சிலர் வாய்கூசாமல் பிரதமர் உல்லாசச் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்கின்றனர். அது உண்மை என்றால் ஒரு மணிநேரம் ஒய்வு கூட இல்லாமல் இயந்திரமாக ஒரு மனிதன் உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதை இப்போதுதான் நாம் பார்க்கிறோம்…இப்போது நாடுகளின் அரசியல் உறவுகள் பெருமளவு மாறி விட்டிருக்கிறது. உலக ஆளுமை என்பதன் அடையாளம் வர்த்தகத் துறையில் ஆதிக்கமே.ஏனைய மற்ற துறைகளின் முன்னேற்றம் கூட வர்த்தக முன்னேற்றத்தை ஒட்டியே அமையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஆகவே பிரதமரின் இந்த ஒவ்வொரு வெளீநாட்டுப் பயணத்தின் முக்கியத்துவமும் விளைவுகளும் நமக்கு முழுதாகத் தெரிய சில ஆண்டுகளாவது ஆகும். ஆட்சியாளர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை எத்துணை முக்கியமோ அது போல மக்களுக்கும் கடந்த கால வரலாறு குறித்த நினைவு அவசியம்…
View More பிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வைCategory: தேசிய பிரச்சினைகள்
பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்
பி ஜே பியின் தோல்விக்கு தாத்ரியோ, எழுத்தாளர்கள் போராட்டங்களோ பத்திரிகைகளோ எந்த விதத்திலும் காரணம் இல்லை. இவை எதுவுமே நடந்திருக்கா விட்டாலும் கூட இதே முடிவுகள்தான் வந்திருக்கக் கூடும்… பீகார் வாக்களர்களுக்கு பொருளாதார அறிவு எல்லாம் பெரிதாகக் கிடையாது. அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள். அவர்களிடம் அச்சா தீன் என்று நீ எதைச் சொல்வாய் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. வளர்ச்சி என்றால் எது என்ன என்பதை அவர்களால் சொல்லக் கூட முடியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி எல்லாம் அவர்கள் பையில் கிடைக்கும் பணம் மட்டுமே… ஆகவே உண்மையான வளர்ச்சித் திட்டங்களை சற்று குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு வரிச் சலுகை மூலமாக லஞ்சம் அளித்து ஓட்டுக்களைக் கவர பி ஜே பி முயலலாம். சாலைகளும், துறைமுகங்களும், டிஜிட்டல் இண்டியாவும், ஸ்மார்ட் சிட்டிகளும் இல்லாமல் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் இலவசங்களும் வரிக் குறைப்புக்களும் மட்டுமே….
View More பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது
ஜனநாயக நாடுகளில், பாசிசம் பழைய பாணியில் இல்லாமல் “கருத்துக்களின் பரவலாக” ஜீவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சிமுறை சார்ந்த இயக்கம் என்ற வகையில், தனது தலைவர்கள் ஆட்சியில் இருந்த வரை, இந்தியாவில் பாசிசம் அமைதியாக, சமர்த்தாக இருந்தது. இந்த பாசிச வர்க்கத்தினரால் விரும்பப் படாத ஒரு தலைவரை 2014ல் மக்கள் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுத்த போது, இந்திய சமுதாயத்தில் இருந்த பெர்லின் சுவர் உடைந்து நொறுங்கியது. இன்னும் முழுதாக சுத்தம் செய்யப் படாமல் அதன் இடிபாடுகள் அங்கங்கு விழுந்து கிடக்கின்றன. பழைய கட்சியாலும், வாரிசு அரசியலாலும், கருத்தியலாலும் ஆதாயம் அடைந்த பத்திரிகையாளர்கள் கூச்சலிடுகிறார்கள்… இந்திய அறிவுஜீவிகள் என்பவர்கள், இந்திய வாக்காளர்களின் தீர்ப்பை சகித்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார்கள். டிவி ஸ்டுடியோக்களிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள். ஜனநாயகம் உண்மையிலேயே முதிர்ச்சியடையும் போது இந்த வகையான அறிவுஜீவிகள் அழிவார்கள்….
View More இந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமதுமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4
பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) …. ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா மிச்சப் படுத்தியுள்ளோமா இல்லையா? அந்த சேமிப்பு நிதி ஏழைகளூக்கு பயன் படுமா இல்லையா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற கோஷம் விண்ணை முட்டுகின்றது) இப்படித்தான் மாற்றம் உருவாகின்றது….
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3
காலை முதலே சான் ஓசே நகரின் நடுவே அமைந்திருக்கும் எஸ் ஏ பி விளையாட்டு உள்ளரங்கு நோக்கி மக்கள் கூட ஆரம்பித்து விட்டனர். 18000 பேர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.. நீண்ட வரிசைகளில் மக்கள் கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். வரிசையில் கூடியிருந்தவர்களும் பாரத் மாதா க்கீ ஜெய் வந்தே மாதரம் மோடிக்கு ஸ்வாகதம் என்று தொடர் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்… “வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களை இந்தியாவின் அறிவு இழப்பாக நான் கருதவில்லை மாறாக அவர்களை அறிவு சேமிப்பாக லாபமாகக் கருதுகின்றேன். வெளிநாடு சென்ற இந்தியர்களின் அறிவும் அனுபவங்களும் இந்தியாவுக்குத் தேவைப் படும் பொழுது இந்தியாவின் நலன்களுக்காக உபயோகப் படப் போகும் ஒரு சேமிப்பாகக் கருதுகின்றேன். வட்டியுடன் திருப்பி வரப் போகும் முதலீடாக நான் காண்கின்றேன். இது ஒரு விலை மதிக்க முடியாத அறிவுசார் முதலீடு….”
View More மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3ஓர் இதழியல் கனவு…
. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்…
View More ஓர் இதழியல் கனவு…இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2
இஸ்லாமிய நாடுகளில் உள்ள செல்வந்தர்களால் நிறுவப்பட்டுள்ள தொண்டுநிறுவனங்கள், பெறுகின்ற நிதியில் பெருமளவு நிவாரண பணிகளுக்கு செலவிடுவதாக கூறிக்கொண்டாலும், நன்கொடையாகப் பெறும் நிதியில் முப்பது சதவீதத்திற்குமேல் பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுக்கிறார்கள்… சதிகாரர்களும், பயங்கரவாத அமைப்புகளும் போலீசிடம் பிடிபடாமல், இந்தியாவில் தங்கள் நாசவேலைகளை நிகழ்த்த கள்ளநோட்டுத்தொழில் உதவுகிறது. இந்தியாவில் புழகத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டின் மதிப்பு 1,69,000 கோடி என அரசின் மதிப்பீட்டு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது….மத்தியப்பிரதேச அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது, இந்தியன் முஜாஹிதீன், மற்றும் சிமி அமைப்பைச் சார்ந்த எட்டு பேர்களைக் கைதுசெய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்த விவரம் தெரியவந்தது….
View More இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!
குடிமைப்பணி அதிகாரிகள் எங்கு பணி புரிந்தாலும், அவர்கள் மத்திய அரசுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்களே மத்திய- மாநில உறவுகளையும் உறுதிப்படுத்துபவர்கள். எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும். தற்போது தென்படும் விரிசல்கள் பெரும் விலகலாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு… ஜனநாயகத்தின் முதல் இரு தூண்களிடையே நடைபெறும் உரசல்கள் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது…
View More தூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்!ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்
தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து – இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
View More ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை
இந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன? – இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்…
View More இந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை