ஆயிரக்கணக்கில் நாம் ஆதாரத்துடன் பிறப்பின் மூலமாக வருகிற நிறவெறியின் மூலம் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதை கூறலாம். தீண்டாமையின் கோரமுகத்தை இங்கும் காணலாம். பல இஸ்லாமிய தீவிரவாத குறுங்குழுக்கள் பிறப்பின் மூலமாக வருகிற ஜாதியை வைத்து தங்கள் ஜாதியைத் தவிர பிறரை படுகொலை செய்யும் செய்தியை நாள்தோறும் நாம் இப்போது கண்முன் (youtube மூலமாக) பார்த்து வருகிறோம். இந்தக் குறுங்குழுத் தீவிரவாதிகள் தாங்கள் அரங்கேற்றும் கோரப் படுகொலையை வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கேறி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.
View More இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?Category: பொது
Item that are yet to be categorised on a regular basis.
வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்
எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
View More வேதங்களோடு விளையாடும் பழங்குடி மாணவர்நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்
இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே..
View More நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்
காலங்காலமாக நமது இந்துப் பண்பாட்டையும் சனாதன தர்மத்தையும் நிறுவி, கட்டிக்காத்து வரும் தூண்களான நமது புனித குருமார்களின் மீதான ஒரு தியானமாக, வழிபாடாக குருமண்டலம் (Galaxy of our Gurus) என்ற இந்த போஸ்டரை செய்தேன். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். தமிழ்ஹிந்து வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். பாரத தேசத்தின் அனைத்து பிரதேசங்களையும், அனைத்து முக்கியமான சமயப் பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சித்திருக்கிறேன்… இந்த குருமார்களின் திருவுருவங்களின் காட்சி அவர்களது நினைவையும், உபதேசங்களையும் நமது நெஞ்சில் எழுப்பும். நமது கலாசாரத்தின் ஆதார சுருதியான “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதையும் இந்த சித்திரம் நமக்கு நினைவுறுத்தும்…
View More நமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்உலக இந்து சம்மேளனம் 2014
இதற்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பிரதாயமான நிகழ்வுகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் இந்த சம்மேளனம் பல விதங்களில் முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்த ஒன்று… “2009ல் புலிகளுடனான போர் முடிந்த பிறகும் இலங்கையில் வாழும் எண்ணற்ற இந்துக்களின் துயரம் இன்னும் முற்றுப் பெறவில்லை” என்று தனது உரையில் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்… 800 வருடங்களுக்குப் பிறகு தில்லியின் ஆட்சிக் கட்டிலில் ஒரு சுயபெருமிதம் மிக்க இந்து அமர்ந்திருக்கிறார் என்று பிரதமர் மோதிக்குப் புகழாரம் சூட்டினார் முதுபெரும் வி.ஹி.ப தலைவர் அசோக் சிங்கல்… உலகம் முழுவதற்கும், ஆத்ம ஞானத்தின், மானுட ஒற்றுமையின் செய்தியை இந்துக்களால் வழங்க முடியும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார்…50 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், கலைப் பிரபலங்கள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், பல்துறை அறிஞர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டின் நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றனர்…
View More உலக இந்து சம்மேளனம் 2014சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்
சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது…இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை அழித்து நீர்த்து போக செய்ய காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டது. அப்பாவி சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை…
View More சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !
தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும்…
View More பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !எல்லையில் மீண்டும் போர்மேகம்
கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி…
View More எல்லையில் மீண்டும் போர்மேகம்பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்
நேர்வழியோ நேர்மையற்ற வழியோ எவ்வழியில் பொருள் ஈட்டப்பட்டாலும் தமது பொருள் விரயமாவதை அல்லது தொலைந்து போவதையோ ஒருவரும் விரும்புவதில்லை. கருப்புப்பணமும் லஞ்சப்பணமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அரசின் சட்டத்திட்டங்க மூலம் அவற்றை பறிக்க முயன்றால் பதுக்கல்காரர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் தப்பித்துவிடுவார்கள். அரசின் பணமும் விரயமாகும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதன் அறிவுறுத்தலின் பேரில் SIT அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை அதிகாரபூர்வமாக கலைத்துவிட வேண்டும்.
View More பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்மாற்றுப் பாலின ஆன்மிகம் -1
ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.
View More மாற்றுப் பாலின ஆன்மிகம் -1