ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

முன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன்? கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா? சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா? நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா? கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப் போராட்டம் அல்ல…

View More ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை… வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான்…

View More தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்

நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

இந்த எதிர்ப்பாளர்களின் முக்கிய நோக்கம், அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பதை எதிர்ப்பதல்ல; அங்கு அணுஆயுத உற்பத்தி நிகழாமல் தடுப்பதே… இதே ‘நிலநடுக்கம்’ கேரள அரசியல்வாதிகளால் பிராந்திய நலனுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அதை எதிர்ப்பவர்களும், இதே குழுவினர் என்பது ஒரு நகைமுரண்… கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் பலரும் இப்போது தங்கள் ஜாகையை முல்லைப் பெரியாறுக்கு மாற்றிக்கொண்டு முழக்கமிடத் துவங்கி இருக்கிறார்கள்… இப்போதைய தேவை, தமிழக எல்லை மாவட்டங்களில் அமைதியைத் திரும்பச் செய்வதற்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கைகளே…

View More நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்

காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று

1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் “சந்த்” எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

View More காங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று