சூரிய தரிசனம்: பாரதியார்

நிலவின் முகத்தைக் காணவேண்டும் என்று தான் மானுட மனங்கள் பொதுவாக ஆசைப்படுகின்றன. “நிலவே முகம் காட்டு” என்கிறார் ஒருவர். “நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை” என்கிறார் இன்னொருவர். மெல்லிதயங்களும் நெகிழும் உள்ளங்களும் எழுப்பும் குரல்கள் இவை. ஆனால், உன் முகத்தைக் காட்டமாட்டாயா, நான் பார்க்கவேண்டும் என்று சூரியனை நோக்கி இறைஞ்சும் கவிமனம் இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. பாரதியார் தனது பாடலொன்றில் அவ்வாறு வேண்டுகிறார். உண்மையில் சூரியனை முகம் காட்ட இறைஞ்சும் அந்தக் கம்பீரமான குரல் மிகவும் புராதனமானது. வேத ரிஷியின் குரல் அது…

View More சூரிய தரிசனம்: பாரதியார்

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

ஞானக் கண்ணால் மட்டுமே உணரக் கூடிய ஞானச் சூரியன், மற்றும் ஊனக் கண்ணால் காணக் கூடிய ஊனச் சூரியன் இரண்டையும், அவைகளின் தன்மைகளைக்கொண்டு, சூரியனின் இருவேறு முகங்களாக ரிக் வேதம் வர்ணிக்கிறது. ஊனச் சூரியன் உதிப்பதால் உலகின் பல வளங்கள் செழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும், அது இன்னார்க்குத்தான் என்றில்லாமல் எவர்க்குமே தன் சக்தியை அளிப்பதாலும், அதை அனைவரின் ஆப்த நண்பனாக உருவகித்து மித்ரன் என்றழைத்தனர். ஞான சூரியன் உதிக்கும்போது, அது அனைவர்க்கும் பரம ஆனந்தத்தை அளிப்பதுடன், ஓர் உயிருடன் வேறு உயிர்களைப் பிரித்துப் பார்க்கும் தன்மையையும் களைந்தெடுத்து, சீவராசிகள் அனைத்தும் பரவலான ஓரினமே என்று காட்டுவதால் அதை வருணன் என்றழைத்தனர்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்… “சத்தியத்தின் ஒளியினாலும் கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும் அமரரையும் மனிதரையும் தத்தம் தொழில்களில் புகுத்தி பொன்மயமான தேரில் சுற்றி வருகிறான் ஸவித்ரு தேவன். உலகங்களையெல்லாம் நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறான்”… ‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது…

View More மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3

மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன… கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள்… விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாக மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம்….

View More பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?

[மூலம்: சீதாராம் கோயல்] இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர்… இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே.. குரு நானக் பின்வருமாறு கூறினார் – மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது.. இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள்…

View More காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?