ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2

ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை…. மந்திரி சபையிலேயே யோக்கியமானவர் என பெயர் பெற்றவரும் ராணுவ அமைச்சருமான ஏ.கே. அந்தோனி என்பவர் இருந்தாலும, அவரின் துறையில் ஹெலிகாப்டர் வாங்கியதில் ரூ350 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது… பாராளுமன்றம் கூடும் போதெல்லாம், அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்கதையாகவே வெளி வருகிறது. பிரதம மந்திரியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையிலும் ரூ1,86,000 கோடி ஊழல் என மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது….

View More ஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2