இந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது. நமது இணையதளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழறிஞர், கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்தது. 2019 அக்டோபர் 5ம் தேதியன்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா (பாரதிய ஜனதா கட்சி) கலந்து கொண்டு ஆசான்களுக்கு மரியாதை செய்தார். வேதகோஷம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் ஒவ்வொரு ஆசானுக்கும் தேஜஸ்வி சூர்யா பாதபூஜை செய்து அவர்களது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்…
View More தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருதுAuthor: ஆசிரியர் குழு
2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?
கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை வியாபித்திருக்கும் மொண்ணைத் தனத்தையும் தேக்கத்தையும் உடைத்தெறியக் கூடிய சாத்தியக் கூறுகளையும் இந்தத் தேர்தல் கொண்டிருக்கிறது… எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது… திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது…
View More 2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது?மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை
கொலைக்கு முன்பு, தங்களது பகுதிக்குள் வந்து இஸ்லாமிய மதப்பிரசாரம் செய்ய முயன்ற முஸ்லிம் மதவெறியர்களிடம் இந்தியன் என்ற உணர்வுடனும் இயல்பான நட்புடனும் அவர் பேசி வாதம் செய்ததன் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நியாயமான, அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்காக ஒருவர் கொலைசெய்யப் படலாம் என்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. இந்தக் கொலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, விசாரணை நடத்தி உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்…
View More மதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலைகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!
ஊதியூர் மலையை ஒட்டி குண்டடம் சாலையில், 101 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஹட்சன் அக்ரோ பிராடக்ட் லிமிடெட் என்ற தனியார் பால் தயாரிப்பு நிறுவனம் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அந்த இடம் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
View More கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!அஞ்சலி: நெல் ஜெயராமன்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் (வயது 50) காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. நெல் ஜெயராமன் தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார். நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலம், உலக விவசாயிகளின் பார்வையை காவிரி டெல்டா பக்கம் திரும்பச் செய்தார்…
View More அஞ்சலி: நெல் ஜெயராமன்மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி
பிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி மிகவும் வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனையும், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.. தங்க நாற்கர திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல்தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத்திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். அவர் கொண்டு வந்த இந்த அந்த்யோதயா உணவுத் திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது.. நாட்டுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காவும் பாடுபட்ட மகானை வழியனுப்பும்போது வாஜ்பாயின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி எடுப்போம். நமக்காக காலமெலாம் உழைத்த ஆன்மா நீத்தோர் இடத்திலிருந்து நமக்கு அருளட்டும்…
View More மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலிஅஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)
ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை… அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை…
View More அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்
முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…
View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது…
View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடுநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்
ஒரு தமிழ்நாட்டு இளைஞர் விருப்பு வெறுப்பின்றி நரேந்திர மோதியின் அரசாட்சி குறித்து வைத்த விமர்சனங்கள் இவை. ஒருவகையில் ஒரு முன்னாள் கம்யூனிஸ்டின் வாக்குமூலமும் கூட… நாடு என்பது ஆட்சியாளர்கள் ஒருபக்கம் – மக்கள் ஒரு பக்கம் என்று இரண்டு சக்கரங்களால் நகர வேண்டிய வண்டி. இரண்டும் சரியாக உருண்டால்தான் நாடு முன்னேறும்; ஒவ்வொரு வீடும் முன்னேற்றம் காணும்… ஆட்சி – அதிகாரம் – வரி வருமானம் – பட்ஜெட் என்று அனைத்தையும் முதலில் நிர்வாக ரீதியாக யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கே இங்கே அரசை முறையாக விமர்சனம் செய்ய தகுதி வருகிறது. இது எந்த நாட்டுக்கும் எந்த ஆட்சிக்கும் பொருந்தும்….
View More நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்