“உலக வணிகத்தை, உலக இசையை, உலக உணவை, உலக பொழுது போக்கு அம்சங்களை, உலக செய்திகளை, உலக சினிமாக்களை, உலக அரசியலை உங்கள் வீட்டிற்கு அல்லது உங்களுக்கு நேரடியாகக் கொண்டு வருவது என்று சொல்லலாம் அல்லது இதே விடயங்களை, அதாவது உள்ளூர் தமிழக அரசியலை, உள்ளூர் கலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் சினிமாவை, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, உள்ளூர் உணவை உலகில் உங்கள் மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்வதே Globalisation of the Local ஆகும்…. உலகமயமாதலில் ஒவ்வொரு project ஐயும் எடுக்க நடக்கிற போட்டிகளில் இன்றைய நிலையில், எந்த நாடு அந்த project செய்வதற்கான ஒப்பந்தத்தைப் (contract ஐப்) பெறுகிறது என்பதைக் கணிக்க இயலவில்லை…உலகமயமாதல் அதிகாரத்தைக் குவிக்கிறது. அதிகாரத்தைக் கைமாறச் செய்கிறது. கலாச்சாரத்தைப் பரப்புகிறது. உலகமயமாதலின் முக்கியச் சிக்கலே Un Equally Rich ஆக மனிதர்களை மாற்றியுள்ளது என்பதே. நாடுகள், நிறுவனங்களைத் தாண்டி உலகமயமாக்கலில் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தனி நபரின் பங்களிப்பு இந்த நூற்றாண்டில் நடக்கும்…
View More உலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்புCategory: பொருளாதாரம்
உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு
உலக அளவிலான பன்னாட்டு அமைப்புகளில், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு எதிர்மறையான நிலைப்பாடுகளை…
View More உலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடுபட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்
நேர்வழியோ நேர்மையற்ற வழியோ எவ்வழியில் பொருள் ஈட்டப்பட்டாலும் தமது பொருள் விரயமாவதை அல்லது தொலைந்து போவதையோ ஒருவரும் விரும்புவதில்லை. கருப்புப்பணமும் லஞ்சப்பணமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அரசின் சட்டத்திட்டங்க மூலம் அவற்றை பறிக்க முயன்றால் பதுக்கல்காரர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் தப்பித்துவிடுவார்கள். அரசின் பணமும் விரயமாகும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதன் அறிவுறுத்தலின் பேரில் SIT அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை அதிகாரபூர்வமாக கலைத்துவிட வேண்டும்.
View More பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!
பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும்…
View More பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம்… உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது. ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்….
View More உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரைநிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே…
View More நிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?
மனித வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குவது பொருளாதாரமே ஆகும். எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும்,…
View More இந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா?இந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்
கடந்த முப்பது ஆண்டுகளாக பலஅறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமன்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன; உலகப் பொருளாதாரம் என்பதே ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை உறுதியாக மறுக்கின்றன…. உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் நூலாக ‘அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மௌரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது. பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவங்களும் இல்லாமல் அப்படிப்பட்ட நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…
View More இந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்
இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன. பட்டத் தொழிலின் தரத்தை உயர்த்துவது, சந்தைப் படுத்துவது மற்றும் விளம்பரம் செய்வது, தொழிலுக்கான நிதியை உருவாக்குவது இவை இக்குழுக்களின் வேலைகள்… அங்கு அன்று கண்ட பல விசயங்கள் எங்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தன. ஒரு குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள படிப்பறிவு குறைந்த சாதாரணப் பெண்கள், அமைச்சர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் தங்களின் சிரமங்களை மற்றவர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினர்….
View More மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை…. மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது… பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது….
View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2