பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)

மிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்தினைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளார்.

கருணாநிதி தமக்குத் தாமே ‘முத்தமிழ் அறிஞர்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டவர். முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும். நாடகத் தமிழ் நூல்களுள் தலையாயது சிலப்பதிகாரம். தாம் சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றும், சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்தும், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைத்தும் சிலம்புக்குப் பெருமை சேர்த்தவர் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் பூம்புகார் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதி. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் வருகிற ஒரு குறிப்பை (கால்கோட்காதை – வரி. 25-26) அவருக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும். ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள் என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் வழங்குகிற Month (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும். எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும். அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென கருணாநிதியாலேயே போற்றப்பட்ட – போற்றப்படுகிற(?) ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது. மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது. சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது. அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

கார்த்திகையைக் கருணாநிதியே ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது கருணாநிதியில் கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதாகச் சட்டம் இயற்றிய கருணாநிதிக்கு திஷ்ய நட்சத்திரத்தின் பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.

கருணாநிதிக்கு வேண்டியவரான ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியுள்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார். கருணாநிதி, ஐராவதம் மகாதேவன் அவர்களைக் கலந்து ஆலோசித்திருந்தால், பூசை என்றல்லவா மாதப் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார். அவர்தாம் அனைத்தும் அறிந்தவர் என்ற எண்ணம் உடையவராயிற்றே?

தை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது. அதாவது, கருணாநிதியால் பழித்துப் பேசப்படுகிற ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல. பஞ்சாங்கக் காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட பழம் பஞ்சாங்கக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த தை முதல் நாளை மட்டும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, அதனைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று புதிதாக நாமகரணம் செய்கிற அளவிற்கு அடாவடித்தனம் உள்ள ஒருவர், எப்படி அறிஞர் ஒருவரைக் கலந்தோசிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

ஐராவதம் மகாதேவனைக் கலந்து ஆலோசித்திருந்தால், டிசம்பர் 20ஆம் தேதியன்றே சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது என்பதால் டிசம்பர் 20ஆம் தேதியைத்தான் தை முதல் நாளாக நிர்ணயித்து, அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றாவது ஐரோப்பிய வானநூல் அறிவுக்கும் கருணாநிதியின் ஆணவத்திற்கும் ஒத்திசைகிற வகையில் ஒரு வழியையாவது சொல்லிக் கொடுத்திருப்பார்.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள். நம் முன்னோர்களைப் பற்றி இவர் புரிந்து கொண்டது, தமிழைப் புரிந்து கொண்டதுபோல் இவ்வளவுதான்.

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. எந்நேரமும், எந்த ஆதாயத்திலும் தம் பங்கு என்ன என்ற சிந்தனையிலேயே மூழ்கி இருப்பவர்களுக்குப் பங்குனிக்கான பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.

இறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.

(இக்கட்டுரை, ஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).

கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.

மறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு), தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னையில் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) என்ற ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார்.

38 Replies to “பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்”

  1. கருணாநிதியின் அபத்தங்களுக்கு நேரடியான பதில் சொன்ன எஸ், ராமச்சந்திரனுக்கு நன்றிகள் பல.

  2. முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்ட மன்றத்தில் இந்த விவரங்களை சொன்னபோதுதான் பலருக்கும் இந்த உண்மை புரிந்திருக்கும். இப்போது திரு இராமச்சந்திரன் அவர்கள் கொடுத்திருக்கும் விவரங்கள், கோணல் கட்சி பேசி தன்னை உலக மகா அறிவாளி என்று பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர்களின் பிதற்றல்களுக்கு ஆப்பு வைத்து விட்டது. நம் முன்னோர்களின் ஆய்ந்தறிந்த முடிவுகள் எத்தனை அறிவு பூர்வமானது என்பதை உணராமல், தான் மட்டும் என்னவோ வானத்தில் இருந்து குதித்த மாமேதை என்று நினைத்துக் கொண்டு பிதற்றுபவர்கள் இனியாவது நம் முன்னோர்களின் முடிவுகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மகாகவி பாரதியின் ஒரு பாடலை இங்கு குறிப்பிட்டு, அந்த கருத்து ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அரை வேக்காட்டு மேதைகளுக்கும் பொருந்தும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தப் பாடல்:–

    “கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர் பின்
    கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
    அணி செய் காவிய மாயிரம் கற்கினும்
    ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்
    வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவர்
    வாழும் நாட்டிற் பொருள் கெடல் கேட்டிலார்
    துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
    சொல்லுவார் எத்துனை பயன் கண்டிலார்.”

    “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
    காளிதாசன் கவிதை புனைந்ததும்
    உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
    ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
    நம்பரும் திறலோடொரு பாணினி
    ஞால மீதில் இலக்கணம் கண்டதும்
    இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
    இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

    சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
    தெய்வ வள்ளுவர் வான்மறை செய்ததும்
    பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
    பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்
    பேரருட் சுடர் வாள் கொண்டு அசோகனார்
    பிழை படாது புவித் தலம் காத்ததும்
    வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீய கோல்
    வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

    அன்ன யாவும் அறிந்திலர் …………. (?)

  3. “எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.”

    திராவிட மொழி என்று சொல்லாதீர்கள். அப்படி எதுவும் கிடையாது. நம் தமிழ் மொழியிலிருந்தே இவை எல்லாம் சமஸ்கிருதத்துக்கு சென்றன. திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பு தான். மொழி அல்ல. தமிழே மொழி. திராவிடம் மொழி என்பது சில குருடர்களின் பிதற்றல்.

  4. கட்டுரை ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்கமளித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
    தை முதல்நாள் தமிழர் புத்தாண்டின் தொடக்கம் என்று கருணாநிதி முதல்வராக
    இருந்தப் போது சட்டம் இயற்றப்பட்டதே, அப்போது இந்த ஆதாரங்கள் எங்கே
    போயிருந்தன? இன்று தமிழக முதல்வர் ஜெ சித்திரை என்று மாற்றியவுடன்,
    கருணாநிதி என்னவோ அதற்குப் பதில் சொல்ல உளறிக்கொட்டியவுடன்
    இத்தனை ஆதாரங்களும் தோண்டி எடுக்கப்படுவது மட்டுமே எங்களைப் போன்றவர்களைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

    உண்மைகளை எப்போதும் எந்த ஆதாயங்களும் எதிர்பார்க்காமல் எந்தச் சூழலிலும்
    சொல்வதை வளர்த்தெடுப்போம்.

  5. @அத்விகா; தமிழிலிருந்து தான் சமஸ்கிருதம் சென்றது என சொல்வது ஏற்புடையது அல்ல.அப்படி எனில் தமிழில் ஏன் 60-70% சொற்கள் சமஸ்கிருதத்தாலானவை.
    சமஸ்கிருத கலப்பு இலாமல் தமிழை பேச முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.அந்த ஆரய்ச்சி மிக விரிவானது என்று மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

  6. அத்விகா கூறியுள்ளது போன்ற கருத்துக்கள் அறியாமையால் விளைவது.

    தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது மொழியல் வல்லுனர்களின் முடிவு. தமிழின் தொன்மை சமஸ்கிருதத்தின் தொன்மை இரண்டுமே முழுமையான முடிவை எட்டவியலாதபடிக்குத்தான் இன்னமும் இருக்கின்றன.

    தமிழும் சமஸ்கிருதமும் சிவனின் இரு கண்கள் என்று கூறுவது நம் மரபு.

    சமஸ்கிருதம்தான் எல்லாமும் என்று சொல்லும்போது, தமிழ்தான் எல்லாமும் என்று சொல்லும் எதிர்வினை வரத்தான் செய்யும். அதன் மாற்றும் பொருந்தும்.

    தமிழைத் திராவிடம் என்றும் சமஸ்கிருதத்தை ஆரியம் என்றும் குறிக்கும் எத்தனையோ பழந்தமிழ்ப் பாடல்கள் உள்ளன. அத்விகா திருஞானசம்பந்தப் பெருமானின் தேவாரத் திருப்பதிகங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே வெறுப்பை உமிழ்வதற்குப் பதில் தேவாரத்தைப் படித்தால் உண்மையான அறிவு வளரும்.

  7. புதியமாதவி
    கருணாநிதியின் அராஜகப் போக்கை அறிந்துமா இவ்வாறு எழுதுகிறீர்கள்? எதிர்கட்சித் தலைவரை 89 ல் அவையிலேயே அவமானப் படுத்த முயற்சித்ததை கண்டித்தார் சி சுப்பரமணியம். சில மணி நேரங்களிலேயே அதை திரும்ப பெற நேர்ந்தது. கழக ஜனநாயகப் பற்று. பாவம் ராமச்சந்திரன் போன்ற அறிஞர்கள் நலமோடு இருக்கட்டும்.

  8. “அஞ்சன்குமார் on May 2, 2012 at 8:33 am”

    கருணாநிதி தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் நாளுக்கு மாற்றி போட்ட உத்திரவு குப்பை தொட்டிக்கு போய்விட்டது. ஏனெனில் அதற்கு தகுந்த இடம் குப்பை தொட்டி தான்.
    சமஸ்கிருதத்திலிருந்து ஜோதிட சொற்கள் தமிழுக்கு வரவில்லை. தமிழிலிருந்துதான் சமஸ்கிருதத்துக்கு சென்றன. இதுதான் உண்மை. அறியாமை இருப்பது ஒரு குற்றம் அல்ல. அறியாமையை போக்க முயற்சி எடுக்காமல் இருப்பது தான் தவறு. தமிழிலிருந்து தான் சமஸ்கிருதம் பிறந்தது என்று இந்த வருட நூல் கண்காட்சியில் ( book fair) சென்னையில் ஒரு புதிய ஆய்வு கட்டுரை நூல் விலைக்கு வந்துள்ளது. அதுவே உண்மை. எனவே மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. எனவே தான் கிருத்தவ பாதிரிகள் ஆய்வு என்ற பெயரில் செய்த பித்தலாட்டங்களை நாம் கண்டிக்கிறோம். ( இந்த பித்தலாட்டக்காரர்களின் பட்டியல் கால்டுவெல்லில் இருந்து ஆரம்பம் ஆகிறது.)

    சமஸ்கிருதம் என்பது வேதத்தின் மொழி அல்ல. வேதம் என்பது சந்தஸ் என்ற மொழியாகும். ( பார்க்க – தெய்வத்தின் குரல் பாகம் -௨) வேத மொழியின் பல கூறுகளை சமஸ்கிருதம் பிற்காலத்தில் தன்னகத்தே உட்கிரகித்துக்கொண்டது. பிராகிருதம் சமஸ்கிருதத்துக்கு முந்தையது. ஆனால் வேதமொழி மிக பழமையானது. வேத மொழியின் தாய் மொழி தமிழே. குறுகிய எண்ணங்களுடன் ஆராய்ச்சி என்ற பெயரில் சிலர் குழப்புவது எப்போதும் உண்டு.

    கிறித்தவப்பாதிரிகள் இந்திய திருநாட்டில் புகுந்தவுடனேயே, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு , அனைவரையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக்கினர்.

    ஆரியம் என்பது மொழியல்ல. திருவாசகத்தில் மணிவாசகப்பெருமான் -( சிவபுராணத்தில் ) ” பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே ” என்று சிவபெருமானை அழைக்கிறார். ஆரியன் என்பது தமிழ் சொல்லே ஆகும். அதன் பொருள் வீரன் என்பதும் , சிறந்த தலைவன், என்பதும் ஆகிறது.கபாடபுரம் கடலில் மூழ்கியபோது, தமிழின் மிகச்சிறந்த நூல்களை கடல் கொண்டது. எனவே, எது முந்தியது என்ற கால ஆராய்ச்சியை தவிர்ப்போம். அது தேவை அற்றது.

  9. மிக்க நன்றி! இம்மாதிரி விளக்கங்கள் உடனுக்குடனும் தேவைப்படுவது இம்மாதிரி தொலைத்செய்தி தொடர்பு மிக்க நாட்களில் மிகவும் அவசியமாகிவிட்டது. தமிழுக்காக தாங்கள் ஒரு முகபுத்தக பக்கம் நடத்துவது தமிழ் ஆய்வாளர்களுக்கும் என்போன்ற கடைநிலை ஆவர்லர்களுக்கும் மிகவும் பயனளிக்கும். நன்றி.

  10. கட்டுரை ஆசிரியருக்கு இந்திய மற்றும் தமிழக மக்கள் நிறைந்த நன்றிக் கடன் பட்டிருக்கின்றனர். அதே அளவுக்குக் கருணாநிதிக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றனர். அர்த்தமற்ற அபத்தங்களைப் பரப்பும் வேலையை அவர் மட்டும் செய்யாமல் போயிருந்தால் இப்படிப்பட்ட கட்டுரைக்கு இடம் ஏது? தகவல்களை அதி அற்புதமாகத் திரட்டியுள்ள திருவாளர் எஸ். இராமச் சந்திரனுக்கு மேலும் மேலும் உழைக்க உடலும் உள்ளமும் ஒத்துழைக்கட்டும்.

  11. @எஸ்.ராமச்சந்திரன்/அத்விகா.
    திராவிடச்சான்றோர் பேரவை சாமி தியாகராஜ(ச)ன் 15-4-12 தினமணியில் தமிழ்
    புத்தாண்டு சித்திரைத்திங்கள் தான் ஆரம்பம் என்று மறுக்கமுடியாத கருத்துக்களில் எழுதி ஆனால் தமிழ் வடமொழி 60 வருஷங்கள் மாற்றியாக வேண்டும் என உரைத்துள்ளார்.அந்த 60 “தமிழ்வருஷங்களுக்கும்” வெண்பா தமிழில் தான் உள்ளதை ஏனோ அவர் சொல்லவில்லை. நமது சான்றோர்கள்
    தமிழ் புத்தாண்டின் போது அவ்வருஷத்தய தமிழ் வெண்பாவை படிப்பதை வழக்கமாக்கிஉள்ளனர்.
    சங்க காலம் என்பது வடமொழிச்சொல்.தமிழ் செய்யுள்கள் பெரும்பாலும் சமஸ்கிருத/வடமொழி பதங்கள் நிரம்பி உள்ளன.சாமி தியாகராச(ஜ)ன்
    என்பதும் வடமொழிச்சொல் . திராவிடஇயக்கத்திற்கு பின்பும் திராவிடத்தமிழ்
    மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருத/வடமொழியினால் கடவுளுக்கு பூஜை செய்யும் நாமாக்களையே பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.தமிழ் பெயரை யாரும் சூட்டுவதில்லையே.பேருந்து,பேருந்து நிலயம்,மிதிவண்டி,2/4 சக்கரவண்டி
    (சக்கரம்வடமொழி)புகைவண்டி,புகைவண்டிநிலயம்,மின்விசிறி,குளிர்சாதனப்
    பெட்டி,குளுகுளு/மிதவைபேருந்து/ஊர்தி,அஞ்சலட்டை,வில்லை,அஞ்சலகம்,
    வங்கி,தொலைபேசி,கைபேசி,திருமணம்…….என்ற அன்றாடம் வாழ்க்கைக்கு அவசியமான தமிழ்சொற்களை திராவிடத்தமிழ்மக்கள் கையாளாமல் சீண்டுவார் அன்றி உள்ளது.Marriage hall லின் வாயிலில் நடக்கவிருக்கும் திருமணக்குறிப்பு அதாவது “so & so weds so& so” என்று ஆங்கிலத்தில் இருக்குமே தவிர்த்து நம்
    தாய்மொழியான தமிழில் இருப்பதேஇல்லை.நிலைமைஇப்படிஇருக்க பிறந்த சிசுவிற்கு ஜாதகம் குறிக்கும் காலத்தில் மட்டும் ஒருசிலரால் கையாளப்படுகின்ற இந்த 60 தமிழ் (வடமொழி) வருஷங்களை எதற்காக மாற்றவேண்டும்.
    பெரும்பாலும் ஆங்கில வருஷ/ நாட் காட்டியைத்தான் தமிழ் திராவிட மக்கள் ஜாதகம் குறிக்க கையாளுகிறார்கள்.

  12. தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

    சந்தஸ் : வேதத்தின் பாதம்

    மாதப் பெயர்கள்

    மார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவா?தமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.

    பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைசாகி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.

    அநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.

    ஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் – முன்;உத்தரம் -பின். ‘பூர்வாஷாட’த்தில் ‘ர்வ’கூட்டெழுத்துச் சிதைந்தும், ‘ஷா’உதிர்ந்தும், தமிழில் ‘பூராடம்’என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை ‘உத்திராடம்’ என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், ‘ஆஷாடீ’எனப்படுவதுதான், நம்முடைய ‘ஆடி’ மாஸம்.

    ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள ‘ச்ர’தமிழில் அப்படியே drop -ஆகி, ‘வண’த்தை ‘ஒணம்’என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், ‘திரு’என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே ‘ஆர்த்ரா’என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும்’திரு’ சேர்த்துத் ‘திருவாதிரை’என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் ‘திரு’போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான ‘ச்ராவணி’தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.

    இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு ‘ஸிம்ஹளம்’என்பது ‘ஈழம்’என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.

    ‘ஸீஸம்’ என்பதுதான் ‘ஈயம்’என்றாயிருக்கிறது. ‘ஸஹஸ்ரம்’என்பது கன்னடத்தில் ‘ஸாஸிரம்’ என்றாயிருக்கிறதென்றால், அந்த ‘ஸாஸிரம்’ தமிழில் ‘ஆயிரம்’என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.

    ‘ஆயிர’த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு;அஷ்ட-எட்டுஎன்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octo, nove,deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது ‘ஏக’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் ‘ஒ’ வும், ஸம்ஸ்கிருத ‘ஏக’வின் ‘க’வும் சேர்ந்து ‘ஒகடி’என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட -ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

    ஸிம்ஹளத்தில் ‘ஸிம்ஹ’என்பதில் ஸ,ஹ இரண்டும் drop -ஆகி ‘இம்ளம்’, ‘ஈளம்’ என்றாகி, ள வும் ழ வாகி ஈழம் என்று ஏற்பட்டிருக்கிறது.

    ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. ‘அஷ்ட’ என்பது ‘அட்ட’என்றாவது தெரிந்ததுதானே?உத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.

    ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ‘ ஆச்வயுஜீ ‘ அல்லது ‘ ஆச்வினீ ‘ தான், நம் ‘ ஐப்பசி ‘.

    கிருத்திகாவுக்கு adjective -ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறது?மார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை!) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்துக்குத் திவ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் ‘தைஷ்யம்’. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் ‘தை’மட்டும் நிற்கிறது.

    மாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிறது. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று C யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் C யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.

    பூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளவிட்டு, ‘பூர்வ’த்தை ‘பூரம்’ என்றும், ‘உத்தர’த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் “பல்குன”என்ற சப்த ஸம்பந்தமுள்ள “பங்குனி” என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.

    இப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்.

  13. vedanishthananda on May 18, 2012 at 7:36 am

    தெளிவாக நன்கு தொகுத்து கொடுத்ததற்கு நன்றிகள் பல உரித்தாகுக. அதே சமயம், தமிழிலிருந்துதான் இந்த மாதப்பெயர்கள் சமஸ்கிருதத்துக்கு சென்றன என்றே நான் கருதுகிறேன். தமிழின் கிளை மொழியே சமஸ்கிருதம் ஆகும். அது தமிழனுக்கு வேற்று மொழி அன்று.

  14. //
    தமிழின் கிளை மொழியே சமஸ்கிருதம் ஆகும். அது தமிழனுக்கு வேற்று மொழி அன்று
    //
    ஆமாம் அமாம் அப்படியேதான்.

  15. அத்விகா

    //
    சமஸ்கிருதம் என்பது வேதத்தின் மொழி அல்ல. வேதம் என்பது சந்தஸ் என்ற மொழியாகும். ( பார்க்க – தெய்வத்தின் குரல் பாகம் -௨) வேத மொழியின் பல கூறுகளை சமஸ்கிருதம் பிற்காலத்தில் தன்னகத்தே உட்கிரகித்துக்கொண்டது. பிராகிருதம் சமஸ்கிருதத்துக்கு முந்தையது. ஆனால் வேதமொழி மிக பழமையானது. வேத மொழியின் தாய் மொழி தமிழே. குறுகிய எண்ணங்களுடன் ஆராய்ச்சி என்ற பெயரில் சிலர் குழப்புவது எப்போதும் உண்டு.
    //

    உங்களது மிக கடின ஆராய்ச்சியின் முடிவாக பார்கிறேன். உள்வாங்கிகொண்டது புரமேடுத்தது என்று வார்த்தைகளை போட்டு அசத்துகிறீர்கள்.

    வேத மொழிக்கு தமிழ் மொழியே அம்மா என்பதற்கு உங்களிடம் இருக்கும் சான்றுகளுள் ஒன்றை கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு உதவலாம் என்று ஒரு க்ளு தாரேன்.

    நாம் உலகில் பார்க்கும் எந்த வஸ்துவுமே வளர்ச்சியற்ற நிலையிலிருந்து வளர்ச்சிபெற்ற நிலையை அடைகிறது. தமிழில் பாருங்கள் ஒரு க ச த த ப தான் இருக்கு சமஸ்க்ரிதஹ்தில் நான்கு எதற்கு. சும்மா நாங்க வேறேன்னு kaattikka சேத்துக் கொண்டார்கள். இப்போ தமிழ் மொழியில் இல்லாதது சமஸ்க்ரிதத்தில் இருக்கிறது என்றால் தமிழ் தான் முதல் மொழி. இது நானாக இட்டுக் கட்ட வில்லை இது மாதிரி முன்னாடி இதே தளத்தில் ஒருவர் கமெண்டு போட்டிருக்கிறார். தமிழில் ஒருமை பன்மை தான் இருக்கிறது, சமஸ்க்ரிதத்தில் இருமை என்பதும் இருக்கிறது. பாத்தீங்களா சேத்துகிட்டாங்க.
    [ இதுல ஒரு சின்ன பிரச்சனையை சமஸ்க்ரிதத்தில் குறில் எ ஒ கிடையாது, தமிழில் இருக்கு]

    சமஸ்க்ரிதத்திர்க்கு முன்னாடி ப்ராக்ருதம் இருந்தது வேத பாஷை இருந்தது அப்புறம் சமஸ்க்ரிதம் வந்தது என்றெல்லாம் அடித்து விடுவது ஏனோ தெரியவில்லை. பாவம் பாணினி. அவர் கொடுக்க நினைத்தது வேத ஒரு நல்ல இலக்கண கோர்ப்பு அவ்வளவே. பண்டித மொழி, வீதி மொழி என்று எப்பொழுதுமே இருந்தது. பாணிக்கு பிறகு வீதி மொழி மெல்ல க்ஷீநித்தது. பாணினி இரண்டுக்கும் சேர்த்து தான் இலக்கணம் எழுதினர். ப்ராக்ருதம் என்று ஒன்று இருந்திருக்கவே முடியாது. சமயக் க்ருதம் அதனால் சமஸ்க்ருதம். பராக் க்ருதம் (முன்னாள் செய்தது) என்று முன்னாடியே பெயர் வைத்துக் கொள்ள முடியாதல்லவா.

    பிராந்திய சொல்லாடல்களுடன் கூடிய வேத மொழியையே ப்ராக் க்ருதம் என்று பின்னால் வழங்கினர்.

    இது பத்தி எல்லாம் குப்புசாமி ரிசர்ச்சு சென்டர்ல உண்மையாவே ஆராய்ச்சி பண்ணி பூக்கு போட்டிருக்காங்க (வ்யவஹார சம்ச்க்ரிதம்). அப்புறம் ஒன்னொரு புக்கு “ஞானே உத தர்ம பிரயோகே” இதிலேயும் விரிவாக அலசப்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் முன்னாடியே பதஞ்சலி முனி தனது மகா பாஷ்யத்தில் நாம் இங்கு பேசுவதெல்லாம் எவ்வளவு அர்த்தமற்றது என்று காட்டியுள்ளார்.

  16. அன்புள்ள சாரங்,

    நான் ஒன்றும் அடித்துவிடவில்லை. காஞ்சி மகாபெரியவர் அருள்திரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்கள் , தெய்வத்தின் குரல் இரண்டாவது தொகுதியில் தெளிவாக எழுதியுள்ளார். குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிடியூடு தெரிவித்துள்ள கருத்து சரியல்ல. புத்தகம் யார் வேண்டுமானாலும் போடலாம். நான் சமஸ்கிருதத்தை எதிர்ப்பவன் அல்ல. அதன் பழமையை வேதகால மொழியுடன் இணைப்பது ஆர்வக் கோளாறே தவிர வேறு அல்ல.

  17. தெய்வத்தின் குரல் பாகம் இரண்டு பக்கம் 468-469 ( பதினெட்டாம் பதிப்பு -2011)

    ” வார்த்தையின் சப்தமே அதன் அர்த்தத்தைகாட்டும்படியாக அநேக பதங்கள் “சந்தஸ் ” என்ற வேத பாஷையிலும் , அதை வைத்தே உருவாக்கிய சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன.”

    எனவே ,சமஸ்கிருதம் சந்தஸ் என்கிற வேத மொழியிலிருந்தே உருவாக்கப்பட்டது என்பது சரிதான்.
    குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டு மாற்றி எழுதியிருந்தால் அது தவறு தான். சமஸ்கிருதம் சிறந்த மொழிதான் . ஆனால் வேதம் சமஸ்கிருத மொழியில் அருளப்படவில்லை. சந்தஸில் தான் அருளப்பட்டது. பின்னரே சமஸ்கிருதம் உருவானது.

  18. அத்விகா அவர்களே,

    தெய்வத்தின் குரலை அரைகுறையாக படித்து விட்டு இங்கே வந்து பிதற்றாதீர்கள். கொஞ்சம் தெய்வத்தின் குரலின் மற்ற பாகங்களையும் படிக்க வேண்டும் அப்பொழுது தான் “சந்தஸ்” என்பது ஒரு மொழி அல்ல என்பது புரியும். சந்தஸ் என்றால் metre என்று பொருள் என்று அதிலேயே குறிபிட்டுள்ளது.

  19. இங்கு கருத்து கூறிய அனைவருக்கும், தங்களை தாங்களே பகுத்து அறிவு வாதி (வியாதி)என கூறிகொள்ளும், இந்த அறிவிலிகள், தங்களை வளமாக்கிகொள்ளவும், பணம் சம்பாதிக்கவும், மாற்று மதத்தினரின் ஒட்டு பெறவும் மட்டுமே இந்த மூன்றாந்தர திரிபு வாதங்களை சொன்னார்கள். இவர்களின் வாதங்களை கருத்துகளை, இவர்களின் மனைவி இணைவி துணைவி மார்களே ஏற்று கொள்ள மாட்டார்கள்.

  20. அத்விகா

    //
    அதன் பழமையை வேதகால மொழியுடன் இணைப்பது ஆர்வக் கோளாறே தவிர வேறு அல்ல.
    //

    இரண்டிற்கும் வித்யாசம் உங்களால் கூற முடியுமா. இதிலிருந்து அது வந்தது (நீங்கள் சொல்வது எப்படி என்றால் தமிழிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுகு வந்தது போல வேத பாஷையிலிருந்து சம்ஸ்கிருதம் வந்தது).
    குப்புசாமி யார் என்று உங்களுக்கு தெரியுமா. அந்த புத்தகம் சரி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

    தமிழ் தான் சம்ஸ்கிருததிற்கு அம்மா எந்ரிஏர்கல். திடீர்ன்னு சந்தஸ் என்கிறீர்கள் எது உண்மை? ஒருவேளை தமிழ் நீங்கள் கூறும் சந்தஸ் மொழிக்கு அம்மா சம்ஸ்கிருததிற்கு பாட்டியா ?

  21. அன்புள்ள பொன்னர் அவர்களே,

    தமிழிலும், உலகில் பல மொழிகளிலும், ஒரே சொல்லுக்கு , ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உள்ளவை ஏராளம்.இது தமிழ் இலக்கணத்தில் பலபொருள் குறித்த ஓர் உரிச்சொல் என்பர். இதே போன்று ஆங்கிலத்திலும் well- என்பது கிணறு என்றும், நல்லது எனவும் இரு பொருள் படும். அதுபோலவே, சந்தஸ் என்பது metre- என்றும் ஒரு பொருள் உண்டு. வேத கால மொழி என்பதும் அதன் ஒரு பொருள். தயவு செய்து மீண்டும் தெய்வத்தின் குரல் ஏழு பகுதிகளையும் நன்கு படித்துவிட்டு, புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

    எனக்கு சமஸ்கிருதத்தின் மேல் எந்தவித வெறுப்போ, கோபமோ இருப்பது போல எழுதுகிறீர்கள். நான் என் மகனுக்கு கூட சமஸ்கிருதம் படிக்கவேண்டியதன் அவசியத்தை தினசரி ஓதிக்கொண்டு இருக்கிறேன். எனவே, வேதமொழி சமஸ்கிருதம் என்று யாரும் தவறாக கூற வேண்டாம். வேதமொழி சந்தஸ் என்பதே சரி. சந்தசுக்கு பிறகு பிராகிருதம் வந்தது. அதன் பிறகே சமஸ்கிருதம் உருவானது. பிராகிருதத்தை செம்மை படுத்தியே சமஸ்கிருதம் செய்யப்பட்டது என்பதே உண்மை.

  22. வேத மொழி ஆகிய சந்தஸில் இருந்து பிராகிருதம் பிறந்தது, பிராகிருதத்தில் இருந்து தான் சமஸ்கிருதம் பிறந்தது. இந்திய மொழிகள் அனைத்துக்குமே தாய் தமிழே. தமிழும், சந்தஸும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்தே வந்தன.

    ஏனப்பா sarang-

    மயிலாப்பூரு சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள உயர்திரு குப்புசாமி ரிசர்ச்சு இன்ஸ்டிட்யூட்டு , வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றும் வேதம் அல்ல. தமிழில் இருந்தே சமஸ்கிருதம் உட்பட பல இந்திய மொழிகளும் திரிந்து காலப்போக்கில் புது எழுத்துருவும் ( லிபி) புதுப்பெயர்களும் பெற்றன. இதுபற்றிய ஆய்வு புத்தகம் இந்தாண்டு புத்தக கண்காட்சியில் கூட தனி அரங்கில் விற்பனைக்கு கிடைத்தது.

    எனவே, தமிழ் பாட்டி அல்ல , சமஸ்கிருதத்துக்கு எள்ளுப்பாட்டி ஆகும். முற்காலத்தில், சிறந்த தமிழ் புலவர்கள் அனைவரும் சமஸ்கிருதம் கற்றவராகவும், சமஸ்கிருத அறிஞர்கள் தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை அறிந்தவராயும் இருந்தனர். ஆனால் இன்று, ஏதோ ஒரே ஒரு மொழியை பற்றி சிறிது படித்துவிட்டு, வேதமொழி சமஸ்கிருதம் என்று உளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழனுக்கு ஆங்கிலேய ஆட்சி தந்த சாபம். இந்த சாபம் விலக எல்லாம் வல்ல ஞானவேல் முத்துக்குமாரசாமி அருள் புரிவார். இது சத்தியம்.

  23. அத்விகா

    //
    மயிலாப்பூரு சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள உயர்திரு குப்புசாமி ரிசர்ச்சு இன்ஸ்டிட்யூட்டு , வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றும் வேதம் அல்ல. தமிழில் இருந்தே சமஸ்கிருதம் உட்பட பல இந்திய மொழிகளும் திரிந்து காலப்போக்கில் புது எழுத்துருவும் ( லிபி) புதுப்பெயர்களும் பெற்றன. இதுபற்றிய ஆய்வு புத்தகம் இந்தாண்டு புத்தக கண்காட்சியில் கூட தனி அரங்கில் விற்பனைக்கு கிடைத்தது.
    //

    ஆசிரியர் கீ வீரமணி தானே 🙂

    நீங்கள் வெறுமனே உறவகளின் வரிசையை கூறுவதை விடுத்து ஏதாவது ஆதாரம் கூறலாமே. சமஸ்க்ரிதம் எப்படி தமிழிலிருந்து வந்தது என்பதற்கு. தயவு செய்து தீ கா வெளியிட்ட புத்தகத்திலிருந்து வேண்டாம்.

    //
    மயிலாப்பூரு சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள உயர்திரு குப்புசாமி ரிசர்ச்சு இன்ஸ்டிட்யூட்டு , வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றும் வேதம் அல்ல
    //

    கூகுளே செய்து அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து உங்கள் சமஸ்க்ருத அறிவை அசத்துகிறீர்கள். குப்புசாமி சாஸ்திரியார் எழுதியது டுபாகூர், தீ கா எழுதியது வேதம் 🙂

    ப்ராக்ருதம் என்றால் பராக் கருத்தும் (முன்னாள் செய்தது ) என்று அர்த்தம். அதெப்படி முன்னாள் செய்ததற்கு முன்னாடியே பெயர் வைக்க முடியும் ? விளங்குகிராதா உங்களுக்கு

    பாணினி மகரிஷி அஷ்டாத்யாயில் சொல்கிறார் “பிரயுக்தானாம் இதம் அன்வாக்யானம் இடி க்ருதா” அதாலப்பட்டது என்ன பாஷை மக்கள் பேசிக் கொண்டிருந்தார்களோ அதற்க்கு ஒரு இலக்கண விவரணம் செய்யப்பட்டது. இன்னும் விளக்கி சொல்ல வேண்டுமென்றால். சாதாரண மக்கள் பாஷை பேசிக்கொண்டிருந்தார்கள் , பண்டிதர்களும் பாஷை பேசிக் கொண்டிருந்தார்கள் இதை இரண்டையும் சேர்த்து ஒரு கோர்வையாக செய்யப்பட இலக்கணம் சமஸ்க்ருத இல்லக்கணம் என்று பின்னால் வழங்கப்பட்டது. இந்த இலக்கண வடிவு பெற்ற பின்பு அனேக மக்கள் அதை ஒட்டியே பேச்சு வழக்கை மாற்றிக் கொண்டனர். இதனால் முன்னர் பேசிய பாஷை ப்ராக்ருதம் ஆயிற்று. இதை எல்லாம் நான் சொல்ல வில்லை பதஞ்சலி மகரிஷி சொல்கிறார். அவரு தாங்க பாணினி சூத்திரத்திற்கு மகா பாஷ்யம் எழுதியவரு.

    //
    தாய் தமிழே. தமிழும், சந்தஸும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்தே வந்தன.
    //

    ரமேஷும் கீதாவும் கோபாலின் பிள்ளைகள். கீதா தான் ரமேஷுக்கு அம்மா. ரமேஷோட பேரனுக்கு கீதா தான் எள்ளு பாட்டி 🙂 சூப்பரு

    விளங்கியதா?

    //
    வேதமொழி சமஸ்கிருதம் என்று யாரும் தவறாக கூற வேண்டாம். வேதமொழி சந்தஸ் என்பதே சரி. சந்தசுக்கு பிறகு பிராகிருதம் வந்தது. அதன் பிறகே சமஸ்கிருதம் உருவானது. பிராகிருதத்தை செம்மை படுத்தியே சமஸ்கிருதம் செய்யப்பட்டது என்பதே உண்மை
    //

    இது தமிழிலிருந்து மலையாளம் தெலுகு, கன்னடம் போன்ற பாஷைகள் தோன்றியதற்கு சமனாமா ? இதற்க்கு தயவு செய்து பதில் சொல்லவும்.

    சமஸ்க்ரிதத்திர்க்கும் சந்தசிக்கும் என்ன வேற்றுமைகள் உள்ளன. வேதம் சந்தசி மொழியில் இருந்தால் உபநிஷத் எந்த மொழியில் உள்ளது, புராணங்கள், இதிஹாசங்கள் எந்த மொழியில் உள்ளன? இதற்கும் பதில் தாருங்கள்.

    [
    உங்களுக்காக ஒரு விஷயம் பகிர்ந்து கொள்கிறேன் – பாணினி வேத மொழியை சந்தசி என்று சொல்லவில்லை பண்டிதர்களின் மொழியை சந்தசி என்றார். வழக்கு மொழியில் உள்ள மொழியை பாஷை என்றார். பாஷதே இதி பாஷா (பேசப்படுவதால் பாஷை என்று பெயர்). பண்டிதர்கள் வேதத்தில் வரும் சப்தங்களை ஒட்டி பேசி வந்தனர். வேதம் சந்தஸ் வடிவில் இருப்பதால் அதற்க்கு சந்தசி என்று ஒரு ஏற்றம் தருகிறார் பாணினி.

    உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் –
    அடுத்த வருஷம் நீ என்ன செய்யப் போகிறாய் என்று ஒரு சாமானியர் சொல்வார்.
    அடுத்த மன்வந்தரம் நீ என்ன செய்யப் போகிறாய் என்று பண்டிதர் சொல்வார்.

    இங்கு மன்வந்தரம் என்பது பண்டிதர்களின் சொல் வழக்கு. வருஷம் என்பது வ்யவஹார சொல்.
    ]

    நீங்கள் மேலே விவாதிக்க வேண்டின் தயவு செய்து தருவுகளை முன் வையுங்கள். தாத்தா பாட்டி கடை வேண்டாமே.

    தமிழன் நீங்களும் விளையாட வாங்க நல்லாத்தான் இருக்கும் 🙂

  24. அன்புள்ள sarang-

    அது தீ கா வெளியிட்ட புத்தகம் அல்ல. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு சமர்ப்பித்த ஆய்வேட்டிலிருந்து , எடுத்த தகவல்களை அழகாக தொகுத்து ரூபாய் 301/- குறித்த விலையில் பத்து சதவீத தள்ளுபடி போக ரூபாய் 271/- க்கு விற்கப்பட்டது. அக்கறை இருந்தால் வாங்கி படிக்கவும். அந்த புத்தகத்திலிருந்து நான் அப்படியே முழுவதும் இந்த தளத்தில் திருப்பி காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண எனக்கு நேரமில்லை.

    திரும்பவும் சொல்கிறேன், வேதம் உள்ள மொழி சமஸ்கிருதம் அல்ல. அது சந்தஸ் தான். சமஸ்கிருதம் என்பது பிற்காலத்தில் வந்த ஒழுங்கற்ற பிராகிருதத்தை செம்மைப்படுத்தி மெருகு பூசிய ஒரு மொழியே. சமஸ்கிருதத்தின் மீது உள்ள அதிக பாசத்தின் காரணமாக , அது வேத மொழி என்று தயவு செய்து மீண்டும் கூற வேண்டாம். வேதத்தில் உள்ள பல கருத்துக்களை சமஸ்கிருதத்தில் உள்வாங்கி பல நூல்கள் எழுதப்பட்டன. சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப்படவில்லை. சந்தஸ் ஒரு எழுதாக்கிளவி. சமஸ்கிருதம் பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு மொழியே.

    குப்புசாமி சாஸ்திரியார் எழுதியது டுபாக்கூர் என்று நான் எழுதவில்லை. நான் சொல்லாததை நீங்களாக கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். குப்புசாமி சாஸ்திரியார் எழுதியது தவறு என்று தான் நான் எழுதினேன். தவறு என்பது வேறு, டுபாக்கூர் என்பது வேறு. ஒரு உண்மையான ஆய்வாளர் தன்னுடைய ஆய்வின் முடிவில் தவறு செய்ய வாய்ப்பு ஏராளம் . ஆனால் டுபாக்கூர் என்பது ஒரு மோசடிக்காரன் , தனக்கு பிடிக்காத ஒரு உண்மையை மறைத்து ,தான் விரும்பும் ஒரு பொய்யை மற்றவர் மீது திணிக்க , கெட்ட எண்ணத்துடன் எழுதும் ஆய்வே டுபாக்கூர் எனப்படும். எனவே நான் சொல்லாததை நான் சொன்னதாக எழுதுவது வருந்தத்தக்கது. உயர்திரு குப்புசாமி சாஸ்திரியார் மீது நான் சொல்லாததை நீங்கள் சொல்வதன் நோக்கம் எனக்கு புரியவில்லை.

    இந்த விவாத தலைப்பில் , இந்துக்கள் பயன்படுத்தும் தமிழ் மாதப்பெயர்கள் தமிழ் சொற்களே என்பதில் ஆரம்பித்தது. மீண்டும் சொல்கிறேன் , வேத மொழி சந்தஸ் தான். வேதம் சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்று சொல்லாதீர்கள்.

  25. தமிழ் பேப்பரில் புத்தாண்டு பற்றிய இந்தக் கட்டுரை பல விவரங்களைத் தருகிறது. கட்டுரையைப் போலவே அதன் பின் வரும் விவாதங்களும் சுவையாக உள்ளது.

    https://www.tamilpaper.net/?p=5786

  26. @அத்விகா, நண்பர் சாரங் கேட்ட மாதிரி
    /நீங்கள் வெறுமனே உறவகளின் வரிசையை கூறுவதை விடுத்து ஏதாவது ஆதாரம் கூறலாமே. சமஸ்க்ரிதம் எப்படி தமிழிலிருந்து வந்தது என்பதற்கு. தயவு செய்து தீ கா வெளியிட்ட புத்தகத்திலிருந்து வேண்டாம்.//
    சரிங்க , நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து வேண்டுமானால் சொல்லுங்கள். சமஸ்க்ரிதம் எப்படி தமிழில் இருந்து வந்தது??????????????

  27. @sarang, உங்களை நம்பி இந்த ஹெவி வெய்ட் போட்டியில் , ஃபெதர் வெய்டாளான நான் கோதாவில் இரங்கியுள்ளேன் . என்னை கைவிட்டு விடாதீர்கள். 🙂

  28. அத்விகா

    நீங்கள் இன்னும் நீங்கள் சொல்வதையும் பிறர் சொல்வதையும் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.

    சரி ஒரு கேள்வி – உங்களுக்கு சமஸ்க்ருதம் தெரியுமா ?.

    மறுபடியும் மறுபடியும், சந்தஸ், ப்ராக்ருதம், சமஸ்க்ருதம் என்று திரும்ப திரும்ப சொன்னால் என்ன செய்வது.

    முன்னாள் செய்தது என்று ஒரு மொழிக்கு எப்படி பெயர் இருக்கும்? எதற்கு முன்னாள் என்று கேள்வி வரும் அல்லவா? இந்த கேள்விக்கு பதில் தந்தாள் அந்த பதிலாக வரும் பாழைக்கு முன்னாள் செய்த மொழி என்று பின்னால் தானே வழக்கு வந்திருக்க வேண்டும்? ப்ராக் என்றால் முன்னாள் என்று அர்த்தம் ஓகே

    சரி பாணினி அஷ்டாத்யாயில் சொன்னவை, பதஞ்சலி சொன்னதை எல்லாம் கொடுத்டிஹ்ருக்கிரேனே, அதற்க்கு உங்களது கருத்து என்ன?

    எழுதா கிளவி என்றெல்லாம் அழகாக சொல்லும் நீங்கள். சமஸ்க்ருதிர்க்கும் சந்தசி என்று பாணினி சொல்லும் பண்டிதர்களின் மொழிக்கும் உள்ள சில வேறுபாடுகளை நீங்கள் சொல்லலாமே. பாணினி சொன்ன இந்த சந்தசி தான் நீங்கள் சொல்லும் சந்தஸ் என்ற பாஷை. மீட்டர் என்று ஒரு மொழிக்கு எங்காவது பெயர் இருக்குமா. பாணினி ஏன் அதை சந்தசி என்றார் என்பதற்கும் காரணம் முன் பதிவில் கொடுத்துள்ளேன்.

    வீர மணி/ தீகா எழுதியது அல்ல அது சென்னை பல்கலை கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வு என்கிறீர்கள். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்குமா என்ன? ஜோக்கை கூட சீரியஸா எடுத்துகிட்ட என்ன செய்வது?

    சரி நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதில்கள் தரவில்லை

    தமிழிலிருந்து சமஸ்க்ருதம் வந்தது என்பதற்கு நல்ல ஆதாரங்கள் என்ன, யாருக்கும் சிரிப்பு மூட்டாமல் உங்களால் சொல்ல முடியுமா? என்னால் கூட ஜெர்மன் பாஷையிலிருந்து தான் சமஸ்க்ருதம் வந்தது என்று ஒழுங்காகவே நிறுவ முடியும். அதை தமிழ் கூறும் நல் உலகில் விற்கவும் முடியும். பாராட்டுகளும் பெற முடியும் ஆனால் அது ஒரு சமஸ்க்ரித்த அறிஞர் அந்த புத்தகத்தை படிக்கும் வரை மட்டுமே நிலைக்கும்.

    இது தமிழிலிருந்து மலையாளம் தெலுகு, கன்னடம் போன்ற பாஷைகள் தோன்றியதற்கு சமனாமா ? இதற்க்கு தயவு செய்து பதில் சொல்லவும்.

    சமஸ்க்ரிதத்திர்க்கும் சந்தசிக்கும் என்ன வேற்றுமைகள் உள்ளன. வேதம் சந்தசி மொழியில் இருந்தால் உபநிஷத் எந்த மொழியில் உள்ளது, புராணங்கள், இதிஹாசங்கள் எந்த மொழியில் உள்ளன? இதற்கும் பதில் தாருங்கள்.

    //
    தாய் தமிழே. தமிழும், சந்தஸும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்தே வந்தன.
    //

    ரமேஷும் கீதாவும் கோபாலின் பிள்ளைகள். கீதா தான் ரமேஷுக்கு அம்மா. ரமேஷோட பேரனுக்கு கீதா தான் எள்ளு பாட்டியா ?

    சரி கூகுல் செய்து தான் குப்புசாமி ஆய்வு மையம் எங்கிருக்குன்னு கண்டுபிடிச்சத ஒத்துகிறீங்க தானே ?

    தமிழன் ஒரு பிரச்சனையும் இல்லை நீங்க big fight எல்லாம் பண்றீங்க எதெல்லாம் எளிதா சமாளிக்கலாம்

  29. அன்புள்ள sarang-

    நான் குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் பற்றி சொல்லாததை நீங்களாக கற்பனை பண்ணி எழுதினீர்கள். அதனை பற்றி ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு பதில் எழுதுவது கூடாது என்றபோதிலும் , இந்த வலைத்தளம் தமிழ் இந்து தான். சமஸ்கிருத இந்து அல்ல. இந்து என்பது தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் என்று இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் , ஆங்கிலம் உட்பட நிறைந்து உள்ளது. எனவே, உங்களுக்கு புரியா விட்டாலும் , பிறராவது புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், இதனை எழுதுகிறேன்.

    நான் சமஸ்கிருத விரிவாக்க அமைப்புக்களில் ஆயுள்கால உறுப்பினர். sarang- அவர்களுக்கு நேரம் இருந்தால் , நான் அவருடன் நேரில் விவாதிக்க கூட தயார். இங்கு மிக நீண்ட கடிதங்களை டைப் செய்வது , கடினம் மற்றும் அவை மிக நீண்டால், முக்கிய தலைப்பிலிருந்து விலகி செல்ல நேரிடலாம்.

    தயவு செய்து தெய்வத்தின் குரல் பாகம் இரண்டு பக்கம் 469- வரிகள் 20-22( வானதி பதிப்பகம் , சென்னை – பதினெட்டாம் பதிப்பு ஜனவரி 2011) பார்க்க வேண்டுகிறேன்.

    ” சமஸ்கிருதம் ( இப்படிச் சொல்லும்போது வேத பாஷையான சந்தஸையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது.)”-

    மகாபெரியவர் ஏன் இரண்டு இடங்களிலும் வேத பாஷையான சந்தஸையும் சேர்த்து என்று குறிப்பிட வேண்டும்? ஏனெனில் வேதம் சமஸ்கிருத மொழியை சேர்ந்தது அல்ல. வேத காலத்தில் அந்த மொழி சந்தஸ் தான். சமஸ்கிருதம் என்ற பெயரே பின்னர் வந்தது தான்.

    மேலே பொன்னர் என்ற அன்பர் எழுப்பிய வினாவுக்கு பதில் அளித்த போதே, பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல் தான் “சந்தஸ்” என்பது என்று விளக்கியிருந்தேன். தாங்கள் அதனை பார்க்கவில்லை என்று கருதுகிறேன். சந்தஸ் என்பது வேதத்தையும் குறிக்கும். வேத மொழியும் சந்தஸ்தான். வேதத்தின் பாதத்தின் பெயரும் சந்தஸ் தான். எனவே, சந்தஸ் என்பது பலபொருள் குறித்த ஓர் உரிச்சொல்.

    சந்தஸ் என்பது வேதத்தின் பாதமும் கூட. சந்தஸ் என்றாலே வேதம் மட்டுமே. சந்தஸில் வேதத்தை தவிர வேறு இலக்கியம் எதுவும் கிடையாது. சமஸ்கிருதத்தின் இலக்கணம் பாணினியால் உருவாக்கப்பட்டது. வேதங்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. நிற்க, வேதத்தின் மொழியாகிய சந்தஸுக்கு ஸ்வரம் உண்டு. சமஸ்கிருதத்துக்கு ஸ்வரம் கிடையாது.( சந்தஸ் வேதத்தின் பாதம்- பக்கம் 539-552- தெய்வத்தின் குரல் பாகம் இரண்டு )

    உபநிஷத் வேத மொழியாம் சந்தசிலேயே உள்ளது. உபநிஷத்துக்கு ஸ்வரம் உண்டு.

    இதிகாசங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை. புராணங்கள் மிக மிக பிற்காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.

    அதீத ஆர்வக்கோளாறு காரணமாக, வேதமொழி சமஸ்கிருதம் என்று சொல்வது ஒரு நகைச்சுவை தான். மகான் சந்திரசேகரர் நடுநிலையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். அவர் எழுதியது உண்மை அல்ல என்று கருதும் அளவுக்கு தாங்கள் அறிஞர் என்றால் , உங்களிடம் மேலும் விவாதிப்பது தேவை அற்றது தம்பி. என் தாய் மொழி தமிழ். எங்கள் மூதாதையர்கள் பிறந்த, புகுந்த என்று அனைத்து வழிகளிலும் யஜுர்வேதிகள். இது ஒரு சண்டைக்களம் அல்ல. கருத்துப்பரிமாற்றம் செய்யும் தளமே. மாறுபட்ட கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை.

    எனவே, நான் குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டை விட, இந்த ஒரு இஷ்யூவில் மட்டும் மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தே மிக சரியானது என்பதே உண்மை. வேத மொழி சந்தஸ் தான்.

  30. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரையின் நகலை ” சங்கதம்” தளத்திலிருந்து எடுத்து இங்கு ஒட்டியுள்ளேன். தமிழ், சமஸ்கிருதம் இரண்டையுமே பற்றி மிக அழகாக தொகுத்துள்ளார். நம் தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள தவறான கருத்துக்கள் அகன்று, சரியான புரிதல் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்திலேயே இது செய்யப்படுகிறது. எனக்கு தமிழும், சமஸ்கிருதமும் இரண்டு கண்கள்.

    ” தமிழில் சம்ஸ்கிருதம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள் பல.

    அது வடமொழி. அது உண்மை அல்ல. அந்த மொழியின் முதல் வடிவம் வடக்கே எங்காவது உருவாகியிருக்கலாம். ஆனால் அதன் வளர்ச்சி என்பது இந்திய நிலப்பகுதியில் உள்ள பலநூறு மொழிகளை தழுவியது. சம்ஸ்கிருதக் கல்வியும் சரி சம்ஸ்கிருத பங்களிப்பும் சரி தென்னகத்திலேயே ஒப்பு நோக்க அதிகம்.

    அது பிராமண மொழி. அதுவும் உண்மை அல்ல . மரபான சம்ஸ்கிருத நூல்களிலேயே பிராமணர் எழுதிய நூல்கள் குறைவு. வியாசனொ வான்மீகியோ உபநிடத ஆசிரியர்களோ காளிதாசனோ பாரவியோ எவருமே பிராமணர்கள் அல்ல.
    அது இந்து மதத்தின் மொழி. இது அபத்தமானது. அது இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான அறிவார்ந்த மொழி. சமணர்கள்தான் அதை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றவர்கள். அதற்கு லிபி [வரிவடிவம்] உருவாக்கியவர்கள். அது பிற்கால பௌத்தத்தின் மொழியும் கூட
    அதை இப்போது பிராமணர்களே ஆதரிக்கிறார்கள். தமிழகம் தவிர பிற பகுதிகளில் இது உண்மை அல்ல. உதாரணமாக கேரளத்தில் சிரியன் கிறித்தவர்களும் ஈழவர்களும்தான் பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள்.
    சம்ஸ்கிருதம் செத்த மொழி. இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது.

    இந்த நம்பிக்கைகள் நம் தமிழியர்களால் உருவாக்கப்பட்டு இன்று திராவிட வழிவந்தவர்களால் மதம்போல நம்பப்படுகின்றன. ஆனால் மறு தரப்பிலும் அதேபோல அபத்தமான நம்பிக்கைகள் உள்ளன
    சம்ஸ்கிருதம் தேவமொழி. அதில் இறைவழிபாட்டு மந்திரங்களும் நூல்களும் மட்டுமே உள்ளன. இது பொய். சம்ஸ்கிருதத்தில் ஏராளமான இறை மறுப்பு நூல்கள் உள்ளன. வேதங்களிலேயே பொருள்முதல்வாதம் பேசும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. வேத மறுப்பு மட்டுமல்ல வேத வெறுப்பும் சம்ஸ்கிருத நூல்களில் பேசப்படுகின்றன. சம்ஸ்கிருதம் அறிவார்ந்த விவாதங்களுக்கான மொழி. ஆகவே விவாதத்தின் எல்லா தரப்பும் அதில் பேசப்படுகிறது
    சம்ஸ்கிருதம் பிராமணர்களுக்கு முன்னுரிமை உள்ள மொழி. அது பிராமணர்களின் நம்பிக்கை. உண்மை அல்ல. சம்ஸ்கிருத நூல்களில் பிராமண மேன்மை பேசும் நூல்கள் பூர்வ மீமாம்சை என்ற வேத மைய தரிசனத்தின் தரப்பைச் சேர்ந்தவை மட்டுமே. அதை எதிர்க்கும் பல நூறு தரப்புகள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பகவத்கீதை கூட பூர்வமீமாம்சத்தை நிராகரிப்பதே

    இந்த நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டு அறிவார்ந்த தர்க்கங்களுடன் சம்ஸ்கிருதத்தை அணுகக்கூடிய ஆராயக்கூடிய ஒரு தலைமுறை இனியாவது உருவாகி வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே தமிழாய்வு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். அப்போது பல ஆச்சரியமளிக்கும் உண்மைகள் வெளிவரும் என நான் நினைக்கிறேன். அதில் முக்கியமானது, தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சமஸ்க்ருதம் தமிழுக்குக் கடன்பட்டது. ”

    ஜெயமோகனின் மேற்சொன்ன வரிகளில் ” தமிழ் சம்ஸ்கிருதத்துக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டதோ அதை விட சமஸ்க்ருதம் தமிழுக்குக் கடன்பட்டது. “- என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.

  31. அத்விகா

    //
    அதீத ஆர்வக்கோளாறு காரணமாக, வேதமொழி சமஸ்கிருதம் என்று சொல்வது ஒரு நகைச்சுவை தான்
    //

    இது நான் சொல்லவில்லை. நான் சொன்னதாக நீங்கள் கற்பனை செய்வது. ரெண்டுக்கும் வித்யாசம் தான் உங்களிடம் கேட்டேன். இதுவரை பதில் இல்லை. பதில் சொல்லி எங்கு வேற்றுமை என்று நிறுவுங்கள். பாணினி என்ன சொல்கிறார் என்பதை விட மற்றவர் சொல்கிறது உங்களுக்கு மேலாகப் பட்டால் நான் என்ன செய்வது.

    ஜெயமோகன் கட்டுரை நானும் படித்திருக்கிறேன். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். இதுவரை கேள்விக்கு பதில் என்று போகாமால் வளைத்து வளைத்து எழுடுவடிலேயே நேரம் செலவழிக்கிறீர்கள்.

    பெரியவர் சொன்னது பாணினி சொன்னதே. பாணினி தான் பண்டிதர்களின் பாழை சந்தஸ் என்கிறார். இதை நான் மறுக்கவே இல்லையே.

    நீங்கள் வெறுமனே சமஸ்க்ருதம் வேறு அதற்க்கு முன் ப்ராக்ருதம் அதற்க்கு முன் வேத பாஷை என்று சொல்லி எல்லாம் வேறு என்று சொன்னதால் வித்யாசம் என்ன என்று தான் கேட்கிறேன். பதில் தரலாமே?

    ஜெயமோகன் எங்கே இந்த விஷயங்களை பற்றி பேசுகிறார். அவரது கட்டுரையின் மையக் கருத்து சமஸ்க்ருதஹ்தை பற்றி அல்ல. அதன் பால் மக்களிடம் உள்ள கருத்துக்கள் என்ன அவை உண்மையா பொய்யா என்பதே.

    //உபநிஷத் வேத மொழியாம் சந்தசிலேயே உள்ளது. உபநிஷத்துக்கு ஸ்வரம் உண்டு.// இதென்ன உம்மை தொகை இங்கே.

    பல உபநிஷத்துக்கள் அவைகளின் பெரும் பாகம் வெறும் பேச்சு நடையில் தான் உள்ளன. சந்தஸ் அமைப்பே இல்லாத அதை எப்படி சந்தஸ் மொழி என்கிறீர்கள்?

    கவனிக்க – நான் இங்கே சமஸ்க்ரிதம் = வேத பாஷை என்று நிறுவ வர வில்லை. வேதத்தில் லேட் லகாரம் இருக்கும் அது சமஸ்க்ரிதத்தில் பிரயோகத்தில் இல்லை என்று ஒரு உதாரணமாவது சொல்லலாமே?

    இப்போது நாம் பயன் படுத்தும் சமஸ்க்ருதம் மெல்ல மெல்ல மெருகேறி வந்த ஒன்றாகும். எந்த மொழிக்கும் இது உண்டு. தமிழ் மாறவில்லையா? வளர வில்லையா?

    வேத காலத்தில் இருந்த மொழி இன்று சமஸ்க்ருதமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இது ஒரு பரிணாம வளர்ச்சி. குடத்திலிருந்து தண்ணீர் எடுத்தது போல வேத மொழியிலிருந்து சமஸ்க்ருதம் எடுக்கப் படவில்லை. தமிழிலிருந்து கன்னடம் தெலுகு போல அல்ல வேதா கால மொழிளிருந்து சமஸ்க்ருதம்.

    அப்புறம் நீங்கள் சொன்ன தமிழ் பாட்டிக் கடைக்கு ஆதாரம் வைக்கவில்லை. இதை மட்டுமே நான் சொல்லி வருகிறேன். உங்களுக்கு கோவம் அல்லது எரிச்சல் நிறைய வருகிறது என்று நினைக்கிறேன் (நினைக்கிறேன் அவ்வளவே).

    இதை எல்லாம் நிறுவ உங்களுக்கு தைவத்தின் குரல் ஏன் தேவை படுகிறது? தைவத்தின் குரல் புத்தகத்தில் சங்கராச்சாரியார் பிறந்த காலம் கீ மூ 500 என்று உள்ளது, இதையும் நம்ப வேண்டுமா. தைவத்தின் குரல் புத்தகத்திலிருந்து எதை எடுத்து கொள்ள வேண்டும் என்று கூடவா உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அந்த புத்தகத்தில் வெறும் நம்பிக்கை சாந்த விஷயங்கள் இல்லவே இல்லையா? குப்புஸ்வாமி அவர்களது புத்தகம் மிகுந்த ஆராய்ச்சி செய்த பின் எழுதியது. இதற்காக பெரிவர் என்றால் உங்களுக்கு மரியாதை இல்லையா என்றெல்லாம் பல்டி வேண்டாம்.

  32. அத்விகா,

    நீங்கள் என்ன கிருஸ்துவரா? அல்லது தேவநேய பாவாணர் ஆராய்ச்சி குழுவை சார்ந்தவரா? இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை. இரண்டு பேருமே கிட்ட தட்ட ஒரே கருத்தை தான் வெளிபடுத்துகிறார்கள். ஒருவர் பைபிளில் இருந்து தான் எல்லாம் தோன்றியது என்று சொல்வர், இன்னொருவர் தமிழில் இருந்து தான் உலகின் அணைத்து மொழிகளும் தோன்றின என்று சொல்வர். ஆனால் இந்த இரண்டுக்குமே அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. முதலில் நீங்கள் சாரங் கேட்ட கேள்விக்கு முறையான பதில் அளியுங்கள், பிறகு மதத் விவாதங்களை தொடங்கலாம்.

    சாரங் – ஆதி சங்கரரின் கால கணிப்பு குறித்து இன்னும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. ஆகையால் அவர் கிமுவா கிபியா என்று நிருபிப்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை. There are several flaws in the dating method used for judging sankara’s period. அவர் கிபியில் பிறந்தவர் தான் என்று நிரூபிக்க நம் அறிஞர்கள் பலர் சங்கரர் குரிபிட்டுள்ளதாக கூறி ஞானசம்பந்தரை மேற்கோள் கட்டியுள்ளனர். அனால் அது ஞானசம்பந்தர் தானா என்று தீர்கமாய் நிரூபிக்க படவில்லை. Anyway, this is just my opinion.

  33. @அத்விகா; தாங்கள் எந்தவித வரலாற்று/வரிவடிவ/கல்வெட்டு ஆராய்ச்சி ஆதாரமும் இலாமல் திராவிட இயக்கத்தினர் பேசுவது போல் “தமிழ் தான் சமஸ்கிருதம் மற்றும்இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் மூலம்” என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை?Half-baked knowledge is dangerous.என்னுடைய மே 1/2012 மடல் படி அந்த ஆரய்ச்சி மிக விரிவானது என்று மறுபடியும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

  34. அன்புள்ள Sarang-

    நமது மத இலக்கியங்களில் பெரும்பான்மையானவை நம்பிக்கை சார்ந்தவைதான். இந்த நம்பிக்கைகள் பலவும் , அனுபவத்தில் சரியாக இருந்ததை கண்டு தான் , நமது இந்து சமுதாயம் அவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது. இல்லையெனில் அவை எப்போதோ குப்பை கூடைக்கு போயிருக்கும். உபயோகத்தில் சரியாக வந்தவை மட்டுமே காலவெள்ளத்தில் தாக்குப்பிடிக்கும்.

    குப்புசாமி இன்ஸ்டிட்யூட் செய்த ஆராய்ச்சி என்பது ஆற்றுநீரின் ஆழத்தை புள்ளியியலாளர்கள் (ஸ்டாடிஸ்டிசியன்ஸ் ) சராசரி கணக்கு போட்டு , சொல்வது போல தான். ஆய்வு என்பது கிடைக்கும் ஆதாரங்களின் எல்லைக்குள் அமைவது மட்டுமே. அதுவே முழுஉண்மை என்று நம்புவது உங்கள் விருப்பம். அழிக்கப்பட்ட ஆதாரங்கள் பற்றி யாருக்கும் தெரியாது. இந்த ஆதாரங்களின் அழிவு என்பது , இயற்கையின் சீற்றத்தாலும், எதிரிகளின் படையெடுப்பாலும் பல காலம் நடந்துள்ளது.

    இன்றைக்கு இருக்கிற தமிழின் தொல்காப்பியம் தமிழின் முதல் நூல் அல்ல. இப்போது இருப்பவற்றுள் பழமையானது அவ்வளவு தான். தென் தமிழகத்தில் , கபாடபுரத்தை கடல் கொண்டதற்கு ஏராளமான வரலாற்று குறிப்புக்கள் உள்ளன. தமிழின் முதல் நூல் அகத்தியமே ஆகும். இன்று அகத்தியம் நமக்கு கிடைக்கவில்லை என்பதனால் , அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்வது நம்மை தவறான பாதைக்கு அழைத்து செல்லும். ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தும் போது, இதே தளத்தில் வேறொரு அன்பர் என்னை நீங்கள் கிறித்தவரா என்று கேட்டு கடிதம் எழுதுகிறார். தேவநேயப்பாவாணர் உலகின் முதல் மொழி தமிழே என்று கூறியதில் ஒரு தவறும் இல்லை. அதற்கு ஆதாரம் இன்று கிடைக்கவில்லை என்பதால் , அது பொய்யாகிவிடாது. தமிழ் மற்ற எந்த மொழியையும் விடவும் தெய்வீக மொழி ஆகும்.எப்படி தெலுங்கை இசைக்கு இணைத்து பேசுகிறார்களோ , அதனைப்போல தமிழ் என்றும் எப்போதும் தெய்வீகமானது தான். ஆனாலும், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் உள்ள தெய்வீகமான விஷயங்களை மறைத்து , அழித்து , தமிழ் ஒரு நாத்திகர்களின் மொழி என்று பொய் பிரச்சாரம் செய்யும் கும்பலை திட்டமிட்டு, திராவிட இயக்கங்கள் வளர்த்தன. அதன் உச்சக்கட்டம் என்னவென்றால் திருக்குறள் ஒரு மடமையை பரப்பும் நூல் என்று கூட ஈவேரா போன்றோர் எழுதினர்/ பேசினர். தமிழகத்தின் பள்ளி பாடப்புத்தகங்களில், கடவுள் வாழ்த்து பற்றிய பகுதிகள் திட்டமிட்டு விலக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை. வேதமொழி சந்தஸ் என்று மகா பெரியவர் தெளிவாக எழுதியிருந்தும், அப்படி ஒரு மொழி கிடையாது அது வெறும் metre- மட்டுமே என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்கள்.சந்தஸ் என்பது பலபொருள் ஒரு மொழி என்று உண்மையை சொன்னாலும் மீண்டும் மீண்டும் சந்தஸ் ஒரு மொழி அல்ல என்கிறீர்கள். குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் சொல்வது அருள்திரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் சொன்னதை விட சரியானது என்று சொன்னால், உங்களுடன் தொடர்ந்து விவாதிப்பதில் ஒன்றும் அர்த்தம் இல்லை என்று ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன்.

    பாஹியான் புத்தர் சிலைகளை தாலிபானிய காட்டுமிராண்டிகள் வெடிவைத்து தகர்த்தனர் என்பது ஒரு உண்மை. இன்னும் ஒரு ஐம்பது வருடங்களுக்கு பிறகு, அதற்கு ஆதாரம் எதுவும் இல்லாமல் போய்விடலாம். எனவே அது ஐம்பது வருடத்துக்கு பிறகு பொய் ஆகிவிடுமா ? நீங்கள் குப்புசாமி ரிசர்ச்சில் முழுவதுமாக மயங்கி விட்டதற்கு நான் பொறுப்பு அல்ல.

    வேத மொழியாம் சந்தசும், தமிழும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்தே வந்தன என்னும்போது, இதில் கருத்து வேறுபாடு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சிவபிரானை சாட்சியாக அழைத்து அவரே வந்து சொன்னால் தான் நீங்கள் ஏற்பீர்களா?

  35. பொன்னர்

    சங்கரர் பற்றி தமிழ் ஹிந்து சங்கரர் கால ஆராய்ச்சி ஒரு பார்வை என்ற கட்டுரை வெளியிட்டுள்ளது. படியுங்கள். சங்கரர் ஞானசம்பந்தர் என்றெல்லாம் இல்லாமல் அங்கு மிக வலுவான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

    அத்விகா

    //வேத மொழியாம் சந்தசும், தமிழும் சிவபிரானாரின் உடுக்கை ஒலியிலிருந்தே வந்தன என்னும்போது
    //

    அப்போ தமிழ் எப்படி சமஸ்க்ரிதத்திர்க்கு எள்ளுப்பாட்டி?
    ஒரு ஆராச்சி கட்டுரை என்று வந்தால் நான் நிச்சமாக குப்புஸ்வாமி அவர்கள் செய்ததற்கு அதிக முக்கியத்துவம் தருவேன். அவர்கள் வெறுமனே புராணங்கள் பாடுவதில்லை.

    எல்லாம் இருக்கட்டும் இன்னும் நீங்கள் எங்களை உவமை மழையிலே நனைய விட்டுக்கொண்டிருக்கிரீர்கள். கேட்ட கேள்விக்கு நல்ல பதில்கள் தேவை.

    சரி இதை இதோடு விடுவோம். உங்களின் பக்ஷத்தை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். நன்றி

  36. சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள குப்புசாமி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் போதிய நிதி வசதி இன்றி சிரமப்பட்டுக்கொண்டு உள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் மூலம் கிடைக்கவேண்டிய மான்யம் மற்றும் நிதி உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதால், அதன் ஆராய்ச்சிப்பணிகள் மிகவும் பாதிப்படைகின்றன . எனவே,ஆர்வலர்கள் தங்களால் இயன்ற அளவு, ஆயுள்கால சந்தாதாரர்களை , இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அதற்கு சிறு உதவி செய்யலாம். ரூபாய் இரண்டாயிரம் மட்டும் செலுத்தி , ஆயுள் சந்தாதாரர் ஆகி, அவர்களின் வெளியீடுகளை (சுமார் பத்துக்கும் மேற்பட்ட அருமையான புத்தகங்களை) இலவசமாய்ப் பெறலாம். அனைவரும் செய்யும் இந்த உதவி , நமக்கும், நம் முன்னோரால் வளர்க்கப்பட்ட இந்திய கலாச்சாரப் பொக்கிஷத்துக்கும் , பெரிதும் தேவைப்படுகிறது.. இந்த ஆராய்ச்சி நிலையத்தை காப்பாற்றி , நம்மை நாமே காப்பாற்றி கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *