தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?….
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3Author: சிவஸ்ரீ விபூதிபூஷண்
கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2
மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று. நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்….
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1
ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அறிவார்ந்த தமது சீடர்களில் சிலருக்கு இந்த நூலைக்கற்பித்து, அவர்களை சிறந்த சொற்பொழிவாளர்களாகவும் பயிற்றுவித்தார். கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பொதுவிடங்களிலும் கோயில்களிலும் கூடும் ஹிந்துக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது, சுவாமிகளின் இந்த சீடர்களும் கிறிஸ்தவத்தினை கண்டிக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். பின்னாளில் 1890க்குப்பிறகு சுவாமிகளின் இரு முக்கிய சீடர்கள் கேரளம்முழுவதும் பிரயாணம்செய்து கிறிஸ்துமதச்சேதனத்தில் உள்ளக் கருத்துக்களைப் பரப்பினார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது….
கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தடுத்து முறியடிப்பதற்கு மிகச்சிறந்தவழி அவர்களது கிறிஸ்தவம் மட்டுமே உண்மையானமதம் என்ற கருத்தினை நிராகரிப்பதுதான் என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெளிவாக அன்றே உணர்ந்திருந்தார்.
View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1