தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..
View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசுAuthor: எஸ். இராமச்சந்திரன்
தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்
சமீபத்தில் தேவசகாயம் பிள்ளை (1712-1752) என்பவருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மத அதிகார பீடம் “புனிதர்” பட்டம் வழங்கியது… திருவிதாங்கோடு அரசின் படையிலும் அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்துவந்த நாயர் சமூகத்தவரான நீலகண்டன் பிள்ளை என்பவர் 1745ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். லாசரஸ் என்ற இவரது பெயரைத் தேவசகாயம் என மொழிபெயர்த்து வழங்கினார்கள். சர்ச் கட்டுமானத்திற்குத் தேவையான தேக்கு மரங்கள் தேவசகாயம் பிள்ளையால் அவரது பதவிச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றிக் கடுக்கரை மலையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டன. இத்தகைய செயல்களால் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்…
View More தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்
தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது… கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்…
View More பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்