கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி.
சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?….

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2

மிசனரிகளின் பொல்லாத செயல்களைக்கண்டும் கேட்டும், நாம் அவற்றைத்தடுக்க எதையும் செய்யாமலிருப்பது முறையோ, தர்மமோ அன்று. நமது செயலற்ற தன்மையின் விளைவாக, நமது சமூகம் ஏற்கனவே தனது மூன்றில் ஒருபங்கு மக்களை இழந்துவிட்டது. இன்னமும் இந்த இழப்பு தொடர்கிறது. நமது செயலற்றத்தன்மை பலதலைமுறைகளுக்கு நமது மக்களின் இகபர சௌபாக்கியங்களை இல்லாததாக்கிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே, அறிஞர்களாகிய ஹிந்துக்கள் தமது சுய நலத்தினைத் துறந்து, ஒன்றிணைந்து தமது எளியமக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மேன்மையான செயலாகும். மதமாற்றம் என்னும் அபாயத்தினைத் தடுத்துநிறுத்துவதற்கும், நமது மக்களின் இகபர நலத்தினைப் பேணுவதற்கும் இது அவசியம் வழிவகுக்கும்….

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2