுக்கு சென்றுவிட்டார். வயதுக்கு வந்தபின் தான் இராமானுஜனின் இல்லம் வந்து சேர்ந்தார். ஆனால் இராமானுஜனின் அன்னை அப்போதும் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அதன்பின் இராமானுஜன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து இலண்டனுக்கும் ஜானகியை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இலண்டன் செல்ல முடிவானதும் இராமானுஜனின் நண்பர்கள் அவரை லன்டன் பயணத்துக்கு தயார்படுத்துவதாக சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்கள். கோட்டு வாங்கலாம், அளவு எடுக்கலாம், தொப்பி வாங்கலாம் என சொல்லி அலைகழித்தது கூச்ச சுபாவம் உள்ள இராமானுஜனை மிக சலிபப்டையவைத்தது. லண்டனின் டர்பன் அணிந்து இருந்தால் அங்கே சக கணிதவியலாலர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள் என்பது அவரது நண்பர்களுக்கு தெரியவில்லை.
இராமானுஜன் சுத்த சைவம். அந்த கால விதிகளின்படி பிராமணர்கள் சமைத்ததை மட்டுமே உண்னமுடியும். அதனால் கப்பலில் தானே சமைத்ததை மட்டும் உண்டார். அதுபோக சின்ன, சின்ன விஷய்ஙக்ளை கூட அவருக்கு எடுத்து சொல்ல யாரும் இல்லை. கப்பலில் கடுமையாக குளிர்கிறது என புகார் செய்தபின் தான் இராமானுஜனுக்கு கப்பலில் உள்ள படுக்கையில் உள்ள போர்வைகளுக்கு அடியே படுக்கவேண்டும் என்ற உண்மையே தெரியவந்தது. அதற்கு முன் இந்தியாவில் கயிற்றுகட்டிலில் படுப்பதுபோல் கம்பளிகளுக்கு மேலே படுத்து குளிரில் அவதிபட்டுகொண்டு இருந்தார்.
இங்கிலாந்து சென்றதும் உனவு பிரச்சனை அவரை வாட்டி எடுத்தது. அது உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. தன் உணவை தானே சமைக்கவேண்டும் என்ற நிபந்தனையால் அவருக்கு குளிர்காலத்தில் காய்கறி கிடைப்பது, ஷாப்பிங் போவது, சமைப்பது முதலியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 30 மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வார். அதன்பின் 20 மணிநேரம் தொடர்ந்து உறங்குவார். சமைப்பது ஒரு நாளைக்கு ஒரு முறை, இருமுறைதான். இதனால் உடல் மிக மெலிந்து விட்டது.
மருத்துவமனையில் சேர்க்கபட்டு பின் இந்திய பயணத்தை உடல் தாங்கும் என மருத்துவர்கள் கூறி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார், லண்டனில் இருந்த குறுகியகாலத்தில் அவர் செய்த ஆய்வுகளை நூறு ஆன்டுகள் கழிந்தும் இன்னும் கணித உலகில் மிகப்பெரும் அளவில் கொண்டாடபடும் அளவு உள்ளன என்பது குறீப்பிடதக்கது.
சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவரது தாயார் மட்டும் வந்து இருந்தார். “எங்கே ஜானகி” என கேட்கவும் அவரை நாமக்கல்லில் விட்டுவிட்டு வந்ததாக தாயார் கூறினார். கடும்கோபமடைந்த இராமானுஜன் ஜானகியை தன் மாமியாருடன் சென்னைக்கு வரவழைத்தார். சென்னையில் கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் ஜானகி அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இராமானுஜனின் கடைசி 3 ஆண்டுகள் ஜானகியுடன் கழிந்தது.
“அவருக்கு அரிசி, லெமென் ஜூஸ், பால், நெய் கொடுத்துவந்தேன். வலி எடுக்கையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பேன். அந்த பாத்திரங்கள் கூட இன்னும் அந்த நினைவாக என்னிடம் உள்ளன” என பெருமிதத்துடன் பின்னாளில் கூறினார் ஜானகி. இராமானுஜனுடன் அவரது மணம் முழுமை அடைந்ததா என்பதே பலரும் சந்தேகித்த விஷயம். சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன் 33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார். அப்போது ஜானகியின் வயது 21.
அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. ‘நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்” என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார். 1962ம் ஆண்டு இராமானுஜனின் 75வது பிறந்தநாள் விழா கொன்டாட்டங்களின்போது தான் ஜானகி என ஒருவர் இருப்பதே தெரிந்து அவருக்கு 20,000 ரூபாய் பரிசளித்து மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கினார்கள். இராமனுஜனின் வார்த்தைகள் இப்படி பலவருடங்கள் கழித்தே உண்மையானது,.
அரசாங்கம் மறந்தாலும் கணித உலகம் ஜானகியை மறக்கவில்லை. உலகின் புகழ்பெற்ற கணித நிபுணர்களான ஆண்ட்ரூஸ், பெர்னபார்ட் முதலானோர் சென்னை வந்தபோதெல்லாம் ஜானகியின் தையல் கடைக்கு சென்று அவரை சந்திக்க தவறவில்லை.
இராமனுஜனுடன் வாழ்ந்த சிலவருடங்களை தன் இறுதிகாலம் வரை மனதில் சுமந்த ஜானகி இறக்கையில் அவரை சந்திக்கபோவதாக சொல்லி மகிழ்ச்சியுடன் உயிர்நீத்தார். வருடம் 1994. அன்று ஜானகியின் வயது 95.
மரணத்துக்குபின் சுவர்க்கத்தில் ஜானகி தன் கணவனை மீண்டும் சந்தித்தார் என நம்புவோம்.
செல்வன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உணவு, சுகாதாரம், உடல்நலம் மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
ராமானுஜனைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர்க்கு அண்மையில் வெளியான “அனந்தத்தை அறிந்தவன்” என்ற நூலைப் பரிந்துரைக்கிறேன். இந்நூல் வால்ட்டர் கேனிகேல் என்பவர் எழுதிய “The Man who knew Infinity”
என்ற புத்தகத்தின் மொழியாக்கம்.
மேதைகளுக்கு தமிழகத்தில் மதிப்பும் மரியாதையும் அவ்வளவு தான்.
ஒரு மாமேதையின் மனைவி தையல் வேலை செய்து காலம்கழித்ததையும் 74 ஆண்டுகள் ஆதரவற்ற விதவையாக வாழ்ந்ததையும் நினைத்தால் இந்த நாட்டையும் சமூகத்தையும் நினைத்து அழுவதா அல்லது விதியை நினைத்து வேதனைப் படுவதா? புரியவில்லை
அவரது அம்மா கனவு கண்ட அதே நேரத்தில் நாமகிரித் தாயாரின் உத்திரவு வாங்க கோவிலில் படுத்திருந்த ராமானுஜத்தின் கனவிலும் ஒரு ஒளி தோன்றியது.அதையே அவர் கடவுள் தனக்குக் கொடுத்த அனுமதியாகக் கருதினார்.
கை ரேகை சாத்திரத்தில் நிபுணரான நம் கணித மேதை, தன் கை ரேகைகளைப் பார்த்து தன் ஆயுள் முப்பத்திரண்டரை என்று தன் தாயிடம் கூறுவாராம்.அதை கேட்டு அவரது தாய், “நீ எது சொன்னாலும் பலித்து விடும்”,அப்படிச் சொல்லாதே என அழுவார்களாம்.
ிரு.ரகமி அவர்கள் எழுதி உள்ள கணித மேதை ராமானுஜம் என்ற புத்தகத்தில் மேலும் பல விவரங்களைக் காணலாம்.மகா லட்சுமியின் அருளால் பிறந்தவர் வறுமையில் வாடி சரஸ்வதி கடாட்சத்துடன் வாழ்ந்தது, எல்லா கடவுளும் ஒரே பரப் பிரம்மத்தின் ஸ்வரூபம் என்ற இந்து மத கொள்கையின் சத்தியத்துவத்தைக் காட்டுவதாக உள்ளது.
இளம் வயதிலேயே கணவனை இழந்தும் ,மனம் தளராமல் வாழ்ந்த இந்த கற்புக்கரசி,சுவர்க்கத்தில் ராமானுஜனை சேர்ந்திருப்பார் என்பதில் ஐயமேதுமில்லை.
வாஞ்சிநாதன்,ராமானுஜம்,மாடசாமி பிள்ளை,வ.உ.சிதம்பரம் பிள்ளை,செண்பக ராமன் பிள்ளை போன்ற பலரின் வாரிசுகளை /மனைவிமார்களை நாம் சரியாக கவனித்துக் கொள்ளாத பாபமே நம் நாடு படும் பல கஷ்டங்களுகுக் காரணமோ என்று கூடத் தோன்றுகிறது.
https://jayabarathan.wordpress.com/ramanujan/ [கணித மேதை ராமானுஜன்]
“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 ! பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”
பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.
1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!
ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்!
ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!
சி. ஜெயபாரதன்
Very poignant! what great personage! Bharati, Swamiji, ADI Shankara, Ramanujan oh what an arrogant, selfish , indifferent and barbaric society! Had they been born in any other country!
திரு. ஜெயபாரதன் அவர்கள் அளித்த தகவல் அற்புதமாக இருந்தது . இப்படிப்பட்ட மேதைகளை தமிழ் இனம் அறிய வெளி கொண்டு வர வேண்டும் . அவரது மனைவி தையல் வேலை செய்து வாழ்கை நடத்தியது , வேதனை தருகிறது இவரே வெளி நாட்டில் பிறந்து இருந்தால் , இவரது பெயரில் ! பல்கலை கழகங்கள் ஏற்பட்டு இருக்கும் ! தமிழர் பெருமை தமிழருக்கே தெரிய வில்லை .
YARUM ARIYATHA THAGAVAL NANTRI
எழுத்தாளர் சு.ரா சொல்வதுபோல, மேதைமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்ன எழவு உறவோ. ராமானுஜன், பாரதி, புதுமைப்பித்தன் …. நாம் மதிக்க மறைந்த பெரும் ஆளுமைகள்தான் எத்தனை.
கணிதவியலை செழுமைப்படுத்திய ஒரு மேதையின் மனைவியை வறுமையில் வாடவிடும் இந்த சமூகம்தான் ‘தளபதி’-களும் ‘தல’-களும் கோடிகளில் புரள வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கிறது.
‘கவிதை தேவைப்படாத சமூகம் இது’ என்று தமிழ் சமூகத்தை துயரத்தோடு வர்ணித்தான் கவியொருவன்.
பெண்ணுக்குப் பெண்ணே எமன் என்பது போல மாமியாரே மகனையும் மருமகளையும் சேர்ந்து இருக்க விடவில்லை என்பது துயரத்திற்குரியது.
இத்தகைய ஒரு மேதையின் துணைவி தம் இறுதிக் காலம் வரை சமூகத்தால் ஒரு உதவியுமின்றி புறக்கணிக்கப் பட்டது மிகவும் பரிதாபம். சிஸ்டர் சுப்புலட்சுமி போன்றோர் இளம் விதவைகளுக்கு எத்தனை உதவிகள் செய்துள்ளனர். அவர்களுடைய தொடர்பு ஜானகி அம்மாளுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத் தக்கதே!
தாயென்பவள் ஆணுக்கு வேரென்றால் மனைவியை
கிளையாக கனியாக உணரும் ஆணே வாழ்வின் பொருளறிந்தவன். மகனின் வாழ்க்கையை பாசத்தின் பெயரால் சிதைப்பவளை எங்ஙனம் தாயென்பது. தாயை பராமரித்தல் நம் கடப்பாடு எனினும் சொந்த வாழ்க்கையில் அவளின் நிழல் படாமல் தொடரவேண்டும்.
கவிச்செம்மல் கானப்ரியன்